بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ سَبَّحَ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ ﴿1﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
1. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்துமே அல்லாஹ்வைப் புகழ்ந்து துதி செய்கின்றன. அவன் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif
நிகழக்கூடிய சம்பவம் (-மறுமை) நிகழ்ந்தால்,
Tamil Translation - Omar Sharif - Abridged Version
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வை துதிக்கின்றன. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ يُحْىِۦ وَيُمِيتُ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌ ﴿2﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
2. வானங்கள் பூமியின் ஆட்சியும் அவனுக்குரியதே! அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்க வைக்கிறான். அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif
வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. அவன் உயிர்கொடுக்கிறான்; மரணிக்க வைக்கிறான். இன்னும், அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. அவன்தான் உயிர்கொடுக்கின்றான்; மரணிக்க வைக்கின்றான். அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
هُوَ ٱلْأَوَّلُ وَٱلْءَاخِرُ وَٱلظَّٰهِرُ وَٱلْبَاطِنُ ۖ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ ﴿3﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
3. அவனே முதலானவன்; அவனே இறுதியானவன்; அவனே வெளிப்படையானவன்; அவனே மறைவானவன்; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்.
Tamil Translation - Omar Sharif
அவன்தான் முதலாமவன்; இறுதியானவன்; மேலோங்கியவன்; மறைந்தவன். அவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அவன்தான் முதலாமவன்; இறுதியானவன்; வெளிப்படையானவன்; மறைந்தவன். அவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.
هُوَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍۢ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ ۚ يَعْلَمُ مَا يَلِجُ فِى ٱلْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعْرُجُ فِيهَا ۖ وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنتُمْ ۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌۭ ﴿4﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
4. அவன்தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். பின்னர், அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தகுந்தாற்போல்) உயர்ந்து விட்டான். (வித்து முதலியவை) பூமியில் விதைக்கப்படுவதையும் அவை முளைத்து வெளிப்படுவதையும், வானத்தில் இருந்து இறங்குபவற்றையும், (பூமியிலிருந்து) ஏறுபவற்றையும் அவன் நன்கறிவான். நீங்கள் எங்கிருந்த போதிலும், அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றையும் (அந்த) அல்லாஹ் உற்று நோக்குகிறான்.
Tamil Translation - Omar Sharif
அவன் ஆறு நாட்களில் வானங்களையும் பூமியையும் படைத்தான். பிறகு, அர்ஷின் மீது அவன் உயர்ந்துவிட்டான். பூமியில் நுழைவதையும் அதிலிருந்து வெளியேறுவதையும் வானத்தில் இருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் நன்கறிவான். இன்னும், நீங்கள் எங்கு இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அவன்தான் ஆறு நாள்களில் வானங்களையும் பூமியையும் படைத்தான். பிறகு, அர்ஷின் மீது அவன் உயர்ந்துவிட்டான். பூமியில் நுழைவதையும் அதிலிருந்து வெளியேறுவதையும் வானத்தில் இருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் நன்கறிவான். நீங்கள் எங்கு இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கின்றான். நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்.
لَّهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ ﴿5﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
5. வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! எல்லா விஷயங்களும் (அந்த) அல்லாஹ்விடமே கொண்டு வரப்படும்.
Tamil Translation - Omar Sharif
வானங்கள், இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. அல்லாஹ்வின் பக்கமே எல்லாக் காரியங்களும் திருப்பப்படுகின்றன.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
வானங்கள், இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. அல்லாஹ்வின் பக்கமே எல்லாக் காரியங்களும் திருப்பப்படுகின்றன.
يُولِجُ ٱلَّيْلَ فِى ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِ ۚ وَهُوَ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ ﴿6﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
6. அவனே, இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான். மனதிலுள்ள எல்லா எண்ணங்களையும் அவன் நன்கறிவான்.
Tamil Translation - Omar Sharif
அவன் பகலில் இரவை நுழைக்கிறான். இரவில் பகலை நுழைக்கிறான். இன்னும், நெஞ்சங்களில் உள்ளவற்றை அவன் நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அவன் பகலில் இரவை நுழைக்கின்றான். இரவில் பகலை நுழைக்கின்றான். நெஞ்சங்களில் உள்ளவற்றை அவன் நன்கறிந்தவன் ஆவான்.
ءَامِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَأَنفِقُوا۟ مِمَّا جَعَلَكُم مُّسْتَخْلَفِينَ فِيهِ ۖ فَٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنكُمْ وَأَنفَقُوا۟ لَهُمْ أَجْرٌۭ كَبِيرٌۭ ﴿7﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
7. ஆகவே, (மனிதர்களே! நீங்கள்) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்பிக்கைகொள்ளுங்கள். இன்னும், அல்லாஹ் உங்களுக்கு முன் சென்றவர்களின் எப்பொருள்களுக்கு உங்களைப் பிரதிநிதிகளாக ஆக்கினானோ அப்பொருள்களிலிருந்து நீங்கள் தானம் செய்யுங்கள். உங்களில் எவர்கள் நம்பிக்கைகொண்டு தானம் செய்கிறார்களோ, அவர்களுக்குப் பெரியதொரு கூலி உண்டு.
Tamil Translation - Omar Sharif
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள்! இன்னும், அவன் எதில் உங்களை (ஒருவருக்குப் பின்னர் ஒருவரை) பிரதிநிதிகளாக ஆக்கினானோ அ(-ந்த செல்வத்)திலிருந்து தர்மம் செய்யுங்கள்! ஆக, (மனிதர்களே!) உங்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டார்களோ; இன்னும், தர்மம் செய்தார்களோ அவர்களுக்கு மிகப் பெரிய வெகுமதி(யாகிய சொர்க்கம்) உண்டு.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள்! அவன் எதில் உங்களை (ஒருவருக்குப் பின்னர் ஒருவரை) பிரதிநிதிகளாக ஆக்கினானோ அதில் (-அந்த செல்வத்தில்) இருந்து தர்மம் செய்யுங்கள்! உங்களில் நம்பிக்கை கொண்டு, தர்மம் செய்தவர்கள் - அவர்களுக்கு மிகப் பெரிய கூலி உண்டு.
وَمَا لَكُمْ لَا تُؤْمِنُونَ بِٱللَّهِ ۙ وَٱلرَّسُولُ يَدْعُوكُمْ لِتُؤْمِنُوا۟ بِرَبِّكُمْ وَقَدْ أَخَذَ مِيثَٰقَكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ ﴿8﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
8. (மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை ஏன் நம்பிக்கைகொள்வதில்லை? உங்களைப் படைத்துக் காக்கும் உங்கள் இறைவனைத்தான் நீங்கள் நம்பிக்கைகொள்ளுமாறு, உங்களை (நமது) தூதர் அழைக்கிறார். (இதைப்பற்றி, இறைவன்) உங்களிடம் நிச்சயமாக வாக்குறுதி பெற்றிருக்கிறான். நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (இதன் உண்மையை நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.)
Tamil Translation - Omar Sharif
அல்லாஹ்வை நீங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்கு உங்களுக்கு என்ன ஆனது? நீங்கள் உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்வதற்கு இந்த தூதர் உங்களை அழைக்கிறார். திட்டமாக அவன் (உங்களிடம்) உங்கள் சத்திய வாக்கை வாங்கி இருக்கிறான். நீங்கள் (ஒரு நாள்) நம்பிக்கையாளராக ஆக நாடினால் (இதுதான் சரியான நேரம், இப்போதே நம்பிக்கை கொள்ளுங்கள். மரணம் எப்போது வரும் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்).
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அல்லாஹ்வை நீங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்கு உங்களுக்கு என்ன ஆனது? நீங்கள் உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்வதற்கு தூதரோ உங்களை அழைக்கின்றார். திட்டமாக அவன் உங்கள் வாக்குறுதியை (நீங்கள் உங்கள் தந்தையின் முதுகில் இருந்த போது) வாங்கி இருக்கின்றான். நீங்கள் நம்பிக்கையாளராக இருந்தால்... (இது நம்பிக்கை கொள்வதற்கு சரியான தருணமாகும்).
هُوَ ٱلَّذِى يُنَزِّلُ عَلَىٰ عَبْدِهِۦٓ ءَايَٰتٍۭ بَيِّنَٰتٍۢ لِّيُخْرِجَكُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ ۚ وَإِنَّ ٱللَّهَ بِكُمْ لَرَءُوفٌۭ رَّحِيمٌۭ ﴿9﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
9. உங்களை(ப் பாவத்தின்) இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் கொண்டு வரும் பொருட்டே, அவன் தனது அடியார் மீது தெளிவான வசனங்களை இறக்கி வைத்திருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக இரக்கமுடையவனும் மகா கருணையுடையவனும் ஆவான்.
Tamil Translation - Omar Sharif
அவன் தனது அடியார் மீது தெளிவான அத்தாட்சிகளை இறக்குகிறான், அவன் உங்களை (அதன் மூலம்) இருள்களில் இருந்து வெளிச்சத்தின் பக்கம் வெளியேற்றுவதற்காக. இன்னும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக இரக்கமுடையவனும் கருணையாளனும் ஆவான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அவன் தனது அடியார் மீது தெளிவான அத்தாட்சிகளை இறக்குகின்றான் அவன் உங்களை இருள்களில் இருந்து வெளிச்சத்தின் பக்கம் வெளியேற்றுவதற்காக. நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக இரக்கமுடையவனும் கருணையாளனும் ஆவான்.
وَمَا لَكُمْ أَلَّا تُنفِقُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ لَا يَسْتَوِى مِنكُم مَّنْ أَنفَقَ مِن قَبْلِ ٱلْفَتْحِ وَقَٰتَلَ ۚ أُو۟لَٰٓئِكَ أَعْظَمُ دَرَجَةًۭ مِّنَ ٱلَّذِينَ أَنفَقُوا۟ مِنۢ بَعْدُ وَقَٰتَلُوا۟ ۚ وَكُلًّۭا وَعَدَ ٱللَّهُ ٱلْحُسْنَىٰ ۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌۭ ﴿10﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
10. உங்களுக்கென்ன நேர்ந்தது! அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் தர்மம் செய்ய வேண்டாமா? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் உரிமை அல்லாஹ்வுக்குரியதுதானே! உங்களில் எவர்கள் (மக்காவை) வெல்வதற்கு முன்னர் தம் பொருளைச் செலவு செய்து போர் புரிந்தார்களோ, அவர்களும் அதற்குப் பின்னர், தம் பொருளைச் செலவு செய்து போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள். அவர்கள் (-மக்கா வெற்றிக்கு முன் செலவு செய்து போரிட்டவர்கள்) அதற்கு பின்னர் செலவு செய்து போரிட்டவர்களைவிட மகத்தான பதவி உடையவர்கள். எனினும், இவ்விருவருக்கும் அல்லாஹ் நன்மையை (சொர்க்கத்தை)த்தான் வாக்களித்திருக்கிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif
அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் தர்மம் செய்யாமல் இருப்பதற்கு உங்களுக்கு என்ன ஆனது? வானங்கள் இன்னும் பூமியின் சொத்துக்கள் அல்லாஹ்விற்கே உரியன. (மக்காவின்) வெற்றிக்கு முன்னர் தர்மம் செய்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தவருக்கு உங்களில் எவரும் சமமாக மாட்டார். (மக்காவின் வெற்றிக்கு) பின்னர் தர்மம் செய்து போர் செய்தவர்களை விட அவர்கள்தான் மிக மகத்தான பதவி உடையவர்கள். இன்னும், (உங்கள்) எல்லோருக்கும் அல்லாஹ் சொர்க்கத்தை வாக்களித்துள்ளான். அல்லாஹ் நீங்கள் செய்வதை ஆழ்ந்தறிபவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் தர்மம் செய்யாமல் இருப்பதற்கு உங்களுக்கு என்ன ஆனது? வானங்கள் இன்னும் பூமியின் சொத்துக்கள் அல்லாஹ்விற்கே உரியன. (மக்காவின்) வெற்றிக்கு முன்னர் தர்மம் செய்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தவருக்கு உங்களில் எவரும் சமமாக மாட்டார். (மக்காவின் வெற்றிக்கு) பின்னர் தர்மம் செய்து போர் செய்தவர்களை விட அவர்கள்தான் மிக மகத்தான பதவி உடையவர்கள். எல்லோருக்கும் அல்லாஹ் சொர்க்கத்தை வாக்களித்துள்ளான். அல்லாஹ் நீங்கள் செய்வதை ஆழ்ந்தறிபவன் ஆவான்.
مَّن ذَا ٱلَّذِى يُقْرِضُ ٱللَّهَ قَرْضًا حَسَنًۭا فَيُضَٰعِفَهُۥ لَهُۥ وَلَهُۥٓ أَجْرٌۭ كَرِيمٌۭ ﴿11﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
11. எவர் அல்லாஹ்வுக்காக அழகான கடன் கொடுக்கிறாரோ அவருக்கு, அதை இரட்டிப்பாக்கியே வைத்திருக்கிறான். மேலும் அவருக்கு மிக கண்ணியமான கூலியும் உண்டு.
Tamil Translation - Omar Sharif
யார் அல்லாஹ்விற்கு அழகிய கடனாக கடன் கொடுப்பார்? அப்படி அவர் கொடுத்தால் அவன் அவருக்கு அதை பன்மடங்காக்குவான். இன்னும், அவருக்கு கண்ணியமான வெகுமதி (-சொர்க்கம்) உண்டு.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
யார் அல்லாஹ்விற்கு அழகிய கடனாக கடன் கொடுக்கின்றார்? (யாரும் கொடுத்தால்) அவன் அவருக்கு அதை பன்மடங்காக்குவான். இன்னும் அவருக்கு கண்ணியமான கூலி உண்டு.
يَوْمَ تَرَى ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ يَسْعَىٰ نُورُهُم بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَٰنِهِم بُشْرَىٰكُمُ ٱلْيَوْمَ جَنَّٰتٌۭ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ ﴿12﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
12. (நபியே!) நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் நீர் காணுகின்ற அந்நாளில், அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னும், அவர்களது வலப்பக்கத்திலும் சென்று கொண்டிருக்கும். (உண்மையான அவர்களின் நம்பிக்கையின் காரணமாக, வானவர்கள் அவர்களை நோக்கி:) ‘‘தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்கள் (உங்களுக்கு உண்டு) என்ற நற்செய்தி இன்று உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது. என்றென்றும் அதில் தங்கி விடுவீர்கள்'' என்று கூறுவார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.
Tamil Translation - Omar Sharif
(நபியே!) நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் (மறுமையில்) நீர் பார்ப்பீர், அவர்களின் ஒளி (-அவர்களின் நம்பிக்கை மற்றும் நல்ல அமல்களின் நன்மைகள்) அவர்களுக்கு முன்னர் செல்லும். இன்னும், அவர்களின் வலப்பக்கங்களில் (அவர்களின் செயலேடுகள் பறந்து கொண்டிருக்கும்). இன்று உங்கள் நற்செய்தி சொர்க்கங்களாகும். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அதுதான் மகத்தான வெற்றியாகும்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
(நபியே!) நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் (மறுமையில்) நீர் பார்ப்பீர், அவர்களின் ஒளி - (அவர்களின் நம்பிக்கை மற்றும் நல்ல அமல்களின் நன்மைகள்) அவர்களுக்கு முன்னர் செல்லும். அவர்களின் வலப்பக்கங்களில் (அவர்களின் செயலேடுகள் பறந்து கொண்டிருக்கும்). இன்று உங்கள் நற்செய்தி சொர்க்கங்களாகும். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அதுதான் மகத்தான வெற்றியாகும்.
يَوْمَ يَقُولُ ٱلْمُنَٰفِقُونَ وَٱلْمُنَٰفِقَٰتُ لِلَّذِينَ ءَامَنُوا۟ ٱنظُرُونَا نَقْتَبِسْ مِن نُّورِكُمْ قِيلَ ٱرْجِعُوا۟ وَرَآءَكُمْ فَٱلْتَمِسُوا۟ نُورًۭا فَضُرِبَ بَيْنَهُم بِسُورٍۢ لَّهُۥ بَابٌۢ بَاطِنُهُۥ فِيهِ ٱلرَّحْمَةُ وَظَٰهِرُهُۥ مِن قِبَلِهِ ٱلْعَذَابُ ﴿13﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
13. அந்நாளில், நயவஞ்சக ஆண்களும் பெண்களும் நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி ‘‘நீங்கள் (முன்னேறி சென்றுவிடாமல்) எங்களுக்காகச் சிறிது தாமதியுங்கள். உங்கள் பிரகாசத்தைக் கொண்டு நாங்கள் பயனடைவோம்'' என்று கூறுவார்கள். (அதற்கு அவர்களை நோக்கி ‘‘எங்கள் முன் நிற்காதீர்கள்.) நீங்கள் உங்கள் பின்புறம் சென்று (அங்குப்) பிரகாசத்தைத் தேடிக்கொள்ளுங்கள்'' என்று கூறப்படும். அந்நேரத்தில், இவர்களுக்கும் அவர்களுக்கும் மத்தியில் ஒரு சுவர் எழுப்பப்பட்டு விடும். அதற்கு வாசலும் இருக்கும். (நம்பிக்கையாளர்கள் இருக்கக்கூடிய) அதன் உட்புறத்தில் (இறைவனின்) அருளும், அதன் வெளிப்புறத்தில் (பாவிகள் அனுபவிக்கக்கூடிய அவனுடைய) வேதனையுமிருக்கும்.
Tamil Translation - Omar Sharif
அந்நாளில் நயவஞ்சகர்களும் நயவஞ்சகிகளும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு கூறுவார்கள்: “எங்களை (கொஞ்சம்) காத்திருங்கள்! உங்கள் ஒளியிலிருந்து நாங்கள் (கொஞ்சம்) எடுத்துக் கொள்கிறோம்.” (அப்போது அவர்களுக்கு) கூறப்படும் “உங்களுக்குப் பின்னால் (வந்த வழியிலேயே) நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்! (அங்கு) ஒளியை தேடுங்கள்!” ஆக, அவர்களுக்கு மத்தியில் ஒரு சுவர் அமைக்கப்படும். அதற்கு ஒரு வாசல் இருக்கும். அதன் உள் பக்கம், அதில் அருள் இருக்கும். அதன் வெளிப்பக்கம், அதற்கு முன்னால் தண்டனை இருக்கும்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அந்நாளில் நயவஞ்சகம் உடைய ஆண்களும் நயவஞ்சகம் உடைய பெண்களும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு கூறுவார்கள்: “எங்களை (கொஞ்சம்) எதிர்பாருங்கள்! உங்கள் ஒளியிலிருந்து நாங்கள் (கொஞ்சம்) எடுத்துக் கொள்கிறோம்.” (அப்போது அவர்களுக்கு) கூறப்படும் உங்களுக்குப் பின்னால் (வந்த வழியிலேயே) நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்! (அங்கு) ஒளியை தேடுங்கள்! ஆகவே, அவர்களுக்கு மத்தியில் ஒரு சுவர் அமைக்கப்படும். அதற்கு ஒரு வாசல் இருக்கும். அதன் உள் பக்கம் அதில் அருள் இருக்கும். அதன் வெளிப்பக்கம் அதற்கு முன்னால் வேதனை இருக்கும்.
يُنَادُونَهُمْ أَلَمْ نَكُن مَّعَكُمْ ۖ قَالُوا۟ بَلَىٰ وَلَٰكِنَّكُمْ فَتَنتُمْ أَنفُسَكُمْ وَتَرَبَّصْتُمْ وَٱرْتَبْتُمْ وَغَرَّتْكُمُ ٱلْأَمَانِىُّ حَتَّىٰ جَآءَ أَمْرُ ٱللَّهِ وَغَرَّكُم بِٱللَّهِ ٱلْغَرُورُ ﴿14﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
14. இவர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘உலகத்தில்) நாங்கள் உங்களுடன் சேர்ந்திருக்க வில்லையா?'' என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். அதற்கவர்கள் (இவர்களை நோக்கி) ‘‘மெய்தான். ஆயினும், நீங்களே உங்களைத் துன்பத்திற்குள்ளாக்கிக் கொண்டீர்கள். (நாங்கள் அழிந்து போவதை) நீங்கள் எதிர்பார்த்தீர்கள்; (இந்நாளைப் பற்றியும்) நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வுடைய கட்டளை(யாகிய மரணம்) வரும் வரை, உங்கள் பேராசைகள் உங்களை மயக்கி விட்டன! மாயக்கார (ஷைத்தா)ன் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட்டான்.
Tamil Translation - Omar Sharif
“நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று (கூறி) அவர்களை கூவி அழைப்பார்கள். அவர்கள் (-நம்பிக்கையாளர்கள்) கூறுவார்கள்: “ஏன் இல்லை. என்றாலும், நீங்கள் (-நயவஞ்சகர்கள்) உங்களையே அழித்துக் கொண்டீர்கள்; இன்னும், (நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும்) ஆபத்து நிகழ வேண்டும் என்று சமயம் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், (அல்லாஹ்வின் தூதரின் கூற்றில்) சந்தேகித்தீர்கள்; இன்னும், பொய்யான ஆசைகள் உங்களை மயக்கின. இறுதியாக, அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டது. மயக்கக் கூடியவன் (-ஷைத்தான்) அல்லாஹ்வை விட்டும் உங்களை மயக்கிவிட்டான்.”
Tamil Translation - Omar Sharif - Abridged Version
நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா? என்று அவர்களை (நம்பிக்கையாளர்களை) கூவி அழைப்பார்கள். அவர்கள் கூறுவார்கள். ஏன் இல்லை. என்றாலும், (நயவஞ்கசர்களாகிய) நீங்கள் உங்களையே அழித்துக் கொண்டீர்கள்; (நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும்) தீமையை எதிர்பார்த்தீர்கள்; (அல்லாஹ்வின் தூதரின் கூற்றில்) சந்தேகித்தீர்கள்; பொய்யான ஆசைகள் உங்களை மயக்கின. இறுதியாக அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டது. மயக்கக் கூடியவன் (-ஷைத்தான்) அல்லாஹ்வை விட்டும் உங்களை மயக்கிவிட்டான்.
فَٱلْيَوْمَ لَا يُؤْخَذُ مِنكُمْ فِدْيَةٌۭ وَلَا مِنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۚ مَأْوَىٰكُمُ ٱلنَّارُ ۖ هِىَ مَوْلَىٰكُمْ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ ﴿15﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
15. ஆகவே, இன்றைய தினம் உங்களிடமிருந்தோ அல்லது (உங்களைப் போல்) நிராகரித்தவர்களிடமிருந்தோ (உங்களுக்குக் கிடைக்கவேண்டிய வேதனைக்குப் பதிலாக) எதையும் பரிகாரமாகப் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நீங்கள் செல்லுமிடம் நரகம்தான். (நரக) நெருப்புத்தான் உங்களுக்குத் துணை'' (என்றும் கூறப்படும்). அது தங்குமிடங்களில் எல்லாம் மகா கெட்டது.
Tamil Translation - Omar Sharif
ஆக, இன்றைய தினம் உங்களிடமும் நிராகரிப்பாளர்களிடமும் எவ்வித பரிகாரம் (மீட்புத் தொகை) - வாங்கப்படாது. உங்கள் தங்குமிடம் நரகம்தான். அதுதான் உங்களுக்கு மிக ஏற்றமானது. மீளுமிடங்களில் அது மிகக் கெட்டது.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
இன்றைய தினம் உங்களிடமும் நிராகரிப்பாளர்களிடமும் எவ்வித பரிகாரம் - வாங்கப்படாது. உங்கள் தங்குமிடம் நரகம்தான். அதுதான் உங்களுக்கு மிக ஏற்றமானது. மீளுமிடங்களில் அது மிகக் கெட்டது.
۞ أَلَمْ يَأْنِ لِلَّذِينَ ءَامَنُوٓا۟ أَن تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ ٱللَّهِ وَمَا نَزَلَ مِنَ ٱلْحَقِّ وَلَا يَكُونُوا۟ كَٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ مِن قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ ٱلْأَمَدُ فَقَسَتْ قُلُوبُهُمْ ۖ وَكَثِيرٌۭ مِّنْهُمْ فَٰسِقُونَ ﴿16﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
16. நம்பிக்கை கொண்டவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வை நினைத்தும், அவன் இறக்கிவைத்த சத்திய (வசன)ங்களைக் கவனித்தும் பயப்படக்கூடிய நேரம் (இன்னும்) வரவில்லையா? இவர்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல், இவர்களும் ஆகிவிட வேண்டாம். (இவ்வாறே) அவர்கள் மீதும் ஒரு நீண்ட காலம் கடந்து விட்டது. ஆகவே, அவர்களுடைய உள்ளங்கள் கடினமாக இருகிவிட்டன. இன்னும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பாவிகளாகி விட்டனர்.
Tamil Translation - Omar Sharif
அல்லாஹ்வை நினைவு கூர்வதாலும் இறங்கிய உண்மையான வேதத்(தை ஓதுவ)தினாலும் அவர்களின் உள்ளங்கள் நடுங்க நம்பிக்கையாளர்களுக்கு நேரம் வரவில்லையா? இன்னும், இதற்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் அவர்கள் ஆகிவிட வேண்டாம். ஆக, அவர்கள் (-முந்திய வேதக்காரர்கள்) மீது காலம் மிக நீண்டுவிட்டது. ஆகவே, அவர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டன. இன்னும், அவர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை மீறக்கூடிய) பாவிகள் ஆவார்கள்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அல்லாஹ்வை நினைவு கூர்வதாலும் இறங்கிய சத்தியவேதத்(தை ஓதுவ)தினாலும் அவர்களின் உள்ளங்கள் நடுங்குவதற்கு நம்பிக்கையாளர்களுக்கு நேரம் வரவில்லையா? இதற்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் அவர்கள் ஆகிவிட வேண்டாம். அவர்கள் மீது (-முந்திய வேதக் காரர்கள் மீது) காலம் மிக நீண்டுவிட்டது. ஆகவே, அவர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டன. அவர்களில் அதிகமானவர்கள் பாவிகள் ஆவார்கள்.
ٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يُحْىِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَا ۚ قَدْ بَيَّنَّا لَكُمُ ٱلْءَايَٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ ﴿17﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
17. (மனிதர்களே!) நிச்சயமாக அல்லாஹ்தான், இறந்த பூமியை உயிர்ப்பிக்கிறான் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டே, நிச்சயமாக அவன் பல உதாரணங்களை உங்களுக்குத் தெளிவாக்கி இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharif
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ், பூமியை, அது இறந்த பின்னர் உயிர்ப்பிக்கிறான். நீங்கள் சிந்தித்து புரிவதற்காக வசனங்களை நாம் உங்களுக்கு திட்டமாக தெளிவுபடுத்துகிறோம்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பூமியை அது இறந்த (காய்ந்த) பின்னர் உயிர்ப்பிக்கின்றான். நீங்கள் சிந்தித்து புரிவதற்காக வசனங்களை நாம் உங்களுக்கு திட்டமாக தெளிவுபடுத்துகின்றோம்.
إِنَّ ٱلْمُصَّدِّقِينَ وَٱلْمُصَّدِّقَٰتِ وَأَقْرَضُوا۟ ٱللَّهَ قَرْضًا حَسَنًۭا يُضَٰعَفُ لَهُمْ وَلَهُمْ أَجْرٌۭ كَرِيمٌۭ ﴿18﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
18. நிச்சயமாக ஆண்களிலோ, பெண்களிலோ எவர்கள் தானம் செய்து அழகான முறையில் அல்லாஹ்வு(க்காகப் பிறரு)க்கு கடன் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு, அது பன் மடங்காக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு மிக்க கண்ணியமான கூலியுமுண்டு.
Tamil Translation - Omar Sharif
நிச்சயமாக (அல்லாஹ்வின் பாதையில்) தர்மம் செய்த ஆண்கள், தர்மம் செய்த பெண்கள், இன்னும், அல்லாஹ்விற்கு அழகிய கடனாக கடன் கொடுத்தவர்கள் அவர்களுக்கு (நற்கூலிகள்) பன்மடங்காக்கப்படும். இன்னும், அவர்களுக்கு கண்ணியமான வெகுமதி(யாகிய சொர்க்கம்) உண்டு.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
நிச்சயமாக (அல்லாஹ்வின் பாதையில்) தர்மம் செய்த ஆண்கள், தர்மம் செய்த பெண்கள், இன்னும் அல்லாஹ்விற்கு அழகிய கடனாக கடன் கொடுத்தவர்கள் அவர்களுக்கு (நற்கூலி) பன்மடங்காக்கப்படும். இன்னும் அவர்களுக்கு கண்ணியமான கூலி (சொர்க்கம்) உண்டு.
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَرُسُلِهِۦٓ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلصِّدِّيقُونَ ۖ وَٱلشُّهَدَآءُ عِندَ رَبِّهِمْ لَهُمْ أَجْرُهُمْ وَنُورُهُمْ ۖ وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَآ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْجَحِيمِ ﴿19﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
19. எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் மெய்யாகவே நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்கள்தான் ‘ஸித்தீக்' என்ற உண்மையாளர்கள். சன்மார்க்கப் போரில் உயிர்த்தியாகம் செய்த ‘ஷஹீது' என்பவர்கள் தங்கள் இறைவனிடத்தில் இருப்பார்கள். மேலும், அவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய கூலி (குறைவின்றி) உண்டு. (நேரான வழியை அறிவிக்கக்கூடிய) பிரகாசமும் உண்டு. எவர்கள் நம் வசனங்களை நிராகரித்துப் பொய்யாக்குகிறார்களோ, அவர்கள் நரகவாசிகள்தான்.
Tamil Translation - Omar Sharif
இன்னும், எவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்பிக்கை கொண்டார்களோ அவர்கள்தான் “ஸித்தீக்” (என்ற மிக உண்மையாளர்கள்) ஆவார்கள். இன்னும், (அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட) ஷுஹதா, அவர்களுக்கு அவர்களின் கூலியும் அவர்களின் ஒளியும் அவர்களின் இறைவனிடம் உண்டு. எவர்கள் நிராகரித்தார்களோ; இன்னும், நமது வசனங்களை பொய்ப்பித்தார்களோ அவர்கள்தான் நரகவாசிகள் ஆவார்கள்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்பிக்கை கொண்டவர்கள் அவர்கள்தான் “ஸித்தீக்” என்ற மிக உண்மையானவர்கள் ஆவார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள், அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு அவர்களின் கூலியும் அவர்களின் ஒளியும் உண்டு. எவர்கள் நிராகரித்து, நமது வசனங்களை பொய்ப்பித்தார்களோ அவர்கள்தான் நரகவாசிகள் ஆவார்கள்.
ٱعْلَمُوٓا۟ أَنَّمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا لَعِبٌۭ وَلَهْوٌۭ وَزِينَةٌۭ وَتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌۭ فِى ٱلْأَمْوَٰلِ وَٱلْأَوْلَٰدِ ۖ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ ٱلْكُفَّارَ نَبَاتُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرَىٰهُ مُصْفَرًّۭا ثُمَّ يَكُونُ حُطَٰمًۭا ۖ وَفِى ٱلْءَاخِرَةِ عَذَابٌۭ شَدِيدٌۭ وَمَغْفِرَةٌۭ مِّنَ ٱللَّهِ وَرِضْوَٰنٌۭ ۚ وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ إِلَّا مَتَٰعُ ٱلْغُرُورِ ﴿20﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
20. (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அறிந்துகொள்ளுங்கள் இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும், வேடிக்கையும், வெறும் அலங்காரமும்தான். தவிர உங்களுக்கிடையில் ஏற்படும் வீண் பெருமையும், பொருளிலும் சந்ததியிலும் அதிகரிக்க வேண்டுமென்ற வீண் எண்ணமும்தான். (இதன் உதாரணமாவது:) ஒரு மழையின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. அந்த மழையினால் முளைத்த பயிர்கள் (நன்கு வளர்ந்து) விவசாயிகளுக்குக் களிப்பை உண்டு பண்ணிக்கொண்டிருந்தன. பின்னர், அவை மஞ்சனித்துக் காய்ந்து, சருகுகளாகிவிடுவதை நீர் காண்கிறீர். (இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கிறது.) மறுமையிலோ (அவர்களில் பலருக்குக்) கொடிய வேதனையும், (பலருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவனது திருப்பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் சொற்ப இன்பமே தவிர வேறில்லை.
Tamil Translation - Omar Sharif
அறிந்து கொள்ளுங்கள்! “உலக வாழ்க்கை எல்லாம் விளையாட்டும் வேடிக்கையும் அலங்காரமும் உங்களுக்கு மத்தியில் பெருமை அடிப்பதும் செல்வங்களிலும் பிள்ளைகளிலும் அதிகத்தின் போட்டியும்தான். (இவ்வாழ்க்கை) ஒரு மழையைப் போன்றுதான், அதன் விளைச்சல் விவசாயிகளை கவர்ந்தது. பிறகு, அது காய்ந்து விடுகிறது. ஆக, அதை நீர் மஞ்சளாக பார்க்கிறீர். பிறகு, அது குப்பையாக ஆகிவிடுகிறது. இன்னும், மறுமையில் (நிராகரிப்பாளர்களுக்கு) கடுமையான தண்டனையும் (நம்பிக்கையாளர்களுக்கு) அல்லாஹ்வின் புறத்தில் இருந்து மன்னிப்பும் திருப்பொருத்தமும் உண்டு. மயக்கக்கூடிய இன்பமாகவே தவிர உலக வாழ்க்கை இல்லை.”
Tamil Translation - Omar Sharif - Abridged Version
உலக வாழ்க்கை எல்லாம் விளையாட்டும் வேடிக்கையும் அலங்காரமும் உங்களுக்கு மத்தியில் பெருமை அடிப்பதும் செல்வங்களிலும் பிள்ளைகளிலும் அதிகத்தின் போட்டியும்தான். (இவ்வாழ்க்கை) ஒரு மழையைப் போல்தான், அதன் விளைச்சல் விவசாயிகளை கவர்ந்தது. பிறகு, அது காய்ந்து விடுகிறது. அதை நீர் மஞ்சளாக பார்க்கிறீர். பிறகு, அது குப்பையாக ஆகிவிடுகிறது. மறுமையில் (நிராகரிப்பாளர்களுக்கு) கடுமையான வேதனையும் (நம்பிக்கையாளர்களுக்கு) அல்லாஹ்வின் புறத்தில் இருந்து மன்னிப்பும் திருப்பொருத்தமும் உண்டு. உலக வாழ்க்கை மயக்கக்கூடிய இன்பமே தவிர வேறில்லை.
سَابِقُوٓا۟ إِلَىٰ مَغْفِرَةٍۢ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ أُعِدَّتْ لِلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَرُسُلِهِۦ ۚ ذَٰلِكَ فَضْلُ ٱللَّهِ يُؤْتِيهِ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ ﴿21﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
21. ஆகவே, (மனிதர்களே!) நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பை நோக்கியும், சொர்க்கத்தை நோக்கியும் முந்திச் செல்லுங்கள். அச்சொர்க்கத்தின் விசாலமோ வானம், பூமியின் விசாலத்தைப்போல் இருக்கிறது. அது அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களுக்காகவே தயார்படுத்தப்பட்டிருக்கிறது. இது அல்லாஹ்வுடைய அருளாகும். இதை அவன் விரும்பியவர்களுக்கே கொடுக்கிறான். அல்லாஹ் மகத்தான அருளாளன்!
Tamil Translation - Omar Sharif
உங்கள் இறைவனின் மன்னிப்பு இன்னும் சொர்க்கத்தின் பக்கம் முந்துங்கள். அதன் அகலம் வானம் பூமியின் அகலத்தைப் போலாகும். அது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது அல்லாஹ்வின் சிறப்பா(ன அருளா)கும். அவன் நாடுபவர்களுக்கு அதை அவன் கொடுக்கிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
உங்கள் இறைவனின் மன்னிப்பின் பக்கமும் சொர்க்கத்தின் பக்கமும் முந்துங்கள். அதன் அகலம் வானம், பூமியின் அகலத்தைப் போலாகும். அது அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்பிக்கை கொண்டவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது அல்லாஹ்வின் சிறப்பா(ன அருளா)கும். அவன் நாடுகின்றவர்களுக்கு அதை அவன் கொடுக்கின்றான். அல்லாஹ் மகத்தான சிறப்புடையவன் ஆவான்.
مَآ أَصَابَ مِن مُّصِيبَةٍۢ فِى ٱلْأَرْضِ وَلَا فِىٓ أَنفُسِكُمْ إِلَّا فِى كِتَٰبٍۢ مِّن قَبْلِ أَن نَّبْرَأَهَآ ۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٌۭ ﴿22﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
22. (பொதுவாக) பூமியிலோ அல்லது (குறிப்பாக) உங்களுக்கோ ஏற்படக்கூடிய எந்தச் சிரமமும், (நஷ்டமும்) அது ஏற்படுவதற்கு முன்னதாகவே (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதே!
Tamil Translation - Omar Sharif
பூமியிலும் உங்களிலும் ஒரு சோதனை ஏற்படுவதில்லை, நாம் (பூமியில், அல்லது உங்களில்) அதை உருவாக்குவதற்கு முன்னர் அது விதியில் (எழுதப்பட்டு) இருந்தே தவிர. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக எளிதானதாகும்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
பூமியிலும் உங்களிலும் ஒரு சோதனை ஏற்படுவதில்லை, நாம் (பூமியில், அல்லது உங்களில்) அதை உருவாக்குவதற்கு முன்னர் அது விதியில் இருந்தே தவிர. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக எளிதானதாகும்.
لِّكَيْلَا تَأْسَوْا۟ عَلَىٰ مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوا۟ بِمَآ ءَاتَىٰكُمْ ۗ وَٱللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍۢ فَخُورٍ ﴿23﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
23. உங்களை விட்டும் தவறிப்போனதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதிருக்கவும் (அல்லாஹ்) உங்களுக்குக் கொடுத்ததைப் பற்றி நீங்கள் கர்வம் கொள்ளாதிருக்கவும். (இதை உங்களுக்கு அறிவிக்கிறான்). அல்லாஹ், கர்வம் கொள்பவர்களையும் பெருமையடிப்பவர்களையும் நேசிப்பதில்லை.
Tamil Translation - Omar Sharif
(இதை நாம் உங்களுக்கு அறிவித்தோம்.) ஏனெனில், உங்களுக்கு தவறிவிட்டதற்காக நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு கொடுத்ததைக் கொண்டு நீங்கள் பெருமைப்படாமல் இருப்பதற்காகவும் ஆகும். இன்னும், அகம்பாவக்காரர்கள், தற்பெருமையடிப்பவர்கள் எல்லோரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
(இதை நாம் உங்களுக்கு அறிவித்தோம்.) ஏனெனில், உங்களுக்கு தவறிவிட்டதற்காக நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு கொடுத்ததைக் கொண்டு நீங்கள் பெருமைப்படாமல் இருப்பதற்காகவும் ஆகும். அல்லாஹ் அகம்பாவக்காரர்கள், பெருமையடிப்பவர்கள் எல்லோரையும் நேசிக்க மாட்டான்.
ٱلَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ ٱلنَّاسَ بِٱلْبُخْلِ ۗ وَمَن يَتَوَلَّ فَإِنَّ ٱللَّهَ هُوَ ٱلْغَنِىُّ ٱلْحَمِيدُ ﴿24﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
24. எவர்கள் கஞ்சத்தனம் செய்து, மற்ற மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படி தூண்டுகிறார்களோ (அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு. ஆகவே, அல்லாஹ்வுடைய கட்டளைகளை) எவன் புறக்கணிக்கிறானோ (அது அவனுக்குத்தான் நஷ்டத்தை உண்டுபண்ணும். அல்லாஹ்வுக்கு ஒரு நஷ்டமும் ஏற்படாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ்தான் பெரும் சீமான், பெரும் புகழுடையவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif
இவர்கள் கருமித்தனம் காட்டுகிறார்கள். இன்னும், மக்களை கருமித்தனத்திற்கு ஏவுகிறார்கள் (-ஊக்குவிக்கிறார்கள், தூண்டுகிறார்கள்). யார் (அல்லாஹ்விற்கு கீழ்ப்படிவதை விட்டும்) விலகுவாரோ அவர் தனக்குத்தான் தீங்கிழைத்துக் கொண்டார். நிச்சயமாக அல்லாஹ்தான் மகா நிறைவானவன் (அவனுக்கு யாருடைய தேவையும் இல்லை), மகா புகழாளன். (எவரின் புறக்கணிப்பாலும் அவனது கண்ணியமும் புகழும் குறையாது.)
Tamil Translation - Omar Sharif - Abridged Version
இவர்கள் கருமித்தனம் காட்டுகிறார்கள், இன்னும் மக்களுக்கு கருமித்தனத்தை ஏவுகிறார்கள். யார் (அல்லாஹ்விற்கு கீழ்ப்படிவதை விட்டும்) விலகுவாரோ (அவர் தனக்குத்தான் தீங்கிழைத்துக் கொண்டார்.) நிச்சயமாக அல்லாஹ் தான் மகா நிறைவானவன் (அவனுக்கு யாருடைய தேவையும் இல்லை), மகா புகழாளன். (எவரின் புறக்கணிப்பாலும் அவனது புகழ் குறையாது.)
لَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِٱلْبَيِّنَٰتِ وَأَنزَلْنَا مَعَهُمُ ٱلْكِتَٰبَ وَٱلْمِيزَانَ لِيَقُومَ ٱلنَّاسُ بِٱلْقِسْطِ ۖ وَأَنزَلْنَا ٱلْحَدِيدَ فِيهِ بَأْسٌۭ شَدِيدٌۭ وَمَنَٰفِعُ لِلنَّاسِ وَلِيَعْلَمَ ٱللَّهُ مَن يَنصُرُهُۥ وَرُسُلَهُۥ بِٱلْغَيْبِ ۚ إِنَّ ٱللَّهَ قَوِىٌّ عَزِيزٌۭ ﴿25﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
25. நாம் நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டே அனுப்பி வைத்தோம். அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும் கொடுத்தோம். மனிதர்கள் நீதமாக நடந்து கொள்ளும் பொருட்டு தராசையும் கொடுத்தோம். இரும்பையும் நாமே படைத்தோம். அதில் பெரும் சக்தி இருக்கிறது; இன்னும் மனிதர்களுக்கு பல பயன்களும் உள்ளன. அல்லாஹ்வைக் (கண்ணால்) காணாமலேயே (அவனை நம்பிக்கை கொண்டு) இதன் மூலம் அவனுக்கும், அவனுடைய தூதருக்கும் உதவி செய்பவர்கள் யார் என்பதை அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் பலசாலியும் (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான்.
Tamil Translation - Omar Sharif
திட்டவட்டமாக நாம் நமது தூதர்களை தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு அனுப்பினோம். இன்னும், அவர்களுடன் வேதத்தையும் தராசையும் - மக்கள் (அதன் மூலம்) நீதத்தை நிலை நிறுத்துவதற்காக - நாம் இறக்கினோம். இன்னும், இரும்பையும் நாம் (உங்களுக்கு) உருவாக்கினோம் (-சுரங்கங்களிலிருந்து வெளியாக்கிக் கொடுத்தோம்). அதில் உறுதியான வலிமையும் மக்களுக்கு பல பலன்களும் உள்ளன. இன்னும், அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மறைவில் உதவி செய்பவரை (வெளிப்படையாக நீங்கள் அறியும்படி) அல்லாஹ் அறிவதற்காகவும் (அல்லாஹ் இரும்பைப் படைத்தான்). நிச்சயமாக அல்லாஹ் வலிமையாளன், மிகைத்தவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
திட்டவட்டமாக நாம் நமது தூதர்களை தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும் தராசையும், -மக்கள் (அதன் மூலம்) நீதத்தை நிலை நிறுத்துவதற்காக - நாம் இறக்கினோம். இன்னும் இரும்பையும் நாம் இறக்கினோம். அதில் கடுமையான வலிமையும் மக்களுக்கு பல பலன்களும் உள்ளன. இன்னும் அவனுக்கும் (-அல்லாஹ்விற்கும்) அவனது தூதர்களுக்கும் மறைவில் உதவி செய்கின்றவரை (வெளிப்படையாக) அல்லாஹ் அறிவதற்காகவும் (இரும்பை அல்லாஹ் படைத்தான்). நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமையாளன், மிகைத்தவன் ஆவான்.
وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًۭا وَإِبْرَٰهِيمَ وَجَعَلْنَا فِى ذُرِّيَّتِهِمَا ٱلنُّبُوَّةَ وَٱلْكِتَٰبَ ۖ فَمِنْهُم مُّهْتَدٍۢ ۖ وَكَثِيرٌۭ مِّنْهُمْ فَٰسِقُونَ ﴿26﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
26. நூஹையும், இப்ராஹீமையும் மெய்யாகவே நாம்தான் நம் தூதர்களாக அனுப்பி வைத்தோம். அவ்விருவர்களுடைய சந்ததிகளுக்குள்ளாகவே நபிப்பட்டத்தையும் வேதத்தையும் (சொந்தமாக) ஆக்கினோம். ஆயினும், நேரான வழியில் சென்றவர்கள் அவர்க(ள் சந்ததிக)ளில் சிலர்தான். அவர்களில் பெரும்பாலரோ பாவிகளாகிவிட்டனர்.
Tamil Translation - Omar Sharif
திட்டவட்டமாக நாம் நூஹையும் இப்ராஹீமையும் (நமது தூதர்களாக) அனுப்பினோம். இன்னும், அ(வ்விரு)வர்களின் சந்ததியில் நபித்துவத்தையும் வேதங்களையும் நாம் ஏற்படுத்தினோம். ஆக, அவர்க(ளுடைய சந்ததி)களில் நேர்வழி பெற்றவர்களும் உள்ளனர். இன்னும், அவர்க(ளுடைய சந்ததி)களில் அதிகமானவர்கள் பாவிகள் ஆவார்கள்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
திட்டவட்டமாக நாம் நூஹையும் இப்ராஹீமையும் (நமது தூதர்களாக) அனுப்பினோம். அ(வ்விரு)வர்களின் சந்ததியில் நபித்துவத்தையும் வேதங்களையும் நாம் ஆக்கினோம். அவர்களில் (-அவர்களின் சந்ததிகளில்) நேர்வழி பெற்றவர்களும் உள்ளனர். அவர்களில் (-அவர்களின் சந்ததிகளில்) அதிகமானவர்கள் பாவிகள் ஆவார்கள்.
ثُمَّ قَفَّيْنَا عَلَىٰٓ ءَاثَٰرِهِم بِرُسُلِنَا وَقَفَّيْنَا بِعِيسَى ٱبْنِ مَرْيَمَ وَءَاتَيْنَٰهُ ٱلْإِنجِيلَ وَجَعَلْنَا فِى قُلُوبِ ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ رَأْفَةًۭ وَرَحْمَةًۭ وَرَهْبَانِيَّةً ٱبْتَدَعُوهَا مَا كَتَبْنَٰهَا عَلَيْهِمْ إِلَّا ٱبْتِغَآءَ رِضْوَٰنِ ٱللَّهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا ۖ فَـَٔاتَيْنَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنْهُمْ أَجْرَهُمْ ۖ وَكَثِيرٌۭ مِّنْهُمْ فَٰسِقُونَ ﴿27﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
27. ஆகவே, (சென்றுபோன நூஹ், இப்ராஹீமுக்குப் பின்னர்) அவர்களுடைய வழியைப் பின்பற்றி (நடக்கக்கூடிய பல) தூதர்களை ஒருவருக்குப் பின் ஒருவராக அனுப்பி வைத்தோம். அவ்வாறே, மர்யமுடைய மகன் ஈஸாவையும் (அவர்களுக்குப் பின்னர், அவர்களைப் பின்பற்றி நடக்குமாறு) அனுப்பிவைத்தோம். அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் இவரைப் பின்பற்றியவர்களுடைய உள்ளங்களில், கருணையையும் இரக்கத்தையும் உண்டு பண்ணினோம். (உலகத்தின் எல்லா இன்பங்களையும் துறந்து விடக்கூடிய) துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது கடமையாக விதிக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய விரும்பி, அவர்களே அதை உண்டுபண்ணிக்கொண்டார்கள். அவ்வாறிருந்தும், அதை அனுசரிக்க வேண்டிய முறைப்படி அவர்கள் அனுசரிக்கவில்லை. ஆயினும், (நபியே!) அவர்களில் எவர்கள் (மெய்யாகவே உம்மை) நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுடைய கூலியை நாம் அவர்களுக்குக் கொடுப்போம். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (நபியே! உம்மை நிராகரிக்கின்ற) பாவிகளாகவே இருக்கின்றனர்.
Tamil Translation - Omar Sharif
பிறகு, அவர்களின் அடிச்சுவடுகளில் (இஸ்ரவேலர்களில்) நமது தூதர்களை நாம் தொடர்ந்து அனுப்பினோம். (இறுதியாக அவர்களை தொடர்ந்து) மர்யமுடைய மகன் ஈஸாவை அனுப்பினோம். அவருக்கு இன்ஜீலை கொடுத்தோம். அவரை (உண்மையாக) பின்பற்றியவர்களின் உள்ளங்களில் இரக்கத்தையும் கருணையையும் நாம் ஏற்படுத்தினோம். அவர்கள் துறவரத்தை மார்க்கத்தில் புதுமையாக ஏற்படுத்திக் கொண்டனர். நாம் அவர்கள் மீது அதை கடமையாக்கவில்லை. அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியே தவிர (வேறு ஒன்றுக்காக அவர்கள் அதை ஏற்படுத்தவில்லை). ஆனால், அ(ந்த துறவறத்)தை பேண வேண்டிய முறையில் அதை அவர்கள் பேணவில்லை. அவர்களில் இருந்து எவர்கள் (இந்த நபியையும் இந்த வேதத்தையும்) நம்பிக்கை கொள்வார்களோ அவர்களின் கூலியை நாம் அவர்களுக்குக் கொடுப்போம். இன்னும், அவர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையை மீறக்கூடிய) பாவிகள் ஆவார்கள்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
பிறகு, அவர்களின் அடிச்சுவடுகளில் நமது தூதர்களை நாம் தொடர்ந்து அனுப்பினோம். (இஸ்ரவேலர்களில் இறுதியாக) மர்யமுடைய மகன் ஈஸாவை நாம் பின்னால் அனுப்பினோம். அவருக்கு இன்ஜீலை கொடுத்தோம். அவரை (உண்மையாக) பின்பற்றியவர்களின் உள்ளங்களில் இரக்கத்தையும் கருணையையும் நாம் ஏற்படுத்தினோம். அவர்கள் துறவறத்தை மார்க்கத்தில் புதுமையாக ஏற்படுத்திக் கொண்டனர். நாம் அவர்கள் மீது அதை கடமையாக்கவில்லை. அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியே தவிர (வேறு ஒன்றுக்காக அவர்கள் அதை ஏற்படுத்தவில்லை). ஆனால் அதை (-அந்த துறவறத்தை) அதை பேணவேண்டிய முறையில் அதை அவர்கள் பேணவில்லை. அவர்களில் இருந்து எவர்கள் (இந்த நபியையும் இந்த வேதத்தையும்) நம்பிக்கை கொள்வார்களோ அவர்களின் கூலியை நாம் அவர்களுக்கு கொடுப்போம். அவர்களில் அதிகமானவர்கள் பாவிகள் ஆவார்கள்.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَءَامِنُوا۟ بِرَسُولِهِۦ يُؤْتِكُمْ كِفْلَيْنِ مِن رَّحْمَتِهِۦ وَيَجْعَل لَّكُمْ نُورًۭا تَمْشُونَ بِهِۦ وَيَغْفِرْ لَكُمْ ۚ وَٱللَّهُ غَفُورٌۭ رَّحِيمٌۭ ﴿28﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
28. ஆகவே, (ஈஸாவை) நம்பிக்கை கொண்ட (கிறிஸ்த)வர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, அவனுடைய இத்தூதரை (முஹம்மதை)யும் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுக்கு அவனுடைய அருளிலிருந்து (ஈஸாவை நம்பிக்கை கொண்டதற்கு ஒரு பங்கும், இத்தூதரை நம்பிக்கை கொண்டதற்கு ஒரு பங்கும், ஆக) இரண்டு பங்கு கூலி கொடுப்பான். உங்களுக்கு (நேரான வழியை அறிவிக்கக்கூடிய இந்த குர்ஆன் என்னும்) ஒளியையும் கொடுப்பான். அதன் பிரகாசத்தைக் கொண்டு நீங்கள் (நேரான வழியில்) செல்லலாம். (உங்கள்) குற்றங்களையும் உங்களுக்கு மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மகா கருணையுடையவனும் ஆவான்.
Tamil Translation - Omar Sharif
(முந்திய வேதங்களை நம்பிக்கை கொண்ட) நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! இன்னும், அவனது தூதரை நம்பிக்கை கொள்ளுங்கள்! அவன் உங்களுக்கு தனது கருணையிலிருந்து இரு மடங்கு பங்குகளைக் கொடுப்பான். இன்னும், உங்களுக்கு ஒளியை (நீதமான, ஒழுக்கமான, இலகுவான, நேர்வழிமிக்க சட்டங்களை உடைய அழகிய மார்க்கத்தை) ஏற்படுத்துவான். அதன் மூலம் (கண்ணியத்தோடு மக்களுக்கு மத்தியில்) நீங்கள் நடந்து செல்வீர்கள். இன்னும், அவன் உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! அவனது தூதரை நம்பிக்கை கொள்ளுங்கள்! அவன் உங்களுக்கு தனது கருணையிலிருந்து இரு மடங்கு பங்குகளைக் கொடுப்பான். இன்னும், உங்களுக்கு ஒளியை ஏற்படுத்துவான். அதன் மூலம் (கண்ணியத்தோடு மக்களுக்கு மத்தியில்) நீங்கள் நடந்து செல்வீர்கள். இன்னும், அவன் உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
لِّئَلَّا يَعْلَمَ أَهْلُ ٱلْكِتَٰبِ أَلَّا يَقْدِرُونَ عَلَىٰ شَىْءٍۢ مِّن فَضْلِ ٱللَّهِ ۙ وَأَنَّ ٱلْفَضْلَ بِيَدِ ٱللَّهِ يُؤْتِيهِ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ ﴿29﴾
Tamil Translation - Abdulhamid Baqawi
29. (இத்தூதரை நம்பிக்கை கொண்டவர்களுக்கு) அல்லாஹ்வுடைய அருளில் ஒரு பாகமும் கிடைக்காதென்று, வேதத்தை உடையவர்கள் எண்ணிக் கொள்ளாதிருக்கும் பொருட்டே (இதை அவன் உங்களுக்கு அறிவித்தான்). அருள் அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில் தான் இருக்கின்றன. அவன் விரும்பியவர்களுக்கு அதை அளிக்கிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif
(நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு இவ்வளவு நன்மைகளைக் கொடுத்தான்.) ஏனெனில், (இந்த தூதரை நம்பிக்கை கொள்ளாத) வேதக்காரர்கள் அல்லாஹ்வின் அருளில் எதன் மீதும் ஆற்றல் பெற மாட்டார்கள் என்பதையும்; நிச்சயமாக அருள் அல்லாஹ்வின் கரத்தில் இருக்கிறது, அவன் நாடுகிறவர்களுக்கு அதைக் கொடுக்கிறான் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்வதற்காக ஆகும். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif - Abridged Version
(அவன் உங்களுக்கு இவ்வளவு நன்மைகளைக் கொடுத்தான்.) ஏனெனில், (இந்த தூதரை நம்பிக்கை கொள்ளாத) வேதத்தை உடையவர்கள் அல்லாஹ்வின் அருளில் எதன் மீதும் ஆற்றல் பெற மாட்டார்கள் என்பதையும் நிச்சயமாக சிறப்பு அல்லாஹ்வின் கரத்தில் இருக்கின்றது, அவன் நாடுகின்றவர்களுக்கு அதைக் கொடுக்கின்றான் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்வதற்காக ஆகும். அல்லாஹ் மகத்தான சிறப்புடையவன்.