Part 3
[2:253]
அத்தூதர்கள்
- அவர்களில் சிலரைச்
சிலரைவிட நாம்
மேன்மையாக்கி
இருக்கின்றோம்; அவர்களில்
சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில்
சிலரைப் பதவிகளில்
உயர்த்தியும்
இருக்கின்றான்;. தவிர மர்யமுடைய
மகன் ஈஸாவுக்கு
நாம் தெளிவான அத்தாட்சிகளைக்
கொடுத்தோம்;. இன்னும், ரூஹுல்
குதுஸி (எனும்
பரிசுத்த ஆத்மாவைக்)
கொண்டு அவருக்கு
உதவி செய்தோம்;. அல்லாஹ்
நாடியிருந்தால், தங்களிடம்
தெளிவான அத்தாட்சிகள்
வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின்
வந்த மக்கள் (தங்களுக்குள்)
சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால்
அவர்கள் வேறுபாடுகள்
கொண்டனர்;. அவர்களில்
ஈமான் கொண்டோரும் உள்ளனர்;. அவர்களில்
நிராகரித்தோரும்
(காஃபிரானோரும்)
உள்ளனர்;. அல்லாஹ் நாடியிருந்தால்
அவர்கள் (இவ்வாறு)
சண்டை செய்து கொண்டிருக்க
மாட்டார்கள்;. ஆனால் அல்லாஹ்
தான் நாடியவற்றைச்
செய்கின்றான்.
[2:254]
நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும்
இல்லாத அந்த(இறுதித்
தீர்ப்பு) நாள் வருவதற்கு
முன்னர், நாம் உங்களுக்கு
அளித்தவற்றிலிருந்து
(நல்வழிகளில்)
செலவு செய்யுங்கள்;. இன்னும், காஃபிர்களாக
இருக்கின்றார்களே
அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்.
[2:255]
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய)
நாயன் வேறு இல்லை.
அவன் என்றென்றும்
ஜீவித்திருப்பவன், என்றென்றும்
நிலைத்திருப்பவன்;, அவனை அரி
துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும்
அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம்
யார் பரிந்துரை
செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப்
பின்னருள்ளவற்றையும்
அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து
எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும்
அறிந்துகொள்ள
முடியாது. அவனுடைய
அரியாசனம் (குர்ஸிய்யு)
வானங்களிலும், பூமியிலும்
பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும்
காப்பது அவனுக்குச்
சிரமத்தை உண்டாக்குவதில்லை
- அவன் மிக உயர்ந்தவன்; மகிமை
மிக்கவன்.
[2:256]
(இஸ்லாமிய)
மார்க்கத்தில் (எவ்வகையான)
நிர்ப்பந்தமுமில்லை.
வழிகேட்டிலிருந்து
நேர்வழி முற்றிலும் (பிரிந்து)
தெளிவாகிவிட்டது.
ஆகையால், எவர் வழி
கெடுப்பவற்றை
நிராகரித்து அல்லாஹ்வின்
மீது நம்பிக்கை
கொள்கிறாரோ அவர்
அறுந்து விடாத
கெட்டியான கயிற்றை நிச்சயமாகப்
பற்றிக் கொண்டார்
- அல்லாஹ்(யாவற்றையும்)
செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும்
இருக்கின்றான்.
[2:257]
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின்
பாதுகாவலன் (ஆவான்)
அவன் அவர்களை இருள்களிலிருந்து
வெளிச்சத்தின் பக்கம்
கொண்டு வருகின்றான்;. ஆனால்
நிராகரிப்பவர்களுக்கோ
- (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள்
தாம் அவர்களின்
பாது காவலர்கள்;. அவை அவர்களை
வெளிச்சத்திலிருந்து இருள்களின்
பக்கம் கொண்டு
வருகின்றன. அவர்களே
நரகவாசிகள்; அவர்கள்
அதில் என்றென்றும்
இருப்பர்.
[2:258]
அல்லாஹ் தனக்கு
அரசாட்சி கொடுத்ததின்
காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில்
அவருடைய இறைவனைப்
பற்றித் தர்க்கம்
செய்தவனை (நபியே!)
நீர் கவனித்தீரா? இப்ராஹீம்
கூறினார்; "எவன் உயிர்
கொடுக்கவும், மரணம்
அடையும்படியும்
செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)" என்று.
அதற்கவன், "நானும்
உயிர் கொடுக்கிறேன்;, மரணம் அடையும்
படியும் செய்கிறேன்" என்று
கூறினான்; (அப்பொழுது)
இப்ராஹீம் கூறினார்; "திட்டமாக
அல்லாஹ் சூரியனைக்
கிழக்கில் உதிக்கச்
செய்கிறான்;, நீ அதை மேற்குத்
திசையில் உதிக்கும்படிச்
செய்!" என்று. (அல்லாஹ்வை) நிராகரித்த
அவன், திகைத்து வாயடைப்பட்டுப்
போனான்;. தவிர, அல்லாஹ்
அநியாயம் செய்யும்கூட்டத்தாருக்கு
நேர் வழி காண்பிப்பதில்லை.
[2:259]
அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாகச்
சென்றவரைப் போல்
- (அந்த கிராமத்திலுள்ள
வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து)
பாழடைந்து கிடந்தன.
(இதைப் பார்த்த
அவர்) "இவ்வூர் (இவ்வாறு
அழிந்து) மரித்தபின்
இதனை அல்லாஹ் எப்படி
உயிர்ப்பிப்பான்?" என்று (வியந்து)
கூறினார்;. ஆகவே, அல்லாஹ்
அவரை நூறாண்டுகள்
வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர்
அவரை உயிர்பெற்றெழுப்படிச்
செய்து, "எவ்வளவு காலம் (இந்நிலையில்)
இருந்தீர்?" என்று
அவரைக் கேட்டான்; அதற்கவர், "ஒரு நாள் அல்லது
ஒரு நாளின் சிறு
பகுதியில் (இவ்வாறு)
இருந்தேன்" என்று கூறினார்; "இல்லை
நீர் (இந்நிலையில்)
நூறாண்டுகள் இருந்தீர்!
இதோ பாரும் உம்முடைய
உணவையும், உம்முடைய
பானத்தையும்; (கெட்டுப்
போகாமையினால்)
அவை எந்த விதத்திலும்
மாறுதலடையவில்லை, ஆனால்
உம்முடைய கழுதையைப்
பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக
(இவ்வாறு மரிக்கச்
செய்து உயிர் பெறச்
செய்கிறோம்) இன்னும்
(அக்கழுதையின்)
எலும்புகளைப்
பாரும்; அவற்றை நாம்
எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர்
அவற்றின்மேல்
சதையைப் போர்த்துகிறோம்" எனக்கூறி (அதனை உயிர்
பெறச் செய்தான்-
இதுவெல்லாம்) அவருக்குத்
தெளிவான போது, அவர், "நிச்சயமாக
அல்லாஹ் எல்லாப்
பொருள்களின் மீதும்
வல்லமையுடையவன்
என்பதை நான் அறிந்து
கொண்டேன்" என்று
கூறினார்.
[2:260]
இன்னும், இப்ராஹீம்; "என் இறைவா!
இறந்தவர்களை நீ
எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய்
என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!" எனக் கோரியபோது, அவன், நீர்
(இதை) நம்ப வில்லையா?" எனக் கேட்டான்; "மெய்(யாக
நம்புகிறேன்!)
ஆனால் என் இதயம்
அமைதிபெறும் பொருட்டே
(இவ்வாறு கேட்கிறேன்)" என்று
கூறினார்; "(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து
நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம்
திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை
அறுத்து) அவற்றின்
ஒவ்வொரு பாகத்தை
ஒவ்வொரு மலையின்
மீது வைத்து விடும்;. பின், அவற்றைக்
கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப்
பறந்து) வரும்;. நிச்சயமாக
அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன்
என்பதை அறிந்து
கொள்ளும்" என்று
(அல்லாஹ்) கூறினான்.
[2:261]
அல்லாஹ்வின்
பாதையில் தங்கள் செல்வத்தைச்
செலவிடுபவர்களுக்கு
உவமையாவது ஒவ்வொரு
கதிரிலும் நூறு
தானிய மணிகளைக்
கொண்ட ஏழு கதிர்களை
முளைப்பிக்கும்
ஒரு வித்தைப் போன்றது.
அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு
(இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும்
அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும்
நன்கறிபவன்.
[2:262]
அல்லாஹ்வின்
பாதையில் எவர் தங்கள்
செல்வத்தைச் செலவிட்ட
பின்னர், அதைத்
தொடர்ந்து அதைச்
சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது
(வேறு விதமாக) நோவினை
செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு
அதற்குரிய நற்கூலி
அவர்களுடைய இறைவனிடத்தில்
உண்டு இன்னும்
- அவர்களுக்கு
எத்தகைய பயமுமில்லை
அவர்கள் துக்கமும்
அடையமாட்டார்கள்.
[2:263]
கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம்
செய்தபின் நோவினையைத்
தொடரும்படிச்
செய்யும் ஸதக்காவை (தர்மத்தை)
விட மேலானவையாகும்;. தவிர அல்லாஹ்
(எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்;. மிக்க
பொறுமையாளன்.
[2:264]
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின்
மீதும், இறுதி நாளின்
மீதும் நம்பிக்கை
கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே
தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச்
சொல்லிக் காண்பித்தும், நோவினைகள்
செய்தும் உங்கள்
ஸதக்காவை (தான
தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்;. அ(ப்படிச்
செய்ப)வனுக்கு
உவமையாவது, ஒரு வழுக்குப்
பாறையாகும்;. அதன் மேல்
சிறிது மண் படிந்துள்ளது, அதன் மீது
பெருமளவு பெய்து
(அதிலிருந்த சிறிது
மண்ணையும் கழுவித்)
துடைத்து விட்டது.
இவ்வாறே அவர்கள்
செய்த -(தானத்)திலிருந்து
யாதொரு பலனையும்
அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான
மக்களை நேர் வழியில்
செலுத்துவதில்லை.
[2:265]
அல்லாஹ்வின்
திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள்
ஆத்மாக்களை உறுதியாக்கிக்
கொள்ளவும், யார் தங்கள்
செல்வங்களைச் செலவு
செய்கிறார்களோ
அவர்களுக்கு உவமையாவது, உயரமான
(வளமுள்ள) பூமியில்
ஒரு தோட்டம்
இருக்கிறது. அதன்
மேல் பெரு மழை
பெய்கிறது. அப்பொழுது
அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது.
இன்னும், அதன் மீது
அப்படிப் பெருமழை
பெய்யாவிட்டாலும்
பொடி மழையே
அதற்குப் போதுமானது.
அல்லாஹ் நீங்கள்
செய்வதையெல்லாம்
பார்க்கின்றவனாக இருக்கின்றான்.
[2:266]
உங்களில் யாராவது
ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது
அவரிடம் பேரீச்ச
மரங்களும், திராட்சைக்
கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம்
இருக்கிறது. அதன்
கீழே நீரோடைகள்
(ஒலித்து) ஓடுகின்றன.
அதில் அவருக்கு
எல்லா வகையான கனி
வர்க்கங்களும்
உள்ளன. (அப்பொழுது)
அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது.
அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான
சிறு குழந்தைகள்
தாம் இருக்கின்றன
- இந்நிலையில்
நெருப்புடன் கூடிய
ஒரு சூறாவளிக்
காற்று, அ(ந்தத் தோட்டத்)தை
எரித்து(ச் சாம்பலாக்கி)
விடுகின்றது.
(இதையவர் விரும்புவாரா?) நீங்கள்
சிந்தனை செய்யும்
பொருட்டு அல்லாஹ்
(தன்) அத்தாட்சிகளை
உங்களுக்குத் தெளிவாக
விளக்குகின்றான்.
[2:267]
நம்பிக்கை கொண்டோரே!
நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து
நாம் உங்களுக்கு
வெளிப்படுத்தித் தந்த
(தானியங்கள், கனி வகைகள்
போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே
(தான தர்மங்களில்)
செலவு செய்யுங்கள்;. அன்றியும்
கெட்டவற்றைத்
தேடி அவற்றிலிருந்து சிலவற்றை
(தான தர்மங்களில்)
செலவழிக்க நாடாதீர்கள்;. ஏனெனில்
(அத்தகைய பொருள்களை வேறெவரும்
உங்களுக்குக்
கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக்
கொண்டேயல்லாது அவற்றை
நீங்கள் வாங்க
மாட்டீர்கள்! நிச்சயமாக
அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம்
உரியவனுமாகவும்
இருக்கின்றான்
என்பதை நீங்கள்
நன்கறிந்து கொள்ளுங்கள்.
[2:268]
(தான தர்மங்கள்
செய்வதினால்) வறுமை
(உண்டாகிவிடும்
என்று அதைக்) கொண்டு
உங்களை ஷைத்தான்
பயமுறுத்துகிறான்.; ஒழுக்கமில்லாச்
செயல்களைச் செய்யுமாறும்
உங்களை ஏவுகிறான்;. ஆனால்
அல்லாஹ்வோ, (நீங்கள்
தான தருமங்கள்
செய்தால்) தன்னிடமிருந்து
மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க
செல்வமும் (கிடைக்கும்
என்று) வாக்களிக்கின்றான்;. நிச்சயமாக
அல்லாஹ் விசாலமான
(கொடையுடைய)வன்; யாவற்றையும்
நன்கறிபவன்.
[2:269]
தான் நாடியவருக்கு
அவன் ஞானத்தைக்
கொடுக்கின்றான்; (இத்தகு)
ஞானம் எவருக்குக்
கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா
நன்மைகள் கொடுக்கப்பட்டவராக
நிச்சயமாக ஆகி
விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர்
தவிர வேறு யாரும்
இதைச் சிந்தித்துப்
பார்ப்பதில்லை.
[2:270]
இன்னும், செலவு
வகையிலிருந்து நீங்கள்
என்ன செலவு செய்தாலும், அல்லது
நேர்ச்சைகளில்
எந்த நேர்ச்சை
செய்தாலும் நிச்சயமாக
அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும்
அக்கிரமக்காரர்களுக்கு
உதவி செய்வோர்
எவரும் இலர்.
[2:271]
தான தர்மங்களை
நீங்கள் வெளிப்டையாகச்
செய்தால் அதுவும்
நல்;லதே
(ஏனெனில் அவ்வாறு
செய்யப் பிறரையும்
அது தூண்டும்;) எனினும்
அவற்றை மறைத்து
ஏழையெளியோர்க்கு
அவை கிடைக்கும்படிச் செய்தால்
அது உங்களுக்க
இன்னும் நல்லது.
அது உங்களுடைய
பாவங்களையும்
நீக்கும்; நீங்கள்
செய்வதை(யெல்லாம்)
அல்லாஹ் நன்கறிந்தவனாகவே
இருக்கின்றான்.
[2:272]
(நபியே!)
அவர்களை நேர்வழியில் நடத்துவது
உம் கடமையல்ல, ஆனால், தான் நாடியவர்களை
அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்;. இன்னும், நல்லதில்
நீங்கள் எதைச்
செலவிடினும், அது உங்களுக்கே
நன்மை பயப்பதாகும்;. அல்லாஹ்வின்
திருமுகத்தை நாடியே
அல்லாது (வீண் பெருமைக்காகச்)
செலவு செய்யாதீர்கள்;. நல்லவற்றிலிருந்து
நீங்கள் எதைச்
செலவு செய்தாலும், அதற்குரிய
நற்பலன் உங்களுக்குப்
பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள்
அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.
[2:273]
பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத்
தேவைகளை நிறைவேற்ற)
எதுவும் செய்ய
முடியாத அளவுக்கு
அல்லாஹ்வின் பாதையில்
தங்களை அர்ப்பணித்துக்
கொண்டவர்களுக்குத்
தான் (உங்களுடைய
தான தர்மங்கள்)
உரியவையாகும்.
(பிறரிடம் யாசிக்காத)
அவர்களுடைய பேணுதலைக்
கண்டு, அறியாதவன்
அவர்களைச் செல்வந்தர்கள்
என்று எண்ணிக்
கொள்கிறான்;. அவர்களுடைய அடையாளங்களால்
அவர்களை நீர் அறிந்து
கொள்ளலாம். அவர்கள்
மனிதர்களிடம்
வருந்தி எதையும்
கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக)
நல்லதினின்று
நீங்கள் எதைச்
செலவு செய்தாலும், அதை நிச்சயமாக
அல்லாஹ் நன்கறிவான்.
[2:274]
யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்)
இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும்
செலவு செய்கின்றார்களோ, அவர்களுக்கு
அவர்களுடைய இறைவனிடத்தில்
நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு
அச்சமும் இல்லை.
அவர்கள் துக்கப்படவும்
மாட்டார்கள்.
[2:275]
யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள்
(மறுமையில்) ஷைத்தானால்
தீண்டப்பட்ட ஒருவன்
பைத்தியம் பிடித்தவனாக
எழுவது போலல்லாமல்
(வேறுவிதமாய் எழ
மாட்டார்கள்; இதற்குக்
காரணம் அவர்கள், "நிச்சயமாக
வியாபாரம் வட்டியைப்
போன்றதே" என்று கூறியதினாலேயாம்.
அல்லாஹ் வியாபாரத்தை
ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்;. ஆயினும்
யார் தன் இறைவனிடமிருந்து
நற்போதனை வந்த
பின் அதை விட்டும்
விலகிவிடுகிறானோ, அவனுக்கு
முன்னர் வாங்கியது
உரித்தானது - என்றாலும்
அவனுடைய விவகாரம்
அல்லாஹ்விடம்
இருக்கிறது. ஆனால்
யார் (நற்போதனை பெற்ற
பின்னர் இப்பாவத்தின்
பால்) திரும்புகிறார்களோ
அவர்கள் நரகவாசிகள். ஆவார்கள்; அவர்கள்
அதில் என்றென்றும்
தங்கிவிடுவார்கள்.
[2:276]
அல்லாஹ் வட்டியை
(அதில் எந்த பரக்கத்தும்
இல்லாமல்) அழித்து
விடுவான்;. இன்னும்
தான தர்மங்களை (பரக்கத்துகளைக்
கொண்டு) பெருகச்
செய்வான்; (தன் கட்டளையை)
நிராகரித்துக் கொண்டிருக்கும்
பாவிகள் எவரையும்
அல்லாஹ் நேசிப்பதில்லை.
[2:277]
யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச்
செய்து, தொழுகையை நியமமாகக்
கடைப் பிடித்து, ஜகாத்தும்
கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக
அவர்களுக்கு அவர்களுடைய
இறைவனிடத்தில்
நற்கூலி இருக்கிறது.
அவர்களுக்கு அச்சமுமில்லை
அவர்கள் துக்கப்படவும்
மாட்டார்கள்.
[2:278]
ஈமான் கொண்டவர்களே!
நீங்கள் உண்மையாக
முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு
அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள
வட்டியை வாங்காது
விட்டு விடுங்கள்.
[2:279]
இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால்
அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய
தூதரிடமிருந்தும்
போர் அறிவிக்கப்பட்டு
விட்டது (என்பதை
அறிந்து கொள்ளுங்கள்)-
நீங்கள் தவ்பா
செய்து (இப்பாவத்திலிருந்தும்
) மீண்டுவிட்டால், உங்கள்
பொருள்களின் அசல்
- முதல் - உங்களுக்குண்டு
(கடன்பட்டோருக்கு)
நீங்கள் அநியாயம்
செய்யாதீர்கள்
நீங்களும் அநியாயம்
செய்யப்பட மாட்டீர்கள்.
[2:280]
அன்றியும், கடன்பட்டவர் (அதனைத்
தீர்க்க இயலாது)
கஷ்டத்தில் இருப்பின்
(அவருக்கு) வசதியான
நிலை வரும்வரைக்
காத்திருங்கள்;. இன்னும், (கடனைத்
தீர்க்க இயலாதவருக்கு
அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால்
-(அதன் நன்மைகள்
பற்றி) நீங்கள்
அறிவீர்களானால்
- (அதுவே) உங்களுக்குப்
பெரும் நன்மையாகும்.
[2:281]
தவிர, அந்த நாளைப்
பற்றி அஞ்சிக்
கொள்ளுங்கள்;. அன்று
நீங்களனைவரும்
அல்லாஹ்விடம்
மீட்டப்படுவீர்கள்;. பின்னர்
ஒவ்வோர் ஆத்மாவுக்கும்
அது சம்பாதித்ததற்குரிய
(கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும்
(கூலி) வழங்கப்படுவதில்
அவை அநியாயம் செய்யப்படமாட்டா.
[2:282]
ஈமான் கொண்டோரே!
ஒரு குறித்த தவனையின்
மீது உங்களுக்குள்
கடன் கொடுக்கல்
வாங்கல் செய்து
கொண்டால், அதை எழுதி வைத்துக்
கொள்ளுங்கள்;. எழுதுபவன்
உங்களிடையே நீதியுடன்
எழுதட்டும்;. எழுதுபவன் எழுதுவதற்கு
மறுக்கக்கூடாது.
(நீதமாக எழுதுமாறு)
அல்லாஹ் அவனுக்குக்
கற்றுக் கொடுத்தபடி
அவன் எழுதட்டும்.
இன்னும் யார் மீது
கடன் (திருப்பிக்
கொடுக்க வேண்டிய)
பொருப்பு இருக்கிறதோ
அவனே (பத்திரத்தின்)
வாசகத்தைச் சொல்லட்டும்;. அவன் தன்
ரப்பான (அல்லாஹ்வை)
அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன்
வாங்கிய)தில் எதையும்
குறைத்து விடக்கூடாது.
இன்னும், யார் மீது
கடன் (திருப்பிக்
கொடுக்க வேண்டிய)
பொறுப்பு இருக்கிறதோ
அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது
(பால்யம், முதுமை
போன்ற காரணங்களால்)
பலஹீனனாகவோ, அல்லது
வாசகத்தைக் கூற
இயலாதவனாகவோ இருப்பின்
அவனுடைய வலீ(நிர்வாகி)
நீதமாக வாசகங்களைச்
சொல்லட்டும்; தவிர, (நீங்கள்
சாட்சியாக ஏற்கக்
கூடிய) உங்கள்
ஆண்களில் இருவரை
சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்;. ஆண்கள்
இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில்
நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து
ஆடவர் ஒருவரையும், பெண்கள்
இருவரையும் சாட்சிகளாக எடுத்துக்
கொள்ளுங்கள்; (பெண்கள்
இருவர்) ஏனென்றால்
அவ்விருவரில்
ஒருத்தி தவறினால், இருவரில்
மற்றவள் நினைவூட்டும்
பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள்
அழைக்கப்பட்டால்
அவர்கள் மறுக்கலாகாது.
தவிர, (கொடுக்கல் வாங்கல்)
சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால
வரையறையுடன் எழுதுவதில்
அலட்சியமாக இராதீர்கள்;. இதுவே
அல்லாஹ்வின் முன்னிலையில்
மீகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு
உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும்
இது உங்களுக்கு
சந்தேகங்கள் ஏற்படாமல்
இருக்க சிறந்த
வழியாகவும் இருக்கும்;. எனினும்
உங்களிடையே சுற்றி வரும்
ரொக்க வியாபாரமாக
இருப்பின், அதை எழுதிக்
கொள்ளாவிட்டலும்
உங்கள் மீது குற்றமில்லை, ஆனால்
(அவ்வாறு ) நீங்கள்
வியாபாரம் செய்யும்போதும்
சாட்சிகளை வைத்துக்
கொள்ளுங்கள் -
அன்றியும் எழுதுபனையோ, சாட்சியையோ
(உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ)
துன்புறுத்தப்படக்
கூடாது. நீங்கள் அப்படிச்
செய்வீர்களாயின்
அது உங்கள் மீது
நிச்சயமாகப் பாவமாகும்;. அல்லாஹ்வுக்கு
அஞ்சிக் கொள்ளுங்கள்;. ஏனெனில்
அல்லாஹ் தான் உங்களுக்கு
(நேரிய இவ்விதிமுறைகளைக்)
கற்றுக் கொடுக்கின்றான்.
தவிர,அல்லாஹ்வே
எல்லாப் பொருட்களையும்
பற்றி நன்கறிபவன்.
[2:283]
இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்)
எழுதுபவனை நீங்கள்
பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு
பதிலாக ஏதேனும்
ஒரு பொருளை கடன்
கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக்
கொள்ளலாம். உங்களில்
ஒருவர் மற்றவரை
நம்பி (இவ்வாறு
ஒரு பொருளைக் காப்பாக
வைத்தால்,) யாரிடத்தில்
அமானிதம் வைக்கப்ட்டதோ
அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக்
கொடுத்துவிட வேண்டும்;. அவன் தன்
இறைவனாகிய அல்லாஹ்வை
அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள்
சாட்சியத்தை மறைக்க
வேண்டாம் - எவன்
ஒருவன் அதை மறைக்கின்றானோ
நிச்சயமாக அவனுடைய
இருதயம் பாவத்திற்குள்ளாகிறது
- இன்னும் நீங்கள்
செய்வதையெல்லாம்
அல்லாஹ் நன்கறிவான்.
[2:284]
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை
(அனைத்தும்) அல்லாஹ்வுக்கே
உரியன. இன்னும், உங்கள்
உள்ளங்களில் இருப்பதை நீங்கள்
வெளிப்படுத்தினாலும், அல்லது
அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ்
அதைப் பற்றி
உங்களைக் கணக்கு
கேட்பான் - இன்னும், தான் நாடியவரை
மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும்
செய்வான் - அல்லாஹ்
அனைத்துப் பொருட்கள்
மீதும் சக்தியுடையவன்.
[2:285]
(இறை) தூதர்.
தம் இறைவனிடமிருந்து
தமக்கு அருளப்பெற்றதை
நம்புகிறார்; (அவ்வாறே)
முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்)
யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய
மலக்குகளையும், அவனுடைய
வேதங்களையும், அவனுடைய
தூதர்களையும்
நம்புகிறார்கள். "நாம் இறை தூதர்களில்
எவர் ஒருவரையும்
பிரித்து வேற்றுமை
பாராட்டுவதில்லை
(என்றும்) இன்னும்
நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு)
நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள்
இறைவனே! உன்னிடமே
மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்)
மீளுவதும் உன்னிடமேதான்" என்று
கூறுகிறார்கள்.
[2:286]
அல்லாஹ் எந்த
ஓர் ஆத்மாவுக்கும்
அது தாங்கிக் கொள்ள
முடியாத அளவு கஷ்டத்தை
கொடுப்பதில்லை.
அது சம்பாதித்ததின்
நன்மை அதற்கே, அது சம்பாதித்த
தீமையும் அதற்கே!
(முஃமின்களே! பிரார்த்தனை
செய்யுங்கள்;) "எங்கள்
இறைவா! நாங்கள்
மறந்து போயிருப்பினும், அல்லது
நாங்கள் தவறு செய்திருப்பினும்
எங்களைக் குற்றம்
பிடிக்காதிருப்பாயாக! எங்கள்
இறைவா! எங்களுக்கு
முன் சென்றோர்
மீது சுமத்திய
சுமையை போன்று
எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக!
எங்கள் இறைவா!
எங்கள் சக்திக்கப்பாற்பட்ட
(எங்களால் தாங்க
முடியாத) சுமையை
எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக!
எங்கள் பாவங்களை நீக்கிப்
பொறுத்தருள்வாயாக!
எங்களை மன்னித்தருள்
செய்வாயாக! எங்கள்
மீது கருணை புரிவாயாக!
நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான
கூட்டத்தாரின்
மீது (நாங்கள் வெற்றியடைய)
எங்களுக்கு உதவி
செய்தருள்வாயாக!"
Al ‘Imrân
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[3:1]
அலிஃப், லாம், மீம்.
[3:2]
அவன் நித்திய
ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்.
[3:3]
(நபியே!
முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள
இந்த வேதத்தைப்
(படிப்படியாக)
அவன் தான் உம்
மீது இறக்கி வைத்தான்;. இது-இதற்கு
முன்னாலுள்ள (வேதங்களை)
உறுதிப்படுத்தும்
தவ்ராத்தையும்
இன்ஜீலையும் அவனே இறக்கி
வைத்தான்.
[3:4]
இதற்கு முன்னால்
மனிதர்களுக்கு நேர்வழி
காட்டுவதற்காக
(நன்மை, தீமை இவற்றைப்
பிரித்தறிவிக்கும்
ஃபுர்க்கா(ன் என்னும்
குர்ஆ)னையும் இறக்கி
வைத்தான். ஆகவே, எவர் அல்லாஹ்வின்
வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு
நிச்சயமாகக் கடும்
தண்டனையுண்டு.
அல்லாஹ் யாவரையும்
மிகைத்தோனாகவும், (தீயோரைப்)
பழி வாங்குபவனாகவும்
இருக்கின்றான்.
[3:5]
வானத்திலோ, பூமியிலோ
உள்ள எப்பொருளும்
நிச்சயமாக அல்லாஹ்வுக்கு
மறைந்திருக்கவில்லை.
[3:6]
அவன் தான் கர்ப்பக்
கோளறைகளில் தான் நாடியபடி
உங்களை உருவாக்குகின்றான்;. அவனைத்
தவிர வணக்கத்திற்குரிய
நாயன் வேறில்லை.
அவன் யாவரையும்
மிகைத்தோனாகவும், விவேகம்
மிக்கோனாகவும் இருக்கின்றான்.
[3:7]
அவன்தான் (இவ்)
வேதத்தை உம்மீது
இறக்கினான். இதில்
விளக்கமான வசனங்களும்
இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின்
அடிப்படையாகும்.
மற்றவை (பல அந்தரங்கங்களைக்
கொண்ட) முதஷாபிஹாத் (என்னும்
ஆயத்துகள்) ஆகும்.
எனினும் எவர்களுடைய
உள்ளங்களில் வழிகேடு
இருக்கிறதோ அவர்கள்
குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக
முதஷாபிஹ் வசனங்களின்
விளக்கத்தைத்
தேடி அதனைப்
பின்பற்றுகின்றனர்.
அல்லாஹ்வைத் தவிர
வேறு எவரும் அதன்
உண்மையான விளக்கத்தை
அறியமாட்டார்கள்.
கல்வியில் உறுதிப்பாடு
உடையவர்கள் அவை
அனைத்தும் எங்கள்
இறைவனிடமிருந்து
வந்தவைதான். நாங்கள்
அதை நம்பிக்கை
கொள்கிறோம், என்று அவர்கள்
கூறுவார்கள். அறிவுடையோரைத்
தவிர மற்றவர்கள்
இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.
[3:8]
எங்கள் இறைவனே!
நீ எங்களுக்கு நேர் வழியைக்
காட்டியபின் எங்கள்
இதயங்களை (அதிலிருந்து)
தவறுமாறு செய்து விடாதே!
இன்னும் நீ உன்
புறத்திலிருந்து
எங்களுக்கு (ரஹ்மத்
என்னும்) நல்லருளை அளிப்பாயாக!
நிச்சயமாக நீயே
பெருங் கொடையாளியாவாய்!
(என்று அவர்கள்
பிரார்த்தனை செய்வார்கள்.)
[3:9]
எங்கள் இறைவா!
நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம்
எந்த சந்தேகமுமில்லாத
ஒரு நாளில் ஒன்று
சேர்ப்பவனாக இருக்கின்றாய்.
நிச்சயமாக அல்லாஹ்
வாக்குறுதி மீற
மாட்டான் (என்றும்
அவர்கள் பிரார்த்திப்பார்கள்).
[3:10]
நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய
செல்வங்களும், குழந்தைகளும்
அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து
எதையும் நிச்சயமாக
தடுக்கமாட்டாது.
இன்னும் அவர்கள்தாம்
(நரக) நெருப்பின்
எரிபொருள்களாக இருக்கின்றனர்.
[3:11]
(இவர்களுடைய
நிலை) ஃபிர்அவ்னின்
கூட்டத்தாரையும், இன்னும்
அவர்களுக்கு முன்னால்
இருந்தோரையும் போன்றே
இருக்கிறது. அவர்கள்
நம் அத்தாட்சிகளைப்
பொய்யாக்கினர்;. ஆகவே அவர்களை, அவர்களுடைய
பாவங்களின் காரணமாகக்
(கடுந்தண்டனையில்)
அல்லாஹ் பிடித்துக்
கொண்டான் - அல்லாஹ்
வேதனை கொடுப்பதில்
மிகக் கடுமையானவன்.
[3:12]
நிராகரிப்போரிடம்
(நபியே!) நீர் கூறுவீராக
[3:13]
(பத்ரு
களத்தில்) சந்தித்த
இரு சேனைகளிலும்
உங்களுக்கு ஓர்
அத்தாட்சி நிச்சயமாக
உள்ளது. ஒரு சேனை
அல்லாஹ்வின் பாதையில்
போரிட்டது. பிறிதொன்று
காஃபிர்களாக இருந்தது.
நிராகரிப்போர் அல்லாஹ்வின்
பாதையில் போரிடுவோரைத்
தங்களைப்போல்
இரு மடங்காகத்
தம் கண்களால் கண்டனர்;. இன்னும், அல்லாஹ்
தான் நாடியவர்களுக்குத்
தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்;. நிச்சயமாக, (அகப்)
பார்வையுடையோருக்கு
இதில் திடனாக ஒரு படிப்பினை
இருக்கிறது.
[3:14]
பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான
பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்;ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை
போன்ற) கால் நடைகள், சாகுபடி
நிலங்கள் ஆகியவற்றின்
மீதுள்ள இச்சை
மனிதர்களுக்கு
அழகாக்கப்பட்டிருக்கிறது.
இவை(யெல்லாம் நிலையற்ற)
உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்;. அல்லாஹ்விடத்திலோ
அழகான தங்குமிடம் உண்டு.
[3:15]
(நபியே!)
நீர் கூறும்; "அவற்றை
விட மேலானவை பற்றிய
செய்தியை நான்
உங்களுக்குச்
சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி
- உடையவர்களுக்கு, அவர்களுடைய
இறைவனிடத்தில்
சுவனபதிகள் உண்டு. அவற்றின்
கீழ் நீரோடைகள்
ஓடிக்கொண்டிருக்கின்றன.
அவர்கள் அங்கு
என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு
அவர்களுக்குத்)
தூய துணைகள் உண்டு.
இன்னும் அல்லாஹ்வின் திருப்
பொருத்தமும் உண்டு.
அல்லாஹ் தன் அடியார்களை
உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.
[3:16]
இத்தகையோர் (தம்
இறைவனிடம்)
[3:17]
(இன்னும்
அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹவுக்கு
முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன்
பாதையில்) தான
தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி)
ஸஹர் நேரத்தில்
(வணங்கி, நாயனிடம்)
மன்னிப்புக் கோருவோராகவும்
இருப்பர்.
[3:18]
அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக
உள்ள நிலையில்
அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன்
யாருமில்லை என்று
சாட்சி கூறுகிறான்.
மேலும் மலக்குகளும்
அறிவுடையோரும்
(இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.)
அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன்
யாருமில்லை அவன்
மிகைத்தவன், ஞானமிக்கவன்.
[3:19]
நிச்சயமாக (தீனுல்)
இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில்
(ஒப்புக்கொள்ளப்பட்ட)
மார்க்கமாகும்;. வேதம் கொடுக்கப்பட்டவர்கள்
(இதுதான் உண்மையான
மார்க்கம் என்னும்)
அறிவு அவர்களுக்குக் கிடைத்த
பின்னரும் தம்மிடையேயுள்ள
பொறாமையின் காரணமாக
(இதற்கு) மாறுபட்டனர்;. எவர் அல்லாஹ்வின்
வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக
அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத்
துரிதமாக முடிப்பான்.
[3:20]
(இதற்கு
பின்னும்) அவர்கள் உம்மிடம்
தர்க்கம் செய்தால்
(நபியே!) நீர் கூறுவீராக "நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும்
வழிப்பட்டிருக்கின்றேன்; என்னைப்
பின்பற்றியோரும்
(அவ்வாறே வழிப்பட்டிருக்கின்றனர்.)" தவிர, வேதம்
கொடுக்கப்பட்டோரிடமும், பாமர மக்களிடமும்; "நீங்களும்
(அவ்வாறே) வழிப்பட்டீர்களா?" என்று
கேளும்;. அவர்களும்
(அவ்வாறே) முற்றிலும்
வழிப்பட்டால்
நிச்சயமாக அவர்கள்
நேரான பாதையை அடைந்து
விட்டார்கள்;. ஆனால்
அவர்கள் புறக்கணித்து
விடுவார்களாயின்
(நீர் கவலைப்பட
வேண்டாம்,) அறிவிப்பதுதான்
உம் மீது கடமையாகும்; மேலும், அல்லாஹ்
தன் அடியார்களை
உற்றுக்கவனிப்பவனாகவே
இருக்கின்றான்.
[3:21]
நிச்சயமாக எவர்
அல்லாஹ்வின் வசனங்களை
நிராகரித்துக்
கொண்டும் நீதமின்றி
நபிமார்களைக்
கொலை செய்து கொண்டும், மனிதர்களிடத்தில்
நீதமாக நடக்கவேண்டும்
என்று ஏவுவோரையும்
கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ
அவர்களுக்கு நோவினை
மிக்க வேதனை உண்டு
என்று (நபியே!) நீர் நன்மாராயங்
கூறுவீராக!
[3:22]
அவர்கள் புரிந்த
செயல்கள் இம்மையிலும்
மறுமையிலும் (பலனற்றவையாக)
அழிந்து விட்டன.
இன்னும் அவர்களுக்கு உதவியாளர்கள்
எவருமிலர்.
[3:23]
வேதத்தில் ஒரு
பாகம் கொடுக்கப்பட்டவர்(களான
யூதர்)களை நீர்
கவனிக்கவில்லையா? அவர்களிடையே
(ஏற்பட்ட விவகாரத்தைப்
பற்றி) அல்லாஹ்வின்
வேதத்தைக் கொண்டு
தீர்ப்பளிக்க
அவர்கள் அழைக்கப்பட்டார்கள்; ஆனால்
அவர்களில் ஒரு
பிரிவார் (இதைப்)
புறக்கணித்து
விலகிக் கொண்டனர்.
[3:24]
இதற்குக் காரணம்; எண்ணிக் கணக்கிடப்பட்ட
(சில) நாட்களே தவிர
(நரக) நெருப்பு
எப்போதைக்கும்
எங்களைத் தீண்டாது
என்று அவர்கள்
கூறிக் கொண்டிருப்பதுதான.; (இது) தவிர
அவர்கள் தம் மார்க்க(விஷய)த்தில்
பொய்யாகக் கற்பனை
செய்து கூறிவந்ததும்
அவர்களை ஏமாற்றி விட்டது.
[3:25]
சந்தேகமில்லாத
அந்த (இறுதி) நாளில்
அவர்களையெல்லாம்
நாம் ஒன்று சேர்த்து, ஒவ்வோர்
ஆத்மாவுக்கும்
அது சம்பாதித்ததற்கு
உரியதை முழுமையாகக்
கொடுக்கப்படும்போது
(அவர்களுடைய நிலை) எப்படியிருக்கும்? அவர்கள்
(தம் வினைகளுக்குரிய
பலன் பெருவதில்)
அநியாயம் செய்யப்பட
மாட்டார்கள்.
[3:26]
(நபியே!)
நீர் கூறுவீராக
[3:27]
(நாயனே!)
நீதான் இரவைப்
பகலில் புகுத்துகின்றாய்;. நீதான்
பகலை இரவிலும்
புகுத்துகின்றாய்;. மரித்ததிலிருந்து உயிருள்ளதை
நீயே வெளியாக்குகின்றாய்;. நீயே உயிருள்ளதிலிருந்து
மரித்ததையும் வெளியாக்குகின்றாய்;. மேலும், நீ நாடியோருக்குக்
கணக்கின்றிக்
கொடுக்கின்றாய்.
[3:28]
முஃமின்கள் (தங்களைப்
போன்ற) முஃமின்களையன்றி
காஃபிர்களைத்
தம் உற்ற துணைவர்களாக
எடுத்துக்கொள்ள
வேண்டாம்;. அவர்களிடமிருந்து
தங்களைப் பாதுகாத்துக்
கொள்வதற்காக அன்றி
(உங்களில்) எவரேனும் அப்படிச்
செய்தால், (அவருக்கு)
அல்லாஹ்விடத்தில்
எவ்விஷயத்திலும்
சம்பந்தம் இல்லை. இன்னும், அல்லாஹ்
தன்னைப் பற்றி
உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்)
மீள வேண்டியதிருக்கிறது.
[3:29]
(நபியே!)
நீர் கூறும்; "உங்கள்
உள்ளத்திலுள்ளதை
நீங்கள் மறைத்தாலும், அல்லது
அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும்
அதை அல்லாஹ் நன்கறிகின்றான்;. இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில்
உள்ளதையும் அவன்
நன்கறிகின்றான்;. அல்லாஹ்
அனைத்துப் பொருட்கள்
மீதும் ஆற்றலுடையவன்
ஆவான்."
[3:30]
ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த
தீமைகளும் அந்த(த்
தீர்ப்பு) நாளில் தன்முன்கொண்டு
வரப்பட்டதும், அது தான்
செய்த தீமைக்கும்
தனக்கும் இடையே
வெகு தூரம்
இருக்க வேண்டுமே
என்று விரும்பும்;. அல்லாஹ்
தன்னைப்பற்றி
நினைவு கூறுமாறு உங்களை
எச்சரிக்கின்றான்;. இன்னும்
அல்லாஹ் தன் அடியார்கள்
மீது கருணை உடையோனாக இருக்கின்றான்.
[3:31]
(நபியே!)
நீர் கூறும்; "நீங்கள்
அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப்
பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை
நேசிப்பான்; உங்கள்
பாவங்களை உங்களுக்காக
மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க
கருணை உடையவனாகவும்
இருக்கின்றான்.
[3:32]
(நபியே!
இன்னும்) நீர்
கூறும்; "அல்லாஹ்வுக்கும்
(அவன்) தூதருக்கும்
வழிப்படுங்கள்." ஆனால்
அவர்கள் புறக்கணித்துத்
திரும்பி விடுவார்களானால்
- நிச்சயமாக அல்லாஹ்
காஃபிர்களை நேசிப்பதில்லை.
[3:33]
ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின்
சந்ததியரையும், இம்ரானின்
சந்ததியரையும்
நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை
விட மேலாக தேர்ந்தெடுத்தான்.
[3:34]
(அவர்களில்)
ஒருவர் மற்றவரின் சந்ததியாவார்
- மேலும், அல்லாஹ்
(யாவற்றையும்)
செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும்
இருக்கின்றான்.
[3:35]
இம்ரானின் மனைவி; "என் இரைவனே!
என் கர்ப்பத்திலுள்ளதை
உனக்கு முற்றிலும்
அர்ப்பணிக்க நான்
நிச்சயமாக நேர்ந்து
கொள்கிறேன்;. எனவே
(இதை) என்னிடமிருந்து
நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக
நீ யாவற்றையும்
செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்" என்று
கூறியதையும்.
[3:36]
(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக)
அவள் ஒரு பெண்
குழந்தையைப் பெற்றதும்; "என் இறைவனே!
நான் ஒரு பெண்ணையே
பெற்றிருக்கின்றேன்" எனக் கூறியதையும்
நினைவு கூறுங்கள்;. அவள் பெற்றெடுத்ததை
அல்லாஹ் நன்கறிவான்;. ஆண், பெண்ணைப்
போலல்ல. (மேலும்
அந்தத்தாய் சொன்னாள்;) "அவளுக்கு
மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்;. இன்னும்
அவளையும், அவள் சந்ததியையும்
விரட்டப்பட்ட
ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து
காப்பாற்றத் திடமாக
உன்னிடம் காவல்
தேடுகின்றேன்.
[3:37]
அவளுடைய இறைவன்
அவள் பிரார்த்தனையை
அழகிய முறையில்
ஏற்றுக் கொண்டான்;. அக்குழந்தையை
அழகாக வளர்த்திடச்
செய்தான்;. அதனை வளர்க்கும்
பொறுப்பை ஜகரிய்யா
ஏற்றுக்கொள்ளும்படி செய்தான்.
ஜகரிய்யா அவள்
இருந்த மிஹ்ராபுக்குள்
(தொழும் அறைக்குப்)
போகும் போதெல்லாம், அவளிடம்
உணவு இருப்பதைக்
கண்டார், "மர்யமே!
இ(வ்வுணவான)து உனக்கு
எங்கிருந்து வந்தது?" என்று
அவர் கேட்டார்; "இது அல்லாஹ்விடமிருந்து
கிடைத்தது - நிச்சயமாக
அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி
உணவளிக்கின்றான்" என்று
அவள்(பதில்) கூறினாள்.
[3:38]
அந்த இடத்திலேயே
ஜகரிய்யா தம் இறைவனிடம்
பிரார்த்தனை செய்தவராகக்
கூறினார்; "இறைவனே!
உன்னிடமிருந்து எனக்காக
ஒரு பரிசுத்தமான
சந்ததியைக் கொடுத்தருள்வாயாக!
நிச்சயமாக நீ பிரார்த்தனையைச்
செவிமடுத்தருள்வோனாக
இருக்கின்றாய்."
[3:39]
அவர் தம் அறையில்
நின்று தொழுது
கொண்டிருந்தபோது, மலக்குகள்
அவரை சப்தமாக அழைத்து "நிச்சயமாக அல்லாஹ்
யஹ்யா (எனும் பெயருள்ள
மகவு குறித்து)
நன்மாராயங் கூறுகின்றான்;. அவர் அல்லாஹ்விடமிருந்து
ஒரு வார்த்தையை
மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க
நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே
நபியாகவும் இருப்பார்" எனக் கூறினர்.
[3:40]
அவர் கூறினார்; "என் இறைவனே!
எனக்கு எப்படி
மகன் ஒருவன் உண்டாக
முடியும்? எனக்கு
வயது அதிகமாகி (முதுமை
வந்து) விட்டது.
என் மனைவியும்
மலடாக இருக்கின்றாள்;" அதற்கு (இறைவன்), "அவ்வாறே
நடக்கும்;, அல்லாஹ்
தான் நாடியதைச்
செய்து முடிக்கின்றான்" என்று
கூறினான்.
[3:41]
என் இறைவனே! (இதற்கான)
ஓர் அறிகுறியை
எனக்குக் கொடுத்தருள்வாயாக!
என்று (ஜகரிய்யா)
கேட்டார். அதற்கு (இறைவன்), "உமக்கு
அறிகுறியாவது, மூன்று
நாட்களுக்குச்
சைகைகள் மூலமாக அன்றி
நீர் மக்களிடம்
பேசமாட்டீர்! நீர்
உம் இறைவனை அதிகமதிகம்
நினைவு கூர்ந்து, அவனைக்
காலையிலும் மாலையிலும்
போற்றித் துதிப்பீராக!" என்று
கூறினான்.
[3:42]
(நபியே!
மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே!
நிச்சயமாக அல்லாஹ்
உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்;. உம்மைத்
தூய்மையாகவும்
ஆக்கியிருக்கிறான்; இன்னும்
உலகத்திலுள்ள
பெண்கள் யாவரையும்
விட (மேன்மையாக)
உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்" (என்றும்).
[3:43]
மர்யமே! உம் இறைவனுக்கு
ஸுஜுது செய்தும், ருகூஃ
செய்வோருடன் ருகூஃ
செய்தும் வணக்கம்
செய்வீராக (என்றும்) கூறினர்.
[3:44]
(நபியே!)
இவை(யெல்லாம்) மறைவானவற்றில்
நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை
நாம் உமக்கு வஹீ
மூலம் அறிவிக்கின்றோம்;. மேலும், மர்யம்
யார் பொருப்பில்
இருக்க வேண்டுமென்பதைப்
பற்றி (குறி பார்த்தறிய)
தங்கள் எழுது கோல்களை
அவர்கள் எறிந்த
போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
(இதைப்பற்றி) அவர்கள்
விவாதித்த போதும்
நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
[3:45]
மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே!
நிச்சயமாக அல்லாஹ்
தன்னிடமிருந்து
வரும் ஒரு சொல்லைக்
கொண்டு உமக்கு
(ஒரு மகவு வரவிருப்பது
பற்றி) நன்மாராயங்
கூறுகிறான். அதன்
பெயர் மஸீஹ்;. மர்யமின்
மகன் ஈஸா என்பதாகும்.
அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும்
(இறைவனுக்கு) நெருங்கி
இருப்பவர்களில்
ஒருவராகவும் இருப்பார்;.
[3:46]
மேலும், அவர்
(குழந்தையாகத்) தொட்டிலில்
இருக்கும்போதும், (பால்யம்
தாண்டி) முதிர்ச்சியடைந்த
பருவத்திலும் அவர் மக்களுடன்
பேசுவார்; இன்னும்
(நல்லொழுக்கமுடைய)
சான்றோர்களில்
ஒருவராகவும் அவர் இருப்பார்.
[3:47]
(அச்சமயம்
மர்யம்) கூறினார்; "என் இறைவனே!
என்னை ஒரு மனிதனும்
தொடாதிருக்கும்போது
எனக்கு எவ்வாறு
ஒரு மகன் உண்டாக
முடியும்?" (அதற்கு)
அவன் கூறினான்; "அப்படித்தான் அல்லாஹ்
தான் நாடியதைப்
படைக்கிறான். அவன்
ஒரு காரியத்தைத்
தீர்மானித்தால், அவன் அதனிடம்
'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது
ஆகி விடுகிறது."
[3:48]
இன்னும் அவருக்கு
அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும்
கற்றுக் கொடுப்பான்.
[3:49]
இஸ்ராயீலின்
சந்ததியனருக்குத் தூதராகவும்
(அவரை ஆக்குவான்; இவ்வாறு
அவர் ஆகியதும்
இஸ்ரவேலர்களிடம்
அவர்;) "நான் உங்கள்
இறைவனிடமிருந்து
ஓர் அத்தாட்சியுடன்
நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக
களிமண்ணால் ஒரு
பறவையின் உருவத்தை
உண்டாக்கி நான்
அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின்
அனுமதியைக் கொண்டு
(உயிருடைய) பறவையாகிவிடும்.
பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும்
குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக்
கொண்டு இறந்தோரையும்
உயிர்ப்பிப்பேன்;. நீங்கள்
உண்பவற்றையும், நீங்கள்
உங்கள் வீடுகளில்
சேகரம் செய்து
வைப்பவற்றையும்
பற்றி நான் உங்களுக்கு எடுத்துக்
கூறுவேன். நீங்கள்
முஃமின்கள் (நம்பிக்கையாளர்)
ஆக இருந்தால் நிச்சயமாக
இவற்றில் உங்களுக்குத்
திடமான அத்தாட்சி
இருக்கிறது" (என்று கூறினார்).
[3:50]
எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை
மெய்பிக்கவும், உங்களுக்கு
விலக்கி வைக்கப்பட்டவற்றில்
சிலவற்றை உங்களுக்கு
அனுமதிக்கவும், உங்கள்
இறைவனிடமிருந்து
(இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம்
நான் கொண்டு வந்திருக்கிறேன்;, ஆகவே நீங்கள்
அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப்
பின் பற்றுங்கள்.
[3:51]
நிச்சயமாக அல்லாஹ்வே
என்னுடைய இறைவனும், உங்களுடைய
இறைவனும் ஆவான்.
ஆகவே அவனையே வணங்குங்கள்.
இதுவே (ஸிராத்துல்
முஸ்தகீம் என்னும்)
நேரான விழியாகும்.
[3:52]
அவர்களில் குஃப்ரு
இருப்பதை (அதாவது
அவர்களில் ஒரு
சாரார் தம்மை நிராகரிப்பதை)
ஈஸா உணர்ந்த போது, "அல்லாஹ்வின்
பாதையில் எனக்கு
உதவி செய்பவர்கள்
யார்?" என்று அவர் கேட்டார்; (அதற்கு
அவருடைய சிஷ்யர்களான)
ஹவாரிய்யூன்; "நாங்கள் அல்லாஹ்வுக்காக
(உங்கள்) உதவியாளர்களாக
இருக்கிறோம், நிச்சயமாக
நாங்கள் அல்லாஹ்வின்
மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக
நாங்கள் (அவனுக்கு
முற்றிலும் வழிப்பட்ட)
முஸ்லீம்களாக
இருக்கின்றோம், என்று
நீங்கள் சாட்சி
சொல்லுங்கள்" எனக் கூறினர்.
[3:53]
எங்கள் இறைவனே!
நீ அருளிய (வேதத்)தை
நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய)
இத்தூதரை நாங்கள்
பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை
(சத்தியத்திற்கு)
சாட்சி சொல்வோருடன்
சேர்த்து எழுதுவாயாக!
(என்று சிஷ்யர்களான
ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.)
[3:54]
(ஈஸாவை
நிராகரித்தோர்
அவரைக் கொல்லத்)
திட்டமிட்டுச்
சதி செய்தார்கள்.
அல்லாஹ்வும் சதி
செய்தான்;. தவிர அல்லாஹ்
சதி செய்பவர்களில்
மிகச் சிறந்தவன்
ஆவான்.
[3:55]
ஈஸாவே! நிச்சயமாக
நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும்
என்னளவில் உம்மை
உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய
(பொய்களில் நின்றும்)
உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப்
பின்பற்றுவோரை
கியாம நாள் வரை
நிராகரிப்போருக்கு
மேலாகவும் வைப்பேன்;. பின்னர்
உங்களுடைய திரும்புதல்
என்னிடமே இருக்கிறது.
(அப்போது) நீங்கள்
தர்க்கம் செய்து
கொண்டிருந்தது
பற்றி நான் உங்களிடையே
தீர்ப்பளிப்பேன்
என்று அல்லாஹ் கூறியதை
(நபியே! நினைவு
கூர்வீராக)!
[3:56]
எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும்
கடினமான வேதனையைக்கொண்டு
வேதனை செய்வேன்;. அவர்களுக்கு
உதவி செய்வோர்
எவரும் இருக்க
மாட்டார்கள்.
[3:57]
ஆனால், எவர் ஈமான்
கொண்டு நற்கருமங்களும்
செய்கிறார்களோ, அவர்களுக்கு
நற்கூலிகளை (அல்லாஹ்)
முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ்
அக்கிரமம் செய்வோரை
நேசிக்கமாட்டான்.
[3:58]
(நபியே!)
நாம் உம் மீது ஓதிக்காட்டிய
இவை (நற்சான்றுகளைக்
கொண்ட) இறை வசனங்களாகவும்;, ஞானம்
நிரம்பிய நற்செய்தியாகவும்
இருக்கின்றன.
[3:59]
அல்லாஹ்விடத்தில்
நிச்சயமாக ஈஸாவின்
உதாரணம் ஆதமின்
உதாரணம் போன்றதே.
அவன் அவரை மண்ணிலிருந்து
படைத்துப்பின் "குன்" (ஆகுக)
எனக் கூறினான்;. அவர்
(மனிதர்) ஆகிவிட்டார்.
[3:60]
(நபியே!
ஈஸாவைப் பற்றி)
உம் இறைவனிடமிருந்து
வந்ததே உண்மையாகும்;. எனவே
(இதைக் குறித்து)
ஐயப்படுவோரில் நீரும்
ஒருவராகிடாதீர்.
[3:61]
(நபியே!)
இதுபற்றிய முழு விபரமும்
உமக்கு வந்து சேர்ந்த
பின்னரும் எவரேனும்
ஒருவர் உம்மிடம்
இதைக் குறித்து
தர்க்கம் செய்தால்; "வாருங்கள்!
எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள்
பெண்களையும், உங்கள்
பெண்களையும்; எங்களையும் உங்களையும்
அழைத்து (ஒன்று
திரட்டி வைத்துக்
கொண்டு) 'பொய்யர்கள்
மீது அல்லாஹ்வின்
சாபம் உண்டாகட்டும்' என்று
நாம் பிரார்த்திப்போம்!" என நீர் கூறும்.
[3:62]
நிச்சயமாக இதுதான்
உண்மையான வரலாறு.
அல்லாஹ்வைத் தவிர
வேறு நாயன் இல்லை.
நிச்சயமாக அல்லாஹ்
- அவன் யாவரையும் மிகைத்தோன்; மிக்க
ஞானமுடையோன்.
[3:63]
அவர்கள் புறக்கணித்தால்
- திடமாக அல்லாஹ்
(இவ்வாறு) குழப்பம்
செய்வோரை நன்கறிந்தவனாகவே
இருக்கின்றான்.
[3:64]
(நபியே!
அவர்களிடம்) "வேதத்தையுடையோரே!
நமக்கும் உங்களுக்குமிடையே
(இசைவான) ஒரு பொது
விஷயத்தின் பக்கம்
வாருங்கள்; (அதாவது)
நாம் அல்லாஹ்வைத்
தவிர வேறெவரையும்
வணங்க மாட்டோம்;. அவனுக்கு
எவரையும் இணைவைக்க
மாட்டோம்; அல்லாஹ்வை
விட்டு நம்மில்
சிலர் சிலரைக் கடவுளர்களாக
எடுத்துக் கொள்ள
மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே!
இதன் பிறகும்)
அவர்கள் புறக்கணித்து
விட்டால்; "நிச்சயமாக
நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு
நீங்கள் சாட்சியாக
இருங்கள்!" என்று
நீங்கள் கூறிவிடுங்கள்.
[3:65]
வேதத்தையுடையோரே!
இப்ராஹீமைப் பற்றி
(அவர் யூதரா, கிறிஸ்தவரா
என்று வீனாக) ஏன்
தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப்
பின்னரேயன்றி
தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே
(இதைக்கூட) நீங்கள்
விளங்கிக் கொள்ளவில்லையா?
[3:66]
உங்களுக்குச்
சிறிது ஞானம் இருந்த
விஷயங்களில் (இதுவரை)
நீங்கள் தர்க்கம்
செய்து கொண்டிருந்தீர்கள்; (அப்படியிருக்க)
உங்களுக்குச்
சிறிதுகூட ஞானம்
இல்லாத விஷயங்களில்
ஏன் விவாதம் செய்ய
முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான்
அறிவான்; நீங்கள்
அறியமாட்டீர்கள்.
[3:67]
இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ
இருக்கவில்லை.
ஆனால் அவர் (அல்லாஹ்விடம்)
முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான
முஸ்லிமாக இருந்தார்;. அவர் முஷ்ரிக்குகளில்
(இணைவைப்போரில்)
ஒருவராக இருக்கவில்லை.
[3:68]
நிச்சயமாக மனிதர்களி;ல் இப்ராஹீமுக்கு
மிகவும் நெருங்கியவர்கள், அவரைப்
பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின்
மீதும், இந்த நபியின்
மீதும்) ஈமான்
கொண்டோருமே ஆவார்;. மேலும் அல்லாஹ்
முஃமின்களின்
பாதுகாவலனாக இருக்கின்றான்.
[3:69]
வேதத்தையுடையோரில்
ஒரு சாரார் உங்களை
வழி கெடுக்க விரும்புகிறார்கள்;. ஆனால்
அவர்கள் தங்களையே
அன்றி வழி கெடுக்க
முடியாது. எனினும், (இதை) அவர்கள்
உணர்கிறார்களில்லை.
[3:70]
வேதத்தையுடையவர்களே!
நீங்கள் தெரிந்து
கொண்டே அல்லாஹ்வின்
வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள்?
[3:71]
வேதத்தையுடையோரே!
சத்தியத்தை அசத்தியத்துடன்
ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும்
நீங்கள் அறிந்து
கொண்டே ஏன் உண்மையை
மறைக்கிறீர்கள்?
[3:72]
வேதத்தையுடையோரில்
ஒரு சாரார் (தம் இனத்தாரிடம்); "ஈமான்
கொண்டோர் மீது
இறக்கப்பட்ட (வேதத்)தைக்
காலையில் நம்பி, மாலையில்
நிராகரித்து விடுங்கள்;. இதனால்
(ஈமான் கொண்டுள்ள)
அவர்களும் ஒரு வேளை
(அதை விட்டுத்)
திரும்பி விடக்கூடும்" என்று
கூறுகின்றனர்.
[3:73]
உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவோரைத்
தவிர (வேறு எவரையும்)
நம்பாதீர்கள்
(என்றும் கூறுகின்றனர். நபியே!)
நீர் கூறும்; நிச்சயமாக
நேர்வழியென்பது
அல்லாஹ்வின் வழியே
ஆகும்;. உங்களுக்கு
(வேதம்) கொடுக்கப்பட்டதுபோல்
இன்னொருவருக்கும்
கொடுக்கப்படுவதா அல்லது
அவர்கள் உங்கள்
இறைவன் முன் உங்களை
மிகைத்து விடுவதா?" (என்று அவர்கள்
தங்களுக்குள்
பேசிக் கொள்கிறார்கள்.)
நிச்சயமாக அருட்கொடையெல்லாம் அல்லாஹ்வின்
கையிலேயே உள்ளது.
அதை அவன் நாடியோருக்கு
வழங்குகின்றான்; அல்லாஹ் விசாலமான
(கொடையளிப்பவன்; யாவற்றையும்)
நன்கறிபவன் என்று
கூறுவீராக.
[3:74]
அவன் தன் ரஹ்மத்தை(அருளை)க் கொண்டு
தான் நாடியோரைச்
சொந்தமாக்கிக்
கொள்கின்றான்;. இன்னும்
அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.
[3:75]
(நபியே!)
வேதத்தையுடையோரில் சிலர்
இருக்கிறார்கள்;. அவர்களிடம்
நீர் ஒரு (பொற்)
குவியலை ஒப்படைத்தாலும், அவர்கள்
அதை (ஒரு குறைவும்
இல்லாமல், கேட்கும்போது)
உம்மிடம் திருப்பிக் கொடுத்து
விடுவார்கள்;. அவர்களில்
இன்னும் சிலர்
இருக்கிறார்கள்.
அவர்களிடம் ஒரு (காசை)
தீனாரை ஒப்படைத்தாலும், நீர் அவர்களிடம்
தொடர்ந்து நின்று
கேட்டாலொழிய, அவர்கள்
அதை உமக்குத் திருப்பிக்
கொடுக்கமாட்டார்கள்.
அதற்குக் காரணம், 'பாமரர்களிடம்
(இருந்து நாம்
எதைக் கைப்பற்றிக்
கொண்டாலும்) நம்மை
குற்றம் பிடிக்க
(அவர்களுக்கு)
வழியில்லை' என்று
அவர்கள் கூறுவதுதான்;. மேலும், அவர்கள் அறிந்து
கொண்டே அல்லாஹ்வின்
பேரில் பொய் கூறுகிறார்கள்.
[3:76]
அப்படியல்ல! யார்
தம் வாக்குறுதியை
நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு)
அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள்
தாம் குற்றம் பிடிக்கப்பட
மாட்டார்கள்).
நிச்சயமாக அல்லாஹ்
(தனக்கு) அஞ்சி
நடப்போரை நேசிக்கின்றான்.
[3:77]
யார் அல்லாஹ்விடத்தில்
செய்த வாக்குறுதியையும்
தம் சத்தியப்பிரமாணங்களையும்
அற்ப விலைக்கு
விற்கிறார்களோ, அவர்களுக்கு
நிச்சயமாக மறுமையில்
யாதொரு நற்பாக்கியமும்
இல்லை. அன்றியும், அல்லாஹ்
அவர்களுடன் பேச
மாட்டான்;. இன்னும்
இறுதி நாளில் அவன்
அவர்களை (கருணையுடன்)
பார்க்கவும் மாட்டான்.
அவர்களைப்(பாவத்தைவிட்டுப்) பரிசுத்தமாக்கவும்
மாட்டான்;. மேலும்
அவர்களுக்கு நோவினைமிக்க
வேதனையும் உண்டு.
[3:78]
நிச்சயமாக அவர்களில்
ஒரு பிரிவார்
இருக்கின்றார்கள்
- அவர்கள் வேதத்தை
ஓதும்போதுத் தங்கள்
நாவுகளைச் சாய்த்து
ஓதுகிறார்கள்
- (அதனால் உண்டாகும்
மாற்றங்களையும்)
வேதத்தின் ஒரு பகுதிதானென்று
நீங்கள் எண்ணிக்
கொள்வதற்காக. ஆனால்
அது வேதத்தில்
உள்ளதல்ல "அது அல்லாஹ்விடம்
இருந்து (வந்தது)" என்றும்
அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால்
அது அல்லாஹ்விடமிருந்து
(வந்ததும்) அல்ல.
இன்னும் அறிந்து
கொண்டே அவர்கள் அல்லாஹ்வின்
மீது பொய் கூறுகின்றார்கள்.
[3:79]
ஒரு மனிதருக்கு
அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும், நபிப்
பட்டத்தையும்
கொடுக்க, பின்னர்
அவர் "அல்லாஹ்வை
விட்டு எனக்கு
அடியார்களாகி
விடுங்கள்" என்று
(பிற) மனிதர்களிடம்
கூற இயலாது. ஆனால்
அவர் (பிற மனிதரிடம்) "நீங்கள்
வேதத்தைக் கற்றுக்
கொடுத்துக் கொண்டும், அ(வ்வேதத்)தை
நீங்கள் ஓதிக்
கொண்டும் இருப்பதனால் ரப்பானீ
(இறைவனை வணங்கி
அவனையே சார்ந்திருப்போர்)களாகி
விடுங்கள்" (என்று தான் சொல்லுவார்).
[3:80]
மேலும் அவர், "மலக்குகளையும், நபிமார்களையும்
(வணக்கத்திற்குரிய
இரட்சகர்களாக)
ரப்புகளாக எடுத்துக்
கொள்ளுங்கள்" என்றும்
உங்களுக்குக்
கட்டளையிடமாட்டார்
- நீங்கள் முஸ்லிம்களாக
(அல்லாஹ்விடமே
முற்றிலும் சரணடைந்தவர்கள்)
ஆகிவிட்ட பின்னர் (நீங்கள்
அவனை) நிராகரிப்போராகி
விடுங்கள் என்று
அவர் உங்களுக்குக் கட்டளையிடுவாரா?.
[3:81]
(நினைவு
கூருங்கள்;) நபிமார்(கள்
மூலமாக அல்லாஹ்
உங்கள் முன்னோர்)களிடம்
உறுதிமொழி வாங்கியபோது, "நான் உங்களுக்கு
வேதத்தையும், ஞானத்தையும்
கொடுத்திருக்கின்றேன்.
பின்னர் உங்களிடம்
இருப்பதை மெய்ப்பிக்கும்
ரஸூல் (இறைதூதர்)
வருவார். நீங்கள்
அவர்மீது திடமாக
ஈமான் கொண்டு அவருக்கு
உறுதியாக உதவி
செய்வீர்களாக" (எனக் கூறினான்). "நீங்கள்
(இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய
இந்த உடன்படிக்கைக்குக்
கட்டுப்படுகிறீர்களா?" என்றும்
கேட்டான்; "நாங்கள் (அதனை ஏற்று)
உறுதிப்படுத்துகிறோம்" என்று
கூறினார்கள்; (அதற்கு
அல்லாஹ்) "நீங்கள்
சாட்சியாக இருங்கள்;. நானும்
உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக)
இருக்கிறேன்" என்று
கூறினான்.
[3:82]
எனவே, இதன் பின்னரும்
எவரேனும் புறக்கணித்து
விடுவார்களானால்
நிச்சயமாக அவர்கள்
தீயவர்கள் தாம்.
[3:83]
அல்லாஹ்வின்
மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா)
அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும்
பூமியிலும் உள்ள (அனைத்துப்
படைப்புகளும்)
விரும்பியோ அல்லது
வெறுத்தோ அவனுக்கே
சரணடைகின்றன. மேலும்
(அவை எல்லாம்) அவனிடமே
மீண்டும் கொண்டு
வரப்படும்.
[3:84]
அல்லாஹ்வையும், எங்கள்
மீது அருளப்பட்ட
(வேதத்)தையும், இன்னும்
இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின்
சந்ததியர் ஆகியோர்
மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும்
மூஸா, ஈஸா இன்னும்
மற்ற நபிமார்களுக்கு
அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும்
நாங்கள் விசவாசங்
கொள்கிறோம். அவர்களில்
எவரொருவரையும் பிரித்து
வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள்
அவனுக்கே (முற்றிலும்
சரணடையும்) முஸ்லிம்கள்
ஆவோம் என்று (நபியே!)
நீர் கூறுவீராக.
[3:85]
இன்னும் இஸ்லாம்
அல்லாத (வேறு) மார்க்கத்தை
எவரேனும் விரும்பினால்
(அது) ஒருபோதும்
அவரிடமிருந்து
ஒப்புக் கொள்ளப்பட
மாட்டாது. மேலும்
அ(த்தகைய)வர் மறுமை
நாளில் நஷ்டமடைந்தோரில்
தான் இருப்பார்.
[3:86]
அவர்களிடம் தெளிவான
ஆதாரங்கள் வந்து
நிச்சயமாக (இந்தத்)
தூதர் உண்மையாளர்தான்
என்று சாட்சியங்
கூறி ஈமான் கொண்ட
பிறகு நிராகரித்து
விட்டார்களே, அந்தக்
கூட்டத்திற்கு
அல்லாஹ் எப்படி நேர்வழி
காட்டுவான்! அல்லாஹ்
அநியாயக் கார கூட்டத்திற்கு
நேர்வழி காட்ட மாட்டான்.
[3:87]
நிச்சயமாக அவர்கள்
மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள்
அனைவரின் சாபமும்
இருக்கின்றது
என்பது தான் அவர்களுக்குரிய
கூலியாகும்.
[3:88]
இ(ந்த சாபத்)திலேயே
அவர்கள் என்றென்றும்
இருப்பார்கள்;. அவர்களுடைய
வேதனை இலேசாக்கப்பட
மாட்டாது. அவர்களுக்கு
(வேதனை) தாமதப்படுத்தப்
படவும் மாட்டாது.
[3:89]
எனினும், இதன்பிறகு (இவர்களில்)
எவரேனும் (தம்
பாவங்களை உணர்ந்து)
மன்னிப்புக் கோரித்
தங்களைச் சீர்திருத்திக்
கொள்வார்களானால், (மன்னிப்புக்
கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ்
மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பருங்
கருணையுள்ளவனாகவும்
இருக்கின்றான்.
[3:90]
எவர் ஈமான் கொண்ட
பின் நிராகரித்து
மேலும் (அந்த) குஃப்ரை
அதிகமாக்கிக்
கொண்டார்களோ, நிச்சயமாக அவர்களுடைய
தவ்பா - மன்னிப்புக்கோரல்
- ஒப்புக்கொள்ளப்பட
மாட்டாது. அவர்கள்
தாம் முற்றிலும்
வழி கெட்டவர்கள்.
[3:91]
எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும்
நிலையிலேயே இறந்தும்
விட்டார்களோ, அவர்களில்
எவனிடமேனும் பூமிநிறைய
தங்கத்தை தன் மீட்சிக்கு
ஈடாக கொடுத்தாலும்
(அதனை)அவனிடமிருந்து ஒப்புக்
கொள்ளப் படமாட்டாது.
அத்தகையோருக்கு
நோவினை மிக்க வேதனை
உண்டு. இன்னும் அவர்களுக்கு
உதவி செய்வோர்
எவரும் இருக்க
மாட்டார்கள்.
[3:92]
நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து
தானம் செய்யாதவரை
நீங்கள் நன்மை
அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை
நீங்கள் செலவு
செய்தாலும், நிச்சயமாக
அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.