[4:128]
ஒரு
பெண் தன் கணவன்
தன்னை வெறுத்து
விடுவான் என்றோ
அல்லது புறக்கணித்து
விடுவான் என்றோ
பயந்தால், அவர்கள் இருவரும்
தங்களுக்குள்
(சமாதானமான) ஒரு
முடிவைச் செய்து
கொண்டால் அவ்விருவர் மீது
குற்றமில்லை. அத்தகைய
சமாதானமே மேலானது.
இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு
உட்பட்டவையாகின்றன.
அவ்வாறு உட்படாமல்)
ஒருவருக்கொருவர் உபகாரம்
செய்து, (அல்லாஹ்வுக்குப்)
பயந்து நடப்பீர்களானால்
நிச்சயமாக அல்லாஹ் நீங்கள்
செய்பவற்றையெல்லாம்
நன்கு அறிந்தவனாக
இருக்கின்றான்.
[4:129]
(முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான்
விரும்பினாலும், மனைவியரிடையே
நீங்கள் நீதம்
செலுத்த சாத்தியமாகாது. ஆனால்
(ஒரே
மனைவியின் பக்கம்)
முற்றிலும் சாய்ந்து
மற்றவளை அந்தரத்தில்
தொங்க விடப்பட்டவள்
போன்று ஆக்கிவிடாதீர்கள்;. நீங்கள்
(அல்லாஹ்வுக்குப்)
பயந்து சமாதானமாக
நடந்து கொள்வீர்களானால், நிச்சயமாக
அல்லாஹ் மிகவும்
மன்னிப்பவனாகவும், மிக்க
கருணையுடையவனாகவும்
இருக்கின்றான்.
[4:130]
(சமாதானமாக
இணைந்து வாழ முடியாமல்
சமாதானமாக) அவர்கள்
இருவரும் பிரிந்துவிட்டால், அவ்விருவரையும் தன்னுடைய
விசாலமான அருட்கொடையால், (ஒருவர்
மற்றவரை விட்டும்)
தேவையற்றவராக அல்லாஹ்
ஆக்கிவிடுவான்.
அல்லாஹ் விசாலமான
அருளுடையவனாகவும்
ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
[4:131]
வானங்களில்
உள்ளவையும், பூமியில்
உள்ளவையும் எல்லாம்
அல்லாஹ்வுக்கே
சொந்தம். உங்களுக்குமுன்
வேதம் கொடுக்கப்பட்டவர்களையும், உங்களையும்
அல்லாஹ்வுக்கே
பயந்து நடக்குமாறு (வஸிய்யத்து)
உபதேசம் செய்தோம்;. நீங்கள்
அவனுக்கு மாறு
செய்தால் (அவனுக்கு நஷ்டம்
ஒன்றுமில்லை)
- நிச்சயமாக வானங்களில்
உள்ளவையும், பூமியில்
உள்ளவையும் எல்லாம்
அல்லாஹ்வுக்கே
சொந்தம்;. மேலும்
அல்லாஹ் எவர் தேவையும்
அற்றவனாகவும், புகழுக்கு
உரியவனாகவும்
இருக்கின்றான்.
[4:132]
வானங்களில்
உள்ளவையும், பூமியில்
உள்ளவையும் யாவும்
அல்லாஹ்வுக்கே
சொந்தம் - இன்னும், (உங்கள்
எல்லாக் காரியங்களையும்
பொறுப்பேற்றுக்
கொள்வதில்) அல்லாஹ்வே
போதுமானவன்.
[4:133]
மனிதர்களே!
அவன் நாடினால், உங்களை
அழித்துவிட்டு
(உங்களுடைய இடத்தில்)
வேறு மனிதர்களைக்
கொண்டு வருவான்; இன்னும், அவ்வாறு
செய்ய அல்லாஹ்
பேராற்றல் உடையவன்.
[4:134]
எவரேனும்
இவ்வுலகின் பலனை(மட்டும்)
அடைய விரும்பினால், "அல்லாஹ்விடம்
இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும்
உள்ளன. அல்லாஹ்
கேட்பவனாகவும்
பார்ப்பவனாகவும் இருக்கின்றான்."