Part 25
[41:47]
(இறுதித்
தீர்ப்பின்) வேளைக்குரிய
ஞானம் அவனுக்கு
சொந்தமானது இன்னும், அவன் அறியாமல்
பழங்களில் எதுவும்
அவற்றின் பாளைகளிலிருந்து
வெளிப்படுவதில்லை
(அவன் அறியாதது)
எந்தப் பெண்ணும்
சூல் கொள்வதுமில்லை
பிரசவிப்பதுமில்லை
(இறுதித் தீர்ப்புக்கான) அந்நாளில்
அவன் "எனக்கு இணையாக்கப்பட்டவை
எங்கே?" என்று அவர்களிடம் கேட்பான்
அப்போது அவர்கள் "எங்களில்
எவருமே (அவ்வாறு)
சாட்சி கூறுபவர்கள் இல்லை" என்று
நாங்கள் உனக்கு
அறிவித்துவிடுகிறோம்" என்று
கூறுவார்கள்.
[41:48]
அன்றியும், முன்னால்
அவர்கள் (தெய்வங்கள்
என) அழைத்துக்
கொண்டிருந்தவை
அவர்களை விட்டும்
மறைந்துவிடும்.
எனவே அவர்களுக்குப்
புகலிடமில்லை
என்பதை அவர்கள்
அறிந்து கொள்வார்கள்.
[41:49]
மனிதன் (நம்மிடம்
பிரார்த்தனை செய்து)
நல்லதைக் கேட்பதற்குச்
சோர்வடைவதில்லை
ஆனால் அவனைக் கெடுதி
தீண்டுமாயின் அவன் மனமுடைந்து
நிராசையுள்ளவனாகின்றான்.
[41:50]
எனினும் அவனைத்
தீண்டியிருந்த கெடுதிக்குப்
பின் நாம் அவனை
நம் ரஹ்மத்தை
- கிருபையைச் சுவைக்கச்
செய்தால், அவன் "இது எனக்கு
உரியதே யாகும்
அன்றியும் (விசாரணைக்குரிய)
வேளை ஏற்படுமென நான் நினைக்கவில்லை; நான் என்னுடைய
இறைவனிடம் திருப்பி
அனுப்பப்பட்டாலும், நிச்சயமாக அவனிடத்தில்
எனக்கு நன்மையே
கிடைக்கும்" என்று
திடமாகச் சொல்கிறான்.
ஆகவே காஃபிர்கள்
செய்தவற்றை அவர்களுக்கு
நிச்சயமாக நாம்
தெரிவிப்போம்
மேலும் நாம் அவர்களை
நிச்சயமாக, கடுமையான
வேதனையைச் சவைக்கச்
செய்வோம்.
[41:51]
அன்றியும், மனிதனுக்கு
நாம் அருள்
புரிந்தால் அவன்
(நன்றியுணர்வின்றி)
நம்மைப் புறக்கணித்து, விலகிச் செல்கிறான்
- ஆனால் அவனை ஒரு
கெடுதி தீண்டினால்
நீண்ட பிரார்த்தனை செய்(பவனா)கின்றான்.
[41:52]
(இந்த வேதம்) அல்லாஹ்விடமிருந்துள்ளதாக
இருந்தும், இதை நீங்கள்
நிராகரித்தால், உங்கள்
நிலை என்னவாகும்
தூரமான விரோதத்திலுள்ளவர்(களாகிய
உங்)களை விட, அதிக வழிகேடன்
யார் என்பதை
நீங்கள் பார்க்கவில்லையா? என்று
(நபியே!) நீர் கேளும்.
[41:53]
நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது
தான் என்று அவர்களுக்குத்
தெளிவாகும் பொருட்டு
நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்)
பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும்
சீக்கிரமே நாம்
அவர்களுக்குக் காண்பிப்போம்
(நபியே!) உம் இறைவன்
நிச்சயமாக எல்லாவற்றையும்
பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது
உமக்குப் போதுமானதாக
இல்லையா?
[41:54]
அறிந்து கொள்க
நிச்சயமாக அவர்கள்
தங்கள் இறைவனைச்
சந்திப்பது குறித்துச்
சந்தேகத்தில்
இருக்கிறார்கள் அறிந்து
கொள்க நிச்சயமாக
அவன் எல்லாப் பொருட்களையும்
சூழ்ந்து (அறிந்தவனாக) இருக்கிறான்.
Ash-shûrâ
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[42:1]
ஹா,
மீம்.
[42:2]
ஐன், ஸீன், காஃப்.
[42:3]
(நபியே!)
இது போன்றே அல்லாஹ் உமக்கும், உமக்கு
முன் இருந்தவர்(களாகிய
நபிமார்)களுக்கும்
வஹீ அறிவிக்கின்றான்; அவனே
(யாவரையும்) மிகைத்தவன்; ஞானம்
மிக்கோன்.
[42:4]
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும்
அவனுக்கே (சொந்தமானவையாகும்!)
மேலும் அவன் மிகவும் உயர்ந்தவன், மகத்தானவன்.
[42:5]
அவர்களுக்கு
மேலிருந்து வானங்கள்
பிளந்து விடலாம்; ஆனால்
மலக்குகள் தங்களுடைய
இறைவனின் புகழைக்
கொண்டு தஸ்பீஹு
செய்து, உலகில் உள்ளவர்களுக்காக
மன்னிப்புத் தேடுகின்றனர்
அறிந்து கொள்க!
நிச்சயமாக அல்லாஹ்வே
மிகவும் மன்னப்பவன்; மிக்க
கிருபையுடையவன்.
[42:6]
அவனையன்றி(த்
தங்களுக்கு வேறு) பாதுகாவலர்களை
எடுத்துக் கொண்டார்களே
அவர்களை அல்லாஹ்
கவனித்தவனாகவே இருக்கின்றான்; நீர் அவர்கள்
மேல் பொறுப்பாளர்
அல்லர்.
[42:7]
அவ்வாறே நகரங்களின் தாய்க்கும், (மக்காவுக்கும்
அதனைச் சுற்றியுள்ளவற்றுக்கும்
அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், எவ்வித
சந்தேகமுமின்றி
(யாவரும்) ஒன்று
சேர்க்கப்படும் நாளைப்பற்றி
அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், அரபி பொழியிலான
இந்த குர்ஆனை நாம் உமக்கு
வஹீஅறிவிக்கிறோம்; ஒரு கூட்டம்
சுவர்க்கத்திலும்
ஒரு கூட்டம் நரகிலும் இருக்கும்.
[42:8]
அல்லாஹ் நாடியிருந்தால், நிச்சயமாக
அவர்கள் (யாவரையும்)
அவன் ஒரே உம்மத்தாக
- சமுதாயமாக ஆக்கியிருப்பான்; எனினும்
அவன் தான் நாடியவர்களைத்
தன்னுடைய ரஹ்மத்தில்
- கிருபையில் - நுழைவிப்பான்; அநியாயக்காரர்களுக்குப்
பாதுகாவலர்களோ, உதவிபுரிபவர்களோ
இல்லை.
[42:9]
(நபியே!)
அவர்கள் அல்லாஹ்வை அன்றி
(வேறு) பாதுகாவலர்களை
எடுத்துக் கொண்டார்களா? ஆனால்
அல்லாஹ்வோ அவன்
தான் பாதுகாவலனாக
இருக்கின்றான், அவனே இறந்தோரை
உயிர்ப்பிக்கிறான்
- அவனே எல்லாவற்றின்
மீதும் ஆற்றலுடையவன்.
[42:10]
நீங்கள் எந்த
விஷயத்தில் கருத்து
வேற்றுமை கொண்டிருக்கிறீர்களோ, அதன் தீர்ப்பு
அல்லாஹ்விடமே
இருக்கிறது - அ(த்தகைய
தீர்ப்பு வழங்குப)வன்
தான் அல்லாஹ்
- என்னுடைய இறைவன்; அவன் மீதே
நான் முற்றும்
நம்பிக்கை வைக்கிறேன்; அன்றியும்
அவன் பக்கமே நான்
திரும்புகிறேன்.
[42:11]
வானங்களையும், பூமியையும் படைத்தவன்
அவனே உங்களுக்காக
உங்களில் இருந்தே
ஜோடிகளையும் கால்
நடைகளிலிருந்து ஜோடிகளையும்
படைத்து, அதைக்
கொண்டு உங்களை(ப்
பல இடங்களிலும்)
பல்கி பரவச் செய்கிறான், அவனைப்
போன்று எப்பொருளும்
இல்லை அலன் தான்
(யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.
[42:12]
வானங்களுடையவும், பூமியுடையவும்
சாவிகள் அவனிடமே
இருக்கின்றன தான்
நாடியவர்களுக்கு
அவனே உணவு வசதிகளைப்
பெருகும் படி செய்கிறான், (தான் நாடியவர்களுக்கு
அவனே அளவு படுத்திச்) சுருக்கிவிடுகிறான்
- நிச்சயமாக அவன்
எல்லாப் பொருட்களையும்
நன்கறிந்தவன்.
[42:13]
நூஹுக்கு எதனை
அவன் உபதேசித்தானோ, அதனையே
உங்களுக்கும்
அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்.
ஆகவே (நபியே) நாம்
உமக்கு வஹீ மூலம்
அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும்
, ஈஸாவுக்கும்
நாம் உபதேசித்ததும்
என்னவென்றால்; "நீங்கள்
(அனைவரும்) சன்மார்க்கத்தை
நிலை நிறுத்துங்கள், நீங்கள்
அதில் பிரிந்து
விடாதீர்கள்' என்பதே - இணைவைப்போரை
நீங்கள் எதன் பக்கம்
அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப்
பெரும் சுமையாகத்
தெரிகிறது - தான்
நாடியவர்களை அல்லாஹ்
தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்
- (அவனை) முன்னோக்குபவரை
அவன் தன்பால் நேர்வழி
காட்டுகிறான்.
[42:14]
அவர்கள், தங்களிடம்
ஞானம் (வேதம்) வந்த
பின்னர், தங்களுக்கிடையேயுள்ள
பொறாமையின் காரணமாகவே
யன்றி அவர்கள் பிரிந்து
போகவில்லை (அவர்கள்
பற்றிய தீர்ப்பு)
ஒரு குறிப்பிட்ட
தவணையில் என்று உம்முடைய
இறைவனின் வாக்கு
முன்னரே ஏற்பட்டடிருக்காவிடில், அவர்களிடையே
(இதற்குள்) நிச்சயமாக
தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்; அன்றியும், அவர்களுக்கு
பின்னர் யார் வேதத்திற்கு
வாரிசாக்கப்பட்டார்களோ
நிச்சயமாக அவர்களும்
இதில் பெரும் சந்தேகத்தில்
இருக்கின்றனர்.
[42:15]
எனவே, (நபியே! நேர்வழியின் பக்கம்
அவர்களை) நீர்
அழைத்துக் கொண்டே
இருப்பீராக மேலும், நீர் ஏவப்பட்ட பிரகாரம்
உறுதியுடன் நிற்பீராக!
அவர்களுடைய (இழிவான)
மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்; இன்னும், "அல்லாஹ்
இறக்கி வைத்த வேதங்களை
நான் நம்புகிறேன்; அன்றியும்
உங்களிடையே நீதி
வழங்கும்படியும்
நான் ஏவப்பட்டுள்ளேன்.
அல்லாஹ்வே எங்கள்
இறைவனாவான்; அவனே உங்களுடைய
இறைவனும் ஆவான்.
எங்கள் செயல்கள்
எங்களுக்கு உங்கள்
செயல்கள் உங்களுக்கு
எங்களுக்கும்
உங்களுக்குமிடையே
தர்க்கம் வேண்டாம்
- அல்லாஹ் நம்மிடையே
(மறுமையில்) ஒன்று
சேர்ப்பன், அவன் பாலே
நாம் மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது" என்றும்
கூறுவீராக.
[42:16]
எவர்கள் அல்லாஹ்வை
ஒப்புக் கொண்டபின், அவனைப்பற்றி
தர்க்கித்துக்
கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய
தர்க்கம் அவர்களுடைய
இறைவனிடத்தில்
பயனற்றதாகும்; அதனால்
அவர்கள் மீது
(அவனுடைய) கோபம் ஏற்பட்டு, கடினமான
வேதனையும் அவர்களுக்கு
உண்டாகும்.
[42:17]
அல்லாஹ்தான்
இந்த வேதத்தையும் நீதியையும்
உண்மையையும் கொண்டு
இறக்கி அருளினான்; இன்னும்
(நபியே! தீர்ப்புக்குரிய)
அவ்வேளை சமீபமாக
இருக்கிறது என்பதை
நீர் அறிவீரா?
[42:18]
அதன் மேல் நம்பிக்கை கொள்ளாதவர்கள், அதைப்பற்றி
அவசரப்படுகின்றனர்
ஆனால் நம்பிக்கை
கொண்டவர்கள் அதனை (நினைத்து)
பயப்படுகிறார்கள்; நிச்சயமாக
அது உண்மையே என்பதை
அவர்கள் அறிகிறார்கள்; அறிந்து
கொள்க அவ்வேளை
குறித்து எவர்கள்
வீண்வாதம் செய்து கொண்டிருக்கிறார்களோ
அவர்கள் நெடிய
வழிகேட்டிலேயே
இருக்கிறார்கள்.
[42:19]
அல்லாஹ் தன் அடியார்கள்
பால் அன்பு
மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு
(வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை
மிக்கவன்; (யாவரையும்)
மிகைத்தவன்.
[42:20]
எவர் மறுமையின்
விளைச்சலை விரும்புகிறாரோ
அவருடைய விளைச்சலை
நாம் அவருக்காக
அதிகப்படுத்துவோம்; எவர் இவ்வுலகின்
விளைச்சலை மட்டும்
விரும்புகிறாரோ, அவருக்கு
நாம் அதிலிருந்து
ஓரளவு கொடுக்கிறோம்
- எனினும் அவருக்கு
மறுமையில் யாதொரு
பங்கும் இல்லை.
[42:21]
அல்லது அல்லாஹ்
அனுமதிக்காததை மார்க்கமாக்கி
வைக்கக்கூடிய
இணை(த் தெய்வங்)கள்
அவர்களுக்கு இருக்கின்றனவா? மேலும், (மறுமையில்
விசாரணைக்குப்
பிறகு தக்க கூலி
கொடுக்கப்படும்
என்னும் இறைவனின்)
தீர்ப்புப் பற்றிய
வாக்கு இல்லாதிருப்பின்
(இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்
- நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு
நோவினை செய்யும் வேதனை
உண்டு.
[42:22]
(அந்நாளில்)
அநியாயக்காரர்கள் தாங்கள்
சம்பாதித்த (தீய)தைப்
பற்றி பயந்து கொண்டிருப்பதை
நீர் பார்ப்பீர்; ஆனால்
அது அவர்கள் மீது
நிகழவே செய்யும்; ஆனால்
எவர் ஈமான் கொண்டு
ஸாலிஹான (நல்ல)
அமல்கள் செய்கிறார்களோ
அவர்கள் சுவர்க்கப்
பூங்காவனங்களில்
இருப்பார்கள்; அவர்கள்
விரும்பியது அவர்களுடைய
இறைவனிடம் கிடைக்கும்.
அதுவே பெரும் பாக்கியமாகும்.
[42:23]
ஈமான் கொண்டு
(ஸாலிஹான) நல்ல அமல்கள்
செய்துவரும் தன்
அடியார்களுக்கு
அல்லாஹ் நன்மாராயங்
கூறுவதும் இதுவே (நபியே!)
நீர் கூறும்; "உறவினர்கள்
மீது அன்பு கொள்வதைத்
தவிர, இதற்காக நான் உங்களிடம்
யாதொரு கூலியும்
கேட்கவில்லை!" அன்றியும், எவர் ஒரு
நன்மை செய்கிறாரோ, அவருக்கு
நாம் அதில் பின்னும்
(பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக
அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை
ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான்.
[42:24]
அல்லது (உம்மைப்
பற்றி) அவர்கள்; "அவர் அல்லாஹ்வின்
மீது பொய்யை இட்டுக்
கட்டிக் கூறுகிறார்" என்று
சொல்கிறார்களா? அல்லாஹ்
நாடினால் அவன்
உம் இருதயத்தின்
மீது முத்திரையிட்டிருப்பான்; அன்றியும்
அல்லாஹ் பொய்யை
அழித்து, தன் வசனங்களைக் கொண்டு
உண்மையை உறுதிப்படுத்துகிறான்; நிச்சயமாக
நெஞ்சங்களிலிருப்பதை
அவன் மிக அறிந்தவன்.
[42:25]
அவன்தான் தன்
அடியார்களின் தவ்பாவை
- பாவ மன்னிப்புக்
கோறுதலை - ஏற்றுக்
கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை
மன்னிக்கிறான்.
இன்னும், நீங்கள்
செய்வதை அவன் நன்கறிகிறான்.
[42:26]
அன்றியும் ஈமான்
கொண்டு ஸாலிஹான
(நல்ல) அமல் செய்பவர்(களின்
பிரார்த்தனை)களையும்
ஏற்று அவர்களுக்குத் தன் அருளை
அதிகப்படுத்துகிறான்; இன்னும், நிராகரிப்பவர்களுக்கு
கடுமையான வேதனையுண்டு.
[42:27]
அல்லாஹ் தன் அடியார்களுக்கு, உணவு
(மற்றும் வசதிகளை)
விரிவாக்கி விட்டால், அவர்கள்
பூமியியல் அட்டூழியம் செய்யத்
தலைப்பட்டு விடுவார்கள்; ஆகவே அவன், தான் விரும்பிய
அளவு கொடுத்து வருகின்றான்; நிச்சயமாக
அவன் தன் அடியார்களை
நன்கறிபவன்; (அவர்கள்
செயலை) உற்று நோக்குபவன்.
[42:28]
அவர்கள் நிராசையான
பின்னர் மறையை
இறக்கி வைப்பவன்
அவனே மேலும் அவன்
தன் ரஹ்மத்தை
(அருளை)ப் பரப்புகிறான்; இன்னும்
அவனே புகழுக்குரிய
பாதுகாவலன்.
[42:29]
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், அவையிரண்டிலும்
கால்நடைகள் (முதலியவற்றைப்)
பரப்பி வைத்திருப்பதும், அவனுடைய
அத்தாட்சிகளில்
உள்ளவையாகும்
- ஆகவே, அவன் விரும்பியபோது
அவற்றை ஒன்று சேர்க்க
பேராற்றலுடையவன்.
[42:30]
அன்றியும் தீங்கு
வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள்
கரங்கள் சம்பாதித்த
(காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை
அவன் மன்னித்தருள்கின்றான்.
[42:31]
இன்னும், நீங்கள்
பூமியில் (எங்கு
தஞ்சம் புகுந்தாலும்)
அவனை இயலாமல் ஆக்குபவர்கள்
இல்லை மேலும், உங்களுக்கு
அல்லாஹ்வைத் தவிர, பாதுகாவலனோ, உதவிபுரிபவனோ
இல்லை.
[42:32]
இன்னும், மலைகளைப்
போல் கடலில் செல்பவையும், அவனுடைய
அத்தாட்சிகளில்
உள்ளவையாகும்.
[42:33]
அவன் விரும்பினால்
காற்றை (வீசாமல்) அமர்த்தி
விடுகிறான். அதனால்
அவை (கடலின்) மேற்பரப்பில்
அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக
இதில், பொறுமையாளர், நன்றி
செலுத்துவோர்
யாவருக்கும் அத்தாட்சிகள்
இருக்கின்றன.
[42:34]
அல்லது அவர்கள்
சம்பாதித்த காரணத்தினால்
அவற்றை அவன் மூழ்கடிக்கச்
செய்து விடுவான்; மேலும்
அவன் பெரும்பாலானவற்றை
மன்னித்தருளுகிறான்.
[42:35]
அன்றியும், நம்முடைய வசனங்களைப்
பற்றித் தர்க்கம்
செய்து கொண்டிருப்போர்
- அவர்களுக்கு
(தப்பித்துக் கொள்ள)
புகலிடம் ஏதுமில்லை
என்பதை அறிவார்கள்.
[42:36]
ஆகவே, உங்களுக்குக்
கொடுக்கப் பட்டிருப்பதெல்லாம், இவ்வுலக
வாழ்ககையின் (அற்ப)
சுகங்களேயாகும்; ஈமான்
கொண்டு, தங்கள் இறைவனையே
முற்றிலும் நம்பியிருப்பவர்களுக்கு, அல்லாஹ்விடம்
இருப்பது மிகவும்
மேலானதும் நிலையானதுமாகும்.
[42:37]
அவர்கள் (எத்தகையொரென்றால்) பெரும்
பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக்
கொண்டு, தாம் கோபம் அடையும்
பொழுதும் மன்னிப்பார்கள்.
[42:38]
இன்னும் தங்கள்
இறைவன் கட்டளைகளை
ஏற்று தொழுகையை
(ஒழுங்குப்படி)
நிலைநிறுத்துவார்கள்
- அன்றியும் தம் காரியங்களைத்
தம்மிடையே கலந்தாலோசித்துக்
கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து
(தானமாகச்) செலவு
செய்வார்கள்.
[42:39]
அன்றியும். அவர்களுக்கு அக்கிரமம்
செய்யப்பட்டால்
(அதற்கு எதிராக
நீதியாகத் தக்க
முறையில்) பழி தீர்ப்பார்கள்.
[42:40]
இன்னும் தீமைக்கும்
கூலி அதைப் போன்ற
தீமையே யாகும்; ஆனால், எவர்
(அதனை) மன்னித்துச்
சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய
நற்கூலி அல்லாஹ்விடம்
இருக்கிறது - நிச்சயமாக
அவன் அநியாயம் செய்பவர்களை
நேசிக்க மாட்டான்.
[42:41]
எனவே, எவரொருவர்
அநியாயம் செய்யப்பட்டபின், (அதற்கு
எதிராக நீதியாக)
பழி தீர்த்துக்
கொள்கிறாரோ, அ(த்தகைய)வர்
மீது (குற்றம்
சுமத்த) யாதொரு
வழியுமில்லை.
[42:42]
ஆனால் எவர்கள்
மக்களுக்கு அநியாயம்
செய்து நீதமின்றி
பூமியில் அட்டூழியம்
செய்கிறார்களோ, அவர்கள்
மீது தான்
(குற்றம் சுமத்த)
வழியிருக்கிறது
- இத்தகையோருக்கு
நோவினை செய்யும் வேதனையுண்டு.
[42:43]
ஆனால், எவரேனும்
(பிறர் செய்த தீங்கைப்)
பொறுத்துக் கொண்டு
மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க
உறுதியான (வீரமுள்ள)
செயலாகும்.
[42:44]
இன்னும் எவரை
அல்லாஹ் வழிகேட்டில்
விட்டுவிடுகிறானோ
அதற்குப்பின்
அவனுக்குப் பாதுகாவலர்
எவருமில்லை, அநியாயம்
செய்தவர்கள் வேதனையைக்
காணும் போது (இதிலிருந்து)
தப்பித்து மீள்வதற்கு ஏதாகிலும்
வழியுண்டா? என்று
கூறும் நிலையை
நீர் காண்பீர்.
[42:45]
மேலும், சிறுமைப்பட்டுத்
தலை கவிழ்ந்தவர்களாகவும், (மறைவகாக்)
கடைக்ககண்ணால்
பார்த்த வண்ணமாகவும்
அவர்கள் (நரகத்தின்
முன்) கொண்டவரப்
படுவதை நீர் காண்பீர்; (அவ்வேளை)
ஈமான் கொண்டவர்கள் கூறுவார்கள்; "எவர் தங்களுக்கும், தம் குடும்பத்தாருக்கும்
நஷ்டத்தை தேடிக் கொண்டார்களோ, கியாம
நாளில் நிச்சயமாக
அவர்கள் முற்றிலும்
நஷ்டவாளர்தாம்." அறிந்து
கொள்க! நிச்சயமாக
அநியாயக்காரர்கள்
நிலையான வேதனையில்
இருப்பார்கள்.
[42:46]
(அந்நாளில்)
அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு
உதவிபுரியும்
உபகாரிகளில் எவரும்
இருக்கமாட்டார்கள்; அன்றியும், அல்லாஹ்
எவரை வழிகேட்டில்
விட்டுவிடுகிறானோ
அவருக்கு வேறுவழியொன்றுமில்லை.
[42:47]
அல்லாஹ்வை விட்டும் தப்பித்துச்
செல்ல போக்கில்லாத
(கியாம) நாள் வருவதற்கு
முன், உங்கள் இறைவனுடைய (ஏவலுக்கு)
பதிலளியுங்கள்
- அந்நாளில் உங்களுக்கு
ஒதுங்குமிடம்
எதுவும் இராது (உங்கள்
பாவங்களை) நீங்கள்
மறுக்கவும் முடியாது.
[42:48]
எனினும் (நபியே!)
அவர்கள் புறக்கணித்து
விட்டால் (நீர்
கவலையுறாதீர்); நாம் உம்மை
அவர்கள் மீது பாதுகாவலராக
அனுப்பவில்லை
(தூதுச் செய்தியை
எடுத்துக் கூறி)
எத்திவைப்பது
தான் உம்மீது
கடமையாகும்; இன்னும், நிச்சயமாக
நம்முடைய ரஹ்மத்தை
- நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச்
செய்தால், அது கண்டு
அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால்
அவர்களுடைய கைகள்
முற்படுத்தியுள்ள
(பாவத்தின காரணத்)தால்
அவர்களுக்குத்
தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக
மனிதன் நன்றி கெட்டு
மாறு செய்பவனாக
இருக்கின்றான்.
[42:49]
அல்லாஹ்வுக்கே
வானங்களுடையவும் பூமியுடையவும்
ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான்
விரும்பியவற்றை
அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப்
பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும்
தான் விரும்புவோருக்கு
ஆண் மக்களை அளிக்கின்றான்.
[42:50]
அல்லது அவர்களுக்கு
அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும்
சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும்
தான் விரும்பியோரை
மலடாகவும் செய்கிறான்
- நிச்சயமாக, அவன் மிக
அறிந்தவன்; பேராற்றலுடையவன்.
[42:51]
அல்லாஹ் எந்த
மனிதரிடத்திலும் வஹீயாகவோ
அல்லது திரைக்கப்பால்
இருந்தோ அல்லது
தான் விரும்பியதைத்
தன் அனுமதியின்
மீது வஹீயை அறிவிக்கக்
கூடிய ஒரு தூதரை
அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்)
பேசவதில்லை நிச்சயமாக
அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்.
[42:52]
(நபியே!)
இவ்வாறே நாம் நம்முடைய
கட்டளையில் ஆன்மாவானதை
(குர்ஆனை) வஹீ மூலமாக
உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு
முன்னர்) வேதம்
என்பதோ ஈமான் என்பதோ
என்னவென்று நீர் அறிபவராக
இருக்கவில்லை
- எனினும் நாம்
அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு
இதைக் கொண்டு நேர்வழி
காட்டுகிறோம்
- நிச்சயமாக நீர் (மக்களை)
நேரான பதையில்
வழி காண்பிக்கின்றீர்.
[42:53]
(அதுவே)
அல்லாஹ்வின் வழியாகும்; வானங்களில்
இருப்பவையும், பூமியில்
இருப்பவையும்
(யாவும்) அவனுக்கே சொந்தம்
- அறிந்து கொள்க!
அல்லாஹ்விடமே
எல்லாக் காரியங்களும்
மீண்டு வருகின்றன.
Az-Zukhruf
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[43:1]
ஹா,
மீம்.
[43:2]
விளக்கமான இவ்வேதத்தின்
மீது சத்தியமாக.
[43:3]
நீங்கள் அறிந்து
கொள்வதற்காக இதனை நாம்
அரபி மொழி குர்ஆனாக
நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம்;.
[43:4]
இன்னும் நிச்சயமாக, இது நம்மிடத்திலுள்ள
உம்முல் கிதாபில்
(தாய் நூலில்) இருக்கிறது.
(இதுவே வேதங்களில்) மிக்க
மேலானதும், ஞானம்
மிக்கதுமாகும்.
[43:5]
நீங்கள் வரம்பு
மீறிய சமூகத்தாராகி
விட்டீர்கள் என்பதற்காக, இந்த உபதேசத்தை
உங்களைவிட்டு
நாம் அகற்றி விடுவோமா?
[43:6]
அன்றியும், முன்னிருந்தார்களிடமும்
நாம் எத்தனையோ
தூதர்களை அனுப்பியிருக்கிறோம்.
[43:7]
ஆனால் அவர்களிடம்
வந்த நபி ஒவ்வொருவரையும்
அவர்கள் பரிகாசம்
செய்யாது இருக்கவில்லை.
[43:8]
எனினும் இவர்களை
விட மிக்க பலசாலிகளான
அவர்களைப் பிடியாகப்
பிடித்து நாம்
அழித்து இருக்கிறோம்; (இவ்வாறாக உங்களுக்கு)
முன்னருந்தோரின்
உதாரணம் நடந்தேறியிருக்கிறது.
[43:9]
(நபியே!)
நீர் அவர்களிடம்; "வானங்களையும், பூமியையும்
படைத்தவன் யார்?" என்று
கேட்டால், "யாவரையும்
மிகைத்தவனும், எல்லாவற்றையும்
அறிந்தோனுமாகிய
அவனே அவற்றை படைத்தான்" என்று
நிச்சயமாக அவர்கள்
கூறுவார்கள்.
[43:10]
அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக
ஆக்கி, அதில் நீங்கள்
(விரும்பி இடத்திற்குச்)
செல்லும் பொருட்டு வழிகளையும்
ஆக்கினான்.
[43:11]
அவன்தான் வானத்திலிருந்து மழையை
அளவோடு இறக்கி
வைக்கிறான். பின்னர், அதனைக்
கொண்டு இறந்து
கிடந்த பூமியை நாம் தாம்
உயிர்ப்பிக்கின்றோம்.
இவ்வாறே நீங்களும்
(மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப்
பெற்று) வெளிப்படுத்தப்படுவீர்கள்.
[43:12]
அவன் தான் ஜோடிகள்
யாவையும் படைத்தான்; உங்களுக்காக, கப்பல்களையும், நீங்கள்
சவாரி செய்யும்
கால்நடைகளையும் உண்டாக்கினான்
-
[43:13]
அவற்றின் முதுகுகளின்
மீது நீங்கள்
உறுதியாக அமர்ந்து
கொள்வதற்காக்
அவற்றின் மேல்
நீங்கள் உறுதியாக அமர்ந்ததும், உங்கள்
இறைவனுடைய அருளை
நினைவு கூர்ந்து "இதன் மீது
(செல்ல) சக்தியற்றவர்களாக
இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த
அ(வ் விறை)வன் மிக்க
பரிசுத்தமானவன்" என்று
நீங்கள் கூறுவதற்காகவும்.
[43:14]
மேலும், நிச்சயமாக
நாம் எங்கள் இறைவனிடத்தில்
திரும்பிச் செல்பவர்கள்
(என்று பிரார்த்தித்துக்
கூறவும் அவ்வாறு
செய்தான்).
[43:15]
இன்னும், அவர்கள்
அவனுடைய அடியார்களில்
ஒரு பகுதியினரை
அவனுக்கு(ப் பெண் சந்ததியை)
ஆக்குகிறார்கள்; நிச்சயமாக
மனிதன் பகிரங்கமான
பெரும் நிராகரிப்பவனாக இருக்கின்றான்.
[43:16]
அல்லது, தான் படைத்ததிலிருந்து
அவன் தனக்கென பெண்மக்களை
எடுத்துக் கொண்டு, உங்களுக்கு
ஆண் மக்களை தேர்ந்தெடுத்து
விட்டானா?
[43:17]
அர் ரஹ்மானுக்கு
அவர்கள் எதனை ஒப்பாக்கினார்களோ
அதை (அதாவது பெண்
குழந்தையை) கொண்டு
அவர்களில் ஒருவனுக்கு
நற்செய்தி கூறப்படும்பொழுது
அவனுடைய முகம் கருத்துப்
போய்விடுகின்றது.
மேலும் அவன் கோபம்
நிரம்பியவனாகவும் ஆகிவிடுகின்றான்.
[43:18]
ஆபரணங்களைக்
கொண்டு அலங்கரிக்கப்பட்டும்
விவகாரங்களைத்
தெளிவாக எடுத்துக் கூறவும்
இயலாத ஒன்றினையா
(இணையாக்குகின்றனர்).
[43:19]
அன்றியும், அர் ரஹ்மானின்
அடியார்களாகிய
மலக்குகளை அவர்கள்
பெண்களாக ஆக்குகிறார்கள்; அவர்கள், படைக்கப்பட்ட
போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? அவர்களுடைய
சாட்சியம் பதிவு
செய்து வைக்கப்பட்டு, அவர்கள் கேள்வி
கேட்கப்படுவார்கள்.
[43:20]
மேலும், அர் ரஹ்மான்
நாடியிருந்தால், அவர்களை
நாங்கள் வணங்கியிருக்க மாட்டோம்" என்றும்
அவர்கள் கூறுகின்றனர்; அவர்களுக்கு
இதைப்பற்றி யாதோர் அறிவுமில்லை
அவர்கள் பொய்யே
கூறுகிறார்கள்.
[43:21]
அல்லது, அவர்கள்
ஆதாரமாகக் கொள்வதற்காக
இதற்கு முன்னால்
நாம் அவர்களுக்கு
ஏதாவதொரு வேதத்தை கொடுத்திருக்கிறோமா?
[43:22]
அப்படியல்ல! அவர்கள் கூறுகிறார்கள்; "நிச்சயமாக
நாங்கள் எங்களுடைய
மூதாதையர்களை
ஒரு மார்க்கத்தில்
கண்டோம்; நிச்சயமாக
நாங்கள் அவர்களுடைய
அடிச்சவடுகளையே பின்பற்றுகிறோம்."
[43:23]
இவ்வாறே உமக்கு
முன்னரும் நாம் (நம்முடைய)
தூதரை எந்த ஊருக்கு
அனுப்பினாலும், அவர்களில்
செல்வந்தர்கள்; "நிச்சயமாக
நாங்கள் எங்கள்
மூதாதையரை ஒரு
மார்க்கத்தில்
கண்டோம்; நிச்சயமாக நாங்கள்
அவர்களின் அடிச்சவடுகளையே
பின்பற்றுகின்றோம்" என்று
கூறாதிருக்கவில்லை.
[43:24]
(அப்பொழுது
அத்தூதர்,) "உங்கள்
மூதாதையரை எதன்மீது
நீங்கள் கண்டீர்களோ, அதை விட
மேலான நேர்வழியை நான் உங்களுக்குக்
கொண்டு வந்திருந்த
போதிலுமா?" என்று
கேட்டார். அதற்கு அவர்கள்; "நிச்சயமாக
நாங்கள், எதைக்கொண்டு
நீங்கள் அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ, அதை நிராகரிக்கிறோம்" என்று
சொன்hர்கள்.
[43:25]
ஆகவே, நாம் அவர்களிடம்
பழி தீர்த்தோம்; எனவே, இவ்வாறு
பொய்ப்பித்துக்
கொண்டிருந்தவர்களின்
முடிவு என்ன ஆயிற்று
என்பதை நீர் கவனிப்பீராக!
[43:26]
அன்றியும், இப்றாஹீம்
தம் தந்தையையும், தம் சமூகத்தவர்களையும்
நோக்கி; "நிச்சயமாக
நான், நீங்கள் வழிபடுபவற்றை
விட்டும் விலகிக்
கொண்டேன்" என்று
கூறியதையும்;
[43:27]
என்னைப் படைத்தானே
அவனைத் தவிர (வேறெவரையும்
வணங்க மாட்டேன்).
அவனே எனக்கு நேர்வழி
காண்பிப்பான்
(என்றும் கூறியதை
நினைவு கூர்வீராக)!
[43:28]
இன்னும், தம் சந்ததியினர் (அல்லாஹ்வின்
பக்கம்) திரும்பி
வரும் பொருட்டு
(இப்றாஹீம் தவ்ஹீதை)
அவர்களிடம் ஒரு நிலையான
வாக்காக ஏற்படுத்தினார்.
[43:29]
எனினும், இவர்களிடம்
உண்மையும் தெளிவான
தூதரும் வரும்
வரையில், இவர்களையும், இவர்களுடைய
மூதாதையரையும் சுகமனுபவிக்க
விட்டு வைத்தேன்.
[43:30]
ஆனால், உண்மை (வேதம்) அவர்களிடம்
வந்த போது "இது சூனியமே
தான்; நிச்சயமாக
நாங்கள் இதை நிராகரிக்கின்றோம்" என்று
அவர்கள் கூறினர்.
[43:31]
மேலும் அவர்கள்
கூறுகிறார்கள்; இந்த குர்ஆன்
இவ்விரண்டு ஊர்களிலுள்ள
பெரிய மனிதர் மீது
இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?"
[43:32]
உமது இறைவனின்
ரஹ்மத்தை (நல்லருளை)
இவர்களா பங்கிடுகிறார்களா? இவர்களுடைய
உலகத் தேவைகளை
இவர்களிடையோ நாமே பங்கிட்டு
இருக்கிறோம்." இவர்களில்
சிலர், சிலரை ஊழயத்திற்கு
வைத்துக் கொள்ளும்
பொருட்டு, இவர்களில்
சிலரை, சிலரைவிட தரங்களில்
நாம் உயர்த்தி இருக்கிறோம்; உம்முடைய
இறைவனின் ரஹ்மத்து
அவர்கள் சேகரித்து
வைத்துக் கொண்டிருப்பதை
விட மேலானதாகும்.
[43:33]
நிராகரிப்போருக்கு
நாம் கொடுக்கும்
செல்வத்தைக் கண்டு, மனிதர்கள்
(நிராகரிக்கும்)
சமுதாயமாக ஆகிவிடுவார்கள்
என்பது இல்லாவிட்டால், அவர்களின்
வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு
அவர்கள்) ஏறிச்
செல்லும் படிகளையும்
நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்.
[43:34]
அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள்
சாய்ந்து கொண்டிருக்கும்
கட்டில்களையும்
(அவ்வாறே ஆக்கியிருப்போம்).
[43:35]
தங்கத்தாலும்
(அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்); ஆனால், இவையெல்லாம்
இவ்வுலக வாழ்ககையிலுள்ள
(நிலையில்லா அற்ப)
சுகங்களேயன்றி
வெறில்லை ஆனால், மறுமை(யின்
நித்திய வாழ்க்கை)
உம் இறைவனிடம்
பயபக்தியுள்ளவர்களுக்குத்
தாம்.
[43:36]
எவனொருவன் அர்
ரஹ்மானின் நல்லுபதேசத்தை
விட்டும் கண்ணை
மூடிக் கொள்வானோ, அவனுக்கு
நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி
விடுகிறோம்; அவன் இவனது
நெருங்கிய நண்பனாகி
விடுகிறான்.
[43:37]
இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை
நேரான பாதையிலிருந்து
தடுத்து விடுகின்றன.
ஆனாலும், தாங்கள்
நேரான பாதையில்
செலுத்தப்படுவதாகவே
அவர்கள் எண்ணிக்
கொள்கிறார்கள்.
[43:38]
எதுவரையென்றால், (இறுதியாக அத்தகையவன்)
நம்மிடம் வரும்போது
(ஷைத்தானிடம்); "ஆ! எனக்கிடையிலும், உனக்கிடையிலும்
கிழக்குத் திசைக்கும், மேற்குத்
திசைக்கும் இடையேயுள்ள
தூரம் இருந்திருக்க
வேண்டுமே!" (எங்களை
வழிகெடுத்த) இந்நண்பன்
மிகவும் கெட்டவன்" என்று
கூறுவான்.
[43:39]
(அப்போது) "நீங்கள் அநியாயம்
செய்த படியால்
இன்று உங்களுக்கு
நிச்சயமாக யாதொரு
பயனும் ஏற்படாது நீங்கள்
வேதனையில் கூட்டாளிகளாக
இருப்பீர்கள்" (என்று
அவர்களுக்குச் சொல்லப்படும்).
[43:40]
ஆகவே (நபியே!) நீர்
செவிடனை கேட்குமாறு
செய்ய முடியுமா? அல்லது
குருடனையும், பகிரங்கமான
வழிகேட்டில் இருப்பவனையும்
நேர்வழியில் செலுத்த
முடியுமா?
[43:41]
எனவே உம்மை நாம்
(இவ்வுலகை விட்டும்)
எடுத்துக் கொண்ட
போதிலும், நிச்சயமாக
நாம் அவர்களிடம்
பழி தீர்ப்போம்.
[43:42]
அல்லது நாம் அவர்களுக்கு (எச்சரித்து)
வாக்களித்துள்ளதை
(வேதனையை) நீர்
காணும் படிச் செய்வோம்
- நிச்சயமாக
நாம் அவர்கள் மீது
ஆற்றலுடையோராய்
இருக்கின்றோம்.
[43:43]
(நபியே!)
உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை
பலமாகப் பற்றிப்
பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக
நீர் நேரான பாதையின்
மீதே இருக்கின்றீர்.
[43:44]
நிச்சயமாக இது
உமக்கும் உம் சமூகத்தாருக்கும்
(கீர்த்தியளிக்கும்)
உபதேசமாக இருக்கிறது
(இதைப் பின்பற்றியது பற்றி)
நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
[43:45]
நம்முடைய தூதர்களில்
உமக்கு முன்னே
நாம் அனுப்பியவர்களை "அர் ரஹ்மானையன்றி
வணங்கப்படுவதற்காக
(வேறு) தெய்வங்களை
நாம் ஏற்படுத்தினோமா?" என்று
நீர் கேட்பீராக.
[43:46]
மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளுடன்
ஃபிர்அவ்னிடமும், அவனுடைய
சமுதாய தலைவர்களிடமும்
திடடமாக நாம் அனுப்பி
வைத்தோம். அவர்
(அவர்களை நோக்கி;) "நிச்சயமாக
நாம் அகிலங்களின் இறைவனால்
அனுப்பப்பட்ட
தூதன் ஆவேன்" என்று
கூறினார்.
[43:47]
ஆனால், அவர்களிடம்
நம்முடைய அத்தாட்சிகளை
அவர் கொண்டு வந்தபோது, அவர்கள்
அவற்றைக் கொண்டு
(பரிகசித்துச்) சிரித்தனர்.
[43:48]
ஆனால் நாம் அவர்களுக்குக் காட்டி
ஒவ்வோர் அத்தாட்சியும், அடுத்ததை
விட மிகவும் பெரிதாகவே
இருந்தது எனினும் அவர்கள்
(பாவத்திலிருந்து)
மீள்வதற்காக நாம்
அவர்களை வேதனையைக்
கொண்டே பிடித்தோம்.
[43:49]
மேலும், அவர்கள்; "சூனியக்காரரேச
(உம் இறைவன்) உம்மிடம்
அறுதிமானம் செய்திருப்பதால், நீர் எங்களுக்காக
உம்முடைய இறைவனை
அழை(த்துப் பிரார்த்தனை
செய்)யவும், நிச்சயமாக நாங்கள்
நேர்வழியை பெற்று
விடுவோம்" என்று
கூறினார்கள்.
[43:50]
எனினும், நாம் அவர்களுடைய வேதனையை
நீக்கியதும், அவர்கள்
தங்கள் வாக்குறுதியை
முறித்து விட்டார்கள்.
[43:51]
மேலும் ஃபிர்அவ்ன்
தன் சமூகத்தாரிடம்
பறை சாற்றினான்; "என்னுடைய
சமூகத்தாரே! இந்த
மிஸ்று (எகிப்தின்)
அரசாங்கம், என்னுடையதல்லவா? என் (மாளிகை)
அடியில் ஓடிக் கொண்டிருக்கும்
(நீல நதியின்) இக்கால்வாய்களும்
(என் ஆட்சிக்கு
உட்பட்டவை என்பதைப்)
பார்க்கவில்லையா?
[43:52]
அல்லது, இழிவானவரும், தெளிவாகப்
பேச இயலாதவருமாகிய
இவரை விட நான் மேலானவன்
இல்லையா?
[43:53]
(என்னைவிட
இவர் மேலாயிருப்பின்)
ஏன் இவருக்கு பொன்னாலாகிய
கங்கணங்கள் அணிவிக்கப்படவில்லை, அல்லது
அவருடன் மலக்குகள்
கூட்டமாக வர வேண்டாமா?"
[43:54]
(இவ்வாறாக)
அவன் தன் சமூகத்தாரை
(அவர்களுடைய அறிவை)
இலேசாக மதித்தான்; அவனுக்கு
அவர்களும் கீழ்ப்படிந்து
விட்டார்கள். நிச்சயமாக
அவர்கள் வரம்பை
மீறிய சமூகத்தாராகவும்
ஆகி விட்டார்கள்.
[43:55]
பின்னர், அவர்கள்
நம்மை கோபப்படுத்தியபோது, நாம் அவர்களிடம்
பழி தீர்த்தோம்; அன்றியும், அவர்கள் யாவரையும்
மூழ்கடித்தோம்.
[43:56]
இன்னும், நாம், அவர்களை (அழிந்து
போன) முந்தியவர்களாகவும், பின் வருவோருக்கு
உதாரணமாகவும்
ஆக்கினோம்.
[43:57]
இன்னும் மர்யமுடைய
மகன் உதாரணமாகக்
கூறப்பட்ட போது, உம்முடைய
சமூகத்தார் (பரிகசித்து) ஆர்ப்பரித்தார்கள்.
[43:58]
மேலும்; "எங்கள் தெய்வங்கள்
மேலா? அல்லது அவர்
மேலா?" என்றும் அவர்கள்
கேட்கிறார்கள்; அவரை வீண் தர்க்கத்திற்காகவே
உம்மிடம் உதாரணமாக
எடுத்துக் கொள்கிறார்கள்; ஆகவே அவர்கள்
விதண்டா வாதம்
செய்யும் சமூகத்தாரேயாவர்.
[43:59]
அவர் (ஈஸா நம்முடைய)
அடியாரே அன்றி
வேறில்லை அவருக்கு
நாம் அருட்கொடையைச்
சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு
அவரை நல்லுதாரணமாக
ஆக்கினோம்.
[43:60]
நாம் விரும்புவோமாயின் உங்களிடையே
பூமியில் நாம்
மலக்குகளை ஏற்படுத்தி, அவர்களை
பின்தோன்றல்களாக்கி இருப்போம்.
[43:61]
நிச்சயமாக அவர்
(ஈஸா) இறுதிக் காலத்திற்குரிய
அத்தாட்சியாவார்; ஆகவே, நிச்சயமாக
நீங்கள் இதில்
சந்தேகப்பட வேண்டாம்; மேலும், என்னையே
பின்பற்றுங்கள்; இதுவே
ஸிராத்துல் முஸ்தகீம்
(நேரான வழி).
[43:62]
அன்றியும் ஷைத்தான்
உங்களை (நேர்வழியை
விடடும்) தடுத்து
விடாதிருக்கட்டும்
- நிச்சயமாக அவன்
உங்களுக்குப் பகிரங்கமான
விரோதியாகவே இருக்கிறான்.
[43:63]
இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன்
வந்தபோது "மெய்யாகவே
நான் உங்களுக்கு
ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள்
கருத்து வேற்றுமையுடன்
இருக்கும் சிலவற்றை
உங்களுக்கு விளக்கிக்
கூறுவேன் - ஆகவே
நீங்கள் அல்லாஹ்விடம்
பயபக்தியுடன்
இருங்கள்; எனக்கும்
கீழ்படியுங்கள்" என்று
கூறினார்.
[43:64]
நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும்
இறைவன், உங்களுக்கும்
இறைவன். ஆகவே அவனையே
வணங்குங்கள், இதுவே ஸிராத்துல்
முஸ்தகீம் (நேரான
வழி).
[43:65]
ஆனால், அவர்களிடையே
(ஏற்பட்ட பல) பிரிவினர்
தமக்குள் மாறுபட்டனர்; ஆதலின், அநியாயம்
செயதார்களே அவர்களுக்கு நோவினை
தரும் நாளுடைய
வேதனையின் கேடுதான்
உண்டாகும்.
[43:66]
தங்களுக்கே தெரியாத
விதத்தில் திடுகூறாக
இவர்களுக்கு (இறுதி
நாளின்) வேளை வருவதைத்
தவிர, (வேறெதையும்)
இவர்கள் எதிர்ப்பார்க்கிறார்களா?
[43:67]
பயபக்தியுடையவர்களைத்
தவிர, நண்பர்கள்
அந்நாளில் சிலருக்குச்
சிலர் பகைவர்கள்
ஆகிவிடுவார்கள்.
[43:68]
என்னுடைய அடியார்களே! இந்நாளில்
உங்களுக்கு எவ்வித
பயமுமில்லை நீங்கள்
துக்கப்படவும்
மாட்டீர்கள் (என்று
முஃமின்களுக்கு
அல்லாஹ்வின் அறிவிப்பு
வரும்).
[43:69]
இவர்கள் தாம்
நம் வசனங்கள் மீது ஈமான்
கொண்டு, (முற்றிலும்
வழிப்பட்டு நடந்த)
முஸ்லிம்களாக
இருந்தனர்.
[43:70]
நீங்களும், உங்கள்
மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக
சுவர்க்கத்தில்
நுழையுங்கள் (என்று
மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).
[43:71]
பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச்
சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும்
அங்கு அவர்கள்
மனம் விரும்பியதும், கண்களுக்கு
இன்பம் தருவதும்
அதிலுள்ளன் இன்னும், "நீங்கள் இங்கு
என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!" (என அவர்களிடம்
சொல்லப்படும்.)
[43:72]
நீங்கள் செய்து
கொண்டிருந்த (நன்மையான)
தன் காரணமாக இந்த சுவர்க்கத்தை
நீங்கள் அனந்தரங்
கொண்டீர்கள்.
[43:73]
உங்களுக்கு அதில்
ஏராளமான கனிவகைகள்
இருக்கின்றன அவற்றிலிருந்து
நீங்கள் உண்பீர்கள்" (எனக் கூறப்படும்).
[43:74]
நிச்சயமாக, குற்றவாளிகள்
நரக வேதனையில்
என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
[43:75]
அவர்களுக்கு
அ(வ்வேதனையான)து குறைக்கப்பட
மாட்டாது அதில்
அவர்கள் நம்பிக்கையையும்
இழந்து விடுவார்கள்.
[43:76]
எனினும், நாம் அவர்களுக்கு யாதோர்
அநியாயமும் செய்யவில்லை
ஆனால் அவர்கள்
தமக்குத் தாமே
அநியாயம் செய்து கொண்டவர்களே.
[43:77]
மேலும், அவர்கள்
(நரகத்தில்) "யா மாலிக்" உமது இறைவன்
எங்களை முடித்து
விடட்டுமே!" என்று சப்பதமிடுவார்கள்; அதற்கு
அவர் "நிச்சயமாக
நீங்கள் (இங்கு)
நிலைத்து இருக்க வேண்டியவர்களே" என்று
கூறுவார்.
[43:78]
நிச்சயமாக, நாம் உங்களிடம் சத்தியத்தைக்
கொண்டு வந்தோம்; ஆனால்
உங்களில் பெரும்பாலோர்
சத்தியத்தை வெறுக்கிறவர்களாக
இருந்தார்கள்
(என்றும் கூறப்படும்).
[43:79]
அல்லது அவர்கள்
(மக்கத்து காஃபிர்கள்)
ஏதாவது முடிவு
கட்டியிருக்கிறார்களா? ஆனால்
(அனைத்துக் காரியங்களுக்கும்)
முடிவு கட்டுகிறது
நாம் தான்.
[43:80]
அல்லது, அவர்களுடைய இரகசியத்தையும், அவர்கள்
தனித்திருந்த
கூடிப் பேசவதையும்
நாம் கேட்கவில்லையென்று எண்ணிக்
கொண்டார்களா? அல்ல மேலும்
அவர்களிடமுள்ள
நம் தூதர்களை
(எல்லாவற்றையும்) எழுதிக்
கொள்கிறார்கள்.
[43:81]
(நபியே!)
நீர் கூறும்; "அர் ரஹ்மானுக்கு
ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில்
நானே முதன்மையானவனாக
இருந்திருப்பேன்!"
[43:82]
வானங்களுக்கும்
பூமிக்கும் இறைவன்; அர்ஷுக்கும்
இறைவன். (அத்தகைய
இறைவன் அவனுக்கு
சந்ததி உண்டென்று) அவர்கள்
வர்ணிப்பதை விட்டும்
மகா பரிசத்தமானவன்.
[43:83]
ஆகையால், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட
அவர்களுடைய (வேதனையின்)
நாளை அவர்கள் சந்திக்கும்
வரை, அவர்களை (வீண் விவாதத்தில்)
மூழ்கியிருக்கவும், விளையாட்டில்
கழிக்கவும் (நபியே!)
நீர் விட்டு
விடும்.
[43:84]
அன்றியும், அவனே வானத்தின் நாயனும்
பூமியின் நாயனும்
ஆவான்; மேலும், அவனே ஞானம்
மிக்கோன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
[43:85]
அவன் பெரும் பாக்கியம் உடையவன்; வானங்கள், பூமி, இவை இரண்டிற்குமிடையே
உள்ளவை ஆகியவற்றின்
ஆடசி அவனுக்குடையதே, அவனிடம்
தான் (இறுதி) வேளைக்குரிய
ஞானமும் இருக்கிறது
மேலும், அவனிடமே நீங்கள்
மீட்கப்படுவீர்கள்.
[43:86]
அன்றியும், அல்லாஹ்வையன்றி அவர்கள்
எவர்களை (தெய்வங்களாக)
அழைக்கிறார்களோ, அவர்கள்
(அவனிடம் அவர்களுக்குப்) பரிந்து
பேச அதிகாரமுள்ளவர்கள்
அல்லர். ஆனால்
எவர்கள் சத்தியத்தை
அறிந்து (ஏற்றவர்காளாக
அதற்குச்) சாட்சியம்
கூறுகிறார்களோ
அவர்கள் (இறை அனுமதி
கொண்டு பரிந்து
பேசவர்).
[43:87]
மேலும், அவர்களிடம்
யார் அவர்களைப்
படைத்தது என்று
நீர் கேட்டால் "அல்லாஹ்" என்றே
அவர்கள் நிச்சயமாக
கூறுவார்கள்; அவ்வாறிக்கும்
போது (அவனைவிட்டு)
அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்?
[43:88]
என் இறைவா! நிச்சயமாக
இவர்கள் நம்பிக்கை
கொள்ளா சமூகத்தாராக
இருக்கிறார்கள்
என்று (நபி) கூறுவதையும்
(இறைவன் அறிகிறான்).
[43:89]
ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து "ஸலாமுன்" என்று
கூறிவிடும்; (உண்மைமை
பின்னர்) அவர்கள் அறிந்து
கொள்வார்கள்.
Ad-Dukhân
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[44:1]
ஹா,
மீம்.
[44:2]
தெளிவான இவ்வேதத்தின்
மீது சத்தியமாக!
[44:3]
நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள
இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக
(அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக்
கொண்டே இருக்கின்றோம்.
[44:4]
அதில் முக்கியமான
ஒவ்வொரு விஷயங்களும்
தீர்மானிக்கப்படுகிறது.
[44:5]
அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக
(தூதர்களை) அனுப்புபவர்களாக
இருந்தோம்.
[44:6]
(அது) உம்முடைய இறைவனிடமிருந்து
வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன்
(யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
[44:7]
நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு
மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு
அவனே இறைவன் (என்பதைக்
காண்பீர்கள்).
[44:8]
அவனையன்றி (வேறு)
நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச்
செய்கிறான்; அவனே உங்கள்
இறைவனாகவும் முன் சென்ற
உங்கள் மூதாதையரின்
இறைவனாகவும் இருக்கின்றான்.
[44:9]
ஆனால், அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக்
கொண்டிருக்கிறார்கள்.
[44:10]
ஆகவே, வானம் ஒரு
தெளிவான புகையைக்
கொண்டு வரும் நாளை
நீர் எதிர் பார்ப்பீராக.
[44:11]
(அப்புகை)
மனிதர்களைச் சூழ்ந்து
கொள்ளும்; "இது நோவினை
செய்யும் வேதனையாகும்."
[44:12]
எங்கள் இறைவனே!
நீ எங்களை விட்டும்
இந்த வேதனையை நீக்குவாயாக!
நிச்சயமாக நாங்கள்
முஃமின்களாக இருக்கிறோம் (எனக் கூறுவர்).
[44:13]
நினைவுறுத்தும்
நல்லுபதேசம் அவர்களுக்கு
எவ்வாறு (அந்நேரம்)
பயனளிக்கும்? (முன்னமேயே
சத்தியத்தை) விளக்குபவரான
தூதர் அவர்களிடம்
வந்திருக்கின்றார்.
[44:14]
அவர்கள் அவதை
விட்டுப் பின் வாங்கிக்
கொண்டு (மற்றவர்களால்
இவர்) "கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்" எனக் கூறினர்.
[44:15]
நிச்சயமாக நாம்
வேதனையைச் சிறிது
(காலத்திற்காக)
விலக்குவோம்; (ஆனால், பின்னரும்)
நீங்கள் நிச்சயமாகத் (தீமையின்
பக்கம்) திரும்புபவர்களே.
[44:16]
ஒருநாள் நாம்
(உங்களைப்) பெரும்
பிடியாகப் பிடிப்போம்; நிச்சயமாக
(அந்நாளில்) நாம்
பழி தீர்ப்போம்.
[44:17]
அன்றியும், நாம் இவர்களுக்கு முன்னரே
ஃபிர்அவ்னுடைய
சமூகத்தவரை நிச்சயமாகச்
சோதித்தோம்; கண்ணியமான
தூதரும் அவர்களிடம்
வந்தார்.
[44:18]
அவர் (கூறினார்;) "என்னிடம்
நீங்கள் அல்லாஹ்வின்
அடியார்களை ஒப்படைத்து
விடுங்கள்; நிச்சயமாக நான் உங்களுக்கு
நம்பிக்கைக்குரிய
(இறை) தூதனாவேன்.
[44:19]
அன்றியும், "நீங்கள் அல்லாஹ்வுக்கு
எதிராக உங்களை
உயர்த்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக
நான் உங்களிடம்
தெளிவான சான்றுகளுடன்
வந்திருக்கின்றேன்.
[44:20]
அன்றியும், "என்னை நீங்கள்
கல்லெறிந்து கொல்லாதிருக்கும்
பொருட்டு நான், என்னுடைய
இறைவனும் உங்களுடைய
இறைவனுமாகிய அவனிடமே
நிச்சயமாகப் பாதுகாவல்
தேடுகிறேன்.
[44:21]
மேலும், நீங்கள்
என் மீது நம்பிக்கை
கொள்ளவில்லையாயின்
என்னை விட்டு விலகிக்
கொள்ளங்கள் (என்று
மூஸா கூறினார்).
[44:22]
(அவர்கள்
வரம்பு மீறியவர்களாகவே
இருந்தார்கள்). "நிச்சயமாக
இவர்கள் குற்றவாளிகளான சமூகத்தாராகவே
இருக்கிறார்கள்" என்று
தம் இறைவனிடம்
பிரார்த்தித்துக் கூறினார்.
[44:23]
என் அடியார்களை
(அழைத்து)க் கொண்டு, இரவில்
நீர் (வேறிடம்)
செல்க நிச்சயமாக
நீங்கள பின் தொடரப்படுவீர்கள் (என்று
இறைவன் கூறினான்.)
[44:24]
அன்றியும். அக்கடலைப் பிளவுள்ளதாகவே
விட்டுச் செல்லும், நிச்சயமாக
அவர்கள் (அதில்)
மூழ்கடிக்கப்பட வேண்டிய
படையினராகவே இருக்கின்றார்கள்
(எனக் கூறி" இறைவன்
ஃபிர்அவ்னையும் அவன் படையினரையும்
மூழ்கடித்தான்).
[44:25]
எத்தனை தோட்டங்களையும், நீர் ஊற்றுக்களையும்
அவர்கள் விட்டுச்
சென்றார்கள்?
[44:26]
இன்னும் (எத்தனையோ) விளைநிலங்களையும்
நேர்த்தியான மாளிகைகளையும்
(விட்டுச் சென்றார்கள்).
[44:27]
இன்னும் அவர்கள்
இன்பமாக அனுபவித்துக்
கொண்டிருந்த சுகானுபவங்களையும்
(விட்டுச் சென்றார்கள்).
[44:28]
அவ்வாறே (முடிவு
ஏற்பட்டதும்) அவற்றிற்கு
வேறு சமூகத்தாரை
வாரிசாக நாம் ஆக்கினோம்.
[44:29]
ஆகவே, அவர்களுக்காக
வானமும் பூமியும்
அழவுமில்லை (தப்பித்துக்
கொள்ள) அவகாசமும்
கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்களில்லை.
[44:30]
நாம் இஸ்ராயீலின்
சந்ததியை இழிவு
தரும் வேதனையிலிருந்தும்
திட்டமாகக் காப்பாற்றினோம்;
[44:31]
ஃபிர்அவ்னை விட்டும் (காப்பாற்றினோம்)
நிச்சயமாக அவன்
ஆணவம் கொண்டவனாக, வரம்பு
மீறியவனாக இருந்தான்.
[44:32]
நிச்சயமாக, நாம் நன்கு தெரிந்தே
அவர்களை உலக மக்களிலிருந்து
தேர்ந்தெடுத்தோம்.
[44:33]
அன்றியும், நாம் அவர்களுக்கு அத்தாட்சிகளை
கொடுத்தோம்; அவற்றில்
துலக்கமான சோதனை
இருந்தது.
[44:34]
நிச்சயமாக அவர்கள்
(மக்கா காஃபிர்கள்)
கூறுகிறார்கள்;
[44:35]
எங்களுக்கு முதலில்
ஏற்படும் மரணத்தைத்
தவிர வேறு எதுவுமில்லை
நாங்கள் மீண்டும்
எழுப்படுபவர்கள்
அல்லர்.
[44:36]
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்கள்
மூதாதையரை (திரும்பக்)
கொண்டு வாருங்கள்.
[44:37]
இவர்களும் மேலா? அல்லது 'துப்பஉ
சமூகத்தார்களும், அவர்களுக்கு
முன்னருந்தவர்களுமா? நிச்சயமாக
அவர்கள் பாவம்
செய்பவர்களாகவே
இருந்தார்கள்; (ஆகவே)
அவர்களை நாம் அழித்தோம்.
[44:38]
மேலும், வானங்களையும் பூமியையும்
இவ்விரண்டிற்கும்
இடையே உள்ளவற்றையும்
விளையாட்டிற்காக
நாம் படைக்கவில்லை.
[44:39]
இவ்விரண்டையும், சத்தியத்தைக் கொண்டேயன்றி
நாம் படைக்கவில்லை.
எனினும் அவர்களில்
பெரும்பாலோர்
(இதை) அறியமாட்டார்கள்.
[44:40]
நிச்சயமாக (நியாயத்)
தீர்ப்பு நாள்தாம்
அவர்கள் யாவருக்கும்
குறிப்பிட்ட தவணையாகும்.
[44:41]
ஒரு நண்பன் மற்றொரு
நண்பனுக்கு எவ்விதப்
பயனும் அளிக்க
முடியாத நாள்; அன்றியும்
(அந்நாளில்) அவர்கள்
உதவி செய்யப்படவும்
மாட்டார்கள்.
[44:42]
(எவர்கள்
மீது) அல்லாஹ்
கிருபை செய்கிறானோ, அவர்களைத்
தவிர - நிச்சயமாக
அவன் (யாவரையும்)
மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.
[44:43]
நிச்சயமாக, ஜக்கூம்
(கள்ளி) மரம்
(அதுவே).
[44:44]
பாவிகளுக்குரிய
உணவு
[44:45]
அது உருக்கப்பட்ட
செம்பு போல் இருக்கும்; வயிறுகளில்
அது கொதிக்கும்.
[44:46]
வெந்நீர் கொதிப்பதைப்
போல்.
[44:47]
அவனைப்பிடித்துக்
கொழுந்து விட்டெரியும்
நரகத்தின் மையத்திற்கு இழுத்துச்
செல்லுங்கள்.
[44:48]
பின்னர், அவனது
தலைக்கு மேல் வேதனை
கொடுக்கும் கொதிக்கும்
நீரை ஊற்றுங்கள்.
[44:49]
நீ (இதைச்) சுவைத்துப்பார்!
நிச்சயமாக நீ வல்லமை
சாலியாகவும், சங்கையுடையவனாகவும்
இருந்தாய்!
[44:50]
நிச்சயமாக இதுதான்
நீங்கள் சந்தேகித்துக்
கொண்டிருந்தீர்களே
அதுவாகும்" (என்று
அவர்களிடம் சொல்லப்படும்).
[44:51]
பயபக்தியுடையவர்கள்
நிச்சயமாக (அவர்கள்)
அச்சமற்ற, இடத்தில்
இருப்பார்கள்.
[44:52]
சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும்
(இருப்பார்கள்).
[44:53]
ஸுன்துஸ், இஸ்தப்ரக்
(ஆகிய அழகிய
பட்டாடைகள், பீதாம்பரங்கள்)
அணிந்து ஒருவரை
ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள்.
[44:54]
இவ்வாறே (அங்கு
நடைபெறும்) மேலும்
அவர்களுக்கு ஹூருல்
ஈன்களை நாம் மண
முடித்து வைப்போம்.
[44:55]
அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு
கேட்டு(ப் பெற்றுக்)
கொண்டுமிருப்பார்கள்.
[44:56]
முந்திய மரணத்தைத்
தவிர, அங்கு மரணத்தை
அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும்
(இறைவன்) அவர்களை
நரகத்தின் வேதனையை
விட்டும் காப்பாற்றிவிட்டான்.
[44:57]
(இதுவே)
உம்முடைய இறைவனின் அருள்
கொடையும்; இதுவே
மிகப் பெரிய வெற்றியமாகும்.
[44:58]
அவர்கள் (அறிந்து)
நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம்
உம்முடைய மொழியில்
எளிதாக்கினோம்.
[44:59]
ஆகவே, நீரும் எதிர்பார்ப்பீராக!
அவர்களும் எதிர்பார்த்துக்
கொண்டுதான் இருக்கிறார்கள்.
Al-Jâthiyah
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[45:1]
ஹா,
மீம்.
[45:2]
இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும்
ஞானம் மிக்கோனுமாகிய
அல்லாஹ்விடமிருந்தே
இறக்கியருளப்பட்டது.
[45:3]
முஃமின்களுக்கு
நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும்
அத்தாட்சிகள்
இருக்கின்றன.
[45:4]
இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப்
பிராணிகளைப் பரப்பியிருப்பதிலும் (நம்பிக்கையில்)
உறுதியுள்ள சமூகத்தாருக்கு
அத்தாட்சிகள்
இருக்கின்றன.
[45:5]
மேலும் இரவு பகல்
மாறி மாறி வருவதிலும், வானத்திலிருந்து
அருள் மாரியை அல்லாஹ்
இறக்கி வைத்து, இறந்து
போன பூமியை
அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும்; காற்றுகளை
மாறி மாறி வீசச்செய்வதிலும் அறிவுடைய
சமூகத்தாருக்கு
அத்தாட்சிகள்
இருக்கின்றன.
[45:6]
இவை அல்லாஹ்வுடைய
வசனங்கள், இவற்றை
(நபியே!) உம்மீது
உண்மையுடன் ஓதிக்
காண்பிக்கிறோம்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய
வசனங்களுக்கும்
பின்னர் இவர்கள்
எதனைத் தான் நம்பப்
போகிறார்கள்.
[45:7]
(சத்தியத்தை
புறக்கணித்துப்) பொய்க்
கற்பனை செய்யும்
பாவிகள் யாவருக்கும்
கேடுதான்.
[45:8]
தன் மீது ஓதிக்காட்டப்படும் அல்லாஹ்வுடைய
வசனங்களைக் கேட்கிறான்; பின்பு
பெருமையடித்துக்
கொண்டு அவன் அதைக் கேளாதது
போல் (தன் நிராகரிப்பில்)
பிடிவாதம் செய்கிறான்; அ(த்தகைய)வனுக்கு நோவினை
செய்யும் வேதனையைக்
கொண்டு நன்மாராயம்
கூறுவீராக.
[45:9]
நம் வசனங்களிலிருந்து
ஏதாவது ஒன்றை
அவன் அறிந்து கொண்டால், அதைப்
பரிகாசமாக எடுத்துக்
கொள்கிறான்; அ(த்தகைய)வர்களுக்கு
இழிவு தரும் வேதனை
உண்டு.
[45:10]
அவர்களுக்கு
முன்னால் நரகம் இருக்கிறது
அவர்கள் சம்பாதித்துக்
கொண்டதில் எப்பொருளும்
அவர்களுக்குப்
பயன் தராது
அல்லாஹ்வையன்றி, எவற்றை
அவர்கள் பாதுகாவலர்களாக
எடுத்துக் கொண்டார்களோ அவையும்
(அவர்களுக்குப்
பயன் தராது) மேலும், அவர்களுக்கு
மாபெரும் வேதனையுமுண்டு.
[45:11]
இது (குர்ஆன்)தான் நேர்வழிகாட்யாகும், எவர்கள்
தம்முடைய இறைவனின்
வசனங்களை நிராகரித்து விட்டார்களோ, அவர்களுக்கு
நோவினை மிகுந்த
கடினமான வேதனையுண்டு.
[45:12]
கப்பல்கள் அவன்
கட்டளையைக் கொண்டு
(கடலில்) செல்லும்
பொருட்டும், நீங்கள்
அவனுடைய அருளைத்
தேடிக்கொள்ளும் பொருட்டும்; மேலும்
அவனுக்கு நன்றி
செலுத்தும் பொருட்டும்
உங்களுக்குக்
கடலை வசப்படுத்திக்
கொடுத்தவன் அல்லாஹ்வே
ஆவான்.
[45:13]
அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை
அனைத்தையும் தன்
அருளால் உங்களுக்கு
வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; அதில்
சிந்திக்கும்
சமூகத்தாருக்கு
நிச்சயமாகப் பல அத்தாட்சிகள்
உள்ளன.
[45:14]
ஈமான் கொண்டவர்களுக்கு (நபியே!)
நீர் கூறிவிடும்; அல்லாஹ்வுடைய
(தண்டனைக்கான)
நாட்களை நம்பாதவர்களை அவர்கள்
மன்னித்து (அவர்களைப்
பற்றி அல்லாஹ்விடம்
பரஞ் சாட்டிவிடட்டும்); ஜனங்களுக்கு
அவர்கள் தேடிக்
கொண்ட வினைக்குத்
தக்கபலனை அவன்
கொடுப்பான்.
[45:15]
எவர் ஸாலிஹான
(நல்ல) அமலை செய்கிறாரோ
அது அவருக்Nகு நன்மையாகும்; அன்றியும், எவர் தீமையைச்
செய்கிறாரோ, அது அவருக்கே
தீமையாகும், பின்னர்
உங்கள் இறைவனிடமே
நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
[45:16]
நிச்சயமாக நாம், இஸ்ராயீலின் சந்ததியினருக்கு
வேதத்தையும், அதிகாரத்தையும், நுபுவ்வத்தையும்
கொடுத்தோம்; அவர்களுக்கு
மணமான உணவு (வசதி)களையும்
கொடுத்தோம் - அன்றியும்
அகிலத்தாரில் அவர்களை
மேன்மையாக்கினோம்.
[45:17]
அவர்களுக்கு
(மார்க்க விஷயத்தில்)
தெளிவான கடடளைகளையும்
கொடுத்தோம்; எனினும்
அவர்களுக்கிடையே
உண்டான பொறாமையினால், அவர்களுக்கு
(வேத) ஞானம் வந்தபின்னரும்
அவர்கள் அபிப்பிராய
பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக
உம் இறைவன் அவர்கள்
எதில் அபிப்பிராய
பேதம் கொண்டிருந்தார்களோ
அதில் கியாம நாளில்
அவர்களிடையே தீர்ப்புச்
செய்வான்.
[45:18]
இதன் பின்னர்
ஷரீஅத்தில் (மார்க்கத்தில்)
ஒரு நேரான வழியில்
நாம் ஆக்கியுள்ளோம்.
ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக
அன்றியும், அறியாமல்
இருக்கின்றார்களே
அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.
[45:19]
நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு
எதிராக உமக்கு
யாதோர் உதவியும்
செய்து விட முடியாது.
இன்னும் நிச்சயமாக
அநியாயக்காரர்களில்
சிலர் சிலருக்குப்
பாதுகாவலர்களாக
இருக்கிறார்கள்; ஆனால்
பயபக்தியுடையவர்களுக்கு
அல்லாஹ்வே பாதுகாவலன்.
[45:20]
இது (குர்ஆன்) மனிதர்களுக்கு தெளிவான
அத்தாட்சிகளைக்
கொண்டதாகவும், உறுதியான
நம்பிக்கையுடைய
சமூகத்தாருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும்
இருக்கிறது.
[45:21]
எவர்கள் தீமைகள்
செய்கிறார்களோ அவர்களை, எவர்கள்
ஈமான் கொண்டு நல்ல
அமல்கள் செய்கிறார்களோ
அவர்களுக்குச்
சமமாக நாம் ஆக்கிவிடுவோம்
என்று எண்ணுகின்றார்களா? அவர்கள்
உயிருடனிருப்பதும், மரணமடைவதும்
சமமாகுமா? அவர்கள்
முடிவு செய்து
கொண்டது மிகவும்
கெட்டதாகும்.
[45:22]
வானங்களையும்
பூமியையும் அல்லாஹ்
உண்மையுடன் (தக்க
காரணத்தைக் கொண்டே)
படைத்துள்ளான்; ஒவ்வோர்
ஆத்மாவும் அது தேடிக்
கொண்டதற்குத்
தக்க கூலி கொடுக்கப்படுவதறாகாக
அவை அநியாயம் செய்யப்படமாட்டா.
[45:23]
(நபியே!)
எவன் தன்னுடைய
(சரீர, மனோ) இச்சையைத்
தன்னுடைய தெய்வமாக
ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர்
பார்த்தீரா? மேலும், அறிந்தே
அல்லாஹ் அவனை வழிகேட்டில்
விட்டு அவனுடைய
காதுகள் மீதும் இருதயத்தின்
மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய
பார்வை மீதும்
திரையை அமைத்துவிட்டான்.
எனவே, அல்லாஹ்வுக்குப்
பிறகு அவனுக்கு
நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள்
சிந்தித்து உணர
வேண்டாமா?
[45:24]
மேலும் (மறுமையை
நம்பாத) அவர்கள்; "நமது இந்த
உலக வாழ்க்கையைத்
தவிர வேறு (வாழ்க்கை)
கிடையாது நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; "காலம்" தவிர வேறெதுவும்
நம்மை அழிப்பதில்லை" என்று
கூறுகிறார்கள்; அவர்களுக்கு
அது பற்றிய அறிவு
கிடையாது - அவர்கள்
(இது பற்றிக் கற்பனையாக)
எண்ணுவதைத் தவிர
வேறில்லை.
[45:25]
அவர்களிடம் தெளிவான
நம் வசனங்கள்
ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவர்களுடைய
வாதமெல்லாம், "நீங்கள் உண்மையாளர்களாக
இருந்தால் எங்களுடைய
மூதாதையரை (எழுப்பிக்)
கொண்டு வாருங்கள்" என்பது
தவிர வேறில்லை.
[45:26]
அல்லாஹ் உங்களுக்கு
உயிர் கொடுக்கிறான்; பின்னர்
அவனே உங்களை மரணம்
அடையச் செய்கிறான்; பின்னர்
கியாம நாளன்று
அவன் உங்களை ஒன்று
சேர்ப்பான் - இதில்
சந்தேகமேயில்லை
எனினும் மனிதரில் பெரும்பாலோர்
(இதை) அறியமாட்டார்கள்
என்று (நபியே!) நீர்
கூறும்.
[45:27]
அன்றியும், வானங்களுடையவும், பூமியுடையவும்
ஆட்சி அல்லாஹ்வுக்கே
உரியது மேலும், இறுதித்
தீர்ப்புக்கான வேளைவந்து
வாய்க்கும் நாளில், பொய்யர்கள்
நஷ்டமடைவார்கள்.
[45:28]
(அன்று)
ஒவ்வொரு சமுதாயத்தையும்
முழந்தாளிட்டிருக்க
(நபியே!) நீர் காண்பீர்; ஒவ்வொரு
சமுதாயமும் அதனதன்
(பதிவு) புத்தகத்தின்
பக்கம் அழைக்கப்படும்; அன்று, நீங்கள்
(உலகில்) செய்திருந்ததற்குரிய
கூலி கொடுக்கப்படுவீர்கள்.
[45:29]
இது உங்களைப்பற்றிய
உண்மையைக் கூறும்
நம்முடைய புத்தகம்; நிச்சயமாக
நாம் நீங்கள் செய்து
வந்ததைப் பதிவு
செய்து கொண்டிருந்தோம்
(என்று கூறப்படும்).
[45:30]
ஆகவே, எவர்கள் ஈமான்
கொண்டு நல்லமல்கள்
செய்து வந்தார்களோ, அவர்களை
அவர்களுடைய இறைவன்
தன் ரஹமத்தில் பிரவேசிக்கச்
செய்வான்; அதுவே
தெளிவான வெற்றியாகும்.
[45:31]
ஆனால், நிராகரித்தவர்களிடம்; "உங்களுக்கு
என் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டுக்
கொண்டு இருக்கவில்லையா? அப்பொழுது
நீங்கள் பெருமையடித்துக்
கொண்டு குற்றவாளிகளாக
இருந்தீர்கள்" (என்று
சொல்லப்படும்).
[45:32]
மேலும் "நிச்சயமாக அல்லாஹ்வின்
வாக்குறுதி உண்மையானது
மறுமை நாள் அது
பற்றியும் சந்தேகமில்லை" என்று
கூறப்பட்ட போது; "(மறுமை)
நாள் என்ன என்று
நாங்கள் அறியோம்; அது ஒரு வெறும்
கற்பனை என்றே நாங்கள்
கருதுகிறோம். எனவே
(அதை) நாங்கள் உறுதியென
நம்புபவர்களல்லர்" என்று
நீங்கள் கூறினீர்கள்.
[45:33]
அவர்கள் செய்த
தீமையெல்லாம் (அந்நாளில்)
அவர்களுக்கு வெளியாகும்; எதை அவர்கள்
பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே
அவர்களைச் சூழ்ந்து
கொள்ளும்.
[45:34]
இன்னும், "நீங்கள் உங்களுடைய
இந்நாளின் சந்திப்பை
மறந்து விட்டது
போன்றே, இன்றை தினம்
நாம் உங்களை மறக்கிறோம்; அன்றியும்
நீங்கள் தங்குமிடம்
நரகம் தான்; மேலும், உங்களுக்கு
உதவி செய்பவர்
எவருமில்லை" என்று
(அவர்களுக்குக்)
கூறப்படும்.
[45:35]
நீங்கள் அல்லஹ்வின்
வசனங்களை ஏளனமாக
எடுத்துக் கொண்டதனாலும்
இவ்வுலக வாழ்க்கை
உங்களை மயக்கி
ஏமாற்றி விட்டதினாலுமே
இந்த நிலை. இன்றைய
தினத்தில் அதிலிருந்து
அவர்கள் வெளியேற்றப்படவும்
மாட்டார்கள்; மன்னிப்பளிக்கப்படவும்
மாட்டார்கள்.
[45:36]
ஆகவே வானங்களுக்கும்
இறைவனான - பூமிக்கும்
இறைவனான - அகிலத்தாருக்கெல்லாம்
இறைவனான அல்லாஹ்வுக்கே
எல்லாப் புகழும்.
[45:37]
இன்னும், வானங்களிலும், பூமியிலுமுள்ள
பெருமை அவனுக்கே
உரியது மேலும், அவன் தான்
(யாவரையும்) மிகைத்தவன், ஞானம்
மிக்கோன்.