← Back to Q&AQuestion 112 of 128

'முஸ்லிம் ஹஜருல் அஸ்வதை வணங்காதிருப்பின் அதனை ஏன் முத்தமிடவேண்டும்?. குறிப்பு: கறுப்புக் கல் (Black Stone, Hajarul Aswad, அரபு மொழி: الحجر الأسود‎) என்பது சவூதி அரேபியாவின் மக்கா நகரில் பெரிய பள்ளிவாசல் நடுவில் அமைந்துள்ள கஃபா எனும் கட்டடத்தின் கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கல் ஆகும். இது இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி ஆதம், ஹவ்வா ஆகியோரின் காலத்திருந்தே இஸ்லாமியர்களால் போற்றப்பட்ட சின்னமாகும். இந்தக் கல் (முஹம்மது நபியின்) பிறப்புக்கு முன்னே, இஸ்லாத்தின் ஆரம்ப காலம் முதல் போற்றப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி கறுப்புக் கல் என்பது முஹம்மது நபியினால் கிபி 605 ஆம் ஆண்டு கஃபாவின் சுவருடன் இணைத்து அமைக்கப்பட்டது. கிபி 605 இற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் பல துண்டுகளாக உடைக்கப்பட்ட இந்தக் கல் தற்போது காபாவின் ஓரத்தில் ஒரு வெள்ளி சட்டத்தினால் சாந்திடப்பட்டுள்ளது. முஹம்மது நபி வழிமுறையைப் பின்பற்றி இன்றும் முஸ்லிம் யாத்திரிகர்கள் ஹஜ் கடமையில் கஃபாவைச் சுற்றி வந்து தவாப் செய்யும் போது இக்கல்லை ஆர்வத்துடன் முத்தமிடுவார்கள். ((விகிபீடியா).

Worship
Reading tools
Text size
100%
LanguageAvailable in 15 languages
Detailed answerOriginal content preserved

உதாரணத்திற்கு தனது தந்தையிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒரு கடிதத்தின் உரையை ஒரு நபர் முத்தமிடுகிறார் என்றால் அவரை நாம் குறைகூறுவோமா? மாட்டோமல்லவா?! இதே போன்றுதான் ஹஜருல் அஸ்வத் கல்லின் நிலையும் என்பதையும் மனம் கொள்ள வேண்டும்.! ஹஜ்ஜின் அனைத்து கிரியைகளும் அல்லாஹ்வை நினைவு கூறுவதையும், அகிலங்களின் இரட்சகனுக்கு அடி பணிந்து வழிபடுதலையும் குறித்துக்காட்டுவதுடன் அதனையே இலக்காகவும் கொண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக அவர்கள் கற்களையோ, இடங்களையோ அல்லது தனி நபர்களையோ வணங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. (هذه الترجمة متكررة. ينظر : 1839) அதே வேளை வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கிடையே உள்ள அனைத்தினதும் இரட்சகனும், எல்லாவற்றையும் படைத்தவனும், அவற்றின் இறையாண்மையும் கொண்ட ஒரே கடவுளை வணங்குவதற்கு இஸ்லாம் அழைப்பு விடுக்கிறது. هذا أيضا متكرر. ينظر رقم 1840)

‘‘வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ அ(ந்த ஒரு)வனின் பக்கமே நிச்சயமாக நான் முற்றிலும் நோக்குகின்றேன். நான் (அவனுக்கு எதையும்) இணைவைப்பவன் அல்ல'' (என்று கூறினார்). (அல் அன்ஆம்: 80). تقدم

واتسابPDF