Part 27
[51:31]
(பின்னர்
இப்றாஹீம்;) "தூதர்களே!
உங்களுடைய காரியம்
என்ன?" என்று வினவினார்.
[51:32]
குற்றவாளிகளான
ஒரு சமூகத்தினர் பால் நாங்கள்
நிச்சயமாக அனுப்பப்பட்டிருக்கிறோம்
என்று அவர்கள்
கூறினார்கள்.
[51:33]
அவர்கள் மீது
(சுட்ட) களிமண்
கற்களை எறிவதற்காக
(நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்)-
[51:34]
வரம்பு மீறியவர்களுக்காக
உங்கள் இறைவனிடம்
(அக்கற்கள்) அடையாள மிடப்பட்டவை."
[51:35]
ஆகவே அவ்வூரில்
இருந்த முஃமின்களை
(முதலில்) நாம்
வெளியேற்றி விட்டோம்.
[51:36]
எனவே, அதில் முஸ்லிம்களிலிருந்து
ஒரு வீட்டாரைத்
தவிர, ஒருவரையும்
நாம் காணவில்லை.
[51:37]
நோவினை தரும்
வேதனையை அஞசுகிறார்களே
அவர்களுக்கு நாம்
இதில் ஓர் அத்தாட்சிளை
விட்டு வைத்தோம்.
[51:38]
மலும், மூஸாவி(ன் வரலாற்றி)லும்
ஓர் அத்தாட்சி
இருக்கிறது நாம்
அவரைத் தெளிவான
ஆதாரத்துடன் ஃபிர்அவ்னிடத்தில்
அனுப்பிய போது
[51:39]
அவன் தன் (ஆட்சி, செல்வம், படைகள்
ஆகியவற்றின்) வல்லமையின்
காரணமாக (அவரைப்)
புறக்கணித்து; "இவர் ஒரு சூனியக்காரர், அல்லது
பைத்தியக்காரர்" என்று
கூறினான்.
[51:40]
ஆகவே, நாம் அவனையும், அவனுடைய படைகளையும்
பிடித்து அவர்களைக்
கடலில் எறிந்தோம்; அவன் நிந்தனைக்கும்
ஆளாகி விட்டான்.
[51:41]
இன்னும், 'ஆது' (சமூகத்தாரிலும்
ஒரு படிப்பினை
இருக்கிறது); நாம் அவர்கள்
மீது (நாசம் விளைவிக்கக்
கூடிய) மலட்டுக்
காற்றை அனுப்பியN போது
[51:42]
(க்காற்றான)து
தன் எதிரில் பட்டதையெல்லாம்
தூள் தூளாக்காமல்
விடவில்லை.
[51:43]
மேலும் 'ஸமூது' (சமூகத்தாரிலும்
ஒரு படிப்பினை
இருக்கிறது); "ஒரு காலம்
சுகம் அனுபவியுங்கள்" என்று
அவர்களுக்குக்
கூறப்பட்டபோது
[51:44]
அவர்கள் தங்கள்
இறைவனுடைய கடடளையை
மீறினார்கள்; அவர்கள்
பார்த்துக் கொண்டிருக்கும்
நிலையிலேயே (நில நடுக்கம்
பேரிடி போன்ற)
பயங்கரமான பெரும்
சப்தம் அவர்களைப்
பிடித்துக் கொண்டது.
[51:45]
ஆகவே, அவர்கள் நிற்கவும்
சக்தி பெற்றார்களில்லை
(எத்தகைய) உதவியும்
பெற்றுக் கொள்ள
முடியாதவர்களா(க
மடிந்து) போயினர்.
[51:46]
அன்றியும், இவர்களுக்கு முன்னால்
நூஹுடைய சமூகத்தாரையும்
(நினைவூட்டுவீராக); நிச்சயமாக
அவர்கள் பாவம் செய்யும்
சமூகத்தாராகவே
இருந்தார்கள்.
[51:47]
மேலும், நாம் வானத்தை
(நம்) சக்திகளைக்
கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக
நாம் விரிவாற்றலுடையவராவோம்.
[51:48]
இன்னும், பூமியை
- நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு
விரிப்பவர்களில்
நாமே மேம்பாடுடையோம்.
[51:49]
நீங்கள் சிந்தித்து
நல்லுணர்வு பெறுவதற்காக
ஒவ்வொரு பொருளையும்
ஜோடி ஜோடியாக நாம்
படைத்தோம்.
[51:50]
ஆகவே, அல்லாஹ்வின்
பக்கம் விரைந்து
செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து
உங்களுக்குத்
தெளிவாக அச்சமூட்டி
எச்சரிக்கை செய்பவனாகவே
இருக்கின்றேன்
(என்று நபியே! நீர் கூறுவீராக).
[51:51]
மேலும், அல்லாஹ்வுடன்
வேறு நாயனை
(இணையாக) ஆக்காதீர்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து
உங்களுக்குத் தெளிவாக
அச்சமூட்டி எச்சரிக்கை
செய்பவனாகவே -
இருக்கின்றேன்
(என்றும் கூறும்).
[51:52]
இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம்
(நம்) தூதர்களிலிருந்து
ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை)
சூனியக்காரர், அல்லது
பைத்தியக்காரர்
என்று கூறாமல்
இருந்ததில்லை.
[51:53]
இவ்வாறுதான்
அவர்கள் தங்களுக்குள்
(நம் தூதர்களைப்
பழிக்க வேண்டுமென)
ஒருவருக்கொருவர்
உபதேசம் செய்து கொண்டனரா? அன்று, அவர்கள்
அக்கிரமக்கார
சமூகத்தாராகவே
இருந்தனர்.
[51:54]
ஆகவே (நபியே!) நீர்
அவர்களைப் புறக்கணித்து
(விலகி) விடும்; (அப்படி
நீர் விலகிவிடுவீராயின்
அதற்காக) நீர் பழிக்கப்படமாட்டீர்.
[51:55]
மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக!
ஏனெனில், நிச்சயமாக
நல்லுபதேசம் முஃமின்களுக்கு
நற்பயனளிக்கும்.
[51:56]
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும்
அவர்கள் என்னை
வணங்குவதற்காகவேயன்றி
நான் படைக்கவில்லை.
[51:57]
அவர்களிடமிருந்து
எந்த பொருளையும்
நான் விரும்பவில்லை.
எனக்கு அவர்கள்
உணவு அளிக்க வேண்டுமென்றும்
நான் விரும்பவில்லை.
[51:58]
நிச்சயமாக அல்லாஹ்தான்
உணவு அளித்துக்
கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.
[51:59]
எனவே, அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய
தோழர்களுக்கு
வேதனையிலிருந்து
ஒரு பங்கு இருந்தது
போல், ஒரு பங்கு
நிச்சயமாக உண்டு
ஆகவே, (தண்டனைக்காக)
அவர்கள் என்னை அவசரப்படுத்த
வேண்டாம்.
[51:60]
ஆகவே, காஃபிர்களுக்கு அவர்களுக்கு
வாக்களிக்கப்பட்ட
அவர்களுடைய நாளில், கேடுதான்.
At-Tûr
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[52:1]
தூர் (மலை) மீது
சத்தியமாக!
[52:2]
ஏட்டில் எழுதப்பட்ட
வேதத்தின் மீது சத்தியமாக!
[52:3]
விரித்து வைக்கப்பட்ட,
[52:4]
பைத்துல் மஃமூர்
மீது சத்தியமாக!
[52:5]
உயர்த்தப்பட்ட
முகட்டின் மீது சத்தியமாக!
[52:6]
பொங்கும் கடலின்
மீது சத்தியமாக!
[52:7]
நிச்சயமாக உம்முடைய
இறைவன் (விதித்திருக்கும்)
வேதனை சம்பவிக்கும்.
[52:8]
அதனைத் தடுப்பவர்
எவருமில்லை.
[52:9]
வானம் துடித்துச்
சுற்றிக் குமுறும்
நாளில்,
[52:10]
இன்னும், மலைகள்
தூள் துளாகி விடும்
போது,
[52:11]
(சன்மார்க்கத்தை
எதிர்த்து அதைப்)
பொய்யாக்கிக்
கொண்டிருந்தோருக்கு
அந்நாளில் கேடுதான்.
[52:12]
எவர்கள் (பொய்யானவற்றில்) மூழ்கி
விளையாடிக் கொண்டிருக்கின்றனரோ,
[52:13]
அந்நாளில் அவர்கள்
நரக நெருப்பின்
பால் இழுக்கப்படுவோராக
இழுக்கப்படுவர்.
[52:14]
அந்நாளில்; (அவர்களுக்குக் கூறப்படும்:) "நீங்கள்
பொய்யாக்கிக்
கொண்டிருந்த (நரக)
நெருப்பு இதுதான்.
[52:15]
இது சூனியம் தானா? அல்லது
பார்க்க முடியாது
(குருடர்களாக) ஆகிவிட்டீர்களா?
[52:16]
நீங்கள் அதில்
நுழையுங்கள், பிறகு
நீங்கள் (அதன்
வேதனையைச்) சகித்துக் கொள்ளுங்கள்; அல்லது
சகித்துக் கொள்ளாதிருங்கள், (இரண்டும்)
உங்களுக்குச்
சமமே, நிச்சயமாக
நீங்கள் செய்து
கொண்டிருந்த வற்றிற்காகத்தான்
நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்."
[52:17]
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச்
சோலைகளிலும், (இறையருளில்)
இன்புற்றும் இருப்பார்கள்.
[52:18]
அவர்களுடைய இறைவன்
அவர்களுக்கு அளித்ததை
அனுபவித்தவர்களாகயிருப்பார்கள்
- அன்றியும், அவர்களுடைய
இறைவன் நரக வேதனையிலிருந்து
அவர்களைப் பாதுகாத்துக்
கொண்டான்.
[52:19]
(அவர்களுக்குக்
கூறப்படும்:) "நீங்கள்
(நன்மைகளைச்) செய்து
கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப்
புசியுங்கள், பருகுங்கள்."
[52:20]
அணி அணியாகப்
போடப்பட்ட மஞ்சங்களின்
மீது சாய்ந்தவர்களாக
அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட
கண்களையுடைய (ஹூருல்
ஈன்களை) மணம் முடித்து
வைப்போம்.
[52:21]
எவர்கள் ஈமான்
கொண்டு, அவர்களுடைய
சந்ததியாரும்
ஈமானில் அவர்களைப்
பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியனரை
அவர்களுடன் (சுவனத்தில்
ஒன்று) சேர்த்து
விடுவோம். (இதனால்) அவர்களுடைய
செயல்களில் எந்த
ஒன்றையும், நாம் அவர்களுக்குக்
குறைத்து விட மாட்டோம்
- ஒவ்வொரு மனிதனும்
தான் சம்பாதித்த
செயல்களுக்குப்
பிணையாக இருக்கின்றான்.
[52:22]
இன்னும் அவர்கள்
விரும்பும் கனிவகைகளையும்
இறைச்சியையும், நாம் அவர்களுக்குக்
கொடுத்துக் கொண்டிருப்போம்.
[52:23]
(அமுதம்
நிறைந்த) ஒருவர் கோப்பையை
மற்றொருவர் பறித்துக்
கொள்வர், ஆனால்
அதில் வீணுமில்லை, குற்றமிழைப்பதும்
இல்லை.
[52:24]
அவர்களுக்கு(ப்
பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச்
சுற்றிக் கொண்டே
இருப்பார்கள், அவர்கள்
பதித்த ஆணி முத்துகளைப்
போல் (இருப்பார்கள்).
[52:25]
அவர்களில் சிலர்
சிலரை முன்னோக்கி
விசாரித்துக்
கொள்வார்கள்.
[52:26]
இதற்கு முன் (உலகில்)
நாம் நம் குடும்பத்தாரிடையே
இருந்த போது (வேதனை
பற்றி) நிச்சயமாக
அஞ்சியவர்களாகவே
இருந்தோம்.
[52:27]
ஆனால் அல்லாஹ்
நம்மீது உபகாரம்
செய்து கொடிய வேதனையிலிருந்து
நம்மை காப்பாற்றினான்.
[52:28]
நிச்சயமாக நாம்
முன்னே (உலகில்) அவனைப்
பிரார்த்தித்துக்
கொண்டிருந்தோம், நிச்சயமாக
அவனே மிக்க நன்மை செய்பவன், பெருங்கிருபையுடையவன்.
[52:29]
எனவே, (நபியே! நீர்
மக்களுக்கு நல்லுபதேசத்தால்)
நினைவுறுத்திக்
கொண்டிருப்பீராக!
உம்முடைய இறைவனின்
அருளால், நீர் குறிகாரரும்
அல்லர், பைத்தியக்காரருமல்லர்.
[52:30]
அல்லது: அவர்கள்
(உம்மைப் பற்றி, "அவர்)
புலவர், அவருக்குக்
காலத்தின் துன்பத்தைக்
கொண்டு நாங்கள் வழி பார்த்து
இருக்கிறோம்" என்று
கூறுகிறார்களா?
[52:31]
நீங்களும் வழி
பார்த்திருங்கள் - நிச்சயமாக
நானும் உங்களுடன்
வழி பார்க்கிறேன்
என்று (நபியே!) நீர்
கூறும்.
[52:32]
அல்லது, அவர்களுடைய
புத்திகள் தாம் அவர்களை
இவ்வா(றெல்லாம்
பேசுமா)று ஏவுகின்றனவா? அல்லது
அவர்கள் வரம்பு மீறிய
சமூகத்தாரா?
[52:33]
அல்லது, இ(வ்வேதத்)தை
நீர் இட்டுக்
கட்டினீர் என்று
அவர்கள் கூறுகின்றனரா? அல்ல.
அவர்கள் ஈமான்
கொள்ள மாட்டார்கள்.
[52:34]
ஆகவே, (இவ்வாறெல்லாம்
கூறும்) அவர்கள்
உண்மையாளர்களாக
இருந்தால், இ(வ்வேதத்)தைப்
போன்ற ஒரு செய்தியை
அவர்கள் கொண்டு
வரட்டும்.
[52:35]
அல்லது, அவர்கள்
எந்தப் பொருளின்றியும்
(தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது
அவர்கள் (எதையும்)
படைக்கிற (சக்தியுடைய)வர்களா?
[52:36]
அல்லது, வானங்களையும் பூமியையும்
அவர்கள் படைத்தார்களா? அல்ல.
அவர்கள் உறுதி
கொள்ளமாட்டார்கள்.
[52:37]
அல்லது, அவர்களிடம்
உம்முடைய இறைவனின்
பொக்கிஷங்கள்
இருக்கின்றனவா? அல்லது
இவர்கள் தாம்
(எல்லாவற்றையும்) அடக்கியாள்பவர்களா?
[52:38]
அல்லது, அவர்களுக்கு
ஏணி இருந்து
அதன் மூலம் (வானத்தின்
இரகசியங்களை) கேட்டு
வருகின்றார்களா? அவ்வாறாயின், அவர்களில்
கேட்டு வந்தவர்
செவியேற்றதைத்
தெளிவான ஆதாரத்துடன் கொண்டு
வரட்டும்.
[52:39]
அல்லது, அவனுக்குப்
பெண் மக்களும்
உங்களுக்கு ஆண்
மக்களுமா?
[52:40]
அல்லது, நீர் அவர்களிடம் ஏதாவது
கூலி கேட்டு, (அதைக்
கொடுத்ததினால்)
அவர்கள் கடன் பட்டு சுமையேற்றப்பட்டிருக்கின்றார்களா,
[52:41]
அல்லது, அவர்களிடம்
மறைவான செய்திகளிலிருந்து, அவற்றை
அவர்கள் எழுதுகின்றார்களா,
[52:42]
அல்லது, அவர்கள்
(உமக்கு எதிராக)
ஏதாவது சூழ்ச்சி
செய்ய நாடுகிறார்களா, அப்படியானால், அந்த காஃபிர்கள் தாம் சூழச்சிக்குள்ளாவார்கள்.
[52:43]
அல்லது, அவர்களுக்கு
அல்லாஹ் அல்லாமல்
(வேறு) நாயன் இருக்கின்றானா, அவர்கள்
இணை வைப்பதை விட்டும்
அல்லாஹ் மிகத்
தூயவன்.
[52:44]
வானத்திலிருந்து
ஒரு துண்டு விழுவதை
அவர்கள் கண்டார்களானால், அதை அடர்த்தியான
மேகம் என்று அவர்கள் கூறிவிடுவார்கள்.
[52:45]
ஆகவே அச்சத்தால்
அவர்கள் உணர்விழக்கும்
நாளைச் சந்திக்கும்வரை, அவர்களை
விட்டு விடுவீர்களாக.
[52:46]
அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள்
எதுவும் அவர்களுக்குப்
பயன் அளிக்காது, அன்றியும்
(எவராலும்) அவர்கள்
உதவி செய்யப்படவும்
மாட்டார்கள்.
[52:47]
அன்றியும், அநியாயம்
செய்து கொண்டு
இருந்தவர்களுக்கு
நிச்சயமாக மற்றொரு
வேதனையும் (இம்மையில்)
உண்டு எனினும் அவர்களில்
பெரும்பாலோர்
இதை அறிய மாட்டார்கள்.
[52:48]
எனவே (நபியே!) உம்முடைய இறைவனின்
தீர்ப்புக்காகப்
பொறுத்திறுப்பீராக, நிச்சயமாக
நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும்
நீங்கள் எழுந்திருக்கும்
சமயத்தில் உம்
இறைவனின் புகழைக் கூறித்
தஸ்பீஹு செய்வீராக,
[52:49]
இன்னும், இரவின்
ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள்
அடையும் நேரத்திலும்
அவனைத்(துதி செய்து)
தஸ்பீஹு செய்வீராக!
An-Najm
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[53:1]
விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
[53:2]
உங்கள் தோழர்
வழி கெட்டுவிடவுமில்லை, அவர் தவறான
வழியில் செல்லவுமில்லை.
[53:3]
அவர் தம் இச்சைப்படி
(எதையும்) பேசுவதில்லை.
[53:4]
அது அவருக்கு
வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி
வேறில்லை.
[53:5]
மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரயீல்)
அவருக்குக் கற்றுக்
கொடுத்தார்.
[53:6]
(அவர்)
மிக்க உறுதியானவர், பின்னர்
அவர் (தம் இயற்கை
உருவில்) நம் தூதர்
முன் தோன்றினார்.
[53:7]
அவர் உன்னதமான
அடி வானத்தில் இருக்கும்
நிலையில்-
[53:8]
பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே
வந்தார்.
[53:9]
(வளைந்த)
வில்லின் இரு முனைகளைப்
போல், அல்லது அதினும்
நெருக்கமாக வந்தார்.
[53:10]
அப்பால், (அல்லாஹ்)
அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம்
அவர், அவனுடைய அடியாருக்கு
(வஹீ) அறிவித்தார்.
[53:11]
(நபியுடைய)
இதயம் அவர் கண்டதைப்
பற்றி, பொய்யுரைக்க
வில்லை.
[53:12]
ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன்
நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?
[53:13]
அன்றியும், நிச்சயமாக
அவர் மற்றொரு
முறையும் (ஜிப்ரயீல்)
இறங்கக் கண்டார்.
[53:14]
ஸித்ரத்துல்
முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள)
இலந்தை மரத்தருகே.
[53:15]
அதன் சமீபத்தில்
தான் ஜன்னத்துல்
மஃவா என்னும் சுவர்க்கம்
இருக்கிறது.
[53:16]
ஸித்ரத்துல்
முன்தஹா என்னும் அம்மரத்தை
சூழ்ந்து கொண்டிருந்த
வேளையில்,
[53:17]
(அவருடைய)
பார்வை விலகவுமில்லை, அதைக்
கடந்து (மாறி) விடவுமில்லை.
[53:18]
திடமாக, அவர் தம்முடைய இறைவனின்
அத்தாட்சிகளில்
மிகப் பெரியதைக்
கண்டார்.
[53:19]
நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும்
கண்டீர்களா?
[53:20]
மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும்
(கண்டீர்களா?)
[53:21]
உங்களுக்கு ஆண்
சந்ததியும், அவனுக்குப்
பெண் சந்ததியுமா?
[53:22]
அப்படியானால், அது மிக்க அநீதமான
பங்கீடாகும்.
[53:23]
இவையெல்லாம்
வெறும் பெயர்களன்றி
வேறில்லை, நீங்களும்
உங்கள் மூதாதையர்களும்
வைத்துக் கொண்ட
வெறும் பெயர்கள்!
இதற்கு அல்லாஹ்
எந்த அத்தாட்சியும்
இறக்கவில்லை, நிச்சயமாக
அவர்கள் வீணான
எண்ணத்தையும், தம் மனங்கள்
விரும்புபவற்றையுமே
பின் பற்றுகிறார்கள், எனினும்
நிச்சயமாக அவர்களுடைய
இறைவனிடமிருந்து, அவர்களுக்கு
நேரான வழி வந்தே இருக்கிறது.
[53:24]
அல்லது, மனிதனுக்கு
அவன் விரும்பியதெல்லாம்
கிடைத்து விடுமா?
[53:25]
ஏனெனில், மறுமையும், இம்மையும் அல்லாஹ்வுக்கே
சொந்தம்.
[53:26]
அன்றியும் வானங்களில்
எத்தனை மலக்குகள்
இருக்கின்றனர்? எனினும், அல்லாஹ்
விரும்பி, எவரைப்பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதி
கொடுக்கின்றானோ
அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும்
எந்தப் பயனுமளிக்காது.
[53:27]
நிச்சயமாக, மறுமையின்
மீது நம்பிக்கை
கொள்ளாதவர்கள்
பெண்களுக்குப்
பெயரிடுவது போல்
மலக்குகளுக்குப் பெயரிடுகின்றனர்.
[53:28]
எனினும் அவர்களுக்கு
இதைப் பற்றி
எத்தகைய அறிவும்
இல்லை, அவர்கள் வீணான
எண்ணத்தைத் தவிர
வேறெதையும் பின்பற்றவில்லை, நிச்சயமாக
வீண் எண்ணம் (எதுவும்)
சத்தியம் நிலைப்பதைத்
தடுக்க முடியாது.
[53:29]
ஆகவே, எவன் நம்மை
தியானிப்தை விட்டும்
பின் வாங்கிக்
கொண்டானோ - இவ்வுலக
வாழ்வையன்றி வேறெதையும்
நாடவில்லையோ அவனை
(நபியே!) நீர் புறக்கணித்து
விடும்.
[53:30]
ஏனெனில் அவர்களுடைய
மொத்தக் கல்வி
ஞானம் (செல்வது)
அந்த எல்லை வரைதான், நிச்சயமாக, உம்முடைய
இறைவன், தன் வழியிலிருந்து
தவறியவன் யார்
என்பதை நன்கறிகிறான், நேரான
வழி பெற்றவன் யார் என்பதையும்
அவன் நன்கறிகிறான்.
[53:31]
மேலும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும்
அல்லாஹ்வுக்கே
சொந்தம், தீமை செய்தவர்களுக்கு
அவர்கள் வினைக்குத்
தக்கவாறு கூலி
கொடுக்கவும், நன்மை
செய்தவர்களுக்கு
நன்மையைக் கூலியாகக்
கொடுக்கவும் (வழி
தவறியவர்களையும், வழி பெற்றவர்களையும்
பகுத்து வைத்திருக்கின்றான்).
[53:32]
(நன்மை
செய்வோர் யார்
எனின்) எவர்கள்
(அறியாமல் ஏற்பட்டுவிடும்)
சிறு பிழைகளைத்
தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும்
தவிர்த்துக் கொள்கிறார்களோ
அவர்கள், நிச்சயமாக
உம்முடைய இறைவன்
மன்னிப்பதில்
தாராளமானவன், அவன் உங்களைப்
பூமியிலிருந்து
உண்டாக்கிய போது, நீங்கள்
உங்கள் அன்னையரின்
வயிறுகளில் சிசுக்களாக
இருந்த போதும், உங்களை நன்கு
அறிந்தவன் - எனவே, நீங்களே
உங்களைப் பரிசுத்தவான்கள்
என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள்
- யார் பயபக்தியுள்ளவர்
என்பதை அவன் நன்கறிவான்.
[53:33]
(நபியே!
உறுதியின்றி உம்மை விட்டும்
முகம்) திரும்பிக்
கொண்டனர் பார்த்தீரா?
[53:34]
அவன் ஒரு சிறிதே
கொடுத்தான், பின்னர்
(கொடுக்க வேண்டியதைக்
கொடாது) நிறுத்திக்
கொண்டான்.
[53:35]
அவனிடம் மறைவானவை
பற்றிய அறிவு இருந்து, அவன் பார்க்கிறானா?
[53:36]
அல்லது, மூஸாவின்
ஸுஹுஃபில் - வேதத்தில்
இருப்பது அவனுக்கு
அறிவிக்கப்படவில்லையா?
[53:37]
(அல்லாஹ்வின்
ஆணையைப் பூரணமாக) நிறைவேற்றிய
இப்றாஹீமுடைய
(ஆகமங்களிலிருந்து
அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?)
[53:38]
(அதாவது:)
சுமக்கிறவன் பிறிதொருவனின்
சுமையைச் சுமக்க
மாட்டான்,
[53:39]
இன்னும், மனிதனுக்கு
அவன் முயல்வதல்லாமல்
வேறில்லை.
[53:40]
அன்றியும், நிச்சயமாக
அவன் முயற்சி(யின்
பலன்) பின் அவனுக்குக்
காண்பிக்கப்படும்.
[53:41]
பின்னர், அதற்கு
நிறப்பமான கூலியாக, அவன் கூலி
வழங்கப்படுவான்.
[53:42]
மேலும் உம் இறைவனில்
பால்தான் இறுதி
(மீளுதல்) இருக்கிறது.
[53:43]
அன்றியும், நிச்சயமாக
அவனே சிரிக்க
வைக்கிறான், அழச் செய்கிறான்.
[53:44]
இன்னும் நிச்சயமாக
அவனே மரிக்கச்
செய்கிறான், இன்னும்
உயிர்ப்பிக்கிறான்.
[53:45]
இன்னும், நிச்சயமாக
அவனே ஆண், பெண் என்று
ஜோடியாகப் படைத்தான்
-
[53:46]
(கர்ப்பக்
கோளறையில்) செலுத்தப்
படும் போதுள்ள
இந்திரியத் துளியைக்
கொண்டு.
[53:47]
நிச்சயமாக, மறுமுறை
உயிர் கொடுத்து
எழுப்புவதும், அவன் மீதே
இருக்கிறது.
[53:48]
நிச்சயமாக அவனே
தேவையறச் செய்து
சீமானாக்குகிறான்.
[53:49]
நிச்சயமாக அவன்
தான் (இவர்கள் வணங்கும்)
ஷிஃரா (எனும் கோளத்திற்கும்)
இறைவன்.
[53:50]
நிச்சயமாக முந்திய
ஆ(து கூட்டத்)தை
அழித்தவனும் அவன்தான்.
[53:51]
'ஸமூது' (சமூகத்தாரையும் அழித்தவன்
அவனே); எனவே, (அவர்களில்
எவரையும் மிஞ்சுமாறு)
விடவில்லை.
[53:52]
இவர்களுக்கு
முன்னர் இருந்த நூஹுவுடைய
சமூகத்தாரையும்
(அவன் தான் அழித்தான்,) நிச்சயமாக
அவர்கள் பெரும் அநியாயக்
காரர்களாகவும், அட்டூழியம்
செய்தவர்களாகவும்
இருந்தனர்.
[53:53]
அன்றியும், அவனே
(லூத் சமூகத்தார்
வாழ்ந்திருந்த)
ஊர்களான முஃதஃபிகாவையும்
அழித்தான்.
[53:54]
அவ்வூர்களைச்
சூழ வேண்டிய (தண்டனை)
சூழ்ந்து கொண்டது.
[53:55]
எனவே, (மனிதனே!) உன்னுடைய இறைவனின்
அருட் கொடைகளில்
எதை நீ சந்தேகிக்கிறாய்?
[53:56]
இவர் முந்திய எச்சரிக்கையாளர்களி(ன்
வரிசையி)லுள்ள
எச்சரிக்கையாளர்
தாம்.
[53:57]
நெருங்கி வர வேண்டியது (அடுத்து)
நெருங்கி விட்டது.
[53:58]
(அதற்குரிய
நேரத்தில்) அல்லாஹ்வைத்
தவிர அதை வெளியாக்குபவர்
எவரும் இல்லை.
[53:59]
இச் செய்தியிலிருந்து
நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?
[53:60]
(இதனைப்
பற்றி) நீங்கள் சிரிக்கின்றீர்களா? நீங்கள்
அழாமலும் இருக்கின்றீர்களா?
[53:61]
அலட்சியமாகவும்
நீங்கள் இருக்கின்றீர்கள்.
[53:62]
ஆகவே நீங்கள்
அல்லாஹ்வுக்கு ஸுஜூது
செய்யுங்கள், அவனையே
வணங்குங்கள்.
Al-Qamar
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[54:1]
(இறுதி)
நேரம் நெருங்கி விட்டது
சந்திரனும் பிளந்து
விட்டது.
[54:2]
எனினும், அவர்கள்
ஓர் அத்தாட்சியைப்
பார்த்தால், (அதைப்)
புறக்கணித்து
விடுகிறார்கள், "இது வழமையாக
நடைபெறும் சூனியம்
தான்" என்றும் கூறுகிறார்கள்.
[54:3]
அன்றியும், அவர்கள் (காண்பிக்கப்
பெறும் அத்தாட்சிகளைப்)
பொய்ப்பிக்க முற்படுகின்றனர், மேலும் தங்கள்
இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும்
ஒவ்வொரு காரியமும்
(அதற்கான நிலையில்)
உறுதிப்பட்டே
விடும்.
[54:4]
அச்சுறுத்தலுள்ள
பல செய்திகள் திடமாக
(முன்னரே) அவர்களிடம்
வந்திருக்கின்றன.
[54:5]
நிறைவான ஞானம்
உடையவை - ஆனால் (அவர்களுக்கு
அவற்றின்) எச்சரிக்கைகள்
பயனளிக்கவில்லை.
[54:6]
ஆகையால் (நபியே!)
அவர்களை விட்டும்
நீர் திரும்பி
விடும், (அவர்களுக்கு)
வெறுப்பான (கேள்வி
கணக்கு) விஷயத்திற்காக
அழைப்பவர் (அவர்களை)
அழைக்கும் நாளில்;
[54:7]
(தாழ்ந்து
பணிந்து) கீழ்நோக்கிய
பார்வையுடன், அவர்கள்
புதை குழிகளிலிருந்து
பரவிச் செல்லும் வெட்டுக்
கிளிகளைப் போல்
வெளியேறுவார்கள்.
[54:8]
அழைப்பவரிடம்
விரைந்து வருவார்கள், "இது மிகவும்
கஷ்டமான நாள்" என்றும்
அக்காஃபிர்கள் கூறுவார்கள்.
[54:9]
இவர்களுக்கு
முன்னர் நூஹின் சமூகத்தினர்
(மறுமையைப்) பொய்யாக்கினர், ஆகவே அவர்கள்
நம் அடியாரைப் பொய்ப்பித்து
(அவரைப்) 'பைத்தியக்காரர்' என்று
கூறினர், அவர் விரட்டவும் பட்டார்.
[54:10]
அப்போது அவர், "நிச்சயமாக நாம் தோல்வியடைந்தவனாக
இருக்கிறேன், ஆகவே, நீ (எனக்கு)
உதவி செய்வாயாக!" என்று
அவர் தம் இறைவனிடம்
பிரார்த்தித்தார்.
[54:11]
ஆகவே, நாம் கொட்டும்
மழையைக் கொண்டு
வானங்களின் வாயில்களைத்
திறந்து விட்டோம்.
[54:12]
மேலும், பூமியின்
ஊற்றுகளை பொங்க
வைத்தோம், இவ்வாறாக, குறிப்பிட்ட
ஓர் அளவின் படி
(இரு வகை) நீரும்
கலந்(து பெருக்
கெடுத்)தது.
[54:13]
அப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும்
செய்யப்பட்ட மரக்கலத்தின்
மீது அவரை ஏற்றிக்
கொண்டோம்.
[54:14]
எனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக்
கொண்டிருந்தாரோ, அவருக்கு
(நற்) கூலி கொடுப்பதற்காக, (அம்மரக்கலம்)
நம் கண் முன்னிலையில்
மிதந்து சென்று
கொண்டிருந்தது.
[54:15]
நிச்சயமாக நாம் (வருங்காலத்திற்கு
இ(ம் மரக்கலத்)தை
ஓர் அத்தாட்சியாக
விட்டு வைத்தோம்; (இதன் மூலமாக)
நல்லுணர்வு பெறுவோர்
உண்டா?
[54:16]
ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட)
வேதனையும், எச்சரிக்கையும்
எப்படி இருந்தன? (என்பதை
கவனிக்க வேண்டாமா?)
[54:17]
நிச்சயமாக, இக் குர்ஆனை
நன்கு நினைவு
படுத்திக் கொள்ளும்
பொருட்டே எளிதாக்கி
வைத்திருக்கின்றோம்.
எனவே (இதிலிருந்து)
நல்லுணர்வு பெறுவோர்
உண்டா?
[54:18]
'ஆது' (கூட்டத்தாரும்
தங்கள் நபியை)
பொய்ப்படுத்தினர், அதனால், என் (கட்டளையினால்
ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும்
எப்படி இருந்தன
(என்பதை கவனிக்க
வேண்டாமா?)
[54:19]
நிச்சயமாக நாம்
அவர்கள் மீது, நிலையான
துர்பாக்கியமுடைய
ஒரு நாளில், பேரிறைச்சலைக்
கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்.
[54:20]
நிச்சயமாக: வேரோடு
பிடுங்கப் பட்ட பேரீத்த
மரங்களின் அடித்துறைப்
போல் (அக்காற்று)
மனிதர்களை பிடுங்கி எறிந்து
விட்டது.
[54:21]
ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட)
வேதனையும் எச்சரிக்கையும்
எப்படி இருந்தன? (என்பதைக்
கவனிக்க வேண்டாமா?)
[54:22]
நிச்சமயாக, இக் குர்ஆனை
நன்கு நினைவு
படுத்திக் கொள்ளும்
பொருட்டே எளிதாக்கி
வைத்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து)
நல்லுணர்வு பெறுவோர்
உண்டா?
[54:23]
ஸமூது(கூட்டமு)ம் எச்சரிக்கைகளைப்
பொய்ப்பித்தது.
[54:24]
நம்மிலிருந்துள்ள
ஒரு தனி மனிதரையா
நாம் பின்பற்றுவோம்? (அப்படிச்
செய்தால்) நாம்
நிச்சயமாக வழி கேட்டிலும்
பைத்தியத்திலும்
இருப்போம் என்றும்
(அக்கூட்டத்தினர்)
கூறினர்.
[54:25]
நம்மிடையே இருந்து
இவர் மீதுதானா
(நினைவுறுத்தும்)
நல்லுபதேசம் இறக்கப்படவேண்டும், அல்ல!
அவர் ஆணவம் பிடித்த
பெரும் பொய்யர்
(என்றும் அவர்கள்
கூறினர்).
[54:26]
ஆணவம் பிடித்த
பெரும் பொய்யர் யார்? என்பதை
நாளைக்கு அவர்கள்
திட்டமாக அறிந்து
கொள்வார்கள்.
[54:27]
அவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக
நாம் ஒரு பெண்
ஒட்டகத்தை அனுப்பி
வைப்போம், ஆகவே, நீர் அவர்களை
கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும்
இருப்பீராக!
[54:28]
(அவ்வூரிலுள்ள
கிணற்றின்) தண்ணீர்
அவர்களுக்கு(ம்
அந்த ஒட்டகத்திற்கும்)
இடையில் பங்கிடப்பட்டுள்ளது, "ஒவ்வொருவரும்
(தண்ணீர்) முறைப்படி
குடிப்பதற்கு
வரலாம்" என்று அவர்களுக்கு
அறிவித்து விடும்.
[54:29]
ஆனால் (அம்மக்களோ
ஒட்டகையை அறுத்துவிடத்)
தம் தோழனை அழைத்தனர், அவன்
(துணிந்து கை) நீட்டி
(அதன் கால் நரம்புகளைத்)
தரித்து விட்டான்.
[54:30]
என் (கட்டளையினால்
பின்னர் அம் மக்களுக்கு)
வேதனையும், எச்சரிக்கையும்
எப்படி இருந்தன? (என்பதை
கவனிக்க வேண்டாமா?)
[54:31]
நிச்சயமாக நாம்
அவர்கள் மீது ஒரு பெரும்
சப்தத்தை அனுப்பினோம்
- அதனால் அவர்கள்
காய்ந்து மிதிபட்ட
வேலி(யின் கூளம்)
போல் ஆகிவிட்டனர்.
[54:32]
நிச்சயமாக இக்
குர்ஆனை நன்கு நினைவு
படுத்திக் கொள்ளும்
பொருட்டே எளிதாக்கி
வைத்திருக்கின்றோம், எனவே இதிலிருந்து
நல்லுணர்வு பெறுவோர்
உண்டா?
[54:33]
லூத்துடைய சமூகத்தாரும் (நம்முடைய)
எச்சரிக்கைகளைப்
பொய்ப்பித்தனர்.
[54:34]
லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள்
மீது, நாம் நிச்சயமாக
கல்மாரியை அனுப்பினோம், விடியற்காலையில் நாம் அவர்
குடும்பத்தார்களை
பாதுகாத்துக்
கொண்டோம்.
[54:35]
நம்மிடமிருந்துள்ள
அருள் கொடையால்
(இப்படிக் காப்பாற்றினோம்)
இவ்வாறே நாம் நன்றி
செலுத்துபவர்களுக்கு கூலி அளிக்கிறோம்.
[54:36]
திட்டமாக நம்முடைய
கடுமையான பிடியைப்பற்றி
அவர் (தம் சமூகத்தாருக்கு)
அச்சுறுத்தி எச்சரித்திருந்தார். எனினும்
அச்சுறுத்தும்
அவ்வெச்சரிக்கைகளைப்
பற்றி அவர்கள்
சந்தேகி(த்துத் தர்க்கி)க்காலாயினர்.
[54:37]
அன்றியும் அவருடைய
விருந்தினரை (துர்ச்
செயலுக்காக)க்
கொண்டு போகப் பார்த்தார்கள், ஆனால்
நாம் அவர்களுடைய கண்களைப்
போக்கினோம். "என்(னால்
உண்டாகும்) வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப்
பாருங்கள்" (என்றும்
கூறினோம்).
[54:38]
எனவே, அதிகாலையில்
அவர்களை நிலையான
வேதனை திட்டமாக
வந்தடைந்தது.
[54:39]
ஆகவே, என்(னால் உண்டாகும்) வேதனையையும்
எச்சரிக்கையையும்
சுவைத்துப் பாருங்கள்
(என்று கூறினோம்).
[54:40]
நிச்சயமாக இக்
குர்ஆனை நன்கு நினைவு
படுத்திக் கொள்ளும்
பொருட்டே எளிதாக்கி
வைத்திருக்கின்றோம்.
எனவே (இதிலிருந்து)
நல்லுணர்வு பெறுவோர்
உண்டா?
[54:41]
ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும்
அச்சமூட்டும்
எச்சரிக்கைகள்
வந்தன.
[54:42]
ஆனால் அவர்கள்
நம்முடைய அத்தாட்சிகள்
அனைத்தையும் பொய்யாக்கினர், அப்போது, சக்தி
வாய்ந்த (யாவற்றையும்) மிகைக்கின்றவனின்
பிடியாக அவர்களை
நாம் பிடித்துக்
கொண்டோம்.
[54:43]
(சென்று
போன) அவர்களை விட உங்களிலுள்ள
காஃபிர்கள் மேலானவர்களா? அல்லது, உங்களுக்கு
(வேதனையிலிருந்து) விலக்கு
இருப்பதாக வேத
ஆதாரம் உண்டா?
[54:44]
அல்லது (நபியே!) "நாங்கள் யாவரும்
வெற்றி பெறுங்
கூட்டத்தினர்" என்று
அவர்கள் கூறுகின்றார்களா?
[54:45]
அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர்
சிதறடிக்கப்பட்டுப்
புறங்காட்டி ஓடுவர்.
[54:46]
அதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு
வாக்களிக்கப்பட்ட
(சோதனைக்) காலமாகும், மறுமை
அவர்களுக்கு மிகக் கடுமையனதும்
மிக்க கசப்பானதுமாகும்.
[54:47]
நிச்சயமாக, அக்குற்றவாளிகள் வழி கேட்டிலும், மதியிழந்தும்
இருக்கின்றனர்.
[54:48]
அவர்களுடைய முகங்களின்
மீது அவர்கள்
நரகத்திற்கு இழுத்துச்
செல்லப்படும்
நாளில், "நரக நெருப்புத் தீண்டுவதைச்
சுவைத்துப் பாருங்கள்" (என்று
அவர்களுக்கு கூறப்படும்).
[54:49]
நாம் ஒவ்வொரு
பொருளையும் நிச்சயமாக
(குறிப்பான) அளவின்படியே
படைத்திருக்கின்றோம்.
[54:50]
நம்முடைய கட்டளை
(நிறைவேறுவது) கண் மூடி
விழிப்பது போன்ற
ஒன்றே அன்றி வேறில்லை.
[54:51]
(நிராகரிப்போரே!)
உங்களில் எத்தனையோ
வகுப்பார்களை
நாம், நிச்சயமாக
அழித்திருக்கின்றோம், எனவே
(இதிலிருந்து) நல்லுணர்வு
பெறுவோர் உண்டா?
[54:52]
அவர்கள் செய்யும்
ஒவ்வொரு காரியமும்
(அவர்களுக்கான)
பதிவேடுகளில்
இருக்கிறது.
[54:53]
சிறிதோ, பெரிதோ
அனைத்தும் (அதில்)
வரையப்பட்டிருக்கும்.
[54:54]
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச்
சோலைகளில் (அவற்றிலுள்ள)
ஆறுகளில் இருப்பார்கள்
[54:55]
உண்மையான இருக்கையில்
சர்வ வல்லமையுடைய
அரசனின் (அருள்)
அண்மையில் இருப்பார்கள்.
Ar-Rahmân
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[55:1]
அளவற்ற அருளாளன்,
[55:2]
இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக்
கொடுத்தான்.
[55:3]
அவனே மனிதனைப்
படைத்தான்.
[55:4]
அவனே மனிதனுக்கு
(பேச்சு) விளக்கத்தையும்
கற்றுக் கொடுத்தான்.
[55:5]
சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு
நிர்ணயிக்கப்
பெற்ற) கணக்கின்படியே
இருக்கின்றன.
[55:6]
(கிளைகளில்லாச்)
செடி கொடிகளும், (கொப்புங்
கிளையுமாக வளரும்)
மரங்களும் - (யாவும்)
அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.
[55:7]
மேலும், வானம்
- அவனே அதை உயர்த்தித்
தராசையும் ஏற்படுத்தினான்.
[55:8]
நீங்கள் நிறுப்பதில்
வரம்பு மீறாது
இருப்பதற்காக.
[55:9]
ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக
நிலைநிறுத்துங்கள்; எடையைக்
குறைக்காதீர்கள்.
[55:10]
இன்னும், பூமியை
- படைப்பினங்களுக்காக
அவனே விரித்தமைத்தான்.
[55:11]
அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய
பேரீத்த மரங்களும்-
[55:12]
தொலிகள் பொதிந்த
தானிய வகைகளும், வாசனையுள்ள
(மலர் புற்பூண்டு
ஆகிய)வையும் இருக்கின்றன.
[55:13]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:14]
சுட்ட மண் பாண்டங்களைப்
போல் (தட்டினால்)
சப்தமுண்டாகும்
களிமண்ணிலிருந்து, அவன்
(ஆதி) மனிதனைப்
படைத்தான்.
[55:15]
நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப்
படைத்தான்.
[55:16]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:17]
இரு கீழ்திசைகளுக்கும்
இறைவன் அவனே, இரு மேல்திசைகளுக்கும்
இறைவன் அவனே.
[55:18]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:19]
அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று
சந்திக்கச் செய்தான்.
[55:20]
(ஆயினும்)
அவற்றிடையே ஒரு தடுப்பும்
இருக்கிறது, அதை அவை
மீறமாட்டா.
[55:21]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:22]
அவ்விரண்டிலிருந்தும்
முத்தும் பவளமும்
வெளியாகின்றன.
[55:23]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:24]
அன்றியும், மலைகளைப்
போல் உயரமாகச்
செல்லும் கப்பல்கள்
அவனுக்கே உரியன.
[55:25]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:26]
(பூமியில்)
உள்ளயாவரும் அழிந்து
போகக்கூடியவரே
-
[55:27]
மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம்
இறைவனின் முகமே
நிலைத்திருக்கும்.
[55:28]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:29]
வானங்களிலும், பூமியிலுமுள்ளோர்
அனைவரும், (தங்களுக்கு
வேண்டியவற்றை)
அவனிடமே கேட்கின்றனர், ஒவ்வொரு
நாளிலும் அவன்
காரியத்திலேயே
இருக்கின்றான்.
[55:30]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:31]
இரு சாரார்களே!
சீக்கிரமே நாம் உங்களுக்காக
(கேள்வி கணக்குக்
கேட்பதற்கு) அவகாசம்
எடுப்போம்.
[55:32]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:33]
மனு, ஜின் கூட்டத்தார்களே!
வானங்கள், பூமி ஆகியவற்றின்
எல்லைகளைக் கடந்து
செல்ல நீங்கள்
சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே)
செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும்
நம்) அதிகாரமும்
இல்லாமல் நீங்கள்
கடக்க முடியாது.
[55:34]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
[55:35]
(மறுமையில்)
உங்களிருசாரார்
மீதும், நெருப்பின்
ஜீவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது
நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்)
உதவி பெற்றுக்
கொள்ள மாட்டீர்கள்.
[55:36]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
[55:37]
எனவே, (கியாமத் வரும்
நேரம்) அப்பொழுது
வானம் பிளந்து, ரோஜாவின்
(நிறம் போலாகி)
எண்ணெய் போலாகிவிடும்.
[55:38]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
[55:39]
எனவே, அந்நாளில்
மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய
பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்)
கேட்கப்படமாட்டாது.
[55:40]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
[55:41]
குற்றவாளிகள், அவர்களுடைய
(முகக்குறி) அடையாளங்களை
கொண்டே அறியப்படுவார்கள்
- அப்போது (அவர்களுடைய)
முன் நெற்றி உரோமங்களும், கால்களும்
கொண்டு பிடிக்கப்படுவார்கள்
[55:42]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்?
[55:43]
அன்று அவர்களிடம்; இது தான்
குற்றவாளிகள்
பொய்யென்று கூறிக்
கொண்டிருந்த நரகம்" (என்று
கூறப்படும்).
[55:44]
அவர்கள் அதற்கு
இடையிலும், கொதித்துக்
கொண்டிருக்கும்
நீருக்கிடையிலும்
சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
[55:45]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:46]
தன் இறைவனின்
முன் (விசாரணைக்காக
மறுமையில்) நிற்க
வேண்டுமென்பதைப்
பயந்தவனுக்கு
இரு சுவர்க்கச் சோலைகள்
இருக்கின்றன.
[55:47]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:48]
அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம்
(பலவிதமான மரக்)கிளைகளையுடையவை.
[55:49]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:50]
அவ்விரண்டிலும்
இரண்டு ஊற்றுகள்
(உதித்து) ஓடிக்
கொண்டே இருக்கும்.
[55:51]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:52]
அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும்
இரட்டை வகைகள்
உண்டு.
[55:53]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:54]
அவர்கள் விரிப்புகளின்
மீது சாய்ந்தவர்களாக
இருப்பார்கள், அவற்றின்
உள் பாகங்கள் "இஸ்தப்ரக்" என்னும்
பட்டினாலுள்ளவை, மேலும்
இரு சுவனச் சோலைகளில்
(பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும்.
[55:55]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:56]
அவற்றில் அடக்கமான
பார்வையுடைய (அமர) கன்னியர்
இருக்கின்றனர்.
அவர்களை இவர்களுக்கு
முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும்
தீண்டியதில்லை.
[55:57]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:58]
அவர்கள் வெண்
முத்தைப் போன்றும், பவளத்தைப்
போன்றும் இருப்பார்கள்.
[55:59]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:60]
நன்மைக்கு நன்மையைத்
தவிர (வேறு) கூலி
உண்டா?
[55:61]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:62]
மேலும் அவ்விரண்டு
(சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு
சுவனச் சோலைகளும்
இருக்கின்றன.
[55:63]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:64]
அவ்விரண்டும்
கரும் பச்சையான நிறமுடையவை.
[55:65]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:66]
அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள்
(சதா) பொங்கிக்
கொண்டே இருக்கும்.
[55:67]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:68]
அவ்விரண்டில், (பற்பல)
கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும்
உண்டு.
[55:69]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:70]
அவற்றில், அழகு மிக்க
நற் குணமுள்ள
கன்னியர் இருக்கின்றனர்.
[55:71]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:72]
ஹூர் (என்னும்
அக்கன்னியர் அழகிய)
கூடாரங்களில்
மறைக்கப்பட்டிருப்பர்.
[55:73]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:74]
அவர்களை இவர்களுக்கு
முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும்
தீண்டியதில்லை.
[55:75]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:76]
(அவர்கள்)
பசுமையான இரத்தினக்கம்பளங்களின்
மீதும், அழகு மிக்க
விரிப்புக்கள்
மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
[55:77]
ஆகவே, நீங்கள் இரு
சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:78]
மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள
உம்முடைய இறைவனின்
திருப்பெயர் மிகவும்
பாக்கிய முடையது.
Al-Wâqi‘ah
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[56:1]
மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்)
ஏற்பட்டால்
[56:2]
அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது
எதுவுமில்லை.
[56:3]
அது (தீயோரைத்)
தாழ்த்தி விடும், (நல்லோரை)
உயர்த்தி விடும்.
[56:4]
பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச்
செய்யும் போது.
[56:5]
இன்னும் மலைகள்
தூள் தூளாக ஆக்கப்படும்
போது,
[56:6]
பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி
ஆகிவிடும்.
[56:7]
(அப்போது)
நீங்களும் மூன்று பிரிவினர்களாகி
விடுவீர்கள்.
[56:8]
(முதலாமவர்)
வலது பாரிசத்திலுள்ளோர்
- வலது பாரிசத்துக்காரர்
யார்? (என்பதை அறிவீர்களா?)
[56:9]
(இரண்டாமவர்)
இடது பாரிசத்திலுள்ளோர்
- இடது பாரிசத்திலுள்ளோர்
யார்? (என அறிவீர்களா?)
[56:10]
(மூன்றாமவர்
நம்பிக்கையில்) முந்தியவர்கள்
(மறுமையிலும்)
முந்தியவர்களே
யாவார்கள்.
[56:11]
இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
[56:12]
இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்)
சோலைகளில் இருப்பர்.
[56:13]
முதலாமவரில்
ஒரு பெருங் கூட்டத்தினரும்,
[56:14]
பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும்
-
[56:15]
(பொன்னிழைகளால்)
ஆக்கப் பெற்ற கட்டில்களின்
மீது -
[56:16]
ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக, அவற்றின்
மீது சாய்ந்திருப்பார்கள்.
[56:17]
நிலையான இளமையுடைய
இளைஞர்கள் (இவர்கள்
பணிக்காகச்) சுற்றிக்
கொண்டே இருப்பார்கள்.
[56:18]
தெளிந்த பானங்களால்
நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும்
கொண்டு (அவர்களிடம்
சுற்றி வருவார்கள்).
[56:19]
(அப்பானங்களைப்
பருகும்) அவர்கள்
அவற்றினால் தலை
நோய்க்காளாக மாட்டார்கள், மதிமயங்கவுமாட்டார்கள்.
[56:20]
இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும்
கனி வகைகளையும்
-
[56:21]
விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும்
(கொண்டு அவ்விளைஞர்கள்
வருவார்கள்).
[56:22]
(அங்கு
இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும்
நெடிய கண்களுடைய)
கன்னியர் இருப்பர்.
[56:23]
மறைக்கப்பட்ட
முத்துக்களைப் போல் அவர்கள்
(இருப்பார்கள்).
[56:24]
(இவையாவும்)
சுவர்க்க வாசிகள் (இம்மையில்
செய்து கொண்டிருந்த)
செயல்களுக்கு
கூலியாகும்.
[56:25]
அங்கு இவர்கள்
வீணானதையும், பாவமுண்டாக்குவதையும்
(கொண்ட பேச்சுகளைச்)
செவியுற மாட்டார்கள்.
[56:26]
'ஸலாம், ஸலாம்' என்னும் சொல்லையே
(செவியுறுவார்கள்).
[56:27]
இன்னும் வலப்புறத்தார்கள்
- வலப்புறத்தார்கள்
யார்? (என்பதை அறிவீர்களா?)
[56:28]
(அவர்கள்)
முள்ளில்லாத இலந்தை மரத்தின்
கீழும்:
[56:29]
(நுனி முதல்
அடிவரை) குலை குலையாகப்
பழங்களுடை வாழை
மரத்தின் கீழும்:
[56:30]
இன்னும், நீண்ட
நிழலிலும்,
[56:31]
(சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும்
நீரின் அருகிலும்,
[56:32]
ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும்
-
[56:33]
அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை
-
[56:34]
மேலும், உன்னதமான விரிப்புகளில்
(அமர்ந்திருப்பர்).
[56:35]
நிச்சயமாக (ஹூருல்
ஈன் என்னும் பெண்களைப்)
புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி,
[56:36]
அப்பெண்களைக்
கன்னிகளாகவும்,
[56:37]
(தம் துணைவர்
மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,
[56:38]
வலப்புறத்தோருக்காக
(ஆக்கி வைத்துள்ளோம்).
[56:39]
முன்னுள்ளோரில்
ஒரு கூட்டமும்,
[56:40]
பின்னுள்ளோரில்
ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக
இருப்பார்கள்).
[56:41]
இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள்
யார்? (என்று அறிவீர்களா?)
[56:42]
(அவர்கள்)
கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும்
நீரிலும் -
[56:43]
அடர்ந்து இருண்ட
புகையின் நிழலிலும்
இருப்பார்கள்.
[56:44]
(அங்கு)
குளிர்ச்சியுமில்லை, நலமுமில்லை.
[56:45]
நிச்சயமாக அவர்கள்
இதற்கு முன்னர்
(உலகத்தில்) சுகபோகிகளாக
இருந்தனர்.
[56:46]
ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின்
மீது நிலைத்தும்
இருந்தனர்.
[56:47]
மேலும், அவர்கள், "நாம் மரித்து
மண்ணாகவும், எலும்புகளாகவும்
ஆகி விட்டாலும், நாம் மீண்டும்
நிச்சயமாக எழுப்பப்படுவோமா?" என்று
கேட்டுக் கொண்டு
இருந்தனர்.
[56:48]
அல்லது, முன்னோர்களான
நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்? என்றும்
கூறினர்.)
[56:49]
(நபியே!)
நீர் கூறும்: "(நிச்சயமாக
உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.
[56:50]
குறிப்பிட்ட
நாளின் ஒரு நேரத்தில்
(நீங்கள் யாவரும்)
ஒன்று கூட்டப்படுவீர்கள்.
[56:51]
அதற்குப் பின்னர்:
பொய்யர்களாகிய
வழி கேடர்களே!
நிச்சயமாக நீங்கள்,
[56:52]
ஜக்கூம் (என்னும்
கள்ளி) மரத்திலிருந்தே
நீங்கள் புசிப்பவர்கள்.
[56:53]
ஆகவே, "அதைக் கொண்டே வயிறுகளை
நிரப்புவீர்கள்.
[56:54]
அப்புறம் அதன்மேல்
கொதிக்கும் நீரையே
குடிப்பீர்கள்.
[56:55]
பின்னும் ஹீம்
- தாகமுள்ள ஒட்டகை
குடிப்பதைப் போல்
குடிப்பீர்கள்.
[56:56]
இதுதான் நியாயத்
தீர்ப்பு நாளில்
அவர்களுக்கு விருந்தாகும்.
[56:57]
நாமே உங்களைப்
படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை)
நீங்கள் உண்மையென்று
நம்ப வேண்டாமா?
[56:58]
(கர்ப்பப்
பையில்) நீங்கள் செலுத்தும்
இந்திரியத்தைக்
கவனித்தீர்களா?
[56:59]
அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது
நாம் படைக்கின்றோமா?
[56:60]
உங்களுக்கிடையில்
மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே நம்மை
எவரும் மிகைக்க
முடியாது.
[56:61]
(அன்றியும்
உங்களைப் போக்கி விட்டு)
உங்கள் போன்றோரை
பதிலாகக் கொண்டு
வந்து நீங்கள்
அறியாத உருவத்தில் உங்களை
உண்டாக்கவும்
(நாம் இயலாதவர்கள்
அல்ல).
[56:62]
முதல் முறையாக
(நாம் உங்களைப்) படைத்தது
பற்றி நிச்சயமாக
நீங்கள் அறிவீர்கள்
- எனவே (அதிலிருந்து
நினைவு கூர்ந்து)
நீங்கள் உணர்வு
பெற வேண்டாமா?
[56:63]
(இப்பூமியில்)
விதைப்பதை நீங்கள்
கவனித்தீர்களா?
[56:64]
அதனை நீங்கள்
முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது
நாம் முளைக்கச்
செய்கின்றோமா?
[56:65]
நாம் நாடினால்
திட்டமாக அதனைக் கூளமாய்
ஆக்கிவிடுவோம்
- அப்பால் நீங்கள்
ஆச்சரியப்பட்டுக்
கொண்டு இருப்பீர்கள்.
[56:66]
நிச்சயமாக நாம்
கடன் பட்டவர்களாகி
விட்டோம்.
[56:67]
மேலும், (பயிர்களிலிருந்து
எதுவும் பெற முடியாதவர்களாகத்)
தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும்
கூறிக் கொண்டிருப்பீர்கள்).
[56:68]
அன்றியும், நீங்கள்
குடிக்கும் நீரைக்
கவனித்தீர்களா?
[56:69]
மேகத்திலிருந்து
அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது
நாம் இறக்குகிறோமா?
[56:70]
நாம் நாடினால், அதைக் கைப்புள்ள
தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்)
நீங்கள் நன்றி
செலுத்த வேண்டாமா?
[56:71]
நீங்கள் மூட்டும்
நெருப்பை கவனித்தீர்களா?
[56:72]
அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது
நாம் உண்டு பண்ணுகிறோமா?
[56:73]
நாம் அதனை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு
பயனளிக்கப்பதற்காகவும்
உண்டாக்கினோம்.
[56:74]
ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின்
திருநாமத்தைக்
கொண்டு தஸ்பீஹு
செய்வீராக.
[56:75]
நட்சத்திர மண்டலங்களின்
மீது நான் சத்தியம்
செய்கிறேன்.
[56:76]
நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக
இது மகத்தான் பிரமாணமாகும்.
[56:77]
நீச்சயமாக, இது மிகவும் கண்ணியமும்
சங்கையும் மிக்க
குர்ஆன் ஆகும்.
[56:78]
பாதுகாக்கப்பட்ட
ஏட்டில் இருக்கிறது.
[56:79]
தூய்மையானவர்களைத்
தவிர (வேறெவரும்)
இதனைத் தொட மாட்டார்கள்.
[56:80]
அகிலத்தாரின்
இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.
[56:81]
அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான)
இச்செய்தி பற்றி
நீங்கள் அலட்சியமாக
இருக்கிறீர்களா?
[56:82]
நீங்கள் பொய்ப்பிப்பதை
(இறைவன் தந்த)
உங்கள் பாக்கியங்களுக்கு
(நன்றியாக) ஆக்குகின்றீர்களா?
[56:83]
மரணத் தறுவாயில்
ஒருவனின் (உயிர்)
தொண்டைக் குழியை
அடையும் போது
-
[56:84]
அந்நேரம் நீங்கள்
பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
[56:85]
ஆயினும், நாமோ அவனுக்கு
உங்களை விட சமீபமாக
இருக்கிறோம். எனினும்
நீங்கள் பார்க்கிறீர்களில்லை.
[56:86]
எனவே, (மறுமையில்
உங்கள் செயல்களுக்கு)
கூலி கொடுக்கப்பட
மாட்டீர்கள் என்று
இருந்தால் -
[56:87]
நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை)
மீளவைத்திருக்கலாமே!
[56:88]
(இறந்தவர்
இறைவனுக்கு) நெருக்கமானவர்களில்
நின்றும் இருப்பாராயின்.
[56:89]
அவருக்குச் சுகமும், நல்லுணவும்
இன்னும் பாக்கியமுள்ள
சுவர்க்கமும்
உண்டு.
[56:90]
அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக
இருந்தால்,
[56:91]
வலப்புறத்தோரே!
உங்களுக்கு ஸலாம்" உண்டாவதாக" (என்று
கூறப்படும்).
[56:92]
ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில்
(ஒருவனாக) இருந்தால்
[56:93]
கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும்.
[56:94]
நரக நெருப்பில்
தள்ளப்படுவது (விருந்தாகும்).
[56:95]
நிச்சயமாக இதுதான்
உறுதியான உண்மையாகும்.
[56:96]
எனவே (நபியே!) மகத்தான உம்முடைய
இறைவனின் திருநாமத்தைக்
கொண்டு தஸ்பீஹு
செய்வீராக.
Al-Hadîd
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[57:1]
வானங்களிலும், பூமியிலும் உள்ளயாவும்
அல்லாஹ்வுக்கே
தஸ்பீஹு செய்து
(துதி செய்து) கொண்டிருக்கின்றன
- அவன் (யாவரையும்)
மிகைத்தோன், ஞானம்
மிக்கவன்.
[57:2]
வானங்களுடையவும், பூமியுடையவும்
ஆட்சி அவனுக்கே
உடையது, அவனே உயிர்ப்பிக்கிறான், மரிக்கும் படியும்
செய்கிறான் - மேலும்
அவன் அனைத்துப்
பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
[57:3]
(யாவற்றுக்கும்)
முந்தியவனும் அவனே, பிந்தியவனும்
அவனே, பகிரங்கமானவனும்
அவனே, அந்தரங்கமானவனும்
அவனே, மேலும், அவன் அனைத்துப்
பொருள்களையும்
நன்கறிந்தவன்.
[57:4]
அவன் தான் வானங்களையும், பூமியையும்
ஆறு நாட்களில்
படைத்தான், பின்னர்
அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள்
நுழைவதையும், அதிலிருந்து
வெளியாவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில்
ஏறுவதையும் அவன்
நன்கறிகிறான், நீங்கள்
எங்கிருந்த போதிலும்
அவன் உங்களுடனே
இருக்கிறான் -
அன்றியும் அல்லாஹ்
நீங்கள் செய்வதை
உற்று நோக்கியவனாக
இருக்கிறான்.
[57:5]
வானங்களுடையவும், பூமியுடையவும்
ஆட்சி அவனுக்கே
உடையது, அன்றியும்
காரியங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே
மீட்கப்படும்.
[57:6]
அவனே இரவைப் பகலில் புகுத்துகின்றான், இன்னும்
பகலை இரவில் புகுத்துகின்றான்
- அவன் இதயங்களிலுள்ளவற்றையெல்லாம்
நன்கறிந்தவன்.
[57:7]
நீங்கள் அல்லாஹ்வின்
மீதும் அவன் தூதர்
மீதும் நம்கிக்கை
கொள்ளுங்கள்; மேலும், அவன் உங்களை
(எந்த சொத்துக்கு)
பின் தோன்றல்களாக
ஆக்கியுள்ளானோ, அதிலிருந்து
(அல்லாஹ்வுக்காகச்) செலவு
செய்யுங்கள்; ஏனெனில்
உங்களில் எவர்கள்
ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்காகச்) செலவும்
(தானம்) செய்கிறார்களோ, அவர்களுக்கு
(அவனிடம்) பெரியதொரு
கூலி இருக்கிறது.
[57:8]
உங்கள் இறைவன்
மீது நம்பிக்கை கொள்ள
(நம்) தூதர் உங்களை
அழைக்கையில் -
இன்னும் திட்டமாய்
ஏற்கனவே (அவன்) உங்களிடம்
உறுதிமானமும்
வாங்கியிருக்கும்
போது, அல்லாஹ்வின்
மீது நீங்கள் ஈமான் கொள்ளாதிருக்க
உங்களுக்கு என்ன
நேர்ந்தது? நீங்கள்
முஃமின்களாக இருப்பீர்களாயின் (இறை போதனைப்படி
நடவுங்கள்).
[57:9]
அவன்தான் உங்களை இருள்களிலிருந்து
பிரகாசத்தின்
பால் வெளிக் கொண்டுவருவதற்காகத்
தன் அடியார் மீது தெளிவானவையான
வசனங்களை இறக்கி
வைக்கின்றான், மேலும், நிச்சயமாக
அல்லாஹ் உங்கள் மீது மிக்க
கிருபையுடையவன், நிகரற்ற
அன்புடையவன்.
[57:10]
அன்றியும் அல்லாஹ்வின் பாதையில்
நீங்கள் செலவு
செய்யாதிருக்க
உங்களுக்கு என்ன
நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின்
அனந்தர பாத்தியதை
அல்லாஹ்வுடையதே!
(மக்கா) வெற்றிக்கு முன்னர்
செலவு செய்து, போரிட்டவர்களுக்கு
உங்களில் நின்றும்
(எவரும்) சமமாக மாட்டார், (மக்காவின்
வெற்றிக்குப்)
பின், செலவு செய்து
போரிட்டவர்களைவிட, அவர்கள்
பதவியால் மிகவும்
மகத்தானவர்கள், எனினும்
அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே
வாக்களித்திருக்கின்றான்.
அன்றியும் அல்லாஹ்
நீங்கள் செய்பவற்றை
நன்கு தெரிந்தவன்.
[57:11]
அல்லாஹ்வுக்கு
அழகான கடனாகக் கடன் கொடுப்பவர்
யார்? அவருக்கு அவன்
அதை இரட்டிப்பாக்குகின்றான், மேலும், அவருக்குக்
கண்ணியமான நற்கூலியும்
உண்டு.
[57:12]
முஃமின்களான
ஆண்களையும் முஃமின்களான
பெண்களையும் நீர்
பார்க்கும் நாளில்
அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு
முன்னாலும், அவர்களுக்கு
வலப்புறத்திலும்
விரைந்து கொண்டிருக்கும், (அப்போது
அவர்களை நோக்கி:) "இன்று
உங்களுக்கு நன்மாராயமாவது
சுவர்க்கத்துச் சோலைகளாகும், அவற்றின்
கீழே ஆறுகள் ஓடிக்
கொண்டிருக்கும், அவற்றில்
என்றென்றும் தங்கியிருங்கள்
- இது தான் மகத்தான
வெற்றியாகும்" (என்று
கூறப்படும்).
[57:13]
முனாஃபிக்கான
ஆண்களும், முனாஃபிக்கான
பெண்களும் ஈமான்
கொண்டவர்களை நோக்கி: "எங்களை
கவனியுங்கள், உங்கள்
ஒளியிலிருந்து
நாங்களும் பற்ற
வைத்துக் கொள்கிறோம்" என்று
கூறும் தினத்தை
(நினைவூட்டுவீராக); அவர்களுக்குக்
கூறப்படும், "உங்களுக்குப் பின்னால், திரும்பிச்
சென்று பின்னர்
ஒளியைத் தேடிக்
கொள்ளுங்கள்." பிறகு, அவர்களுக்கிடையே
ஒரு சுவர் எழுப்பப்படும்!
அதற்கு ஒரு வாயில்
இருக்கும், அதன் உட்புறம்
(இறை) ரஹ்மத் இருக்கும், ஆனால்
அதன் வெளிப்புறத்தில்
- (எல்லாத்) திசையிலும்
வேதனையிருக்கும்.
[57:14]
இவர்கள் (முஃமின்களைப் பார்த்து)
நாங்கள் உங்களுடன்
இருக்கவில்லையா?" என்று
(அந்த முனாஃபிக்குகள்) சப்தமிட்டுக்
கூறுவார்கள், "மெய்தான், எனினும்
நீங்களே உங்களைச் சோதனையிலாழ்த்தி
விட்டீர்கள், (எங்கள்
அழிவை) நீங்கள்
எதிர் பார்த்தீர்கள், (இந்நாளைப்
பற்றியும்) சந்தேகமும்
கொண்டிருந்தீர்கள்; அல்லாஹ்வின்
கட்டளை வரும் வரையில்
(உங்களுடைய வீண்
ஆசைகள் உங்களை
மயக்கி விட்டன, அன்றியும்
மயக்குபவ(னான ஷைத்தா)ன், அல்லாஹ்வைப்
பற்றி உங்களை மயக்கியும்
விட்டான்" என்றும் (முஃமின்கள்)
கூறுவார்கள்.
[57:15]
ஆகவே, இன்னும் உங்களிடமிருந்தோ நிராகரித்தவர்களிடமிருந்தோ
(உங்களுக்குரிய
வேதனைக்குப் பதிலாக)
எந்த வகையான நஷ்ட ஈடும்
வாங்கப்பட மாட்டாது, உங்களுடைய
தங்குமிடம் நரகம்
தான், அதுதான் உங்களுக்குத்
துணை - அதுவோ சென்றடையும்
இடங்களிலெல்லாம்
மிகக் கெட்டதாகும் (என்றுங்
கூறப்படும்).
[57:16]
ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய
இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள
உண்மையான (வேதத்)தையும்
நினைத்தால், அஞ்சி
நடுங்கும் நேரம்
வரவில்லையா? மேலும், அவர்கள்
- முன்னால் வேதம்
கொடுக்கப்பட்டவர்களைப்
போல் ஆகிவிட வேண்டாம், (ஏனெனில்)
அவர்கள் மீது நீண்ட
காலம் சென்ற பின்
அவர்களுடைய இருதயங்கள்
கடினமாகி விட்டன
அன்றியும், அவர்களில்
பெரும்பாலோர்
ஃபாஸிக்குகளாக
- பாவிகளாக ஆகிவிட்டனர்.
[57:17]
அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக
அல்லாஹ் பூமியை
அதன் இறப்பிற்குப்பின், உயிர்ப்பிக்கிறான்:
நீங்கள் விளங்கிக்
கொள்வதற்காக நாம்
இவ்வசனங்களை உங்களுக்கு
தெளிவாக விவரிக்கிறோம்.
[57:18]
நிச்சயமாக தானதர்மம்
செய்யும் ஆண்களும், பெண்களும், இன்னும்
அல்லாஹ்வுக்கு
அழகான கடனாகக்
கடன் கொடுத்தார்களே அவர்களும்
- அவர்களுக்கு
(அதன் பலன்) இரு
மடங்காக்கப்படும்
-(அன்றியும்) அவர்களுக்கு
(அல்லாஹ்விடம்)
கண்ணியமான நற்கூலியும்
இருக்கிறது.
[57:19]
மேலும், எவர்கள்
அல்லாஹ்வின் மீதும்
அவனுடைய தூதர்கள்
மீதும் நம்பிக்கை
கொள்கிறார்களோ, அவர்கள்
தாம் தங்கள் இறைவன்
முன் உண்மையாளர்களாகவும், உயிர்
தியாகிகளாகவும்
இருப்பார்கள், அவர்களுக்கு
அவர்களுடைய நற்கூலியும், (நேர்வழி
காட்டும்) போரொளியும்
உண்டு, எவர்கள் நிராகரித்துக்
கொண்டும், நம் வசனங்களைப்
பொய்யாக்கிக்
கொண்டும் இருக்கிறார்களோ
அவர்கள் நரக வாசிகள்தான்.
[57:20]
அறிந்து கொள்ளுங்கள்: "நிச்சயமாக
இவ்வுலக வாழ்க்கை
விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும், மேலும்
(அது) உங்களிடையே
பெருமையடித்துக்
கொள்வதும், பொருள்களையும், சந்ததிகளையும்
பெருக்குவதுமேயாகும், (இது) மழையின்
உதாரணத்துக்கு ஒப்பாகும், (அதாவது:)
அது முளைப்பிக்கும்
பயிர் விவசாயிகளை
ஆனந்தப் படுத்துகிறது, ஆனால், சீக்கரமே
அது உலர்ந்து மஞ்சள்
நிறம் ஆவதை நீர்
காண்கிறீர்; பின்னர்
அது கூளமாகி விடகிறது, (உலக வாழ்வும்
இத்தகையதே, எனவே உலக
வாழ்வில் மயங்கியோருக்கு)
மறுமையில் கடுமையன
வேதனையுண்டு; (முஃமின்களுக்கு)
அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும்
உண்டு - ஆகவே, இவ்வுலக
வாழ்க்கை ஏமாற்றும்
சொற்ப சுகமே
தவிர (வேறு) இல்லை.
[57:21]
உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும்
சுவர்க்கத்திற்கும்
நீங்கள் முந்துங்கள், அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும்
பரப்பைப் போன்றதாகும், எவர்கள் அல்லாஹ்வின்
மீதும், அவன் தூதர்
மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு
அது சித்தம்
செய்து வைக்கப்பட்டிருக்கிறது.
அது அல்லாஹ்வுடைய
கிருபையாகும்
- அதனை அவன் நாடியவருக்கு
அளிக்கின்றான்.
இன்னும், அல்லாஹ்
மகத்தான கிருபையுடையவன்.
[57:22]
பூமியிலோ, அல்லது
உங்களிலோ சம்பவிக்கிற
எந்தச் சம்பவமும்
- அதனை நாம் உண்டாக்குவதற்கு
முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்)
ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக
அது அல்லாஹ்வுக்கு
மிக எளிதானதேயாகும்.
[57:23]
உங்களை விட்டுத்
தவறிப்போன ஒன்றின்
மீது நீங்கள் துக்கப்படாமல்
இருக்கவும், அவன் உங்களுக்கு
அளித்தவற்றின் மீது நீங்கள்
(அதிகம்) மகிழாதிருக்கவும்
(இதனை உங்களுக்கு
அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை
உடையவர்கள் எவரையும்
அல்லாஹ் நேசிப்பதில்லை.
[57:24]
நிச்சயமாக அல்லாஹ்
(எவரிடமும்) தேவையற்றவன்.
புகழ் மிக்கவன்.
[57:25]
நிச்சயமாக நம்
தூதர்களைத் தெளிவான
அத்தாட்சிகளுடன்
அனுப்பினோம், அன்றியும், மனிதர்கள்
நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன்
வேதத்தையும் (நீதத்தின்)
துலாக்கோலையும்
இறக்கினோம், இன்னும், இரும்பையும்
படைத்தோம், அதில்
கடும் அபாயமுமிருக்கிறது, எனினும் (அதில்)
மனிதர்களுக்குப்
பல பயன்களும் இருக்கின்றன
- (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய
தூதருக்கும் மறைமுகமாகவும்
உதவி செய்பவர்
எவர் என்பதையும் (சோதித்)
அறிந்து கொள்வதற்காக
அல்லாஹ் (இவ்வாறு
அருள்கிறான்); நிச்சயமாக
அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்)
மிகைத்தவன்.
[57:26]
அன்றியும், திடமாக
நாமே நூஹையும், இப்ராஹீமையும்
(தூதர்களாக) அனுப்பினோம், இன்னும், அவ்விருவரின் சந்ததியில்
நுபவ்வத்தை (நபித்துவத்தை)யும்
வேதத்தையும் ஏற்படுத்தினோம், (அவர்களில்)
நேர்வழி பெற்றவர்களும்
உண்டு, எனினும் அவர்களில்
பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக
- பாவிகளாக இருந்தனர்.
[57:27]
பின்னர் அவர்களுடைய
(அடிச்) சுவடுகளின்
மீது (மற்றைய) நம்
தூதர்களைத் தொடரச்
செய்தோம், மர்யமின்
குமாரர் ஈஸாவை
(அவர்களை)த் தொடரச்
செய்து, அவருக்கு இன்ஜீலையும்
கொடுத்தோம் - அன்றியும், அவரைப்
பின்பற்றியவர்களின்
இதயங்களில் இரக்கத்தையும்
கிருபையையும்
உண்டாக்கினோம், ஆனால்
அவர்கள் தாங்களே
புதிதாக உண்டாக்கிக்
கொண்ட துறவித்தனத்தை
நாம் அவர்கள் மீது விதிக்க
வில்லை. அல்லாஹ்வின்
திருப்பொருத்தத்தை
அடைய வேண்டியேயன்றி (அவர்களே
அதனை உண்டுபண்ணிக்
கொண்டார்கள்); ஆனால்
அதைப் பேணுகிற
அளவுக்கு அவர்கள் அதைச்
சரிவரப் பேணவில்லை
அப்பால், அவர்களில்
ஈமான் கொண்டவர்களுக்கு
அவர்களுடைய (நற்)கூலியை
நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில்
பெரும் பாலோர்
ஃபாஸிக்குகளாக
- பாவிகளாகவே
இருக்கின்றனர்.
[57:28]
ஈமான் கொண்டவர்களே!
நீங்கள் அல்லாஹ்வுக்கு
அஞ்சி, அவனுடைய (இறுதித்)
தூதர் மீதும் ஈமான்
கொள்ளுங்கள்; அவன்தன்
கிருபையிலிருந்து
இரு மடங்கை உங்களுக்கு
வழங்கி, ஓர் ஒளியையும் உங்களுக்கு
அருள்வான், அதைக்
கொண்டு நீங்கள்
(நேர்வழி) நடப்பீர்கள், இன்னும், உங்களுக்காக
(உங்கள் குற்றங்களையும்)
அவன் மன்னிப்பான்
- அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க
கிருபை உடையவன்.
[57:29]
அல்லாஹ்வுடைய
அருள் கொடையிலிருந்து
யாதொன்றையும்
பெறத் தாங்கள்
சக்தியுடையவர்களல்லர்
என்று வேதத்தை உடையவர்கள்
எண்ணிக் கொள்ளாதிருக்கும்
பொருட்டே (இவற்றை
அவன் உங்களுக்கு அறிவிக்கின்றான்)
அன்றியும் அருள்
கொடையெல்லாம்
நிச்சயமாக அல்லாஹ்வின்
கையிலேயே இருக்கின்றது, தான் விரும்பியவர்களுக்கு
அதனை அவன் அளிக்கின்றான்
- அல்லாஹ்வே மகத்தான
கிருபையுடையவன்.