بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُ ﴿1﴾
Tamil Translation - Omar Sharif - Abridged Version
நிகழக்கூடிய மறுமை நிகழ்ந்து விட்டால்,
Compare up to three verified translation editions verse by verse, including editions in two different languages.
Changing languages or editions keeps the current surah and verse.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُ ﴿1﴾
நிகழக்கூடிய மறுமை நிகழ்ந்து விட்டால்,
لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ ﴿2﴾
அது நிகழ்வதை (யாராலும்) பொய்ப்பிக்க முடியாது.
خَافِضَةٌۭ رَّافِعَةٌ ﴿3﴾
(அது பாவிகளை நரகத்தில்) தாழ்த்தக்கூடியது. (நல்லவர்களை சொர்க்கத்தில்) உயர்த்தக்கூடியது.
إِذَا رُجَّتِ ٱلْأَرْضُ رَجًّۭا ﴿4﴾
பூமி பலமாக குலுக்கப்பட்டால்,
وَبُسَّتِ ٱلْجِبَالُ بَسًّۭا ﴿5﴾
மலைகள் தூள் தூளாக ஆக்கப்பட்டால்,
فَكَانَتْ هَبَآءًۭ مُّنۢبَثًّۭا ﴿6﴾
பரவுகின்ற (சூரிய) ஒளிக் கதிர்களைப் போல் அவை ஆகிவிடும்.
وَكُنتُمْ أَزْوَٰجًۭا ثَلَٰثَةًۭ ﴿7﴾
நீங்கள் மூன்று வகையினராக ஆகிவிடு வீர்கள்.
فَأَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ ﴿8﴾
அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள்! அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள் யார்?
وَأَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ ﴿9﴾
துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள்! துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள் யார்?
وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ ﴿10﴾
(உலகில் நன்மையில்) முந்தியவர்கள்தான் (மறுமையில் சொர்க்கப் பதவிகளில்) முந்தியவர்கள் ஆவர்.
أُو۟لَٰٓئِكَ ٱلْمُقَرَّبُونَ ﴿11﴾
அவர்கள் (அல்லாஹ்வின் அருகில்) மிக நெருக்கமானவர்கள்.
فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ ﴿12﴾
“நயீம்” இன்பங்கள் நிறைந்த சொர்க்கங்களில் இருப்பார்கள்.
ثُلَّةٌۭ مِّنَ ٱلْأَوَّلِينَ ﴿13﴾
முந்தியவர்களில் அதிகமானவர்கள் (அதில் நுழைவார்கள்).
وَقَلِيلٌۭ مِّنَ ٱلْءَاخِرِينَ ﴿14﴾
இன்னும் பின்னோரில் குறைவானவர்கள் (அதில் நுழைவார்கள்).
عَلَىٰ سُرُرٍۢ مَّوْضُونَةٍۢ ﴿15﴾
ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டில்களின் மீது (அவர்கள் இருப்பார்கள்).
مُّتَّكِـِٔينَ عَلَيْهَا مُتَقَٰبِلِينَ ﴿16﴾
அவற்றின் மீது சாய்ந்தவர்களாக ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக இருப்பார்கள்.
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌۭ مُّخَلَّدُونَ ﴿17﴾
அவர்கள் மீது நிரந்தரமான சிறுவர்கள் சுற்றி வருவார்கள்,
بِأَكْوَابٍۢ وَأَبَارِيقَ وَكَأْسٍۢ مِّن مَّعِينٍۢ ﴿18﴾
குவளைகளுடனும் கூஜாக்களுடனும் தூய்மையான மது நிறைந்த கிண்ணங்களுடனும் (சுற்றி வருவார்கள்).
لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ ﴿19﴾
அதனால் அவர்கள் தலைவலிக்கும் ஆளாக மாட்டார்கள். அவர்கள் அறிவு தடுமாறவும் மாட்டார்கள்.
وَفَٰكِهَةٍۢ مِّمَّا يَتَخَيَّرُونَ ﴿20﴾
அவர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கின்ற பழங்களுடனும்,
وَلَحْمِ طَيْرٍۢ مِّمَّا يَشْتَهُونَ ﴿21﴾
அவர்கள் மனம் விரும்புகின்றவற்றின் பறவை மாமிசங்களுடனும் (அந்த சிறுவர்கள் சுற்றுவார்கள்).
وَحُورٌ عِينٌۭ ﴿22﴾
இன்னும், வெள்ளை நிறமான கண்ணழகிகளான வெண்மையான கன்னிகள் (அவர்களுக்கு மனைவிகளாக இருப்பார்கள்).
كَأَمْثَٰلِ ٱللُّؤْلُؤِ ٱلْمَكْنُونِ ﴿23﴾
(அந்த அழகிகள்) பாதுகாக்கப்பட்ட முத்துக்களைப் போல் (இருப்பார்கள்).
جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ ﴿24﴾
அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு கூலியாக (இந்த அருள்கள் அவர்களுக்கு கிடைக்கும்).
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًۭا وَلَا تَأْثِيمًا ﴿25﴾
அதில் அவர்கள் வீண் பேச்சுகளையும் பாவமான பேச்சுகளையும் செவியுற மாட்டார்கள்.
إِلَّا قِيلًۭا سَلَٰمًۭا سَلَٰمًۭا ﴿26﴾
ஸலாம், ஸலாம் என்ற பேச்சைத் தவிர (வேறு பேச்சை செவியுற மாட்டார்கள்).
وَأَصْحَٰبُ ٱلْيَمِينِ مَآ أَصْحَٰبُ ٱلْيَمِينِ ﴿27﴾
வலது பக்கம் உடையவர்கள்! வலது பக்கம் உடையவர்கள் யார்!
فِى سِدْرٍۢ مَّخْضُودٍۢ ﴿28﴾
அவர்கள் முட்கள் நீக்கப்பட்ட இலந்தை மரங்களின் அருகிலும்,
وَطَلْحٍۢ مَّنضُودٍۢ ﴿29﴾
குலை குலையாக தொங்குகின்ற வாழை மரங்களுக்கு அருகிலும்,
وَظِلٍّۢ مَّمْدُودٍۢ ﴿30﴾
நீங்காத நிழல்களிலும்,
وَمَآءٍۢ مَّسْكُوبٍۢ ﴿31﴾
ஓடிக்கொண்டே இருக்கின்ற நீருக்கு அருகிலும்,
وَفَٰكِهَةٍۢ كَثِيرَةٍۢ ﴿32﴾
அதிகமான பழங்களுக்கு அருகிலும்,
لَّا مَقْطُوعَةٍۢ وَلَا مَمْنُوعَةٍۢ ﴿33﴾
தீர்ந்துவிடாத, தடுக்கப்படாத (பழங்களுக்கு அருகிலும்),
وَفُرُشٍۢ مَّرْفُوعَةٍ ﴿34﴾
உயர்வான விரிப்புகளிலும் (இருப்பார்கள்).
إِنَّآ أَنشَأْنَٰهُنَّ إِنشَآءًۭ ﴿35﴾
அவர்களை (-சொர்க்க கன்னிகளை) நிச்சயமாக நாம் முற்றிலும் புதிதாகவே உருவாக்குவோம்.
فَجَعَلْنَٰهُنَّ أَبْكَارًا ﴿36﴾
அவர்களை நாம் (எப்போதும்) கன்னிப் பெண்களாக ஆக்குவோம்.
عُرُبًا أَتْرَابًۭا ﴿37﴾
கணவனை நேசிப்பவர்களாக, சம வயதுடையவர்களாக ஆக்குவோம்.
لِّأَصْحَٰبِ ٱلْيَمِينِ ﴿38﴾
வலப் பக்கமுடையவர்களுக்காக (நாம் அவர்களை படைத்திருக்கின்றோம்).
ثُلَّةٌۭ مِّنَ ٱلْأَوَّلِينَ ﴿39﴾
(வலப் பக்கமுடையவர்கள்) முன்னோரிலும் அதிகமானவர்கள்.
وَثُلَّةٌۭ مِّنَ ٱلْءَاخِرِينَ ﴿40﴾
இன்னும் பின்னோரிலும் அதிகமானவர்கள் ஆவர்.
وَأَصْحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصْحَٰبُ ٱلشِّمَالِ ﴿41﴾
இடப்பக்கமுடையவர்கள்! இடப்பக்கமுடையவர்கள் யார்?
فِى سَمُومٍۢ وَحَمِيمٍۢ ﴿42﴾
கடுமையான வெப்பக் காற்றிலும் நன்கு கொதிக்கின்ற சுடு நீரிலும்,
وَظِلٍّۢ مِّن يَحْمُومٍۢ ﴿43﴾
கரும் புகையின் நிழலிலும் (அவர்கள் இருப்பார்கள்).
لَّا بَارِدٍۢ وَلَا كَرِيمٍ ﴿44﴾
(இளைப்பாறுவதற்கு ஏதுவாக அந்த புகை) குளிர்ந்திருக்காது, (நுகர்வதற்குத் தோதுவாக) நறுமணம் உடையதாகவும் இருக்காது.
إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ ﴿45﴾
இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் (உலகத்தில்) சுகவாசிகளாக இருந்தனர்.
وَكَانُوا۟ يُصِرُّونَ عَلَى ٱلْحِنثِ ٱلْعَظِيمِ ﴿46﴾
பெரும் பாவத்தின் மீது பிடிவாதம் பிடித்தவர்களாக இருந்தனர்.
وَكَانُوا۟ يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًۭا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ ﴿47﴾
“நாங்கள் இறந்துவிட்டால், மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டால், நிச்சயமாக (இந்த நிலைக்கு நாங்கள் மாறிய பின்னர் மீண்டும் உயிர் கொடுத்து) நாங்கள் எழுப்பப்படுவோமா?
أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ ﴿48﴾
முன்னோர்களான எங்கள் மூதாதைகளுமா (எங்களுடன் எழுப்பப்படுவார்கள்)?
قُلْ إِنَّ ٱلْأَوَّلِينَ وَٱلْءَاخِرِينَ ﴿49﴾
(நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாக முன்னோரும் பின்னோரும்
لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوْمٍۢ مَّعْلُومٍۢ ﴿50﴾
(அல்லாஹ்விடம்) அறியப்பட்ட (மறுமை) நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلْمُكَذِّبُونَ ﴿51﴾
பிறகு, பொய்ப்பிக்கின்ற வழிகேடர்களே! நிச்சயமாக நீங்கள்,
لَءَاكِلُونَ مِن شَجَرٍۢ مِّن زَقُّومٍۢ ﴿52﴾
“ஸக்கூம்” (-முட்கள் நிறைந்த கள்ளி) மரத்தில் இருந்துதான் சாப்பிடுவீர்கள்.
فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ ﴿53﴾
அதில் இருந்து வயிறுகளை நிரப்புவீர்கள்.
فَشَٰرِبُونَ عَلَيْهِ مِنَ ٱلْحَمِيمِ ﴿54﴾
அதற்கு மேலாக கடுமையாக கொதிக்கின்ற சுடு நீரை குடிப்பீர்கள்.
فَشَٰرِبُونَ شُرْبَ ٱلْهِيمِ ﴿55﴾
தாகித்த ஒட்டகங்கள் குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்.
هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ ٱلدِّينِ ﴿56﴾
இதுதான் கூலி நாளில் அவர்களுக்குரிய விருந்தோம்பலாகும்.
نَحْنُ خَلَقْنَٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ ﴿57﴾
நாம்தான் உங்களைப் படைத்தோம். நீங்கள் (இறந்த பின்னர் மீண்டும் எழுப்பப்படுவதை) உண்மை என நம்பமாட்டீர்களா?
أَفَرَءَيْتُم مَّا تُمْنُونَ ﴿58﴾
நீங்கள் (உங்கள் மனைவிகளின் கருவறையில்) செலுத்துகின்ற இந்திரியத்தைப் பற்றி அறிவியுங்கள்!
ءَأَنتُمْ تَخْلُقُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلْخَٰلِقُونَ ﴿59﴾
அதை (-அந்த இந்திரியத்தையும் அதில் இருந்து உருவாகுகின்ற குழந்தையையும்) நீங்கள் படைக்கின்றீர்களா? அல்லது நாம்தான் (அதை) படைப்பவர்களா?
نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ ٱلْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ ﴿60﴾
நாம்தான் உங்களுக்கு மத்தியில் மரணத்தை (அது யாருக்கு, எப்போது வரும் என்று) நிர்ணயித்தோம். இன்னும் நாங்கள் இயலாதவர்கள் இல்லை,
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمْثَٰلَكُمْ وَنُنشِئَكُمْ فِى مَا لَا تَعْلَمُونَ ﴿61﴾
உங்கள் உருவங்களை மாற்றுவதற்கும், நீங்கள் அறியாத ஒன்றில் (-புதிய ஓர் உருவத்தில்) உங்களை உருவாக்கிவிடுவதற்கும் (நாங்கள் இயலாதவர்கள் இல்லை).
وَلَقَدْ عَلِمْتُمُ ٱلنَّشْأَةَ ٱلْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ ﴿62﴾
முதல் முறை படைத்திருப்பதை (அதை செய்தவன் யார் என்பதை) நீங்கள் திட்டவட்டமாக அறிந்தீர்கள். (இதன் மூலம்) நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
أَفَرَءَيْتُم مَّا تَحْرُثُونَ ﴿63﴾
நீங்கள் (பூமியில்) உழு(து பயிரிடு)கின்றீர்களே அதைப் பற்றி அறிவியுங்கள்!
ءَأَنتُمْ تَزْرَعُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلزَّٰرِعُونَ ﴿64﴾
அதை நீங்கள் முளைக்க வைக்கின்றீர்களா? அல்லது நாம்தான் முளைக்க வைக்கின்றோமா?
لَوْ نَشَآءُ لَجَعَلْنَٰهُ حُطَٰمًۭا فَظَلْتُمْ تَفَكَّهُونَ ﴿65﴾
நாம் நாடினால் அதை குப்பையாக (அதைப் போன்று) ஆக்கிவிடுவோம். நீங்கள் ஆச்சரியப்படுகின்றவர்களாக ஆகி இருப்பீர்கள்.
إِنَّا لَمُغْرَمُونَ ﴿66﴾
“நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள்” (என்றும்)
بَلْ نَحْنُ مَحْرُومُونَ ﴿67﴾
“மாறாக, நாங்கள் பெரும் இழப்புக்குள்ளானவர்கள்” (என்றும் அப்போது நீங்கள் கூறுவீர்கள்).
أَفَرَءَيْتُمُ ٱلْمَآءَ ٱلَّذِى تَشْرَبُونَ ﴿68﴾
நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைப் பற்றி அறிவியுங்கள்!
ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ ٱلْمُزْنِ أَمْ نَحْنُ ٱلْمُنزِلُونَ ﴿69﴾
அதை கார்மேகத்தில் இருந்து நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம்தான் (அதை மேகத்தில் இருந்து) இறக்குகின்றவர்களா?
لَوْ نَشَآءُ جَعَلْنَٰهُ أُجَاجًۭا فَلَوْلَا تَشْكُرُونَ ﴿70﴾
நாம் நாடினால் அதை உப்பு நீராக ஆக்கிவிடுவோம். நீங்கள் (இந்த மா பெரும் அருட்கொடைக்காக இறைவனுக்கு) நன்றிசெலுத்த வேண்டாமா?
أَفَرَءَيْتُمُ ٱلنَّارَ ٱلَّتِى تُورُونَ ﴿71﴾
நீங்கள் தீ மூட்டுகின்ற நெருப்பைப் பற்றி அறிவியுங்கள்!
ءَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَآ أَمْ نَحْنُ ٱلْمُنشِـُٔونَ ﴿72﴾
அதன் மரத்தை நீங்கள் உருவாக்கினீர்களா? அல்லது நாம்தான் (அதை) உருவாக்குகின்றோமா?
نَحْنُ جَعَلْنَٰهَا تَذْكِرَةًۭ وَمَتَٰعًۭا لِّلْمُقْوِينَ ﴿73﴾
நாம் அதை (-அந்த உலக நெருப்பை மறுமையின் நரக நெருப்பைப் பற்றி உங்களுக்கு) ஒரு நினைவூட்டலாகவும் பயணிகளுக்கு ஒரு பலனாகவும் ஆக்கினோம்.
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ ﴿74﴾
ஆகவே, (நபியே!) மகத்தான உமது இறைவனின் பெயரை துதிப்பீராக!
۞ فَلَآ أُقْسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ ﴿75﴾
(தெற்கு திசையில்) நட்சத்திரங்கள் விழுகின்ற (-மறைகின்ற) இடங்கள் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
وَإِنَّهُۥ لَقَسَمٌۭ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ ﴿76﴾
நீங்கள் அறிந்து கொண்டால் நிச்சயமாக இது மாபெரும் சத்தியமாகும்.
إِنَّهُۥ لَقُرْءَانٌۭ كَرِيمٌۭ ﴿77﴾
நிச்சயமாக இது கண்ணியமான குர்ஆனாகும்,
فِى كِتَٰبٍۢ مَّكْنُونٍۢ ﴿78﴾
பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கிறது.
لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلْمُطَهَّرُونَ ﴿79﴾
மிகவும் பரிசுத்தமானவர்களைத் தவிர (மற்றவர்கள்) இதைத் தொடமாட்டார்கள்.
تَنزِيلٌۭ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ ﴿80﴾
(இது) அகிலங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும்.
أَفَبِهَٰذَا ٱلْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ ﴿81﴾
இந்த பேச்சை (-குர்ஆனை) நீங்கள் அலட்சியம் செய்(து இதில் உள்ள உண்மை அத்தாட்சிகளை நீங்கள் பொய்ப்பிக்)கின்றீர்களா?
وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ ﴿82﴾
நிச்சயமாக நீங்கள் (இதை) பொய்ப்பிப்பதையே (அல்லாஹ் உங்கள் மீது செய்த அருள்களுக்கு) உங்கள் நன்றியாக ஆக்கிக் கொண்டீர்களா?
فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ ﴿83﴾
ஆக, (மரணிப்பவரின் உயிர் பிரிகின்ற நிலையில்) அது தொண்டைக் குழியை அடைந்தபோது,
وَأَنتُمْ حِينَئِذٍۢ تَنظُرُونَ ﴿84﴾
நீங்கள் அந்நேரத்தில் (அவருக்கு அருகில் இருந்து கொண்டு அவரது நிலையை உங்கள் கண்களால்) பார்க்கிறீர்கள். (ஆனாலும் உங்களால் அவருக்கு எவ்வித உதவியும் செய்ய முடியவில்லை.)
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَٰكِن لَّا تُبْصِرُونَ ﴿85﴾
நாம் (-நமது வானவர்கள்) உங்களை விட அவருக்கு மிக அருகில் இருக்கின்றோம். என்றாலும் நீங்கள் பார்க்க முடியாது. (உயிரை வாங்கும் போது வானவர்கள் அருகில் இருந்தும் அவர்களை மனிதர்களால் பார்க்க முடியாது.)
فَلَوْلَآ إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ ﴿86﴾
ஆக, நீங்கள் (மறுமையில் விசாரிக்கப்பட்டு) கூலி கொடுக்கப்படாதவர்களாக இருந்தால்,
تَرْجِعُونَهَآ إِن كُنتُمْ صَٰدِقِينَ ﴿87﴾
(அந்த உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அதை (-அந்த உயிரை) நீங்கள் திரும்ப கொண்டு வந்திருக்கலாமே?
فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُقَرَّبِينَ ﴿88﴾
ஆக, (மரணித்தவர் அல்லாஹ்விற்கு) நெருக்கமானவர்களில் (ஒருவராக) இருந்தால்,
فَرَوْحٌۭ وَرَيْحَانٌۭ وَجَنَّتُ نَعِيمٍۢ ﴿89﴾
(அவருக்கு மறுமையில்) இறையருளும் (நல்ல) உணவும் “நயீம்” என்ற இன்பம் நிறைந்த சொர்க்கமும் உண்டு.
وَأَمَّآ إِن كَانَ مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ ﴿90﴾
ஆக, (இறந்தவர்) வலப்பக்கம் உடையவர்களில் (ஒருவராக) இருந்தால்,
فَسَلَٰمٌۭ لَّكَ مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ ﴿91﴾
(ஓ நல்லவரே!) வலப்பக்கம் உடையவர்களில் உள்ள உமக்கு ஸலாம் உண்டாகட்டும்.
وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ ﴿92﴾
ஆக, (இறந்த) அவர் வழிகெட்டவர்களான பொய்ப்பித்தவர்களில் (ஒருவராக) இருந்தால்,
فَنُزُلٌۭ مِّنْ حَمِيمٍۢ ﴿93﴾
கடுமையாக கொதிக்கின்ற சுடு நீரின் விருந்தும்
وَتَصْلِيَةُ جَحِيمٍ ﴿94﴾
நரகத்தில் வைத்து நெருப்பில் பொசுக்குவதும்தான் (அவருக்கு கிடைக்கும்).
إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلْيَقِينِ ﴿95﴾
நிச்சயமாக இதுதான் மிக உறுதியான உண்மையாகும்.
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ ﴿96﴾
ஆக, மகத்தான உமது இறைவனின் பெயரை துதிப்பீராக!