Skip to content
Text size 100%
Translation comparison

Compare At-Taghabun Quran translations

Compare up to three verified translation editions verse by verse, including editions in two different languages.

Tamil editions (choose up to 3)

Changing languages or editions keeps the current surah and verse.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ يُسَبِّحُ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۖ لَهُ ٱلْمُلْكُ وَلَهُ ٱلْحَمْدُ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌ ﴿1﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

1. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் (தொடர்ந்து) அல்லாஹ்வைத் துதிக்கின்றன. (இவற்றின்) ஆட்சியும் அவனுக்குரியதே! ஆகவே, அவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. அனைத்தின் மீதும் அவன் ஆற்றலுடையவன் ஆவான்.

Tamil Translation - Omar Sharif

நயவஞ்சகர்கள் உம்மிடம் வந்தால், “நிச்சயமாக நீர் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் சாட்சி பகருகிறோம்” என்று கூறுவார்கள். நிச்சயமாக நீர் அவனது தூதர்தான் என்று அல்லாஹ் நன்கறிவான். நிச்சயமாக நயவஞ்சகர்கள் பொய்யர்கள்தான் என்று அல்லாஹ் சாட்சி பகருகிறான்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அல்லாஹ்வை துதிக்கின்றனர். அவனுக்கே ஆட்சிகள் அனைத்தும் உரியன. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன்தான் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.

هُوَ ٱلَّذِى خَلَقَكُمْ فَمِنكُمْ كَافِرٌۭ وَمِنكُم مُّؤْمِنٌۭ ۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ ﴿2﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

2. அவன்தான் உங்களைப் படைத்தவன். (அவ்வாறிருந்தும் அவனை) நிராகரிப்பவர்களும் உங்களில் உண்டு. (அவனை) நம்பிக்கை கொள்பவர்களும் உங்களில் உண்டு. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குகிறான்.

Tamil Translation - Omar Sharif

அவன்தான் உங்களைப் படைத்தான். ஆக, உங்களில் நிராகரிப்பாளரும் இருக்கிறார். உங்களில் நம்பிக்கையாளரும் இருக்கிறார். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவன்தான் உங்களைப் படைத்தான். உங்களில் நிராகரிப்பாளரும் இருக்கின்றார். உங்களில் நம்பிக்கையாளரும் இருக்கின்றார். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.

خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ ۖ وَإِلَيْهِ ٱلْمَصِيرُ ﴿3﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

3. உண்மையான காரணத்திற்கே வானங்களையும் பூமியையும் படைத்திருக்கிறான். அவனே உங்கள் உருவத்தை அமைத்து, அதை மிக அழகாகவும் ஆக்கிவைத்தான். அவனிடம்தான் (நீங்கள் அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கிறது.

Tamil Translation - Omar Sharif

வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்திற்காக அவன் படைத்தான். இன்னும், அவன் உங்களை உருவமைத்தான். ஆக, உங்கள் உருவங்களை அழகாக்கினான். அவன் பக்கமே (உங்கள்) மீட்சி இருக்கிறது.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்திற்காக அவன் படைத்தான். அவன் உங்களுக்கு உருவமைத்தான். உங்கள் உருவங்களை அழகாக்கினான். அவன் பக்கமே (உங்கள்) மீளுமிடம் இருக்கின்றது.

يَعْلَمُ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَيَعْلَمُ مَا تُسِرُّونَ وَمَا تُعْلِنُونَ ۚ وَٱللَّهُ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ ﴿4﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

4. வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அவன் நன்கறிவதுடன், நீங்கள் இரகசியமாகச் செய்வதையும் நீங்கள் பகிரங்கமாகச் செய்வதையும் அவன் நன்கறிகிறான். (இது மட்டுமா? உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றையும் அல்லாஹ் நன்கறிகிறான்.

Tamil Translation - Omar Sharif

வானங்கள், இன்னும் பூமியில் உள்ளவற்றை அவன் நன்கறிவான். இன்னும், நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அவன் நன்கறிவான். (மனிதர்களின்) நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

வானங்கள், இன்னும் பூமியில் உள்ளவற்றை அவன் நன்கறிவான். நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அவன் நன்கறிவான். (மனிதர்களின்) நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்.

أَلَمْ يَأْتِكُمْ نَبَؤُا۟ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَبْلُ فَذَاقُوا۟ وَبَالَ أَمْرِهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ ﴿5﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

5. (மனிதர்களே!) உங்களுக்கு முன்னர் இருந்த நிராகரித்தவர்களின் செய்தி உங்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்கள் தங்கள் தீய செயலின் பலனை (இவ்வுலகில்) அனுபவித்ததுடன், (மறுமையிலும்) அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.

Tamil Translation - Omar Sharif

இதற்கு முன்னர் நிராகரித்தவர்களின் செய்தி உங்களுக்கு வரவில்லையா? ஆக, அவர்களோ தங்களது (பாவமான) காரியத்தின் தீய முடிவை (இவ்வுலகில்) சுவைத்தனர். இன்னும், (மறுமையில்) துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

இதற்கு முன்னர் நிராகரித்தவர்களின் செய்தி உங்களுக்கு வரவில்லையா? அவர்கள் தங்கள் காரியத்தின் தீய முடிவை (இவ்வுலகில்) சுவைத்தனர். (மறுமையிலும்) அவர்களுக்கு வலி தரக்கூடிய தண்டனை உண்டு.

ذَٰلِكَ بِأَنَّهُۥ كَانَت تَّأْتِيهِمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ فَقَالُوٓا۟ أَبَشَرٌۭ يَهْدُونَنَا فَكَفَرُوا۟ وَتَوَلَّوا۟ ۚ وَّٱسْتَغْنَى ٱللَّهُ ۚ وَٱللَّهُ غَنِىٌّ حَمِيدٌۭ ﴿6﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

6. இதன் காரணமாவது: நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களுக்காக அனுப்பப்பட்ட (நம்) தூதர்கள் அவர்களிடம் வந்து கொண்டே இருந்தார்கள். எனினும் அவர்களோ ‘‘(நம்மைப் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேரான வழியைக் காட்டிவிடுவார்?'' என்று கூறி அவர்களை நிராகரித்துப் புறக்கணித்து விட்டனர். அல்லாஹ்வும் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. அல்லாஹ் (இவர்களின்) தேவையற்றவனும், புகழுடையவனும் ஆவான்.

Tamil Translation - Omar Sharif

அதற்கு காரணம், நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டிருந்தனர். ஆக, “மனிதர்களா எங்களுக்கு நேர்வழி காட்டுவார்கள்?” என்று அவர்கள் (ஏளனமாக) கூறினார்கள். ஆகவே, அவர்கள் நிராகரித்தனர். இன்னும் (நேர்வழியை விட்டும்) விலகினார்கள். அல்லாஹ்வும் அவர்களை விட்டு தேவையற்றவனாக இருக்கிறான். அல்லாஹ் முற்றிலும் நிறைவானவன் (படைப்புகளிடம் எவ்வித தேவையும் அற்றவன்), மகா புகழுக்குரியவன் ஆவான்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அதற்கு காரணம், நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டிருந்தனர். “மனிதர்களா எங்களுக்கு நேர்வழி காட்டுவார்கள்?” என்று அவர்கள் (ஏளனமாக) கூறினார்கள். ஆகவே, அவர்கள் நிராகரித்தனர், (நேர்வழியை விட்டும்) விலகினார்கள். அல்லாஹ்வும் (அவர்களை விட்டும்) தேவையற்றவனாக இருக்கின்றான். அல்லாஹ் மகா செல்வந்தன், மகா புகழுக்குரியவன்.

زَعَمَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَن لَّن يُبْعَثُوا۟ ۚ قُلْ بَلَىٰ وَرَبِّى لَتُبْعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلْتُمْ ۚ وَذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٌۭ ﴿7﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

7. (மரணித்த பின்னர் உயிர் கொடுத்து) எழுப்பப்பட மாட்டோம் என்று நிச்சயமாக நிராகரிப்பவர்கள் எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘அவ்வாறல்ல. என் இறைவன் மீது சத்தியமாக! மெய்யாகவே நீங்கள் எழுப்பப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பவற்றைப் பற்றி பின்னர் நீங்கள் அறிவுறுத்தவும் படுவீர்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதே.”

Tamil Translation - Omar Sharif

“அவர்கள் (மீண்டும் உயிர்கொடுத்து) அறவே எழுப்பப்பட மாட்டார்கள்” என்று நிராகரித்தவர்கள் பிதற்றுகிறார்கள். (நபியே!) நீர் கூறுவீராக! “ஏன் இல்லை! என் இறைவன் மீது சத்தியமாக நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள். பிறகு, நீங்கள் செய்தவற்றை நிச்சயமாக நீங்கள் அறிவித்துக் கொடுக்கப்படுவீர்கள். அது அல்லாஹ்விற்கு மிக எளிதானதே!”

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர்கள் (மீண்டும் உயிர்கொடுத்து) அறவே எழுப்பப்பட மாட்டார்கள் என்று நிராகரித்தவர்கள் பிதற்றுகின்றனர். (நபியே!) நீர் கூறுவீராக! ஏன் இல்லை! என் இறைவன் மீது சத்தியமாக நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள். பிறகு நீங்கள் செய்தவற்றை நிச்சயமாக உங்களுக்கு அறிவிக்கப்படும். அது அல்லாஹ்விற்கு மிக எளிதானதே!

فَـَٔامِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَٱلنُّورِ ٱلَّذِىٓ أَنزَلْنَا ۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌۭ ﴿8﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

8. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவன் இறக்கிவைத்த (இவ்வேத மென்னும்) பிரகாசத்தையும் நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்.

Tamil Translation - Omar Sharif

ஆகவே, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் (குர்ஆன் எனும்) நாம் இறக்கிய ஒளியையும் நம்பிக்கை கொள்ளுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

ஆகவே, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நாம் இறக்கிய ஒளியையும் (-இந்த குர்ஆனையும்) நம்பிக்கை கொள்ளுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்.

يَوْمَ يَجْمَعُكُمْ لِيَوْمِ ٱلْجَمْعِ ۖ ذَٰلِكَ يَوْمُ ٱلتَّغَابُنِ ۗ وَمَن يُؤْمِنۢ بِٱللَّهِ وَيَعْمَلْ صَٰلِحًۭا يُكَفِّرْ عَنْهُ سَيِّـَٔاتِهِۦ وَيُدْخِلْهُ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًۭا ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ ﴿9﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

9. ஒன்று கூட்டப்படும் (மறுமை) நாளில் அவன் உங்களை ஒன்று சேர்ப்பான். அதுதான் (பாவிகளுக்கு) நஷ்டம் உண்டாக்கும் நாளாகும். எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவத்திற்கு (அவற்றைப்) பரிகாரமாக்கி, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் அவரைப் புகுத்திவிடுகிறான். என்றென்றுமே அதில் அவர் தங்கிவிடுவார். இதுதான் மிக மகத்தான வெற்றியாகும்.

Tamil Translation - Omar Sharif

ஒன்று சேர்க்கப்படும் நாளுக்காக அவன் உங்களை ஒன்று சேர்க்கும் நாளை நினைவு கூருங்கள்! அதுதான் (சிலைகளை வணங்கிய மக்களும் இஸ்லாமை நிராகரித்த மக்களும்) ஏமாறுகின்ற நாளாகும். யார் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நன்மையை செய்வார்களோ அவன் அவர்களை விட்டும் அவர்களின் பாவங்களை போக்கிவிடுவான். இன்னும், அவர்களை சொர்க்கங்களில் பிரவேசிக்க வைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அவற்றில் நிரந்தரமாக எப்போதும் (தங்கி) இருப்பார்கள். இதுதான் மகத்தான (பாக்கியமிக்க) வெற்றியாகும்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

ஒன்று சேர்க்கப்படும் நாளுக்காக அவன் உங்களை ஒன்று சேர்க்கும் நாளை நினைவு கூருங்கள்! அதுதான் ஏமாறுகின்ற நாளாகும். யார் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நன்மையை செய்வார்களோ அவன் அவர்களை விட்டும் அவர்களின் பாவங்களை போக்கிவிடுவான். அவர்களை சொர்க்கங்களில் நுழைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அவற்றில் நிரந்தரமாக எப்போதும் (தங்கி) இருப்பார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.

وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَآ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ خَٰلِدِينَ فِيهَا ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ ﴿10﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

10. எவர்கள் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாசிகளே. அதில் என்றென்றும் அவர்கள் தங்கிவிடுவார்கள். அது மகா கெட்ட சேரும் இடமாகும்.

Tamil Translation - Omar Sharif

எவர்கள் நிராகரித்தார்களோ, இன்னும், நமது வசனங்களை பொய்ப்பித்தார்களோ அவர்கள்தான் நரக வாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கி இருப்பார்கள். மீளுமிடங்களில் அது மிகக் கெட்டதாகும்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

எவர்கள் நிராகரித்தார்களோ, இன்னும் நமது வசனங்களை பொய்ப்பித்தார்களோ அவர்கள்தான் நரக வாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கி இருப்பார்கள். மீளுமிடங்களில் அது மிகக் கெட்டதாகும்.

مَآ أَصَابَ مِن مُّصِيبَةٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۗ وَمَن يُؤْمِنۢ بِٱللَّهِ يَهْدِ قَلْبَهُۥ ۚ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۭ ﴿11﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

11. அல்லாஹ்வுடைய அனுமதியின்றி ஒரு தீங்கும் (எவரையும்) வந்தடையாது. ஆகவே, எவர் அல்லாஹ்வை நம்பிக்கைகொள்கிறாரோ, அவருடைய உள்ளத்தை(ச் சகிப்பு, பொறுமை என்ற) நேரான வழியில் நடத்துகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்.

Tamil Translation - Omar Sharif

எந்த சோதனையும் (யாருக்கும்) ஏற்படாது, அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல். யார் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வாரோ அவரின் உள்ளத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவான். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

எந்த சோதனையும் (யாருக்கும்) ஏற்படாது, அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல். யார் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வாரோ அவரின் உள்ளத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவான். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.

وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ ۚ فَإِن تَوَلَّيْتُمْ فَإِنَّمَا عَلَىٰ رَسُولِنَا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ ﴿12﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

12. அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து நடங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள். நீங்கள் புறக்கணித்தால் (அது உங்களுக்குத்தான் நஷ்டம். ஏனென்றால்,) நம் தூதர் மீதுள்ள கடமையெல்லாம், அவர் தன் தூதைப் பகிரங்கமாக எடுத்துரைப்பதுதான்.

Tamil Translation - Omar Sharif

அல்லாஹ்விற்கு கீழ்ப்படியுங்கள்! இன்னும், தூதருக்கு கீழ்ப்படியுங்கள்! ஆக, நீங்கள் புறக்கணித்து விலகினால் (நமது தூதருக்கு நஷ்டமில்லை. ஏனெனில்,) நமது தூதர் மீதுள்ள கடமை எல்லாம் (உங்களுக்கு அல்லாஹ்வின் கட்டளையை) தெளிவாக எடுத்துரைப்பதுதான்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அல்லாஹ்விற்கு கீழ்ப்படியுங்கள்! இன்னும் தூதருக்கு கீழ்ப்படியுங்கள்! நீங்கள் விலகினால் (நமது தூதருக்கு நஷ்டமில்லை. ஏனெனில்,) நமது தூதர் மீதுள்ள கடமை எல்லாம் தெளிவாக எடுத்துரைப்பதுதான்.

ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ ﴿13﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

13. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள்.

Tamil Translation - Omar Sharif

அல்லாஹ் - அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. (ஈமான் கொண்ட) நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கவும்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அல்லாஹ் - அவனைத் தவிர உண்மையில் கடவுள் வேறு யாரும் அறவே இல்லை. அல்லாஹ்வின் மீதே நம்பிக்கையாளர்கள் நம்பிக்கை - தவக்குல் - வைக்கவும்.

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّ مِنْ أَزْوَٰجِكُمْ وَأَوْلَٰدِكُمْ عَدُوًّۭا لَّكُمْ فَٱحْذَرُوهُمْ ۚ وَإِن تَعْفُوا۟ وَتَصْفَحُوا۟ وَتَغْفِرُوا۟ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌ ﴿14﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

14. நம்பிக்கையாளர்களே! உங்கள் மனைவிகளிலும், உங்கள் சந்ததிகளிலும் நிச்சயமாக உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். அவர்(களின் குற்றங்)களை நீங்கள் சகித்துப் புறக்கணித்து மன்னித்து வந்தால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மகா கருணையுடையவனும் ஆவான். (ஆகவே, உங்கள் குற்றங்களையும் அவ்வாறே மன்னித்துவிடுவான்.)

Tamil Translation - Omar Sharif

நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக, உங்கள் மனைவிகளிலும் உங்கள் பிள்ளைகளிலும் உங்களுக்கு எதிரிகள் இருக்கிறார்கள். ஆகவே, அவர்களிடம் நீங்கள் கவனமாக (உஷாராக, எச்சரிக்கையாக) இருங்கள். இன்னும், நீங்கள் பிழை பொறுத்தால், (அவர்களின் தவறுகளை) புறக்கணித்தால், (அவர்களை) மன்னித்தால் (அது மிகச் சிறந்தது. ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக, உங்கள் மனைவிகளிலும் உங்கள் பிள்ளைகளிலும் உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றனர். ஆகவே, அவர்களிடம் நீங்கள் கவனமாக இருங்கள். நீங்கள் பிழை பொறுத்தால், (அவர்களின் தவறுகளை) புறக்கணித்தால், (அவர்களை) மன்னித்தால் (அது மிகச் சிறந்தது. ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.

إِنَّمَآ أَمْوَٰلُكُمْ وَأَوْلَٰدُكُمْ فِتْنَةٌۭ ۚ وَٱللَّهُ عِندَهُۥٓ أَجْرٌ عَظِيمٌۭ ﴿15﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

15. உங்கள் பொருள்களும், உங்கள் சந்ததிகளும் (உங்களுக்கு) ஒரு சோதனையாகவே உள்ளன. (இச்சோதனையில், நீங்கள் தேர்ச்சி பெற்றால் உங்களுக்கு) அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலி இருக்கிறது.

Tamil Translation - Omar Sharif

உங்கள் செல்வங்கள் இன்னும் உங்கள் பிள்ளைகள் எல்லாம் (உங்களுக்கு) சோதனைதான். அல்லாஹ், - அவனிடம்தான் (உங்களுக்கு சொர்க்கம் எனும்) மகத்தான வெகுமதி இருக்கிறது.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

உங்கள் செல்வங்கள் இன்னும் உங்கள் பிள்ளைகள் எல்லாம் (உங்களுக்கு) சோதனைதான். அல்லாஹ் - அவனிடம்தான் மகத்தான கூலி (-சொர்க்கம்) இருக்கின்றது.

فَٱتَّقُوا۟ ٱللَّهَ مَا ٱسْتَطَعْتُمْ وَٱسْمَعُوا۟ وَأَطِيعُوا۟ وَأَنفِقُوا۟ خَيْرًۭا لِّأَنفُسِكُمْ ۗ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِۦ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ ﴿16﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

16. ஆதலால், உங்களால் சாத்தியமான வரை அல்லாஹ்வுக்குப் பயந்து, அவனு(டைய வசனங்களு)க்குச் செவிசாய்த்து கீழ்ப்படிந்து நடந்து, தர்மமும் செய்யுங்கள். இது உங்களுக்குத்தான் மிக நன்று. எவர்கள் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அவர்கள்தான் நிச்சயமாக வெற்றியடைந்து விடுவார்கள்.

Tamil Translation - Omar Sharif

ஆக, உங்களுக்கு முடிந்தளவு அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (அவனுக்கும் தூதருக்கும்) செவி தாழ்த்துங்கள்! கீழ்ப்படியுங்கள்! உங்கள் ஆன்மாக்களின் நன்மைக்காக செல்வத்தை தர்மம் செய்யுங்கள்! எவர்கள் தமது ஆன்மாக்களின் கஞ்சத்தனத்தில் இருந்து பாதுகாக்கப்படுவார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவார்கள்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

உங்களுக்கு முடிந்தளவு அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (அவனுக்கும் தூதருக்கும்) செவி தாழ்த்துங்கள்! கீழ்ப்படியுங்கள்! உங்கள் நன்மைக்காக செல்வத்தை தர்மம் செய்யுங்கள்! எவர்கள் தமது மனதின் கஞ்சத்தனத்தில் இருந்து பாதுகாக்கப்படுவார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவார்கள்.

إِن تُقْرِضُوا۟ ٱللَّهَ قَرْضًا حَسَنًۭا يُضَٰعِفْهُ لَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ۚ وَٱللَّهُ شَكُورٌ حَلِيمٌ ﴿17﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

17. அழகான முறையில் அல்லாஹ்வுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், அதை உங்களுக்கு இரு மடங்காக்கி வைப்பதுடன், உங்கள் குற்றங்களையும் மன்னித்து விடுகிறான். அல்லாஹ் (நன்றியை) அங்கீகரிப்பவனும் மிக்க சகிப்பவனும் ஆவான்.

Tamil Translation - Omar Sharif

நீங்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடனாக கடன் கொடுத்தால் (-ஏழைகளுக்கு தர்மம் செய்தால்) அவன் உங்களுக்கு அதை பன்மடங்காகப் பெருக்குவான். இன்னும், உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மிகவும் நன்றி பாராட்டுபவன், மகா சகிப்பாளன் ஆவான்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

நீங்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடனாக கடன் கொடுத்தால் (-ஏழைகளுக்கு தர்மம் செய்தால்) அவன் உங்களுக்கு அதை பன்மடங்காகப் பெருக்குவான். இன்னும் உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மிகவும் நன்றியுள்ளவன், மகா சகிப்பாளன் ஆவான்.

عَٰلِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ ﴿18﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

18. அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கறிந்தவன்; (அனைவரையும்) மிகைத்தவன்; ஞானமுடையவன் ஆவான்.

Tamil Translation - Omar Sharif

(அவன்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் நன்கறிந்தவன், மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

(அவன்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் நன்கறிந்தவன், மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.

Quran recitationReady
Open audio