← Back to Q&AQuestion 108 of 128

ஒரு முஸ்லிம் தினமும் ஜவேளை தொழுவது ஏன்?

Worship
Reading tools
Text size
100%
LanguageAvailable in 15 languages
Detailed answerOriginal content preserved

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவன் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைகளை பின்பற்றுபவன் என்ற வகையில் தனது தூதரும் தீர்க்கதரிசியுமான முஹம்மத் தொழுதது போன்று தொழுவான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "நான் எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுது கொள்ளுங்கள்". (ஆதாரம் : புஹாரி). تقدم

'முஸ்லிம் தான் நாள் முழுவதும் அல்லாஹ்வுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற தீவிர விருப்பத்தால்-ஆர்வத்தால் உந்தப்பட்டிருப்பதால், தொழுகையின் மூலம், ஒரு நாளைக்கு ஐந்து முறை தனது இறைவனுடன் உறவாடுகிறான். இது எமக்கு அல்லாஹ்வுடன் தொடர்புகொள்வதற்கு அவன் வழங்கிய வழிமுறையாகும். மேலும் இதனை கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என நமக்கு கட்டளையிட்டது எமது நலனுக்காகவே'.

"(நபியே! குர் ஆனாகிய) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் ஓதுவீராக, தொழுகையும் (அல்லாஹ் விதியாக்கியவாறு) நிறைவேற்றுவீராக, நிச்சயமாக தொழுகை, (அதை நிறைவேற்றுபவரை) மானக்கேடான செயலிலிருந்தும், (மார்க்கத்தில்) மறுக்கப்பட்டதிலிருந்தும் தடுக்கும். நிச்சயமாக (தொழுகையின் மூலம்) அல்லாஹ்வை நினைவுகூர்வது (எல்லாவற்றையும் விட) மிகவும் பெரியதாகும், இன்னும், நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கு அறிகிறான்". (அன்கபூத் : 45). تقدم

நாம் மனிதர்கள் என்ற வகையில் எமது மனைவிமார்கள் மற்றும் குழந்தைகளுடன் தினமும் தொலைபேசியினூடாக பேசுவதை ஒரு போதும் நிறுத்திக்கொள்வதில்லை. காரணம் அவர்கள் மீதுள்ள அதீத இரக்கமும் இறுக்கமான தொடர்புமாகும்.

தொழுகை மானக்கேடான தவறுகளில் ஈடுபடுவதைத் தடுத்து நல்ல செயல்களைச் செய்யத் தன்னைத் தூண்டும். இவை தொழுகையின் முக்கியத்தை தெளிவாக எடுத்துகாட்டுகிறது. அதாவது ஒருவர் தன்னை படைத்த இறைவனை நினைவுகூர்ந்து அவனின் தண்டனையை பயந்து அவனின் மன்னிப்பிலும், வெகுமதியிலும் ஆசைகொள்ளும் போது இந்நிலை ஏற்படும்.

அதே போல் மனிதனின் செயற்பாடானது அகில உலக இரட்சகனுக்காக மாத்திரம் இதய சுத்தியுடன் மனத் தூய்மைபேணி செய்தல் வேண்டும். ஏனெனில் மனிதனைப் பொறுத்தவரை அவனின் பலவீனங்களின் படி எப்போதும் அவனை நினைவு கூர்வதற்கோ அல்லது எண்ணத்தைப் புதுப்பித்துக்கொள்வதற்கோ சிரமமான விடயமாகும். எனவே, அகிலங்களின இரட்சகனுடன் தொடர்பு கொள்ளவும், வழிபாடு மற்றும் செயல்ற்பாடுகளினூடாக தனது பற்றுறுதியை- விசுவாத்தை புதுப்பித்துக்கொள்ளவதற்கும் தொழுகைக்கான நேரங்கள் இருப்பது அவசியம். இந்த நேரங்களைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம், தினமும் பகல் மற்றும் இரவில் ஐந்து குறிப்பிட்ட நேரங்களாகும். அவைகளாவன (ஃபஜ்ர், லுஹ்ர், அஸ்ர்,மஃ;ரிப் மற்றும் இஷா) இவை கால சுழற்சியையும் ஒவ்வொரு தொழுகைக்குமிடையில் குறிப்பிடத்தக்க இடைவெளிகளையும் பிரதிபலிக்கிறது.

"ஆகவே, அவர்கள் (உம்மைக் குறைவுபடுத்திக்) கூறுவதைப் பற்றி நீர் பொறுமையுடன் சகித்திருப்பீராக. சூரியன் உதயமாவதற்கு முன்னரும், சூரியன் மறைவதற்கு முன்னரும், இரவு காலங்களிலும், (பகல் காலங்களிலும்) பகலின் இருமுனைகளிலும் உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்துகொண்டிருப்பீராக. (இதனால்) நீர் திருப்தி அடையலாம்". (தாஹா :130). تقدم

இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்ட சூரிய உதயத்திற்கு முன்னும் சூரியன் மறைவதற்கு முன்னரும் என்பது பஜ்ர் மற்றும் அஸ்ர் தொழுகைகளையும்

இரவு வேளைகளில் என்பது இஷாத் தொழுகையையும்

பகலின் ஓரங்களில் என்பது லுஹ்ர் மற்றும் மஃரிப் தொழுகைகளையும் குறிக்கிறது.

பகலில் நிகழும் இயற்கை மாற்றங்களை உள்ளடக்கியதும், இந்த மாற்றங்களை நிகழ்த்துவோனை நினைவுகொள்வதற்குமான ஐந்து தொழுகைகளாகும்.

واتسابPDF