[4:114]
(நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே
சமாதானம் செய்து
வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப்
பேச்சில் பெரும்பாலானவற்றில்
எந்த விதமான நலமும்
இல்லை. ஆகவே எவர் அல்லாஹ்வின்
திருப்பொருத்தத்தை
நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு
நாம் மகத்தான நற்கூலியை
வழங்குவோம்.
[4:115]
எவனொருவன்
நேர்வழி இன்னது என்று
தனக்குத் தெளிவான
பின்னரும், (அல்லாஹ்வின்)
இத்தூதரை விட்டுப்
பிரிந்து, முஃமின்கள்
செல்லாத வழியில்
செல்கின்றானோ, அவனை
அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே
செல்லவிட்டு நரகத்திலும்
அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில்
மிகக் கெட்டதாகும்.
[4:116]
நிச்சயமாக
அல்லாஹ் தனக்கு
இணை வைப்பதை
மன்னிக்கவே மாட்டான்;. இது அல்லாத
(பாவத்)தைத் தான்
நாடியவருக்கு மன்னிப்பான்;. எவன்
ஒருவன் அல்லாஹ்வுக்கு
இணை வைக்கின்றானோ, அவன்
நிச்சயமாக வெகு தூரமான
வழிகேட்டில் ஆகிவிட்டான்.
[4:117]
அவனை
(அல்லாஹ்வை) விட்டு அவர்கள்
அழைப்பவை எல்லாம்
பெண் தெய்வங்களேயன்றி
வேறில்;லை. இன்னும்
துஷ்ட ஷைத்தானையும்
தவிர, வேறு யாரையும்
அவர்கள் அழைக்கவில்லை.
[4:118]
அல்லாஹ்
அவனை (ஷைத்தானை) சபித்தான். "உன் அடியார்களில்
ஒரு குறிப்பிட்ட
தொகையினரை நான்
நிச்சயமாக எடுத்துக்
கொள்வேன்" என்றும்,
[4:119]
இன்னும்
நிச்சயமாக நான் அவர்களை
வழி கெடுப்பேன்;. அவர்களிடம்
வீணான எண்ணங்களையும்
உண்டாக்குவேன்;. (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற)
கால்நடைகளின்
காதுகளை அறுத்து
விடும்படியும்
அவர்களை ஏவுவேன். இன்னும்
அல்லாஹ்வின் படைப்புகளையுடைய
கோலங்களை மாற்றும்படியும்
ஏவுவேன் என்றும்
ஷைத்தான் கூறினான்;. எனவே
எவன் அல்லாஹ்வை
விட்டு ஷைத்தானை
உற்ற நண்பனாக ஆக்கிக்
கொள்கிறானோ, அவன்
நிச்சயமாக பகிரங்கமான
பெரு நஷ்டத்தை
அடைந்தவன் ஆவான்.
[4:120]
ஷைத்தான்
அவர்களுக்கு வாக்களிக்கிறான்;. அவர்களுக்கு
வீணான எண்ணங்களையும்
உண்டாக்குகிறான்;. மேலும் அந்த
ஷைத்தான் ஏமாற்றுவதைத்
தவிர வேறு (எதனையும்)
அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.
[4:121]
இத்தகையோருக்கு
நரகமே ஒதுங்குமிடமாகும்;. அதைவிட்டுத்
தப்பிச் செல்ல
அவர்கள், ஒருவழியையும்
காண மாட்டார்கள்.