بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلذَّٰرِيَٰتِ ذَرْوًۭا ﴿1﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
1. (கடல் நீரை ஆவியாக்கிச் சிதறடிக்கும்) சூறாவளிகள் மீதும்,
Tamil Translation - Omar Sharif
காஃப். கீர்த்திமிக்க குர்ஆன் மீது சத்தியமாக! (முஹம்மத் அவர்கள், அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட உண்மையான தூதர்தான்).
Tamil Translation - Omar Sharif - Abridged Version
வேகமாக வீசக்கூடிய காற்றுகள் மீது சத்தியமாக!
فَٱلْحَٰمِلَٰتِ وِقْرًۭا ﴿2﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
2. (அந்த நீராவியை) சுமந்து செல்லும் மேகங்கள் மீதும்,
Tamil Translation - Omar Sharif
(பெரும்) சுமையை சுமக்கின்ற மேகங்கள் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharif - Abridged Version
(பெரும்) சுமையை சுமக்கின்ற மேகங்கள் மீது சத்தியமாக!
فَٱلْجَٰرِيَٰتِ يُسْرًۭا ﴿3﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
3. (பல பாகத்திற்கு அதை) எளிதாக(த் தாங்கிச்) செல்லும் மேகங்கள் மீதும்,
Tamil Translation - Omar Sharif
மென்மையாக செல்கின்ற கப்பல்கள் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharif - Abridged Version
மென்மையாக செல்கின்ற கப்பல்கள் மீது சத்தியமாக!
فَٱلْمُقَسِّمَٰتِ أَمْرًا ﴿4﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
4. அதை (பூமியின் பல பாகங்களில்) மழையாக பிரித்துவிடும் வானவர்கள் மீதும் சத்தியமாக!
Tamil Translation - Omar Sharif
(அல்லாஹ்வின்) கட்டளைகளை (அவனது படைப்புகளில்) பிரிப்பவர்கள் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharif - Abridged Version
(அல்லாஹ்வின்) கட்டளைகளை (அவனது படைப்புகளில்) பிரிப்பவர்கள் மீது சத்தியமாக!
إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٌۭ ﴿5﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
5. (செயலுக்குத் தக்க கூலி கொடுக்கப்படுமென்று) உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிச்சயமாக உண்மையானதே.
Tamil Translation - Omar Sharif
நீங்கள் வாக்களிக்கப்படுவதெல்லாம் உண்மைதான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
நீங்கள் வாக்களிக்கப்படுவதெல்லாம் உண்மைதான்.
وَإِنَّ ٱلدِّينَ لَوَٰقِعٌۭ ﴿6﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
6. நிச்சயமாக (செயல்களுக்குரிய) கூலி கொடுக்கப்பட்டே தீரும்.
Tamil Translation - Omar Sharif
நிச்சயமாக (விசாரணையும்) கூலி கொடுக்கப்படுவது(ம்) நிகழ்ந்தே தீரும்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
நிச்சயமாக (விசாரணையும்) கூலி கொடுக்கப்படுவது(ம்) நிகழ்ந்தே தீரும்.
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْحُبُكِ ﴿7﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
7. (நட்சத்திரங்களின்) அழகிய பாதைகளுடைய வானத்தின் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharif
அழகிய தோற்றமுடைய (நட்சத்திரங்கள் செல்லும் பாதைகளை உடைய) வானத்தின் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அழகிய படைப்புடைய வானத்தின் மீது சத்தியமாக!
إِنَّكُمْ لَفِى قَوْلٍۢ مُّخْتَلِفٍۢ ﴿8﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
8. நிச்சயமாக நீங்கள் (சத்தியத்திற்கு) முரணாகப் பேசுவதில்தான் நிலைத்து விட்டீர்கள்.
Tamil Translation - Omar Sharif
நிச்சயமாக நீங்கள் (இந்த குர்ஆன் விஷயத்தில் ஒருவருக்கொருவர்) மாறுபட்ட பேச்சில் (-மாறுபட்ட கருத்தைக் கூறுவதில்) இருக்கிறீர்கள்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
நிச்சயமாக நீங்கள் (இந்த குர்ஆன் விஷயத்தில் ஒருவருக்கொருவர்) மாறுபட்ட பேச்சில் (-மாறுபட்ட கருத்தைக் கூறுவதில்) இருக்கின்றனர்.
يُؤْفَكُ عَنْهُ مَنْ أُفِكَ ﴿9﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
9. (ஏற்கனவே, அல்லாஹ்வுடைய விதியின்படி) திருப்பப்பட்டவனே சத்தியத்தை விட்டும் திருப்பப்படுவான்.
Tamil Translation - Omar Sharif
திருப்பப்படுபவர் இ(ந்த தூதரை விட்டும் இந்த வேதத்)தை விட்டும் திருப்பப்படுகிறார்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
திருப்பப்படுபவர் இதை விட்டும் திருப்பப் படுகிறார்.
قُتِلَ ٱلْخَرَّٰصُونَ ﴿10﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
10. பொய் சொல்பவர்கள் அழிந்தே போவர்.
Tamil Translation - Omar Sharif
பொய்யை கற்பனை செய்பவர்கள் அழிந்து போகட்டும்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
பொய்யை கற்பனை செய்பவர்கள் அழிந்து போகட்டும்.
ٱلَّذِينَ هُمْ فِى غَمْرَةٍۢ سَاهُونَ ﴿11﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
11. அவர்கள் தங்கள் மடமையால் (மறுமையையே) மறந்துவிட்டனர்.
Tamil Translation - Omar Sharif
அவர்கள் (சுகபோக வாழ்க்கையின்) மயக்கத்தில் மறதியாளர்களாக (மறுமையை அலட்சியம் செய்தவர்களாக) இருக்கிறார்கள்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அவர்கள் (உலக) மயக்கத்தில் மறதியாளர் களாக இருக்கின்றனர்.
يَسْـَٔلُونَ أَيَّانَ يَوْمُ ٱلدِّينِ ﴿12﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
12. அவர்கள், ‘‘கூலி கொடுக்கும் நாள் எப்பொழுது வரும்?'' என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர்.
Tamil Translation - Omar Sharif
“கூலி கொடுக்கப்படும் நாள் எப்போது வரும்” என்று அவர்கள் (கேலியாக) கேட்கிறார்கள்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
கூலி கொடுக்கப்படும் நாள் எப்போது வரும் என்று அவர்கள் கேட்கின்றனர்.
يَوْمَ هُمْ عَلَى ٱلنَّارِ يُفْتَنُونَ ﴿13﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
13. அந்நாளில் அவர்கள், நெருப்பில் பொசுக்கி வேதனை செய்யப்படுவார்கள்.
Tamil Translation - Omar Sharif
அவர்கள் நெருப்பின் மீது கிடத்தப்பட்டு தண்டனை செய்யப்படுகின்ற நாளில்,
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அவர்கள் நெருப்பின் மீது கிடத்தப்பட்டு வேதனை செய்யப்படுகின்ற நாளில்...
ذُوقُوا۟ فِتْنَتَكُمْ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تَسْتَعْجِلُونَ ﴿14﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
14. (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் வேதனையை சுவைத்துப் பாருங்கள். நீங்கள் (எப்பொழுது வருமென்று) அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது இதுதான்'' (என்றும் கூறப்படும்).
Tamil Translation - Omar Sharif
உங்கள் தண்டனையை சுவையுங்கள்! இது(தான்), நீங்கள் அவசரமாகத் தேடிக்கொண்டிருந்ததாகும் (என்று கூறப்படும்).
Tamil Translation - Omar Sharif - Abridged Version
உங்கள் வேதனையை சுவையுங்கள்! இது(தான்) நீங்கள் அவசரமாகத் தேடிக் கொண்டிருந்ததாகும்.
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّٰتٍۢ وَعُيُونٍ ﴿15﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
15. நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் சொர்க்கங்களிலும், நீரருவிகளுக்கு அருகிலும் இருப்பார்கள்.
Tamil Translation - Omar Sharif
நிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள் சொர்க்கங்களில்; இன்னும், (அவற்றில் உள்ள) நீரூற்றுகளில் இருப்பார்கள்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
நிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள் சொர்க்கங்களில், (அவற்றில் உள்ள) நீரூற்றுகளில் இருப்பார்கள்.
ءَاخِذِينَ مَآ ءَاتَىٰهُمْ رَبُّهُمْ ۚ إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُحْسِنِينَ ﴿16﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
16. அவர்கள் தங்கள் இறைவன் கொடுப்பதை(த் திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்பவர்களாகவே இருந்தார்கள்.
Tamil Translation - Omar Sharif
அவர்களின் இறைவன் அவர்களுக்கு கொடுத்ததை (மகிழ்ச்சியுடன்) பெற்றுக்கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நல்லறம் புரிபவர்களாக இருந்தார்கள்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அவர்களுக்கு அவர்களின் இறைவன் கொடுத்ததை அவர்கள் (மகிழ்ச்சியுடன்) பெற்றுக்கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நல்லவர்களாக இருந்தார்கள்.
كَانُوا۟ قَلِيلًۭا مِّنَ ٱلَّيْلِ مَا يَهْجَعُونَ ﴿17﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
17. அவர்கள் இரவில் வெகு சொற்ப (நேர)மே நித்திரை செய்பவர்களாக இருந்தனர்.
Tamil Translation - Omar Sharif
அவர்கள் இரவில் (அல்லாஹ்வை வணங்குவதில் அதிக நேரம் கழிப்பார்கள். ஆகவே,) மிகக் குறைவாகவே தூங்குகிறவர்களாக இருந்தார்கள்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அவர்கள் இரவில் மிகக் குறைவாக தூங்குபவர்களாக இருந்தார்கள்.
وَبِٱلْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ ﴿18﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
18. அவர்கள் விடியற்காலை நேரத்தில் (எழுந்து தங்கள் இறைவனை வணங்கி, அவனிடம் பாவ) மன்னிப்புக் கோருவார்கள்.
Tamil Translation - Omar Sharif
இன்னும், (நீண்ட நேரம் இரவில் தொழுது விட்டு) அதிகாலையில் அவர்கள் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புத் தேடு(வதில் ஈடுபடு)வார்கள்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
(இரவில் நீண்ட நேரம் தொழுது விட்டு) அதிகாலையில் அவர்கள் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.
وَفِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّۭ لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ ﴿19﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
19. அவர்களுடைய பொருள்களில், (வாய் திறந்து) யாசகம் கேட்பவர்களுக்கும், (கேட்காத) வறியவர்களுக்கும் பாகமுண்டு. (அனைவருக்கும் அவர்கள் தானம் செய்வார்கள்.)
Tamil Translation - Omar Sharif
இன்னும், யாசிப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் அவர்களது செல்வங்களில் உரிமை உண்டு.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
யாசிப்பவருக்கும் இல்லாதவருக்கும் அவர்களது செல்வங்களில் உரிமை உண்டு.
وَفِى ٱلْأَرْضِ ءَايَٰتٌۭ لِّلْمُوقِنِينَ ﴿20﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
20. உறுதி(யாக நம்பிக்கை) கொண்டவர்களுக்குப் பூமியில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Tamil Translation - Omar Sharif
உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களுக்கு (அல்லாஹ்வின் வல்லமையை உணர்த்துகின்ற) பல அத்தாட்சிகள் பூமியில் உள்ளன.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களுக்கு பூமியில் பல அத்தாட்சிகள் உள்ளன.
وَفِىٓ أَنفُسِكُمْ ۚ أَفَلَا تُبْصِرُونَ ﴿21﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
21. உங்களுக்கு உள்ளாகவும் (பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவற்றை) நீங்கள் ஆழ்ந்து கவனித்துப் பார்க்க வேண்டாமா?
Tamil Translation - Omar Sharif
இன்னும் (மனிதர்களே!) உங்களுக்குள்ளும் (பல அத்தாட்சிகள் உள்ளன.) ஆக, நீங்கள் (எப்படி படைக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை) உற்று நோக்க மாட்டீர்களா?
Tamil Translation - Omar Sharif - Abridged Version
இன்னும் உங்களிலும் (பல அத்தாட்சிகள் உள்ளன). நீங்கள் உற்று நோக்க மாட்டீர்களா?
وَفِى ٱلسَّمَآءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ ﴿22﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
22. உங்களுக்கு வாக்களிக்கப்பட்டவையும் உங்கள் உணவும் வானத்தில் தான் இருக்கின்றன.
Tamil Translation - Omar Sharif
இன்னும் உங்கள் உணவும் (-உங்கள் வாழ்வாதாரத்தின் மூலமாகிய மழையும் நன்மை, தீமையில்) எது உங்களுக்கு வாக்களிக்கப்படுகிறதோ அதுவும் வானத்தில்தான் (அல்லாஹ்விடம்) இருக்கிறது.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
உங்கள் உணவும் நீங்கள் வாக்களிக்கப்படுவதும் வானத்தில் இருக்கிறது. (-அல்லாஹ்விடம் இருக்கிறது.)
فَوَرَبِّ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ إِنَّهُۥ لَحَقٌّۭ مِّثْلَ مَآ أَنَّكُمْ تَنطِقُونَ ﴿23﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
23. வானம், பூமியின் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக இது, (உங்கள் வார்த்தைகளை) நீங்கள்தான் கூறுகிறீர்கள் என்பதில் சந்தேகமில்லாதிருப்பதைப் போல் (இந்த குர்ஆனில் உள்ள அனைத்தும்) உண்மையானதாகும்.
Tamil Translation - Omar Sharif
ஆக, வானம், பூமியுடைய அதிபதியின் மீது சத்தியமாக! நீங்கள் (உங்கள் வாய்களால்) பேசுவது (என்பது கண்கூடாக பார்க்கப்படும் உண்மையாக இருப்பது) போன்றே நிச்சயமாக (உங்கள் இறைவன் கூறுகிற) இதுவும் உண்மைதான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
வானம், பூமியுடைய அதிபதியின் மீது சத்தியமாக! நிச்சயமாக இது நீங்கள் பேசுவது போன்றே உண்மைதான்.
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَٰهِيمَ ٱلْمُكْرَمِينَ ﴿24﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
24. (நபியே!) இப்ராஹீமுடைய மிக்க கண்ணியமுள்ள விருந்தினர்களின் விஷயம் உமக்கு எட்டியிருக்கிறதா?
Tamil Translation - Omar Sharif
இப்ராஹீமுடைய கண்ணியமான விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?
Tamil Translation - Omar Sharif - Abridged Version
இப்ராஹீமுடைய கண்ணியமான விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?
إِذْ دَخَلُوا۟ عَلَيْهِ فَقَالُوا۟ سَلَٰمًۭا ۖ قَالَ سَلَٰمٌۭ قَوْمٌۭ مُّنكَرُونَ ﴿25﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
25. அவர்கள் அவரிடம் வந்தபோது (அவரை நோக்கி “உமக்கு) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக!'' என்று கூறினார்கள். அதற்கு (இப்ராஹீம், “உங்களுக்கும்) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக!'' என்று கூறி, (இவர்கள் நாம்) அறியாத மக்களாக இருக்கின்றனரே! (என்று தன் மனத்தில் எண்ணினார்.)
Tamil Translation - Omar Sharif
அவர்கள் அவரிடம் (வீட்டில்) நுழைந்தபோது, “ஸலாம்” கூறினார்கள். (பதிலுக்கு) அவரும், “ஸலாம்!” (என்று கூறி, சற்று தாமதித்துவிட்டு நீங்கள் என்னிடம்) “அறியப்படாத மக்கள்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அவர்கள் அவரிடம் (வீட்டில்) நுழைந்தபோது “ஸலாம்” கூறினர். (பதிலுக்கு) அவரும், “ஸலாம்” (கூறி, நீங்கள் நான்) அறியாத மக்கள் (என்று) கூறினார்.
فَرَاغَ إِلَىٰٓ أَهْلِهِۦ فَجَآءَ بِعِجْلٍۢ سَمِينٍۢ ﴿26﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
26. பிறகு, விரைவாகத் தன் வீட்டினுள் சென்று கொழுத்ததொரு கன்றுவின் (பொரித்த) மாமிசத்தைக் கொண்டுவந்தார்.
Tamil Translation - Omar Sharif
ஆக, தனது குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று, கொழுத்த காளைக் கன்றை (அறுத்து நெருப்பில் சுட்டு) கொண்டு வந்(து அவர்கள் முன் வைத்)தார்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
தனது குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று கொழுத்த காளைக் கன்றை (அறுத்து நெருப்பில் சுட்டு) கொண்டு வந்தார்.
فَقَرَّبَهُۥٓ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ ﴿27﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
27. அதை அவர்கள் முன் வைத்தார். (ஆனால், அதை அவர்கள் புசிக்கவில்லை. ஆதலால், அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் புசிக்க மாட்டீர்களா?'' என்று கேட்டார்.
Tamil Translation - Omar Sharif
ஆக, அதை அவர்கள் பக்கம் நெருக்கமாக்கி வைத்தார். (அவர்கள் சாப்பிடாமல் இருக்கவே, அவர்களை நோக்கி) நீங்கள் சாப்பிட மாட்டீர்களா? என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அதை அவர்கள் பக்கம் நெருக்கமாக்கி, நீங்கள் சாப்பிட மாட்டீர்களா? என்று கூறினார்.
فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةًۭ ۖ قَالُوا۟ لَا تَخَفْ ۖ وَبَشَّرُوهُ بِغُلَٰمٍ عَلِيمٍۢ ﴿28﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
28. (இருப்பினும், அவர்கள் புசிக்காமலிருப்பதைக் கண்ட) அவர், அவர்களைப் பற்றி பயந்தார். (இதை அறிந்த அவர்கள் ‘‘இப்ராஹீமே!) பயப்படாதீர்'' என்று கூறி, (இஸ்ஹாக் என்னும்) மிக்க ஞானமுள்ள மகனை அவருக்கு நற்செய்தி கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharif
(ஆனால், அவர்கள் சாப்பிடவில்லை.) ஆகவே, அவர்களினால் அவர் பயத்தை உணர்ந்தார். அவர்கள் கூறினார்கள்: “பயப்படாதீர்!” இன்னும், கல்வியாளரான ஓர் ஆண் குழந்தையைக் கொண்டு அவருக்கு அவர்கள் நற்செய்தி கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
(ஆனால், அவர்கள் சாப்பிடவில்லை.) ஆகவே, அவர்களினால் அவர் பயத்தை உணர்ந்தார். அவர்கள் கூறினார்கள்: “பயப்படாதீர்! இன்னும், கல்வியாளரான ஓர் ஆண் குழந்தையைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினார்கள்.
فَأَقْبَلَتِ ٱمْرَأَتُهُۥ فِى صَرَّةٍۢ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوزٌ عَقِيمٌۭ ﴿29﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
29. (இதைச் செவியுற்ற) அவருடைய மனைவி (ஸாரா) கூச்சலுடன் அவர்கள் முன்வந்து, தன் முகத்தில் அறைந்துகொண்டு ‘‘(நானோ) தள்ளாடிய கிழவி; அதிலும் மலடி. (எவ்விதம் எனக்குக் குழந்தை பிறக்கும்?)'' என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharif
ஆக, (இதை செவிமடுத்த) அவருடைய மனைவி சத்தத்தோடு முன்னோக்கி வந்தார். ஆக, தனது முகத்தை அறைந்தார். இன்னும், “(நான் ஒரு) மலடியான கிழவி ஆயிற்றே” என்று கூறினாள்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
(இதை செவிமடுத்த) அவருடைய மனைவி சப்தத்தோடு முன்னோக்கி வந்து தனது முகத்தை அறைந்தார். இன்னும், (நான் ஒரு) மலடியான கிழவி ஆயிற்றே என்று கூறினாள்.
قَالُوا۟ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ ۖ إِنَّهُۥ هُوَ ٱلْحَكِيمُ ٱلْعَلِيمُ ﴿30﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
30. அதற்கவர்கள், ‘‘இவ்வாறே, உமது இறைவன் கூறுகிறான். நிச்சயமாக அவன்தான் மிக ஞானமுள்ளவன், அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்'' என்றார்கள்.
Tamil Translation - Omar Sharif
“அவ்வாறுதான் உமது இறைவன் கூறினான். நிச்சயமாக அவன்தான் மகா ஞானவான், நன்கறிந்தவன்” என்று (நபி இப்ராஹீமின் மனைவிக்கு வானவர்கள் பதில்) கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அவ்வாறுதான் உமது இறைவன் கூறினான் நிச்சயமாக அவன்தான் மகா ஞானவான், நன்கறிந்தவன் என்று அவர்கள் கூறினார்கள்.
۞ قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا ٱلْمُرْسَلُونَ ﴿31﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
31. (பின்னர் இப்ராஹீம் வானவர்களை நோக்கி) ‘‘தூதர்களே! உங்கள் காரியமென்ன? (எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள்?)'' என்று கேட்டார்.
Tamil Translation - Omar Sharif
(இப்ராஹீம்) கூறினார்: “(வானவத்) தூதர்களே! உங்கள் காரியம்தான் என்ன? (நீங்கள் வந்த வேலை என்ன?)”
Tamil Translation - Omar Sharif - Abridged Version
தூதர்களே! உங்கள் காரியம்தான் என்ன? என்று அவர் கூறினார்.
قَالُوٓا۟ إِنَّآ أُرْسِلْنَآ إِلَىٰ قَوْمٍۢ مُّجْرِمِينَ ﴿32﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
32. அதற்கவர்கள் ‘‘நிச்சயமாக நாங்கள் (பெரும்) குற்றவாளிகளான (லூத் நபியின்) மக்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று கூறினர்.
Tamil Translation - Omar Sharif
(வானவர்கள்) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள், குற்றவாளிகளான மக்கள் பக்கம் (அவர்களை அழிக்க) அனுப்பப்பட்டுள்ளோம்.”
Tamil Translation - Omar Sharif - Abridged Version
நிச்சயமாக நாங்கள் குற்றவாளிகளான மக்கள் பக்கம் அனுப்பப்பட்டுள்ளோம் என்று கூறினார்கள்.
لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةًۭ مِّن طِينٍۢ ﴿33﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
33. ‘‘நாங்கள், அவர்கள் மீது களி மண்ணால் செய்த (சுட்ட) கற்களை எறிவதற்காக (அனுப்பப்பட்டுள்ளோம்).''
Tamil Translation - Omar Sharif
களிமண்ணினால் ஆன கல்லை அவர்கள் மீது எறிவதற்காக (நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்).
Tamil Translation - Omar Sharif - Abridged Version
களிமண்ணினால் ஆன கல்லை அவர்கள் மீது எறிவதற்காக (நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்).
مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلْمُسْرِفِينَ ﴿34﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
34. ‘‘(அவை) உமது இறைவனிடம் வரம்பு மீறியவர்களுக்கென (பெயர்கள் எழுதப்பட்டு) அடையாளமிடப்பட்டவையாகும்.''
Tamil Translation - Omar Sharif
(எல்லை மீறிய) பாவிகளுக்காக உமது இறைவனிடம் (அந்த கல்) அடையாளமிடப்பட்டதாகும்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
(எல்லை மீறிய) பாவிகளுக்காக உமது இறைவனிடம் (அந்த கல்) அடையாள மிடப்பட்டதாகும்.
فَأَخْرَجْنَا مَن كَانَ فِيهَا مِنَ ٱلْمُؤْمِنِينَ ﴿35﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
35. ஆகவே, (அவர்கள் அழிவதற்கு முன்னதாகவே அவ்வூரில் இருந்த) நம்பிக்கை கொண்டவர்களை அதிலிருந்து நாம் வெளிப்படுத்தி விட்டோம்.
Tamil Translation - Omar Sharif
ஆக, அதில் நம்பிக்கையாளர்களாக இருந்தவர்களை நாம் (அந்த ஊரில் இருந்து) வெளியேற்றி விட்டோம்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
ஆக, அதில் நம்பிக்கையாளர்களாக இருந்தவர்களை நாம் (அந்த ஊரில் இருந்து) வெளியேற்றி விட்டோம்.
فَمَا وَجَدْنَا فِيهَا غَيْرَ بَيْتٍۢ مِّنَ ٱلْمُسْلِمِينَ ﴿36﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
36. எனினும், அதில் (லூத்துடைய) ஒரு வீட்டாரைத் தவிர, நம்பிக்கை கொண்ட ஒருவரையும் நாங்கள் காணவில்லை.
Tamil Translation - Omar Sharif
ஆக, அதில் (-அந்த ஊரில்) முஸ்லிம்களுடைய ஒரு வீட்டைத் தவிர நாம் (அங்கு) காணவில்லை.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
ஆனால், அதில் (அந்த ஊரில்) முஸ்லிம்களுடைய ஒரு வீட்டைத் தவிர (வேறு முஸ்லிம் வீடுகளை) நாம் (அங்கு) காணவில்லை.
وَتَرَكْنَا فِيهَآ ءَايَةًۭ لِّلَّذِينَ يَخَافُونَ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ ﴿37﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
37. துன்புறுத்தும் வேதனையை பயப்படுகிறவர்களுக்கு அதில் ஒரு படிப்பினையை விட்டு வைத்தோம்.
Tamil Translation - Omar Sharif
துன்புறுத்தும் தண்டனையைப் பயப்படக் கூடியவர்களுக்கு அதில் ஓர் அத்தாட்சியை நாம் விட்டுவைத்துள்ளோம்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
வலி தரக்கூடிய தண்டனையைப் பயப்படுகின்றவர்களுக்கு அதில் ஓர் அத்தாட்சியை நாம் விட்டுள்ளோம்.
وَفِى مُوسَىٰٓ إِذْ أَرْسَلْنَٰهُ إِلَىٰ فِرْعَوْنَ بِسُلْطَٰنٍۢ مُّبِينٍۢ ﴿38﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
38. மூஸாவுடைய (சரித்திரத்)திலும் (ஒரு படிப்பினை) இருக்கிறது. தெளிவான அத்தாட்சிகளுடன் அவரை ஃபிர்அவ்னிடம் நாம் அனுப்பிய சமயத்தில்,
Tamil Translation - Omar Sharif
இன்னும் மூஸாவி(ன் சரித்திரத்தி)லும் - நாம் அவரை ஃபிர்அவ்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு அனுப்பியபோது - பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
இன்னும் மூஸாவி(ன் சரித்திரத்தி)லும், நாம் அவரை ஃபிர்அவ்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு அனுப்பிய போது (பல அத்தாட்சிகள் இருக்கின்றன).
فَتَوَلَّىٰ بِرُكْنِهِۦ وَقَالَ سَٰحِرٌ أَوْ مَجْنُونٌۭ ﴿39﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
39. அவன் வலுவான தன் ஆட்சியின் கர்வத்தால் அவரைப் புறக்கணித்து, ‘‘இவரொரு சூனியக்காரர்; அல்லது பைத்தியக்காரர்'' என்று கூறினான்.
Tamil Translation - Omar Sharif
ஆக, அவன் தனது பலத்தினால் (பெருமை கொண்டவனாக நமது அத்தாட்சிகளை) புறக்கணித்து விலகினான். இன்னும், (மூஸா, இறைவனின் தூதர் அல்ல. அவர்) ஒரு சூனியக்காரர்; அல்லது, ஒரு பைத்தியக்காரர் ஆவார் என்று அவன் கூறினான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
தனது பலத்தினால் (பெருமை கொண்டவனாக நமது அத்தாட்சிகளை ஏற்காமல்) விலகினான். (மூஸா) ஒரு சூனியக்காரர்தான் அல்லது ஒரு பைத்தியக்காரர்தான் (இறைவனின் தூதர் அல்ல) என்று கூறினான்.
فَأَخَذْنَٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذْنَٰهُمْ فِى ٱلْيَمِّ وَهُوَ مُلِيمٌۭ ﴿40﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
40. ஆதலால், அவனையும் அவனுடைய படைகளையும் நாம் பிடித்துக் கடலில் எறிந்துவிட்டோம். அவன் என்றென்றுமே நிந்தனைக்குள்ளாகி விட்டான்.
Tamil Translation - Omar Sharif
ஆக, அவனையும் அவனுடைய இராணுவங்களையும் நாம் (கடும் தண்டனையால்) பிடித்தோம். ஆக, அவர்களை கடலில் எறிந்தோம். அவனோ பழிப்புக்குறியவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அவனையும் அவனுடைய இராணுவங்களையும் நாம் பிடித்தோம். அவர்களை கடலில் எறிந்தோம். அவனோ பழிப்புக்குள்ளானவன் ஆவான்.
وَفِى عَادٍ إِذْ أَرْسَلْنَا عَلَيْهِمُ ٱلرِّيحَ ٱلْعَقِيمَ ﴿41﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
41. ‘ஆது' என்னும் மக்களிலும் (ஒரு படிப்பினையுண்டு). அவர்கள் மீது நாம் (நாசகரமான) மலட்டுக் காற்றை அனுப்பிய சமயத்தில்,
Tamil Translation - Omar Sharif
இன்னும், ஆது சமுதாயத்தி(ன் சரித்திரத்தி)லும் - அவர்கள் மீது நாம் மலட்டுக் காற்றை (-எவ்வித நன்மையுமில்லாத, அழிவை ஏற்படுத்தும் காற்றை) அனுப்பியபோது - பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
ஆதி(ன் சரித்திரத்தி)லும் அவர்கள் மீது நாம் மலட்டுக் காற்றை (-எவ்வித நன்மையுமில்லாத, அழிவை ஏற்படுத்தும் காற்றை) அனுப்பியபோது (பல அத்தாட்சிகள் இருக்கின்றன).
مَا تَذَرُ مِن شَىْءٍ أَتَتْ عَلَيْهِ إِلَّا جَعَلَتْهُ كَٱلرَّمِيمِ ﴿42﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
42. அது பட்டதையெல்லாம் தூசியா(க்கிப் பறக்கடி)க்காமல் விடவில்லை.
Tamil Translation - Omar Sharif
அ(ந்த காற்றான)து எதன் மீது (கடந்து) செல்கிறதோ அதை பழைய மக்கிப்போன பொருளைப் போன்று ஆக்காமல் விட்டுவிடாது.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அது எதன் மீது (கடந்து) செல்கிறதோ அதை பழைய மக்கிப்போன பொருளைப் போன்று ஆக்காமல் விடாது.
وَفِى ثَمُودَ إِذْ قِيلَ لَهُمْ تَمَتَّعُوا۟ حَتَّىٰ حِينٍۢ ﴿43﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
43. ‘ஸமூது' என்னும் மக்களிலும் (ஒரு படிப்பினையுண்டு). ‘‘நீங்கள் ஒரு காலம் வரை சுகமாக வாழ்ந்திருங்கள்'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு,
Tamil Translation - Omar Sharif
இன்னும், ஸமூது சமுதாயத்தி(ன் சரித்திரத்தி)லும் - சிறிது காலம் வரை சுகமாக இருங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டபோது - பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
ஸமூதி(ன் சரித்திரத்தி)லும், சிறிது காலம் வரை சுகமாக இருங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்பட்ட போது (பல அத்தாட்சிகள் இருக்கின்றன).
فَعَتَوْا۟ عَنْ أَمْرِ رَبِّهِمْ فَأَخَذَتْهُمُ ٱلصَّٰعِقَةُ وَهُمْ يَنظُرُونَ ﴿44﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
44. அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை மீறினார்கள். ஆகவே, அவர்கள் (தங்களை அழிக்க வந்த மேகத்தைப்) பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களை ஓர் இடி முழக்கம் பிடித்துக் கொண்டது.
Tamil Translation - Omar Sharif
ஆக, அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை ஏற்காமல் பெருமை அடித்(து மாறு செய்)தனர். ஆக, அவர்களை இடிமுழக்கம் பிடித்தது. அவர்களோ (அந்த தண்டனையை) எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை ஏற்காமல் பெருமை அடித்தனர். அவர்களை இடிமுழக்கம் பிடித்தது. அவர்களோ (அந்த வேதனையை) எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
فَمَا ٱسْتَطَٰعُوا۟ مِن قِيَامٍۢ وَمَا كَانُوا۟ مُنتَصِرِينَ ﴿45﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
45. ஆகவே, அவர்கள் நிற்கவும் முடியவில்லை. (உட்காரவும் முடியவில்லை;) நம்மிடம் பழிவாங்கவும் முடியவில்லை. (இருந்தவாறே அழிந்து விட்டனர்.)
Tamil Translation - Omar Sharif
ஆக, (அல்லாஹ்வின் தண்டனைக்கு முன் எதிர்த்து) நிற்பதற்கு அவர்கள் ஆற்றல் பெறவில்லை. அவர்கள் (நம்மிடம்) பழிதீர்ப்பவர்களாகவும் இருக்கவில்லை.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
(அல்லாஹ்வின் தண்டனைக்கு முன் எதிர்த்து) நிற்பதற்கு அவர்கள் இயலாமல் ஆகிவிட்டார்கள். அவர்கள் (நம்மிடம்) பழிதீர்ப்பவர்களாகவும் இருக்கவில்லை. (அவர்களால் நமது தண்டனையை எதிர்கொள்ளவும் முடியாது. நாம் அவர்களை தண்டித்தால் நம்மிடம் அவர்கள் பழிவாங்கவும் முடியாது.)
وَقَوْمَ نُوحٍۢ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمًۭا فَٰسِقِينَ ﴿46﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
46. இதற்கு முன்னர் (இருந்த) நூஹுடைய மக்களையும் (அழித்து விட்டோம்). நிச்சயமாக அவர்களும் பாவம் செய்யும் மக்களாகவே இருந்தனர்.
Tamil Translation - Omar Sharif
இன்னும், இதற்கு முன்னர் நூஹுடைய மக்களையும் தண்டனை பிடித்தது. நிச்சயமாக அவர்கள் பாவிகளான மக்களாக இருந்தனர்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
இன்னும் நூஹுடைய மக்களையும் இதற்கு முன்னர் (நாம் அழித்தோம்). நிச்சயமாக அவர்கள் பாவிகளான மக்களாக இருந்தனர்.
وَٱلسَّمَآءَ بَنَيْنَٰهَا بِأَيْي۟دٍۢ وَإِنَّا لَمُوسِعُونَ ﴿47﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
47. (எவருடைய உதவியுமின்றி) நம் சக்தியைக் கொண்டே வானத்தை அமைத்தோம். நிச்சயமாக நாம் (அதை அவர்களின் அறிவிற்கெல்லாம் எட்டாதவாறு) மிக்க விசாலமாக்கியும் வைத்திருக்கிறோம்.
Tamil Translation - Omar Sharif
வானத்தை - அதை (நமது மிகப் பெரிய) சக்தியினால் (முகடாக) - நாம் உயர்த்தினோம். இன்னும், நிச்சயமாக நாம் (அவ்வாறு செய்வதற்கு) மிகவும் வசதி படைத்தவர்கள் ஆவோம்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
வானத்தை -அதை (நமது) பலத்தால் (முகடாக) நாம் உயர்த்தினோம். நிச்சயமாக நாம் (அவ்வாறு செய்வதற்கு) மிகவும் வசதி (ஆற்றல்) படைத்தவர்கள் ஆவோம்.
وَٱلْأَرْضَ فَرَشْنَٰهَا فَنِعْمَ ٱلْمَٰهِدُونَ ﴿48﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
48. பூமியை நாம் (விசாலமாக) விரித்தோம். விரிப்பவர்களிலெல்லாம் மிக்க மேலான விதத்தில் விரிப்பவர் நாமே.
Tamil Translation - Omar Sharif
இன்னும், பூமியை, நாம் அதை விரித்தோம். விரிப்பவர்களில் நாம் மிகச் சிறந்தவர்கள்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
பூமியை நாம் விரித்தோம். விரிப்பவர்களில் நாம் மிகச் சிறந்தவர்கள்.
وَمِن كُلِّ شَىْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ﴿49﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
49. ஒவ்வொரு வஸ்துக்களையும் (ஆண், பெண் கொண்ட) ஜோடி ஜோடியாகவே நாம் படைத்திருக்கிறோம். (இதைக்கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக!
Tamil Translation - Omar Sharif
இன்னும், ஒவ்வொன்றிலும் இரண்டு ஜோடிகளை படைத்தோம், நீங்கள் (அல்லாஹ்வின் படைப்புகளை சிந்தித்து) நல்லுணர்வு பெறுவதற்காக.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
ஒவ்வொன்றிலும் இரண்டு ஜோடிகளை படைத்தோம், நீங்கள் (அல்லாஹ்வின் படைப்புகளை சிந்தித்து) நல்லுணர்வு பெறுவதற்காக.
فَفِرُّوٓا۟ إِلَى ٱللَّهِ ۖ إِنِّى لَكُم مِّنْهُ نَذِيرٌۭ مُّبِينٌۭ ﴿50﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
50. ஆகவே, (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் வெகு தீவிரமாக நீங்கள் விரைந்து செல்லுங்கள். நிச்சயமாக நான் அவனைப் பற்றி உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.
Tamil Translation - Omar Sharif
ஆக, நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் விரண்டு ஓடுங்கள்! நிச்சயமாக நான் அவனிடமிருந்து உங்களுக்கு தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
ஆகவே, நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் விரண்டு ஓடுங்கள்! நிச்சயமாக நான் அவனிடமிருந்து உங்களுக்கு தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன்.
وَلَا تَجْعَلُوا۟ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ ۖ إِنِّى لَكُم مِّنْهُ نَذِيرٌۭ مُّبِينٌۭ ﴿51﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
51. அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனை ஆக்காதீர்கள். நிச்சயமாக நான், அவனிடமிருந்து உங்களுக்கு (இதைப் பற்றியும்) பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராக இருக்கிறேன்.
Tamil Translation - Omar Sharif
இன்னும், அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை ஏற்படுத்தாதீர்கள். நிச்சயமாக நான் அவனிடமிருந்து உங்களுக்கு (அனுப்பப்பட்ட) தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை ஏற்படுத்தாதீர்கள். நிச்சயமாக நான் அவனிடமிருந்து உங்களுக்கு தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன்.
كَذَٰلِكَ مَآ أَتَى ٱلَّذِينَ مِن قَبْلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُوا۟ سَاحِرٌ أَوْ مَجْنُونٌ ﴿52﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
52. இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், அவர்களிடம் எந்தத் தூதர் வந்தபோதிலும், அவரை சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமலிருக்கவில்லை.
Tamil Translation - Omar Sharif
இவ்வாறுதான், இவர்களுக்கு முன்னர் சென்றவர்களுக்கு எந்த ஒரு தூதரும் வரவில்லை, அவர்கள் (தங்களது தூதரைப் பார்த்து இவர்) ஒரு சூனியக்காரர்; அல்லது, ஒரு பைத்தியக்காரர் என்று கூறியே தவிர.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
இவ்வாறுதான், (தங்களது தூதரைப் பார்த்து இவர்) ஒரு சூனியக்காரர் அல்லது ஒரு பைத்தியக்காரர் (இறைவனின் தூதர் அல்ல) என்று கூறாமல் இவர்களுக்கு முன்னர் சென்றவர்களுக்கு எந்த ஒரு தூதரும் வந்ததில்லை.
أَتَوَاصَوْا۟ بِهِۦ ۚ بَلْ هُمْ قَوْمٌۭ طَاغُونَ ﴿53﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
53. (இவ்வாறு கூறும்படியே) அவர்கள் தங்களுக்குள் (பரம்பரை பரம்பரையாக) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தனர் போலும்! இல்லை, அவர்கள் (இயற்கையிலேயே இவ்வாறு கூறக் கூடிய) அநியாயக்கார மக்களாக இருந்தனர்.
Tamil Translation - Omar Sharif
(முற்கால நிராகரிப்பாளர்கள், இக்கால நிராகரிப்பாளர்கள்) இவர்கள் (எல்லோரும்) தங்களுக்குள் இ(றைத்தூதர்களை பொய்ப்பிக்க வேண்டும் என்ற விஷயத்)தை உபதேசித்துக் கொண்டார்களா? (-முன் சென்ற நிராகரிப்பாளர்கள் இக்கால நிராகரிப்பாளர்களுக்கு ஏதும் உபதேசத்தை சொல்லிச் சென்றுள்ளார்களா, நாங்கள் நிராகரித்ததைப் போன்று நீங்களும் உங்கள் நபியை பொய்ப்பிக்க வேண்டும் என்று.) மாறாக, இவர்கள் எல்லை மீறிய மக்கள் ஆவார்கள்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
இவர்கள் தங்களுக்குள் இதை (இந்த தூதரை பொய்ப்பிக்க வேண்டும் என்று) உபதேசித்துக் கொண்டார்களா? (-முன் சென்ற நிராகரிப்பாளர்கள் இக்கால நிராகரிப்பாளர்களுக்கு ஏதும் உபதேசத்தை சொல்லிச் சென்றுள்ளார்களா, நாங்கள் நிராகரித்ததைப் போன்று நீங்களும் உங்கள் நபியை பொய்ப்பிக்க வேண்டும் என்று) மாறாக, இவர்கள் வரம்பு மீறிய மக்கள் ஆவார்கள்.
فَتَوَلَّ عَنْهُمْ فَمَآ أَنتَ بِمَلُومٍۢ ﴿54﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
54. (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. (அவர்கள் நிராகரிப்பதைப் பற்றி) நீர் நிந்திக்கப்பட மாட்டீர்.
Tamil Translation - Omar Sharif
ஆகவே, (நபியே!) நீர் அவர்களை விட்டு விலகுவீராக! ஆக, நீர் பழிக்கப்பட்டவர் இல்லை.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
ஆகவே, (நபியே!) நீர் அவர்களை விட்டு விலகுவீராக! நீர் பழிக்கப்பட்டவர் இல்லை.
وَذَكِّرْ فَإِنَّ ٱلذِّكْرَىٰ تَنفَعُ ٱلْمُؤْمِنِينَ ﴿55﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
55. (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக. நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும்.
Tamil Translation - Omar Sharif
இன்னும், (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக! நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்கு பலனளிக்கும்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
(நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக! நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்கு பலனளிக்கும்.
وَمَا خَلَقْتُ ٱلْجِنَّ وَٱلْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ ﴿56﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
56. ஜின்களையும், மனிதர்களையும் (அவர்கள் என்னை அறிந்து) என்னை வணங்குவதற்கே தவிர (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை.
Tamil Translation - Omar Sharif
ஜின்களையும் மனிதர்களையும் - அவர்கள் என்னை வணங்குவதற்கே தவிர - நான் படைக்கவில்லை.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
ஜின்களையும் மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்கே தவிர (வேறு எதற்கும்) நான் படைக்கவில்லை.
مَآ أُرِيدُ مِنْهُم مِّن رِّزْقٍۢ وَمَآ أُرِيدُ أَن يُطْعِمُونِ ﴿57﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
57. அவர்களிடத்தில் நான் ஒரு பொருளையும் கேட்கவில்லை. அவர்கள் எனக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்குமாறும் நான் கோரவில்லை. (ஆகவே,)
Tamil Translation - Omar Sharif
நான் அவர்களிடம் (அவர்கள் எனது படைப்புகளுக்கு) வாழ்வாதாரம் எதையும் (கொடுக்க வேண்டுமென்று) நாடவில்லை. இன்னும், அவர்கள் என(து படைப்புகளு)க்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
நான் அவர்களிடம் எவ்வித உணவையும் நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை.
إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلْقُوَّةِ ٱلْمَتِينُ ﴿58﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
58. (நபியே! நீர் கூறுவீராக:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும், அசைக்க முடியாத பலசாலியுமாவான்.
Tamil Translation - Omar Sharif
நிச்சயமாக அல்லாஹ்தான் உணவளிப்பவன் (-எல்லோருக்கும் வாழ்வாதாரத்தையும் எல்லா தேவைகளையும் வழங்குபவன்), வலிமை உடையவன், மிக உறுதியானவன்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
நிச்சயமாக அல்லாஹ்தான் எல்லோருக்கும் உணவளிப்பவன், பலமுள்ளவன், மிக உறுதியுடையவன்.
فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟ ذَنُوبًۭا مِّثْلَ ذَنُوبِ أَصْحَٰبِهِمْ فَلَا يَسْتَعْجِلُونِ ﴿59﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
59. இவ்வக்கிரமக்காரர்களின் நண்பர்களுக்கு இருந்த (நன்மை, தீமையை அளக்கக்கூடிய) அளவுப் படிகளைப் போலவே, நிச்சயமாக இவர்களுக்கும் அளவுப் படிகளுண்டு. (அவை நிறைந்ததும் வேதனையைக் கொண்டு இவர்களைப் பிடித்துக் கொள்வோம்.) ஆதலால், அவர்கள் அவசரப்பட வேண்டாம்.
Tamil Translation - Omar Sharif
ஆக, நிச்சயமாக அநியாயம் செய்தவர்களுக்கு (அல்லாஹ்வின் தண்டனையில்) பெரிய பங்குண்டு, அவர்களின் கூட்டாளிகளுடைய பெரிய பங்கைப் போன்று. ஆகவே, அவர்கள் (தண்டனையை) அவசரமாகத் தேடவேண்டாம்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
நிச்சயமாக அநியாயம் செய்தவர்களுக்கு (அல்லாஹ்வின் தண்டனையில்) பெரிய பங்குண்டு, அவர்களின் கூட்டாளிகளுடைய பெரிய பங்கைப் போல. ஆகவே, அவர்கள் (இறை தண்டனையை) அவசரமாகத் தேடவேண்டாம்.
فَوَيْلٌۭ لِّلَّذِينَ كَفَرُوا۟ مِن يَوْمِهِمُ ٱلَّذِى يُوعَدُونَ ﴿60﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
60. (விசாரணைக்காக பாவிகளுக்கு) வாக்களிக்கப்பட்ட நாளில் இந்நிராகரிப்பவர்களுக்குக் கேடுதான்.
Tamil Translation - Omar Sharif
ஆக, நிராகரித்தவர்களுக்கு (அல்லாஹ்வின் தண்டனை எந்த நாளில் இறங்கும் என்று) – அவர்கள் அச்சுறுத்தப்பட்டார்களோ – அந்த அவர்களுடைய நாளில் கேடுதான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
ஆகவே, நிராகரித்தவர்களுக்கு அவர்கள் வாக்களிக்கப்பட்ட அவர்களின் (தண்டனை) நாளில் (அல்லாஹ்வின் தண்டனை இறங்கும் நாளில்) நாசம் உண்டாகட்டும்.