Skip to content
Text size 100%
Translation comparison

Compare Maryam Quran translations

Compare up to three verified translation editions verse by verse, including editions in two different languages.

Tamil editions (choose up to 3)

Changing languages or editions keeps the current surah and verse.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ كٓهيعٓصٓ ﴿1﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

1. காஃப் ஹா யா ஐன் ஸாத்.

Tamil Translation - Omar Sharif

காஃப் ஹா யா ஐன் ஸாத்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

காஃப், ஹா, யா, ஐன், ஸாத்.[1]

ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَبْدَهُۥ زَكَرِيَّآ ﴿2﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

2. (நபியே!) உமது இறைவன் தன் அடியார் ஜகரிய்யாவுக்குப் புரிந்த அருளை (இங்கு) நினைவு கூர்வீராக.

Tamil Translation - Omar Sharif

(இது,) உமது இறைவன் தன் அடியார் ஸகரிய்யாவுக்கு அருள் புரிந்ததை நினைவு கூர்வதாகும்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

(இது,) உமது இறைவன் தன் அடியார் ஸகரிய்யாவுக்கு அருள் புரிந்ததை நினைவு கூர்வதாகும்.

إِذْ نَادَىٰ رَبَّهُۥ نِدَآءً خَفِيًّۭا ﴿3﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

3. அவர் தன் இறைவனைத் தாழ்ந்த குரலில் (பணிவாக) அழைத்தபோது,

Tamil Translation - Omar Sharif

அவர் தன் இறைவனை மறைவாக அழைத்தபோது,

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர் தன் இறைவனை மறைவாக அழைத்தபோது,

قَالَ رَبِّ إِنِّى وَهَنَ ٱلْعَظْمُ مِنِّى وَٱشْتَعَلَ ٱلرَّأْسُ شَيْبًۭا وَلَمْ أَكُنۢ بِدُعَآئِكَ رَبِّ شَقِيًّۭا ﴿4﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

4. ‘‘என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலவீனமாகி விட்டன. என் தலையும் நரைத்து விட்டது. என் இறைவனே! (இதுவரை) நான் உன்னிடத்தில் கேட்டதில் எதுவுமே தடுக்கப்படவில்லை. (நான் கேட்ட அனைத்தையும் நீ கொடுத்தே இருக்கிறாய்.)

Tamil Translation - Omar Sharif

அவர் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக நான், எனக்குள் எலும்புகள் பலவீனமடைந்து விட்டன. இன்னும், (என்) தலை நரையால் வெளுத்து விட்டது. (என் இறைவா! உன்னிடம் (நான்) பிரார்த்தித்ததில் துர்பாக்கியவனாக (பிரார்த்தனை நிராகரிக்கப்பட்டவனாக, நிராசை அடைந்தவனாக) நான் (ஒருபோதும்) ஆகமாட்டேன்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர் கூறினார்: என் இறைவா! நிச்சயமாக நான் எலும்பு என்னில் பலவீனமடைந்து விட்டது. தலை நரையால் வெளுத்து விட்டது. என் இறைவா! உன்னிடம் (நான்) பிரார்த்தித்ததில் துர்பாக்கியவனாக (பிரார்த்தனை நிராகரிக்கப்பட்டவனாக) நான் ஆகமாட்டேன்.

وَإِنِّى خِفْتُ ٱلْمَوَٰلِىَ مِن وَرَآءِى وَكَانَتِ ٱمْرَأَتِى عَاقِرًۭا فَهَبْ لِى مِن لَّدُنكَ وَلِيًّۭا ﴿5﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

5. நிச்சயமாக நான் எனக்குப் பின்னர் என் உரிமையாளர்களைப் பற்றிப் பயப்படுகிறேன். என் மனைவியோ மலடாகி விட்டாள். ஆகவே, உன் புறத்திலிருந்து எனக்கொரு பாதுகாவலனை (குழந்தையை) வழங்கு!

Tamil Translation - Omar Sharif

இன்னும், நிச்சயமாக நான் எனக்குப் பின்னால் (எனது உறவினர்கள் மார்க்கப் பணியை சரியாக செய்ய மாட்டார்கள் என்று என்) உறவினர்களைப் பற்றி பயப்படுகிறேன். என் மனைவியோ மலடியாக இருக்கிறாள். ஆகவே, எனக்கு உன் புறத்திலிருந்து (எனக்கு) உதவியாக இருக்கும் ஒரு வாரிசைத் தா!

Tamil Translation - Omar Sharif - Abridged Version

நிச்சயமாக நான் எனக்குப் பின்னால் உறவினர்களைப் பயப்படுகிறேன். என் மனைவி மலடியாக இருக்கிறாள். ஆகவே, எனக்கு உன் புறத்திலிருந்து ஒரு வாரிசைத் தா!

يَرِثُنِى وَيَرِثُ مِنْ ءَالِ يَعْقُوبَ ۖ وَٱجْعَلْهُ رَبِّ رَضِيًّۭا ﴿6﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

6. அவன் எனக்கும், யஅகூபுடைய சந்ததிகளுக்கும் வாரிசாகக் கூடியவனாக இருக்க வேண்டும். என் இறைவனே! அவனை (உனக்குப்) பிரியமுள்ளவனாகவும் ஆக்கிவை'' என்று பிரார்த்தித்தார்.

Tamil Translation - Omar Sharif

அவர் என(து நபித்துவத்து)க்கும் வாரிசாக இருப்பார். இன்னும், யஅகூபின் கிளையினரு(டைய நபித்துவத்து)க்கும் வாரிசாக இருப்பார். இன்னும், என் இறைவா! அவரை (உன்) பொருத்தத்திற்குரியவராக ஆக்கு!

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர் எனக்கும் வாரிசாக ஆகுவார். இன்னும் யஅகூபுடைய கிளையினருக்கும் வாரிசாக ஆகுவார். என் இறைவா! அவரை பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்கு!

يَٰزَكَرِيَّآ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَٰمٍ ٱسْمُهُۥ يَحْيَىٰ لَمْ نَجْعَل لَّهُۥ مِن قَبْلُ سَمِيًّۭا ﴿7﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

7. (அதற்கு இறைவன் அவரை நோக்கி) ‘‘ஜகரிய்யாவே! நிச்சயமாக நாம் ‘யஹ்யா' என்ற பெயர் கொண்ட ஒரு மகனை(த் தருவதாக) உமக்கு நற்செய்தி கூறுகிறோம். அப்பெயர் கொண்ட ஒருவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை'' (என்று கூறினான்.)

Tamil Translation - Omar Sharif

ஸகரிய்யாவே! நிச்சயமாக நாம் உமக்கு ஓர் ஆண் குழந்தையைக் கொண்டு நற்செய்தி தருகிறோம். அதன் பெயர் யஹ்யா ஆகும். இதற்கு முன் அதற்கு ஒப்பானவரை நாம் படைக்கவில்லை. (வேறு யாருக்கும் அந்த பெயரை நாம் சூட்டியதில்லை.)

Tamil Translation - Omar Sharif - Abridged Version

ஸகரிய்யாவே! நிச்சயமாக நாம் உமக்கு ஒரு ஆண் குழந்தையைக் கொண்டு நற்செய்தி தருகிறோம். அதன் பெயர் யஹ்யா. இதற்கு முன் அதற்கு ஒப்பானவரை (அந்த பெயர் உடையவரை) நாம் படைக்கவில்லை.

قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِى غُلَٰمٌۭ وَكَانَتِ ٱمْرَأَتِى عَاقِرًۭا وَقَدْ بَلَغْتُ مِنَ ٱلْكِبَرِ عِتِيًّۭا ﴿8﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

8. அதற்கவர் ‘‘என் இறைவனே! எப்படி எனக்குச் சந்ததி ஏற்படும்? என் மனைவியோ மலடி. நானோ முதுமையின் கடைசிப் பாகத்தை அடைந்து விட்டேன்'' என்று கூறினார்.

Tamil Translation - Omar Sharif

அவர் கூறினார்: “என் இறைவா! எனக்கு எப்படி குழந்தை கிடைக்கும்? என் மனைவியோ மலடியாக இருக்கிறாள். நானோ முதுமையின் எல்லையை அடைந்து (முற்றிலும் பலவீனனாக ஆகி)விட்டேன்.”

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர் கூறினார்: “என் இறைவா! எனக்கு எப்படி குழந்தை கிடைக்கும்? என் மனைவி மலடியாக இருக்கிறாள். நானோ முதுமையின் எல்லையை அடைந்து விட்டேன்.”

قَالَ كَذَٰلِكَ قَالَ رَبُّكَ هُوَ عَلَىَّ هَيِّنٌۭ وَقَدْ خَلَقْتُكَ مِن قَبْلُ وَلَمْ تَكُ شَيْـًۭٔا ﴿9﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

9. அதற்கவன் ‘‘(நான் கூறிய) அவ்வாறே நடைபெறும். அ(வ்வாறு செய்வ)து எனக்கு மிக்க எளிதானதே. இதற்கு முன்னர் நீர் ஒன்றுமில்லாமல் இருந்த சமயத்தில் நானே உம்மைப் படைத்தேன் என்று உமது இறைவனே கூறுகிறான்'' என்றும் கூறினான்.

Tamil Translation - Omar Sharif

(அல்லாஹ்) கூறினான்: “(அது) அப்படித்தான். அது எனக்கு மிக எளிது. திட்டமாக இதற்கு முன்னர் நீர் ஒரு பொருளாகவே இல்லாதபோது நான் உன்னைப் படைத்திருக்கிறேன் என்று உம் இறைவன் கூறினான்.”

Tamil Translation - Omar Sharif - Abridged Version

(அல்லாஹ்) கூறினான்: “அப்படித்தான். அது எனக்கு மிக எளிது. திட்டமாக இதற்கு முன்னர் நீர் ஒரு பொருளாக இருக்காதபோது நான் உன்னைப் படைத்திருக்கிறேன்” என்று உம் இறைவன் கூறினான்.

قَالَ رَبِّ ٱجْعَل لِّىٓ ءَايَةًۭ ۚ قَالَ ءَايَتُكَ أَلَّا تُكَلِّمَ ٱلنَّاسَ ثَلَٰثَ لَيَالٍۢ سَوِيًّۭا ﴿10﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

10. அதற்கவர் ‘‘என் இறைவனே! (இதற்கு) எனக்கோர் அத்தாட்சி அளி'' என்று கேட்டார். (அதற்கு இறைவன்) ‘‘உமக்கு (நான் அளிக்கும்) அத்தாட்சியாவது நீர் (சுகமாக இருந்துகொண்டே) சரியாக மூன்று இரவுகளும் (பகல்களும்) மனிதர்களுடன் பேச முடியாமல் ஆகிவிடுவதுதான்'' என்று கூறினான்.

Tamil Translation - Omar Sharif

அவர் கூறினார்: “என் இறைவா! எனக்கு ஓர் அத்தாட்சியை ஏற்படுத்து!” அவன் கூறினான்: “நீர் (எவ்வித நோயுமின்றி) சுகமாக இருக்க, மூன்று இரவுகள் மக்களிடம் நீர் பேசாமல் இருப்பதுதான் உமக்கு அத்தாட்சியாகும்.”

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர் கூறினார்: “என் இறைவா! எனக்கு ஓர் அத்தாட்சியை ஏற்படுத்து!” அவன் கூறினான்: “மூன்று இரவுகள் (நாட்கள்) நீர் சுகமாக இருக்க, மக்களிடம் பேசாமல் இருப்பதுதான் உமக்கு அத்தாட்சியாகும்.”

فَخَرَجَ عَلَىٰ قَوْمِهِۦ مِنَ ٱلْمِحْرَابِ فَأَوْحَىٰٓ إِلَيْهِمْ أَن سَبِّحُوا۟ بُكْرَةًۭ وَعَشِيًّۭا ﴿11﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

11. பின்னர், அவர் (வழக்கப்படி மக்களுக்கு நல்லுபதேசம் செய்ய ஆலயத்தின் மிஹ்ராப்) மாடத்திலிருந்து வெளிப்பட்டுத் தன் மக்கள் முன் வந்தார். (எனினும், அவரால் வாய் திறந்து பேச முடியாமலாகி விட்டது.) ஆகவே, காலையிலும் மாலையிலும் (இறைவனைப்) புகழ்ந்து துதி செய்யுங்கள் என்று (தன் கையால்) அவர்களுக்கு ஜாடை காண்பித்தார்.

Tamil Translation - Omar Sharif

ஆக, அவர் தனது மக்களுக்கு முன் தொழுமிடத்திலிருந்து வெளியேறி வந்தார். அவர்களை நோக்கி “காலையிலும் மாலையிலும் (அல்லாஹ்வை) துதியுங்கள்” என்று சைகை காண்பித்தார்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர் தனது மக்களுக்கு முன் தொழுமிடத்திலிருந்து வெளியேறி வந்தார். அவர்களை நோக்கி “காலையிலும் மாலையிலும் (அல்லாஹ்வை) துதியுங்கள்” என்று ஜாடை காண்பித்தார்.

يَٰيَحْيَىٰ خُذِ ٱلْكِتَٰبَ بِقُوَّةٍۢ ۖ وَءَاتَيْنَٰهُ ٱلْحُكْمَ صَبِيًّۭا ﴿12﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

12. (நாம் கூறியவாறே ஜகரிய்யாவுக்கு யஹ்யா பிறந்த பின்னர் நாம் அவரை நோக்கி) ‘‘யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக'' என்று கூறி, நாம் அவருக்கு (அவருடைய) சிறு வயதிலேயே ஞானத்தையும் அளித்தோம்.

Tamil Translation - Omar Sharif

(ஆக, அவருக்கு யஹ்யா என்ற மகன் பிறந்தார். அவர் பேசுகின்ற வயதை அடைந்த போது நாம் அவரை நோக்கி கூறினோம்:) “யஹ்யாவே! (தவ்ராத்) வேதத்தை பலமாகப் பற்றிப் பிடிப்பீராக!” இன்னும், (வேதத்தைப் புரிவதற்கு) ஞானத்தை (அவர்) சிறு குழந்தையாக இருக்கும்போதே அவருக்குக் கொடுத்தோம்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

யஹ்யாவே! வேதத்தை பலமாகப் பற்றிப் பிடிப்பீராக! (வேதத்தைப் புரிவதற்கு) ஞானத்தை (அவர்) சிறு குழந்தையாக இருக்கும்போதே அவருக்குக் கொடுத்தோம்.

وَحَنَانًۭا مِّن لَّدُنَّا وَزَكَوٰةًۭ ۖ وَكَانَ تَقِيًّۭا ﴿13﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

13. இன்னும், இரக்கமுள்ள மனதையும், பரிசுத்தத் தன்மையையும் நாம் அவருக்குக் கொடுத்தோம். ஆகவே, அவர் மிக இறையச்சமுடையவராகவே இருந்தார்.

Tamil Translation - Omar Sharif

இன்னும், நம்மிடமிருந்து இரக்கத்தையும் தூய்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்). இன்னும், அவர் இறையச்சமுள்ளவராக இருந்தார்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

நம்மிடமிருந்து இரக்கத்தையும் தூய்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்.) அவர் இறையச்சமுள்ளவராக இருந்தார்.

وَبَرًّۢا بِوَٰلِدَيْهِ وَلَمْ يَكُن جَبَّارًا عَصِيًّۭا ﴿14﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

14. மேலும், தன் தாய் தந்தைக்கு நன்றி செய்பவராகவே இருந்தார். (அவர்களுக்கு) மாறு செய்பவராகவோ முரடராகவோ இருக்கவில்லை.

Tamil Translation - Omar Sharif

இன்னும், அவர் தன் பெற்றோருக்கு நன்மை புரிபவராக இருந்தார். அவர் முரடராக (பெருமைபிடித்தவராக), மாறுசெய்பவராக இருக்கவில்லை.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

இன்னும் தன் பெற்றோருக்கு நன்மை புரிபவராக (இருந்தார்). அவர் முரடராக மாறுசெய்பவராக இருக்கவில்லை.

وَسَلَٰمٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّۭا ﴿15﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

15. அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும் (மறுமையில்) அவர் உயிருள்ளவராக எழுப்பப்படும் நாளிலும் அவர் மீது ஸலாம் நிலவுக!

Tamil Translation - Omar Sharif

இன்னும், அவர் பிறந்த நாளிலும் அவர் மரணிக்கின்ற நாளிலும் அவர் உயிர்பெற்றவராக (மீண்டும்) எழுப்பப்படுகின்ற நாளிலும் அவருக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக!

Tamil Translation - Omar Sharif - Abridged Version

இன்னும் அவர் பிறந்த நாளிலும் அவர் மரணிக்கின்ற நாளிலும் அவர் உயிர்பெற்றவராக (மீண்டும்) எழுப்பப்படுகின்ற நாளிலும் அவருக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக!

وَٱذْكُرْ فِى ٱلْكِتَٰبِ مَرْيَمَ إِذِ ٱنتَبَذَتْ مِنْ أَهْلِهَا مَكَانًۭا شَرْقِيًّۭا ﴿16﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

16. (நபியே!) இவ்வேதத்தில் (ஈஸாவின் தாயாகிய) மர்யமைப் பற்றியும் (சிறிது) கூறுவீராக: அவர் தன் குடும்பத்தினரை விட்டு விலகி கிழக்குத் திசையிலுள்ள (தன்) அறைக்குச் சென்று,

Tamil Translation - Omar Sharif

இன்னும், இவ்வேதத்தில் மர்யமை நினைவு கூர்வீராக! அவள் கிழக்கே இருக்கின்ற இடத்தில் தன் குடும்பத்தினரை விட்டு ஒதுங்கியபோது,

Tamil Translation - Omar Sharif - Abridged Version

இவ்வேதத்தில் மர்யமை நினைவு கூர்வீராக! அவர் கிழக்கில் இருக்கின்ற இடத்திற்கு தன் குடும்பத்தினரை விட்டு ஒதுங்கியபோது,

فَٱتَّخَذَتْ مِن دُونِهِمْ حِجَابًۭا فَأَرْسَلْنَآ إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًۭا سَوِيًّۭا ﴿17﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

17. (குளிப்பதற்காகத்) தன் மக்களின் முன் திரையிட்டுக் கொண்ட சமயத்தில் (ஜிப்ரயீல் என்னும்) நம் தூதரை அவரிடம் அனுப்பிவைத்தோம். அவர் முழுமையான ஒரு மனிதனுடைய கோலத்தில் அவர் முன் தோன்றினார்.

Tamil Translation - Omar Sharif

அவர்களுக்கு முன்புறத்திலிருந்து ஒரு திரையை அவள் ஏற்படுத்திக் கொண்டாள். ஆக, அவளிடம் நமது தூதரை அனுப்பினோம். அவர், அவளுக்கு (முன்) ஒரு முழுமையான மனிதராகத் தோன்றினார்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர்களுக்கு முன்னாலிருந்து ஒரு திரையை அவர் ஏற்படுத்திக் கொண்டார். அவரிடம் நமது தூதரை அனுப்பினோம். அவர் (-தூதர்)அவளுக்கு (முன்) ஒரு முழுமையான மனிதராகத் தோன்றினார்.

قَالَتْ إِنِّىٓ أَعُوذُ بِٱلرَّحْمَٰنِ مِنكَ إِن كُنتَ تَقِيًّۭا ﴿18﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

18. (அவரைக் கண்டதும்) ‘‘நிச்சயமாக நான் உம்மிடமிருந்து என்னை பாதுகாக்க ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் (இங்கிருந்து அப்புறப்பட்டு விடுவீராக)'' என்றார்.

Tamil Translation - Omar Sharif

அவள் கூறினாள்: “நிச்சயமாக நான் உம்மைவிட்டும் ரஹ்மானிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் (என்னிடமிருந்து விலகி சென்றுவிடுவீராக!)”

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர் (-மர்யம்) கூறினார்: நிச்சயமாக நான் உம்மிடமிருந்து ரஹ்மானிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் (என்னிடமிருந்து சென்றுவிடுவீராக!)

قَالَ إِنَّمَآ أَنَا۠ رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَٰمًۭا زَكِيًّۭا ﴿19﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

19. அதற்கவர், பரிசுத்தமான ஒரு மகனை ‘‘உமக்களி(க்கப்படும் என்பதை உமக்கு அறிவி)ப்ப தற்காக உமது இறைவனால் அனுப்பப்பட்ட (வானவ) தூதர்தான் நான்'' என்றார்.

Tamil Translation - Omar Sharif

அவர் கூறினார்: “நானெல்லாம் உமது இறைவனின் தூதர்தான் (தீங்கை நாடக்கூடிய மனிதன் அல்ல), பரிசுத்தமான ஒரு குழந்தையை உமக்கு நான் வழங்குவதற்காக (உம்மிடம் வந்திருக்கிறேன்).”

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர் (ஜிப்ரயீல்) கூறினார்: நானெல்லாம் உமது இறைவனின் தூதர்தான். பரிசுத்தமான ஒரு குழந்தையை உமக்கு நான் வழங்குவதற்காக (வந்துள்ளேன்).

قَالَتْ أَنَّىٰ يَكُونُ لِى غُلَٰمٌۭ وَلَمْ يَمْسَسْنِى بَشَرٌۭ وَلَمْ أَكُ بَغِيًّۭا ﴿20﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

20. அதற்கவர் ‘‘எனக்கு எப்படி சந்ததி ஏற்படும்? எம்மனிதனும் என்னைத் தீண்டியதில்லையே; நான் கெட்ட நடத்தையுள்ளவளும் அல்லவே'' என்று கூறினார்.

Tamil Translation - Omar Sharif

அவள் கூறினாள்: “எனக்கு எப்படி குழந்தை உண்டாகும்? என்னை ஆடவர் எவரும் தொடவில்லையே! நான் ஒரு விபச்சாரியாக இல்லையே!”

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர் (-மர்யம்) கூறினார்: எனக்கு எப்படி குழந்தை ஏற்படும்?! என்னை ஓர் ஆடவர் (எவரும்) தொடவில்லையே! நான் விபச்சாரியாக இல்லையே!

قَالَ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَىَّ هَيِّنٌۭ ۖ وَلِنَجْعَلَهُۥٓ ءَايَةًۭ لِّلنَّاسِ وَرَحْمَةًۭ مِّنَّا ۚ وَكَانَ أَمْرًۭا مَّقْضِيًّۭا ﴿21﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

21. அதற்கவர் ‘‘அவ்வாறே (நடைபெறும் என்று) உமது இறைவன் கூறுகிறான் (என்றும்), அது தனக்கு எளிது (என்றும்), அவரை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம் அருளாகவும் நாம் ஆக்குவோம் (என்றும்) இது முடிவு செய்யப்பட்ட ஒரு விஷயமாக இருக்கிறது'' என்றும் கூறுகிறான்.

Tamil Translation - Omar Sharif

அவர் கூறினார்: (அது) அப்படித்தான் நடக்கும். உமது இறைவன் கூறுகிறான், “அது எனக்கு மிக எளிதா(ன காரியமா)கும். அவரை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் நம் புறத்திலிருந்து ஓர் அருளாகவும் நாம் ஆக்குவதற்காக (இவ்வாறு நடைபெறும்). இன்னும், இது முடிவுசெய்யப்பட்ட ஒரு காரியமாக இருக்கிறது.”

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர் (ஜிப்ரயீல்) கூறினார்: (அது) அப்படித்தான் நடக்கும். உமது இறைவன் கூறுகிறான்: “அது தனக்கு எளிதாகும். அவரை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் நம்புறத்திலிருந்து ஓர் அருளாகவும் நாம் ஆக்குவதற்காகவும் (இவ்வாறு நடைபெறும்). இது முடிவுசெய்யப்பட்ட ஒரு காரியமாக இருக்கிறது.”

۞ فَحَمَلَتْهُ فَٱنتَبَذَتْ بِهِۦ مَكَانًۭا قَصِيًّۭا ﴿22﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

22. பின்னர், மர்யம் அந்த குழந்தையை கர்ப்பத்தில் சுமந்து அதனுடன் (அவர் இருந்த இடத்திலிருந்து வெளியேறி) தூரத்திலுள்ள ஓர் இடத்தைச் சென்றடைந்தார்.

Tamil Translation - Omar Sharif

ஆக, அவள் அதை (-அக்குழந்தையை) கர்ப்பத்தில் சுமந்தாள். மேலும், அதனுடன் (-அந்த கர்ப்பத்துடன்) தூரமான இடத்திற்கு விலகிச் சென்றாள்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

பின்னர், அவர் (-மர்யம்) அவரை (-அக்குழந்தையை) கர்ப்பத்தில் சுமந்தாள். அதனுடன் (-அந்த கர்ப்பத்துடன்) தூரமான இடத்திற்கு (மர்யம்) விலகிச் சென்றார்.

فَأَجَآءَهَا ٱلْمَخَاضُ إِلَىٰ جِذْعِ ٱلنَّخْلَةِ قَالَتْ يَٰلَيْتَنِى مِتُّ قَبْلَ هَٰذَا وَكُنتُ نَسْيًۭا مَّنسِيًّۭا ﴿23﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

23. பின்பு, அவர் ஒரு பேரீச்ச மரத்தடியில் செல்லும்பொழுது அவருக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டு ‘‘இதற்கு முன்னதாகவே நான் இறந்திருக்க வேண்டாமா? அவ்வாறு இறந்திருந்தால் என் எண்ணமே (ஒருவருடைய ஞாபகத்திலும் இல்லாதவாறு) முற்றிலும் மறக்கடிக்கப்பட்டிருப்பேனே'' என்று (வேதனையுடன்) கூறினார்.

Tamil Translation - Omar Sharif

ஆக, (அவளுக்கு) பிரசவ வலி (ஏற்பட்டு அது) அவளை பேரீச்ச மரத்தின் பக்கம் கொண்டு சென்றது. அவள் கூறினாள்: “இதற்கு முன்னர் நான் மரணித்திருக்க வேண்டுமே! இன்னும், முற்றிலும் (மக்களின் சிந்தனையிலிருந்து) மறக்கப்பட்டவளாக நான் (ஆகி) இருக்க வேண்டுமே!”

Tamil Translation - Omar Sharif - Abridged Version

பிரசவ வேதனை அவரை பேரிச்சமரத்தடிக்கு கொண்டு சென்றது. அவர் கூறினார்: இதற்கு முன்னரே நான் மரணிக்க வேண்டுமே! முற்றிலும் மறக்கப்பட்டவளாக நான் (ஆகி) இருக்க வேண்டுமே!

فَنَادَىٰهَا مِن تَحْتِهَآ أَلَّا تَحْزَنِى قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّۭا ﴿24﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

24. (பேரீச்ச மரத்தின்) அடிப்புறமிருந்து (ஜிப்ரயீல்) சப்தமிட்டு ‘‘(மர்யமே!) கவலைப்படாதீர்! உமக்குச் சமீபமாக உமது இறைவன் ஓர் ஊற்றை (உதித்து) ஓடச் செய்திருக்கிறான்.

Tamil Translation - Omar Sharif

ஆக, அதனுடைய அடிப்புறத்திலிருந்து அவர் (-ஜிப்ரீல்) அவளை அழைத்தார்: “(மர்யமே!) கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழ் ஓர் நீரோடையை ஏற்படுத்தி இருக்கிறான்.”

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அதனுடைய (பேரிச்சமரத்தினுடைய) அடிப்புறத்திலிருந்து அவரை (மர்யமை) அவர் (ஜிப்ரயீல்) கூவி அழைத்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழ் ஓர் ஊற்றை ஏற்படுத்தி இருக்கின்றான்.”

وَهُزِّىٓ إِلَيْكِ بِجِذْعِ ٱلنَّخْلَةِ تُسَٰقِطْ عَلَيْكِ رُطَبًۭا جَنِيًّۭا ﴿25﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

25. இப்பேரீச்ச மரத்தின் கிளையை, உமது பக்கம் பிடித்து (இழுத்து)க் குலுக்குவீராக. அது பழுத்த பழங்களை உம் மீது சொரியும்.

Tamil Translation - Omar Sharif

“இன்னும், பேரீச்ச மரத்தின் நடுத்தண்டை உம் பக்கம் அசைப்பீராக! அது உம்மீது பழுத்த பழங்களைக் கொட்டும்.”

Tamil Translation - Omar Sharif - Abridged Version

பேரிச்ச மரத்தின் நடுத்தண்டை உம் பக்கம் அசைப்பீராக! அது உம்மீது பழுத்த பழங்களைக் கொட்டும்.

فَكُلِى وَٱشْرَبِى وَقَرِّى عَيْنًۭا ۖ فَإِمَّا تَرَيِنَّ مِنَ ٱلْبَشَرِ أَحَدًۭا فَقُولِىٓ إِنِّى نَذَرْتُ لِلرَّحْمَٰنِ صَوْمًۭا فَلَنْ أُكَلِّمَ ٱلْيَوْمَ إِنسِيًّۭا ﴿26﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

26. ஆகவே, (அப்பழங்களை) நீர் புசித்து (இந்த ஊற்றின் நீரைக்) குடித்து (இக்குழந்தையைக் கண்டு) கண் குளிர்ந்திருப்பீராக! மனிதரில் எவரைக் கண்ட போதிலும் ‘‘நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பு நோற்க முடிவு செய்துள்ளேன்; ஆகவே, இன்றைய தினம் எம்மனிதருடனும் பேசமாட்டேன் என்று கூறிவிடுவீராக'' என்றும் கூறினார்.

Tamil Translation - Omar Sharif

“ஆக, நீர் (அந்த மரத்திலிருந்து விழும் பழங்களை) புசிப்பீராக! இன்னும், (அந்த நீரோடையிலிருந்து) பருகுவீராக! கண் குளிர்வீராக! ஆக, மனிதர்களில் யாரையும் நீர் பார்த்தால், “நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பை (-பேசாமல் இருப்பதை) நேர்ச்சை செய்துள்ளேன். ஆகவே, இன்று நான் எந்த மனிதனிடமும் அறவே பேசமாட்டேன்” என்று கூறுவீராக!”

Tamil Translation - Omar Sharif - Abridged Version

இன்னும் நீர் (அதை) புசிப்பீராக! (அந்த ஊற்றிலிருந்து) பருகுவீராக! கண் குளிர்வீராக! மனிதரில் யாரையும் நீர் பார்த்தால் நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பை -பேசாமல் இருப்பதை- நேர்ச்சை செய்துள்ளேன். ஆகவே, இன்று நான் எந்த மனிதனிடமும் அறவே பேசமாட்டேன் என்று கூறுவீராக!

فَأَتَتْ بِهِۦ قَوْمَهَا تَحْمِلُهُۥ ۖ قَالُوا۟ يَٰمَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْـًۭٔا فَرِيًّۭا ﴿27﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

27. பின்னர், (மர்யம் தான் பெற்ற) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தன் மக்களிடம் வரவே, அவர்கள் (இவரை நோக்கி) ‘‘மர்யமே! நிச்சயமாக நீ மகா கெட்ட காரியத்தைச் செய்து விட்டாய்.

Tamil Translation - Omar Sharif

ஆக, அதனுடன் அவள் தனது மக்களிடம் அதைச் சுமந்தவளாக வந்தாள். அவர்கள் கூறினார்கள்: “மர்யமே! நீ ஒரு பெரிய (தவறான) காரியத்தைச் செய்து விட்டாய்!”

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அதை (அக்குழந்தையை)க் கொண்டு அவர் (-மர்யம்) தனது மக்களிடம் அதைச் சுமந்தவராக வந்தார். அவர்கள் கூறினார்கள்: “மர்யமே! நீ ஒரு பெரிய காரியத்தைச் செய்து விட்டாய்!”

يَٰٓأُخْتَ هَٰرُونَ مَا كَانَ أَبُوكِ ٱمْرَأَ سَوْءٍۢ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّۭا ﴿28﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

28. ஹாரூனுடைய சகோதரியே! உன் தந்தை கெட்டவராக இருக்கவில்லை(யே); உன் தாயும் நடத்தைக் கெட்டவளாக இருக்கவில்லையே!'' என்று கூறினார்கள்.

Tamil Translation - Omar Sharif

“ஹாரூனுடைய சகோதரியே! உமது தந்தை கெட்டவராக இருக்கவில்லை. இன்னும், உமது தாயும் நடத்தை கெட்டவளாக இருக்கவில்லை.”

Tamil Translation - Omar Sharif - Abridged Version

ஹாரூனுடைய சகோதரியே! உமது தந்தை கெட்டவராக இருக்கவில்லை. உமது தாயும் நடத்தை கெட்டவளாக இருக்கவில்லை.

فَأَشَارَتْ إِلَيْهِ ۖ قَالُوا۟ كَيْفَ نُكَلِّمُ مَن كَانَ فِى ٱلْمَهْدِ صَبِيًّۭا ﴿29﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

29. (அதற்கவர், இதைப் பற்றித் தன் குழந்தையிடம் கேட்கும்படி) அதன் பக்கம் (கையை) ஜாடை காண்பித்தார். அதற்கவர்கள் ‘‘மடியிலிருக்கக்கூடிய சிறு குழந்தையிடம் நாங்கள் எப்படி பேசுவோம்'' என்று கூறினார்கள்.

Tamil Translation - Omar Sharif

ஆக, அவள் அ(ந்)த (குழந்தையிடம் கேட்கும்படி அத)ன் பக்கம் சைகை காண்பித்தாள். அவர்கள் கூறினார்கள்: “மடியில் குழந்தையாக இருக்கின்றவரிடம் நாங்கள் எப்படி பேசுவோம்!”

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர் (-மர்யம்) அ(ந்)த (குழந்தையி)ன் பக்கம் ஜாடை காண்பித்தார். அவர்கள் கூறினார்கள்: “மடியில் குழந்தையாக இருக்கின்றவரிடம் நாங்கள் எப்படி பேசுவோம்!”

قَالَ إِنِّى عَبْدُ ٱللَّهِ ءَاتَىٰنِىَ ٱلْكِتَٰبَ وَجَعَلَنِى نَبِيًّۭا ﴿30﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

30. (இதைச் செவியுற்ற அக்குழந்தை அவர்களை நோக்கிக்) கூறியதாவது: ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடிமை ஆவேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை நபியாகவும் ஆக்குவான்.

Tamil Translation - Omar Sharif

அவர் (-ஈஸா) கூறினார்: “நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமையாவேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுப்பான்; இன்னும், என்னை நபியாக ஆக்குவான்.”

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர் (ஈஸா) கூறினார்: “நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமை, அவன் எனக்கு வேதத்தைக் கொடுப்பான்; என்னை நபியாக ஆக்குவான்.”

وَجَعَلَنِى مُبَارَكًا أَيْنَ مَا كُنتُ وَأَوْصَٰنِى بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ مَا دُمْتُ حَيًّۭا ﴿31﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

31. நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை மிக்க பாக்கியவானாகவே ஆக்குவான். நான் வாழும்வரை தொழுகையைக் கடைப்பிடித் தொழுகும்படியும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் அவன் எனக்கு உபதேசித்திருக்கிறான்.

Tamil Translation - Omar Sharif

இன்னும் நான் எங்கிருந்தாலும் என்னை பாக்கியமிக்கவனாக (மக்களுக்கு நன்மையை ஏவி, தீமையை தடுப்பவனாக, நல்லவற்றை கற்பிப்பவனாக, மக்களுக்கு நன்மை செய்பவனாக) ஆக்குவான். இன்னும், நான் உயிருள்ளவனாக இருக்கின்றவரை தொழுகையையும் தர்மத்தையும் (பாவங்களை விட்டு விலகி தூய்மையாக இருப்பதையும்) அவன் எனக்கு கட்டளையிட்டுள்ளான்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

இன்னும் அவன் நான் எங்கிருந்தாலும் என்னை அருள்மிக்கவனாக (மக்களுக்கு நன்மையை ஏவுகின்றவனாக) ஆக்குவான். நான் உயிருள்ளவனாக இருக்கின்றவரை தொழுகையைக் கொண்டும் ஸகாத்தைக் கொண்டும் அவன் எனக்கு கட்டளையிட்டுள்ளான்.

وَبَرًّۢا بِوَٰلِدَتِى وَلَمْ يَجْعَلْنِى جَبَّارًۭا شَقِيًّۭا ﴿32﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

32. என் தாய்க்கு நான் நன்றி செய்யும்படியாகவும் (எனக்கு உபதேசித்து) நான் முரடனாக வழி கெட்டவனாக ஆகாதபடியும் செய்வான்.

Tamil Translation - Omar Sharif

இன்னும், என் தாய்க்கு நன்மை செய்பவனாகவும் (என்னை ஆக்கினான்). இன்னும், அவன் என்னை பெருமையடிப்பவனாக (-இறைவனுக்கு கீழ்ப்படியாதவனாக) தீயவனாக ஆக்கவில்லை.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

என் தாய்க்கு நன்மை செய்பவனாகவும் (என்னை ஆக்கினான்). அவன் என்னை பெருமையுடையவனாக தீயவனாக ஆக்கவில்லை.

وَٱلسَّلَٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدتُّ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّۭا ﴿33﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

33. நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிருள்ளவராக எழுப்பப்படும் நாளிலும், என்மீது ஸலாம் உண்டாகுக!'' (என்றும் அக்குழந்தை கூறியது).

Tamil Translation - Omar Sharif

நான் பிறந்த நாளிலும் எனக்கு ஸலாம் - ஈடேற்றம் கிடைத்தது. (அவ்வாறே,) நான் மரணிக்கின்ற நாளிலும் நான் உயிருள்ளவனாக எழுப்பப்படுகின்ற நாளிலும் என் மீது ஸலாம் உண்டாகுக!

Tamil Translation - Omar Sharif - Abridged Version

நான் பிறந்த நாளிலும் (எனக்கு ஈடேற்றம் கிடைத்தது. அவ்வாறே,) நான் மரணிக்கின்ற நாளிலும் நான் உயிருள்ளவனாக எழுப்பப்படுகின்ற நாளிலும் எனக்கு ஈடேற்றம் உண்டாகுக!

ذَٰلِكَ عِيسَى ٱبْنُ مَرْيَمَ ۚ قَوْلَ ٱلْحَقِّ ٱلَّذِى فِيهِ يَمْتَرُونَ ﴿34﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

34. இவர்தான் மர்யமுடைய மகன் ஈஸா. அவரைப் பற்றி (மக்கள் வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் உண்மையான விஷயம் இதுதான்.

Tamil Translation - Omar Sharif

இவர்தான் மர்யமுடைய மகன் ஈஸா ஆவார். (இந்த) உண்மையான கூற்றையே கூறுங்கள். இவர் விஷயத்தில்தான் அவர்கள் தர்க்கிக்கிறார்கள். (யூதர்கள் கூறுவதுபோன்று அவர் மந்திரவாதியும் அல்ல. கிறித்தவர்கள் கூறுவதுபோன்று அவர் அல்லாஹ்வின் மகனோ, அல்லாஹ்வோ, கடவுள் மூவரில் ஒருவரோ அல்ல. மாறாக அவர் அல்லாஹ்வின் தூதர் ஆவார்.)

Tamil Translation - Omar Sharif - Abridged Version

இவர்தான் மர்யமுடைய மகன் ஈஸா. (இந்த) உண்மையான கூற்றையே கூறுங்கள். இதில்தான் அவர்கள் தர்க்கிக்கின்றனர்.

مَا كَانَ لِلَّهِ أَن يَتَّخِذَ مِن وَلَدٍۢ ۖ سُبْحَٰنَهُۥٓ ۚ إِذَا قَضَىٰٓ أَمْرًۭا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ ﴿35﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

35. ஆகவே, ‘‘(அவர் இறைவனுமல்ல; இறைவனுடைய பிள்ளையுமல்ல. ஏனென்றால்) தனக்குச் சந்ததி எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்கு (ஒரு சிறிதும்) தகுதியல்ல. அவன் மிகப் பரிசுத்தமானவன். எதையும் படைக்கக் கருதினால் அதை ‘ஆகுக!' என அவன் கூறுவதுதான் (தாமதம்). உடனே அது ஆகிவிடும்.

Tamil Translation - Omar Sharif

(தனக்கு) ஒரு குழந்தையை எடுத்துக் கொள்வது அல்லாஹ்விற்கு தகுந்ததல்ல. அவன் மகா பரிசுத்தமானவன். அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால் அவன் அதற்கு கூறுவதெல்லாம், “ஆகு” என்றுதான். உடனே அது ஆகிவிடும்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

குழந்தையை எடுத்துக் கொள்வது அல்லாஹ்விற்கு தகுந்ததல்ல. அவன் மகா பரிசுத்தமானவன். அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால் அவன் அதற்கு கூறுவதெல்லாம் “ஆகு” என்றுதான் அது ஆகிவிடும்.

وَإِنَّ ٱللَّهَ رَبِّى وَرَبُّكُمْ فَٱعْبُدُوهُ ۚ هَٰذَا صِرَٰطٌۭ مُّسْتَقِيمٌۭ ﴿36﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

36. நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். (ஈஸாவல்ல; ஆகவே,) அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். இதுதான் நேரான வழி'' (என்று நபியே! கூறுவீராக.)

Tamil Translation - Omar Sharif

இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனை வணங்குங்கள். இது நேரான பாதையாகும்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனையே வணங்குங்கள். இதுதான் நேரான பாதையாகும்.

فَٱخْتَلَفَ ٱلْأَحْزَابُ مِنۢ بَيْنِهِمْ ۖ فَوَيْلٌۭ لِّلَّذِينَ كَفَرُوا۟ مِن مَّشْهَدِ يَوْمٍ عَظِيمٍ ﴿37﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

37. ஆனால், அவர்களிலுள்ள ஒரு கூட்டத்தினர் (இதைப் பற்றி) தங்களுக்கு இடையே (வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே (நாம் கூறிய) இதை நிராகரிப்பவர்களுக்கு, அனைவரும் நம்மிடம் ஒன்று சேரக்கூடிய மகத்தான நாளில் கேடுதான்.

Tamil Translation - Omar Sharif

ஆக, பல பிரிவினர் தங்களுக்கு மத்தியில் (ஈஸா பற்றி) தர்க்கித்தனர். ஆகவே, (அவர் விஷயத்தில் அல்லாஹ்வின் வேத அறிவிப்பை) நிராகரிப்பாளர்களுக்குக் கேடுதான் உண்டாகும், மகத்தான நாளை (அவர்கள்) காணும்போது.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

ஆனால், பல பிரிவினர் தங்களுக்கு மத்தியில் (இது பற்றி) தர்க்கித்தனர். ஆகவே, மகத்தான நாளை அவர் (ஈஸா) காணும்போது (அந்த) நிராகரிப்பாளர்களுக்குக் கேடுதான்.

أَسْمِعْ بِهِمْ وَأَبْصِرْ يَوْمَ يَأْتُونَنَا ۖ لَٰكِنِ ٱلظَّٰلِمُونَ ٱلْيَوْمَ فِى ضَلَٰلٍۢ مُّبِينٍۢ ﴿38﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

38. (இன்றைய தினம் இதை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தபோதிலும்) நம்மிடம் அவர்கள் வரும் நாளில் (நம் கட்டளைகளுக்கு) எவ்வளவோ நன்றாகச் செவிசாய்ப்பார்கள். (நம் வேதனைகளை) நன்றாகவே (தங்கள் கண்ணாலும்) காண்பார்கள். எனினும், அந்த அநியாயக்காரர்கள் இன்றைய தினம் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்.

Tamil Translation - Omar Sharif

அவர்கள் நம்மிடம் வருகின்ற நாளில் நன்றாக செவிசாய்ப்பார்கள்; இன்னும், நன்றாக பார்ப்பார்கள். (ஆனால், அவர்கள் செவியுறுவதும் பார்ப்பதும் அன்று அவர்களுக்கு பயனளிக்காது.) எனினும், இன்றைய தினம் அநியாயக்காரர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர்கள் நன்றாக செவிசாய்ப்பார்கள், நன்றாக பார்ப்பார்கள் அவர்கள் நம்மிடம் வருகின்ற நாளில். எனினும், இன்றைய தினம் அநியாயக்காரர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.

وَأَنذِرْهُمْ يَوْمَ ٱلْحَسْرَةِ إِذْ قُضِىَ ٱلْأَمْرُ وَهُمْ فِى غَفْلَةٍۢ وَهُمْ لَا يُؤْمِنُونَ ﴿39﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

39. ஆனால், (நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் மிக்க துயரமான நாளைப்பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. எனினும், (இன்றைய தினம்) அவர்கள் கவலையற்றிருக்கின்றனர். ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.

Tamil Translation - Omar Sharif

இன்னும், (நபியே! இறுதி) தீர்ப்பு முடிவு செய்யப்படும்போது (அந்த) துயரமான நாளைப் பற்றி அவர்களை எச்சரிப்பீராக! அவர்கள் அறியாமையில் (மறதியில்) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

தீர்ப்பு முடிவு செய்யப்படும்போது துயரமான நாளைப் பற்றி அவர்களை எச்சரிப்பீராக! அவர்கள் அறியாமையில் இருக்கின்றனர். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

إِنَّا نَحْنُ نَرِثُ ٱلْأَرْضَ وَمَنْ عَلَيْهَا وَإِلَيْنَا يُرْجَعُونَ ﴿40﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

40. நிச்சயமாக நாம்தான் பூமிக்கும், அதிலுள்ளவர்களுக்கும் சொந்தம் கொள்வோம். அவர்கள் நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள்.

Tamil Translation - Omar Sharif

நிச்சயமாக நாம்தான் பூமிக்கும் அதில் இருப்பவர்களுக்கும் உரிமையாளர்களாக ஆகுவோம். நம்மிடமே அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

நிச்சயமாக நாம்தான் பூமிக்கும் அதில் இருப்பவர்களுக்கும் வாரிசாகுவோம். நம்மிடமே அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.

وَٱذْكُرْ فِى ٱلْكِتَٰبِ إِبْرَٰهِيمَ ۚ إِنَّهُۥ كَانَ صِدِّيقًۭا نَّبِيًّا ﴿41﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

41. (நபியே!) இவ்வேதத்தில் இப்றாஹீமை பற்றியும் கூறுவீராக: நிச்சயமாக அவர் மிக்க உண்மையானவராக, நபியாக இருந்தார்.

Tamil Translation - Omar Sharif

(நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் உண்மையாளராக நபியாக இருக்கிறார்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

(நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் உண்மையாளராக நபியாக இருக்கிறார்.

إِذْ قَالَ لِأَبِيهِ يَٰٓأَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ وَلَا يُغْنِى عَنكَ شَيْـًۭٔا ﴿42﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

42. அவர் தன் தந்தையை நோக்கி ‘‘என் தந்தையே! பார்க்காத, கேட்காத, எந்த ஒரு தீங்கையும் உம்மை விட்டு தடைசெய்யாதவற்றை ஏன் வணங்குகிறீர்?'' என்று கேட்டார்.

Tamil Translation - Omar Sharif

அவர் தனது தந்தைக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “என் தந்தையே எது செவியுறாதோ, பார்க்காதோ, உம்மை விட்டு (தீமைகளில்) எதையும் தடுக்காதோ அதை நீர் ஏன் வணங்குகிறீர்?”

Tamil Translation - Omar Sharif - Abridged Version

(அந்த) சமயத்தை நினைவு கூர்வீராக! அவர் தனது தந்தைக்கு கூறினார்: என் தந்தையே கேட்காதவற்றையும் பார்க்காதவற்றையும் உம்மை விட்டும் (தீமைகளில்) எதையும் தடுக்காதவற்றையும் ஏன் வணங்குகிறீர்?

يَٰٓأَبَتِ إِنِّى قَدْ جَآءَنِى مِنَ ٱلْعِلْمِ مَا لَمْ يَأْتِكَ فَٱتَّبِعْنِىٓ أَهْدِكَ صِرَٰطًۭا سَوِيًّۭا ﴿43﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

43. ஆகவே, ‘‘என் தந்தையே! உமக்குக் கிடைக்காத கல்வி ஞானம் (என் இறைவன் அருளால்) எனக்கு கிடைத்துள்ளது. என்னைப் பின்பற்றுவீராக. நான் உம்மை நேரான வழியில் நடத்துவேன்.

Tamil Translation - Omar Sharif

“என் தந்தையே! நிச்சயமாக நான் (கூறுவதாவது: அல்லாஹ்வின் புறத்திலிருந்து) உமக்கு வராத கல்வி ஞானம் எனக்கு வந்திருக்கிறது. ஆகவே, என்னைப் பின்பற்றுவீராக. நான் உமக்கு சமமான நேரான பாதையை வழிகாட்டுவேன்.”

Tamil Translation - Omar Sharif - Abridged Version

என் தந்தையே! நிச்சயமாக நான், (அல்லாஹ்வின் புறத்திலிருந்து) உமக்கு வராத கல்வி எனக்கு வந்திருக்கிறது. ஆகவே, என்னைப் பின்பற்றுவீராக. நான் உமக்கு நேரான (சமமான) பாதையை வழிகாட்டுவேன்.

يَٰٓأَبَتِ لَا تَعْبُدِ ٱلشَّيْطَٰنَ ۖ إِنَّ ٱلشَّيْطَٰنَ كَانَ لِلرَّحْمَٰنِ عَصِيًّۭا ﴿44﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

44. என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர். நிச்சயமாக ஷைத்தான் ரஹ்மானுக்கு மாறு செய்பவனாக இருக்கிறான்.

Tamil Translation - Omar Sharif

“என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! நிச்சயமாக ஷைத்தானாகிறவன் ரஹ்மானுக்கு மாறுசெய்தவனாக இருக்கிறான்.”

Tamil Translation - Omar Sharif - Abridged Version

என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! நிச்சயமாக ஷைத்தான் ரஹ்மானுக்கு (-அல்லாஹ்விற்கு) மாறுசெய்பவனாக இருக்கிறான்.

يَٰٓأَبَتِ إِنِّىٓ أَخَافُ أَن يَمَسَّكَ عَذَابٌۭ مِّنَ ٱلرَّحْمَٰنِ فَتَكُونَ لِلشَّيْطَٰنِ وَلِيًّۭا ﴿45﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

45. என் தந்தையே! ரஹ்மானுடைய வேதனை உம்மை பிடித்துக் கொள்ளுமோ என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன். (ரஹ்மானுக்கு மாறு செய்தால்) ஷைத்தானுக்கு நண்பனாகிவிடுவீர்'' (என்று கூறினார்).

Tamil Translation - Omar Sharif

என் தந்தையே! “ரஹ்மானிடமிருந்து தண்டனை உம்மை வந்தடைந்தால் (அதை உம்மை விட்டு ஷைத்தானால் தடுக்க முடியாது. அப்போது) நீர் (அந்த) ஷைத்தானுக்கு (நரகத்தில்) தோழனாக ஆகிவிடுவீர்” என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

என் தந்தையே! நிச்சயமாக நான் “ரஹ்மானிடமிருந்து ஒரு வேதனை உம்மை வந்தடைந்தால் (அதை உம்மைவிட்டு ஷைத்தானால் தடுக்க முடியாது.) நீர் (அந்த) ஷைத்தானுக்கு நண்பராக ஆகிவிடுவீர்” என்று நான் பயப்படுகிறேன்.

قَالَ أَرَاغِبٌ أَنتَ عَنْ ءَالِهَتِى يَٰٓإِبْرَٰهِيمُ ۖ لَئِن لَّمْ تَنتَهِ لَأَرْجُمَنَّكَ ۖ وَٱهْجُرْنِى مَلِيًّۭا ﴿46﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

46. அதற்கவர் ‘‘இப்றாஹீமே! நீ என் தெய்வங்களைப் புறக்கணித்து விட்டீரா? நீ இதிலிருந்து விலகிக் கொள்ளாவிடில், கல்லெறிந்து உன்னைக் கொன்று விடுவேன்; (இனி) நீ எப்பொழுதுமே என்னைவிட்டு விலகி நில்லும்'' என்று கூறினார்.

Tamil Translation - Omar Sharif

(இப்ராஹீமின் தந்தை) கூறினார்: இப்ராஹீமே! என் தெய்வங்களை நீ வெறுக்கிறாயா? நீ (இவற்றை குறை கூறுவதிலிருந்து) விலகவில்லையெனில் நிச்சயமாக நான் உன்னை மிக அசிங்கமாக ஏசுவேன். (நான் உன்னை ஏசுவதற்கு முன்னர் உன் கண்ணியம்) பாதுகாக்கப்பட்டவராக என்னை விட்டு விலகி சென்றுவிடு!

Tamil Translation - Omar Sharif - Abridged Version

(தந்தை) கூறினார்: இப்ராஹீமே! என் தெய்வங்களை நீ வெறுக்கிறாயா? நீ (இவற்றை குறை கூறுவதிலிருந்து) விலகவில்லையெனில் நிச்சயமாக நான் உன்னை கடுமையாக ஏசுவேன். (நான் உன்னை ஏசுவதற்கு முன்னர்) பாதுகாப்புப் பெற்றவராக என்னை விட்டு விலகிவிடு!

قَالَ سَلَٰمٌ عَلَيْكَ ۖ سَأَسْتَغْفِرُ لَكَ رَبِّىٓ ۖ إِنَّهُۥ كَانَ بِى حَفِيًّۭا ﴿47﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

47. அதற்கு (இப்றாஹீம், இதோ நான் செல்கிறேன்) ‘‘உம்மீது ஸலாம் உண்டாவதாக! பின்னர் நான் உமக்காக என் இறைவனிடத்தில் மன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக என் இறைவன் என் மீது மிக்க இரக்கமுடையவனாக இருக்கிறான்'' என்று கூறினார்.

Tamil Translation - Omar Sharif

(இப்ராஹீம்) கூறினார்: “ஸலாமுன் அலைக்க" (என் புறத்திலிருந்து உமக்கு பாதுகாப்பு உண்டாகுக! இனி நீர் வெறுப்பதைக் கூறமாட்டேன்). உமக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக அவன் என் மீது கருணையும் அன்பும் உடையவனாக இருக்கிறான்.”

Tamil Translation - Omar Sharif - Abridged Version

(இப்ராஹீம்) கூறினார்: (என் புறத்திலிருந்து) உமக்கு பாதுகாப்பு உண்டாகுக! (இனி நீர் வெறுப்பதைக் கூறமாட்டேன்). உமக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக அவன் என் மீது அருளுடையவனாக இருக்கின்றான்.

وَأَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ وَأَدْعُوا۟ رَبِّى عَسَىٰٓ أَلَّآ أَكُونَ بِدُعَآءِ رَبِّى شَقِيًّۭا ﴿48﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

48. ‘‘உங்களை விட்டும் அல்லாஹ்வைத் தவிர்த்து நீங்கள் (தெய்வமென) அழைப்பவற்றை விட்டும் நான் விலகிக்கொள்கிறேன். என் இறைவனையே நான் (வணங்கி) பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன். என் இறைவனிடம் நான் செய்யும் பிரார்த்தனைகள் எனக்குத் தடுக்கப்படாதிருக்கும் என்று நான் நம்புகிறேன்'' (என்றும் கூறினார்.)

Tamil Translation - Omar Sharif

இன்னும், உங்களையும் அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குகின்றவற்றையும் விட்டு நான் விலகி விடுகிறேன். இன்னும், என் இறைவனை நான் (கலப்பற்ற முறையில்) பிரார்த்திப்பேன். என் இறைவனிடம் (நான்) பிரார்த்திப்பதில் நான் துர்பாக்கியவானாக (-நம்பிக்கை அற்றவனாக, பிரார்த்தனை நிராகரிக்கப்பட்டவனாக) ஆகாமல் இருப்பேன்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

உங்களையும் அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குகின்றவற்றையும் விட்டு நான் விலகி விடுகின்றேன். என் இறைவனிடம் (மட்டும்) நான் பிரார்த்திப்பேன். என் இறைவனிடம் (நான்) பிரார்த்திப்பதில் நான் நம்பிக்கை அற்றவனாக ஆகாமல் இருப்பேன்.

فَلَمَّا ٱعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ وَهَبْنَا لَهُۥٓ إِسْحَٰقَ وَيَعْقُوبَ ۖ وَكُلًّۭا جَعَلْنَا نَبِيًّۭا ﴿49﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

49. பின்னர் அவர் அவர்களை விட்டும் அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டார். அதன் பின்னர் இஸ்ஹாக்கையும், யஅகூபையும் அவருக்கு(ச் சந்ததிகளாக) நாம் வழங்கினோம். அவர்கள் ஒவ்வொருவரையும் நபியாகவும் ஆக்கினோம்.

Tamil Translation - Omar Sharif

ஆக, அவர் - அவர்களையும் அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கியதையும் விட்டு விலகியபோது அவருக்கு (மகனாக) இஸ்ஹாக்கையும் (பேரனாக) யஅகூபையும் வழங்கினோம். இன்னும், (அவர்களில்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர் அவர்களையும் அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கியதையும் விட்டு விலகியபோது அவருக்கு (மகனாக) இஸ்ஹாக்கையும் (பேரனாக) யஅகூபையும் வழங்கினோம். (அவர்களில்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.

وَوَهَبْنَا لَهُم مِّن رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِيًّۭا ﴿50﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

50. அவர்களுக்கு நம் அருட்கொடையையும் அளித்தோம். உண்மையே பேசும்படியான மேலான நாவையும் அவர்களுக்குக் கொடுத்தோம். (பின் வருபவர்கள் ‘அலைஹிஸ் ஸலாம்' (அவர்மீது சாந்தி நிலவுக!) என்று எந்நாளும் அவர்களுக்காக துஆ பிரார்த்தனை செய்யக்கூடிய உயர் பதவியையும் அவர்களுக்கு அளித்தோம்.)

Tamil Translation - Omar Sharif

இன்னும், அவர்களுக்கு நமது அருளிலிருந்து வழங்கினோம். உயர்வான உண்மையான நிலையான புகழையும் நாம் அவர்களுக்கு ஏற்படுத்தினோம்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர்களுக்கு நமது அருளிலிருந்து வழங்கினோம். அவர்களுக்கு உயர்வான உண்மையான புகழை நாம் ஏற்படுத்தினோம்.

وَٱذْكُرْ فِى ٱلْكِتَٰبِ مُوسَىٰٓ ۚ إِنَّهُۥ كَانَ مُخْلَصًۭا وَكَانَ رَسُولًۭا نَّبِيًّۭا ﴿51﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

51. (நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் (சிறிது) கூறுவீராக: நிச்சயமாக அவர் கலப்பற்ற மனதுடையவராகவும் (நம்) தூதராகவும் நபியாகவும் இருந்தார்.

Tamil Translation - Omar Sharif

இன்னும், இவ்வேதத்தில் மூஸாவை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்கிறார். இன்னும், தூதராக நபியாக இருக்கிறார்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

இவ்வேதத்தில் மூஸாவை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்கிறார். இன்னும், தூதராக நபியாக இருக்கிறார்.

وَنَٰدَيْنَٰهُ مِن جَانِبِ ٱلطُّورِ ٱلْأَيْمَنِ وَقَرَّبْنَٰهُ نَجِيًّۭا ﴿52﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

52. தூர் (ஸீனாய் என்னும் பாக்கியம் பெற்ற) மலையின் வலது பக்கத்திலிருந்து அவரை நாம் அழைத்தோம். ரகசியம் பேசுகிறவராக அவரை (நமக்கு) நெருக்கமாக்கினோம்.

Tamil Translation - Omar Sharif

இன்னும், மலையில் (மூஸாவுடைய) வலது பக்கத்திலிருந்து நாம் அவரை அழைத்தோம். நாம் அவரை (நம்முடன்) பேசுகிறவராக நெருக்கமாக்கினோம்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

தூர் மலையில் (மூஸாவுடைய) வலது பக்கத்தில் நாம் அவரை அழைத்தோம். நாம் அவரை இரகசியம் பேசுகிறவராக நெருக்கமாக்கினோம்.

وَوَهَبْنَا لَهُۥ مِن رَّحْمَتِنَآ أَخَاهُ هَٰرُونَ نَبِيًّۭا ﴿53﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

53. நம் கருணையினால் அவருடைய சகோதரர் ஹாரூனை நபியாக அவருக்கு வழங்கினோம்.

Tamil Translation - Omar Sharif

இன்னும், நமது அருளால் அவருடைய சகோதரர் ஹாரூனை அவருக்கு நபியாக வழங்கினோம்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

இன்னும் நமது அருளால் அவருடைய சகோதரர் ஹாரூனை அவருக்கு நபியாக வழங்கினோம்.

وَٱذْكُرْ فِى ٱلْكِتَٰبِ إِسْمَٰعِيلَ ۚ إِنَّهُۥ كَانَ صَادِقَ ٱلْوَعْدِ وَكَانَ رَسُولًۭا نَّبِيًّۭا ﴿54﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

54. (நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுவீராக: நிச்சயமாக அவர் உண்மையான வாக்குறுதி உடையவராகவும், (நம்) தூதராகவும் நபியாகவும் இருந்தார்.

Tamil Translation - Omar Sharif

இன்னும், இவ்வேதத்தில் இஸ்மாயீலை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர், வாக்கில் உண்மையாளராக இருந்தார். இன்னும் தூதராக நபியாக இருந்தார்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

இவ்வேதத்தில் இஸ்மாயீலை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்கில் உண்மையாளராக இருக்கிறார். இன்னும், தூதராக நபியாக இருக்கிறார்.

وَكَانَ يَأْمُرُ أَهْلَهُۥ بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ وَكَانَ عِندَ رَبِّهِۦ مَرْضِيًّۭا ﴿55﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

55. தொழுகையைக் கடைப்பிடிக்கும்படியும், ஜகாத்தும் கொடுத்து வரும்படியும் அவர் தன் குடும்பத்தினரை ஏவிக்கொண்டிருந்தார். அவர் தன் இறைவனால் மிகவும் விரும்பப்பட்டவராகவும் இருந்தார்.

Tamil Translation - Omar Sharif

இன்னும், அவர் தனது குடும்பத்தினருக்கு தொழுகையையும் ஸகாத்தையும் ஏவுகின்றவராக இருந்தார். மேலும், அவர் தன் இறைவனிடம் திருப்திக்குரியவராக இருந்தார்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

தனது குடும்பத்தினரை தொழுகையைக் கொண்டும் ஸகாத்தைக் கொண்டும் ஏவுகின்றவராக இருந்தார். அவர் தன் இறைவனிடம் திருப்திக்குரியவராக இருந்தார்.

وَٱذْكُرْ فِى ٱلْكِتَٰبِ إِدْرِيسَ ۚ إِنَّهُۥ كَانَ صِدِّيقًۭا نَّبِيًّۭا ﴿56﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

56. (நபியே!) இத்ரீஸைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுவீராக: நிச்சயமாக அவர் மிக்க சத்தியவானாகவும் நபியாகவும் இருந்தார்.

Tamil Translation - Omar Sharif

இன்னும், இவ்வேதத்தில் இத்ரீஸை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் உண்மையாளராக நபியாக இருந்தார்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

இவ்வேதத்தில் இத்ரீஸை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் உண்மையாளராக நபியாக இருக்கின்றார்.

وَرَفَعْنَٰهُ مَكَانًا عَلِيًّا ﴿57﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

57. இன்னும் அவரை மிக்க மேலான இடத்திற்கு உயர்த்தி விட்டோம்.

Tamil Translation - Omar Sharif

இன்னும், அவரை உயர்வான இடத்திற்கு மேலே உயர்த்தினோம்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

இன்னும் அவரை உயர்ந்த இடத்திற்கு உயர்த்தினோம்.

أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِم مِّنَ ٱلنَّبِيِّۦنَ مِن ذُرِّيَّةِ ءَادَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوحٍۢ وَمِن ذُرِّيَّةِ إِبْرَٰهِيمَ وَإِسْرَٰٓءِيلَ وَمِمَّنْ هَدَيْنَا وَٱجْتَبَيْنَآ ۚ إِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَٰتُ ٱلرَّحْمَٰنِ خَرُّوا۟ سُجَّدًۭا وَبُكِيًّۭا ۩ ﴿58﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

58. (ஆகவே, மேற்கூறப்பட்ட) இவர்கள் அனைவரும் அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்களாவர். இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் நாம் (கப்பலில்) ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்றாஹீமுடைய சந்ததியிலும், இஸ்ராயீல் (என்னும் யஅகூப்)உடைய சந்ததியிலும் உள்ளவர்களாவர். மேலும் நாம் தேர்ந்தெடுத்து நேரான வழியில் நடத்தியவர்களிலும் உள்ளவர்கள். அவர்கள் மீது ரஹ்மானுடைய வசனங்கள் ஓதப்பட்டால் (அதற்குப் பயந்து) அழுதவர்களாக (இறைவனுக்குச்) சிரம் பணிந்து தொழுவார்கள்.

Tamil Translation - Omar Sharif

அல்லாஹ் அருள் புரிந்த இந்த நபிமார்கள் ஆதமுடைய சந்ததியிலிருந்தும்; நூஹுடன் நாம் (கப்பலில்) ஏற்றியவர்களிலிருந்தும்; இப்ராஹீமுடைய சந்ததியிலிருந்தும், இஸ்ராயீலுடைய சந்ததியிலிருந்தும்; இன்னும், நாம் எவர்களை நேர்வழியில் செலுத்தினோமோ, தேர்ந்தெடுத்தோமோ அவர்களிலிருந்தும் உள்ளவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு முன் ரஹ்மானுடைய வசனங்கள் ஓதப்பட்டால் சிரம்பணிந்தவர்களாக அழுதவர்களாக (ஸுஜூதில்) விழுந்து விடுவார்கள்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

இவர்கள்தான் - இவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்திருக்கின்றான். (அவர்கள்) ஆதமுடைய சந்ததிகளில் உள்ள நபிமார்களில் உள்ளவர்கள். இன்னும் நூஹுடன் நாம் (கப்பலில்) ஏற்றியவர்களிலும் இப்ராஹீம் இன்னும் இஸ்ராயீலுடைய சந்ததிகளிலும் நாம் நேர்வழிகாட்டி தேர்ந்தெடுத்தவர்களிலும் உள்ளவர்கள் ஆவர். அவர்கள் மீது ரஹ்மானுடைய வசனங்கள் ஓதப்பட்டால் சிரம்பணிந்தவர்களாக அழுதவர்களாக (பூமியில்) விழுந்து விடுவார்கள்.

۞ فَخَلَفَ مِنۢ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا۟ ٱلصَّلَوٰةَ وَٱتَّبَعُوا۟ ٱلشَّهَوَٰتِ ۖ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ﴿59﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

59. (இவர்களுக்குப் பின்னர், இவர்களுடைய சந்ததியில்) இவர்களுடைய இடத்தை அடைந்தவர்களோ சரீர இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை(த் தொழாது) வீணாக்கி விட்டார்கள். அவர்கள் (மறுமையில்) தீமையையே (அழிவையே) சந்திப்பார்கள்.

Tamil Translation - Omar Sharif

ஆக, அவர்களுக்குப் பின்னர் ஒரு கூட்டம் தோன்றினார்கள். அவர்கள் தொழுகையை பாழாக்கினர். இன்னும், காம இச்சைகளுக்கு பின்னால் சென்றனர். ஆகவே, அவர்கள் (நரக நெருப்பில் மிகப் பெரிய) தீமையை சந்திப்பார்கள். (இந்த தீமை என்பது நரகத்தில் மிக மோசமான தண்டனைகள் நிறைந்த ஒரு கிணற்றையோ அல்லது ஒரு பள்ளத்தாக்கையோ குறிக்கிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.)

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர்களுக்குப் பின் ஒரு கூட்டம் தோன்றினார்கள். அவர்கள் தொழுகையை பாழாக்கினர். மன இச்சைகளை பின்பற்றினர். அவர்கள் “கய்யை” (அழிவை, நாசத்தை, மோசமான நரக கிணற்றை) சந்திப்பார்கள்.

إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحًۭا فَأُو۟لَٰٓئِكَ يَدْخُلُونَ ٱلْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ شَيْـًۭٔا ﴿60﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

60. ஆயினும், அவர்களில் எவர்கள் (கைசேதப்பட்டு) பாவத்தில் இருந்து விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். (அவர்கள் அடையவேண்டிய கூலியில்) ஒரு சிறிதும் (குறைக்கப்பட்டு) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

Tamil Translation - Omar Sharif

(எனினும்,) எவர்கள் (தொழுகையை விடுகின்ற குற்றத்திலிருந்து) திருந்தினார்களோ; இன்னும், நம்பிக்கை கொண்டார்களோ; இன்னும், நன்மையை செய்தார்களோ அவர்களைத் தவிர. அ(த்தகைய)வர்கள் சொர்க்கத்தில் பிரவேசிப்பார்கள். இன்னும், அவர்கள் அறவே அநீதி செய்யப்பட மாட்டார்கள்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

(எனினும்) திருந்தி நம்பிக்கை (ஈமான்) கொண்டு நல்லது செய்தவரைத் தவிர அ(த்தகைய)வர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். அறவே அநீதி செய்யப்பட மாட்டார்கள்.

جَنَّٰتِ عَدْنٍ ٱلَّتِى وَعَدَ ٱلرَّحْمَٰنُ عِبَادَهُۥ بِٱلْغَيْبِ ۚ إِنَّهُۥ كَانَ وَعْدُهُۥ مَأْتِيًّۭا ﴿61﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

61. அது ‘அத்ன்' என்னும் என்றென்றும் நிலையான சொர்க்கங்களாகும். (அவை தற்சமயம்) மறைவாக இருந்தபோதிலும், அவற்றை ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு வாக்களித்திருக்கிறான். நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நடைபெற்றே தீரும்.

Tamil Translation - Omar Sharif

(அவர்கள்) ‘அத்ன்’ சொர்க்கங்களில் (நுழைவார்கள்). ரஹ்மான் தன் அடியார்களுக்கு மறைவில் (அவற்றை) வாக்களித்துள்ளான். நிச்சயமாக அவனுடைய வாக்கு நிறைவேறக்கூடியதாக இருக்கிறது.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

‘அத்ன்’ சொர்க்கங்களில் (நுழைவார்கள்). ரஹ்மான் தன் அடியார்களுக்கு மறைவில் (அவற்றை) வாக்களித்துள்ளான். நிச்சயமாக அவன் -அவனுடைய வாக்கு நிகழக்கூடியதாக இருக்கிறது.

لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا إِلَّا سَلَٰمًۭا ۖ وَلَهُمْ رِزْقُهُمْ فِيهَا بُكْرَةًۭ وَعَشِيًّۭا ﴿62﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

62. (அவற்றில்) ஸலாம் (என்ற முகமனைத்) தவிர வீணான வார்த்தைகளைச் செவியுற மாட்டார்கள். அங்கு அவர்களுக்குக் காலையிலும் மாலையிலும் (மிக்க மேலான) உணவு அளிக்கப்படும்.

Tamil Translation - Omar Sharif

அவற்றில் (அழகிய முகமனாகிய) ஸலாமைத் தவிர வீணான பேச்சுகளை செவியுற மாட்டார்கள். இன்னும், அவர்களுக்கு அவற்றில் அவர்களுடைய (விருப்ப) உணவு காலையிலும் மாலையிலும் கிடைக்கும்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவற்றில் வீணானவற்றை செவிமடுக்க மாட்டார்கள். எனினும் ஸலாமை (செவிமடுப்பார்கள்). அவர்களுக்கு அவற்றில் அவர்களுடைய உணவு காலையிலும் மாலையிலும் உண்டு.

تِلْكَ ٱلْجَنَّةُ ٱلَّتِى نُورِثُ مِنْ عِبَادِنَا مَن كَانَ تَقِيًّۭا ﴿63﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

63. இத்தகைய சொர்க்கத்திற்கு நம் அடியார்களில் இறையச்சமுடையவர்களை நாம் வாரிசாக்கி விடுவோம்.

Tamil Translation - Omar Sharif

இந்த சொர்க்கத்தை நம் அடியார்களில் யார் இறையச்சமுள்ளவராக இருக்கிறாரோ அவருக்கு சொந்தமாக்கி வைப்போம்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

இந்த சொர்க்கம் (அவற்றில் இருந்த பாவிகளின் இடங்களை) நம் அடியார்களில் இறையச்சமுடையவராக இருக்கின்றவரை வாரிசாக ஆக்குவோம்.

وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمْرِ رَبِّكَ ۖ لَهُۥ مَا بَيْنَ أَيْدِينَا وَمَا خَلْفَنَا وَمَا بَيْنَ ذَٰلِكَ ۚ وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّۭا ﴿64﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

64. (வானவர்கள் கூறுகின்றனர்: நபியே!) உமது இறைவனின் உத்தரவின்றி நாம் இறங்குவதில்லை. நமக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இவ்விரண்டிற்கு மத்தியில் இருப்பவையும் அவனுக்கே சொந்தமானவை. இதில் (எதையும்) உமது இறைவன் மறப்பவனல்ல.

Tamil Translation - Omar Sharif

இன்னும், (ஜிப்ரீலே! நபி முஹம்மதுக்கு கூறுவீராக!) உமது இறைவனின் உத்தரவின்படியே தவிர நாம் இறங்க மாட்டோம். எங்களுக்கு முன் இருப்பவையும் (-மறுமை காரியங்களும்) எங்களுக்கு பின் இருப்பவையும் (-உலக காரியங்களும்) அவற்றுக்கு மத்தியில் இருக்கின்ற காரியங்களும் அவனுக்கே உரிமையானவை ஆகும். இன்னும், உமது இறைவன் மறதியாளனாக இல்லை.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

உமது இறைவனின் உத்தரவைக் கொண்டே தவிர நாம் இறங்க மாட்டோம். எங்களுக்கு முன் இருப்பவையும் எங்களுக்கு பின் இருப்பவையும் அவற்றுக்கு மத்தியில் இருப்பவையும் அவனுக்கே சொந்தமானவை. (இதில்) உமது இறைவன் மறதியாளனாக இருக்கவில்லை.

رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا فَٱعْبُدْهُ وَٱصْطَبِرْ لِعِبَٰدَتِهِۦ ۚ هَلْ تَعْلَمُ لَهُۥ سَمِيًّۭا ﴿65﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

65. வானங்களையும், பூமியையும், இவற்றிற்கு மத்தியில் உள்ளவற்றையும் படைத்த இறைவன் அவனே! ஆதலால், அவன் ஒருவனையே வணங்குவீராக. அவனை வணங்குவதில் (உமக்கு ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக. அவனுடைய தன்மைக்கு ஒப்பான எவரையும் நீர் அறிவீரா? (இல்லையே).

Tamil Translation - Omar Sharif

(அவனே) வானங்கள், பூமி இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் ஆவான். ஆகவே, அவனை வணங்குவீராக! இன்னும், அவனை வணங்குவதில் உறுதியாக (நிரந்தரமாக) இருப்பீராக! அவனுக்கு ஒப்பான ஒருவரை நீர் அறிவீரா!

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவன்தான் வானங்கள், பூமி இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன். ஆகவே, அவனை வணங்குவீராக! அவனை வணங்குவதில் பொறுமையாக இருப்பீராக! அவனுக்கு ஒப்பானவரை நீர் அறிவீரா!

وَيَقُولُ ٱلْإِنسَٰنُ أَءِذَا مَا مِتُّ لَسَوْفَ أُخْرَجُ حَيًّا ﴿66﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

66. (இவ்வாறிருக்க) மனிதன் ‘‘நான் இறந்த பின்னர் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா?'' என்று (பரிகாசமாகக்) கேட்கிறான்.

Tamil Translation - Omar Sharif

இன்னும், மனிதன் கூறுகிறான்: “நான் மரணித்து விட்டால் உயிருள்ளவனாக (மீண்டும்) எழுப்பப்படுவேனா!”

Tamil Translation - Omar Sharif - Abridged Version

“நான் மரணித்து விட்டால் உயிருள்ளவனாக (மீண்டும்) கண்டிப்பாக எழுப்பப்படுவேனா” என்று (மறுமையை நம்பாத) மனிதன் கூறுகிறான்.

أَوَلَا يَذْكُرُ ٱلْإِنسَٰنُ أَنَّا خَلَقْنَٰهُ مِن قَبْلُ وَلَمْ يَكُ شَيْـًۭٔا ﴿67﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

67. இதற்கு முன்னர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த அவனை நாமே மனிதனாக படைத்தோம் என்பதை அவன் நினைத்துப்பார்க்க வேண்டாமா?

Tamil Translation - Omar Sharif

“இதற்கு முன்னர் நிச்சயமாக நாம் அவனைப் படைத்ததையும் (நாம் அவனைப் படைப்பதற்கு முன்பு) அவன் எந்த ஒரு பொருளாகவும் இருக்கவில்லை” என்பதையும் அந்த மனிதன் சிந்திக்க வேண்டாமா!

Tamil Translation - Omar Sharif - Abridged Version

மனிதன் சிந்திக்க வேண்டாமா! “முன்னர் நிச்சயமாக நாம் அவனைப் படைத்ததை.” (நாம் அவனைப் படைப்பதற்கு முன்பு) அவன் எந்த ஒரு பொருளாகவும் இருக்கவில்லையே!

فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَٱلشَّيَٰطِينَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِيًّۭا ﴿68﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

68. ஆகவே, (நபியே!) உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்களையும், (அவர்கள் வணங்குகிற) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர் கொடுத்து) எழுப்பி நரகத்தைச் சுற்றி முழந்தாளிட்டவர்களாக அவர்களை ஒன்று சேர்ப்போம்.

Tamil Translation - Omar Sharif

ஆக, உமது இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் அவர்களையும் ஷைத்தான்களையும் ஒன்று திரட்டுவோம். பிறகு, அவர்கள் முழங்காலிட்டவர்களாக இருக்கும் நிலையில் நரகத்திற்கு அருகில் அவர்களைக் கொண்டுவருவோம்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

உமது இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் அவர்களையும் ஷைத்தான்களையும் எழுப்புவோம். பிறகு, நரகத்தை சுற்றி அவர்களை முழந்தாளிட்டவர்களாகக் கொண்டு வருவோம்.

ثُمَّ لَنَنزِعَنَّ مِن كُلِّ شِيعَةٍ أَيُّهُمْ أَشَدُّ عَلَى ٱلرَّحْمَٰنِ عِتِيًّۭا ﴿69﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

69. பின்னர், ரஹ்மானுக்கு மாறுசெய்வதில் கடினமாக இருந்த அனைவரையும் ஒவ்வொரு கூட்டத்திலிருந்து நிச்சயமாக நாம் பிரித்து விடுவோம்.

Tamil Translation - Omar Sharif

பிறகு, ஒவ்வொரு பிரிவினரிலிருந்தும் அவர்களில் யார் பாவம் செய்வதில் ரஹ்மானுக்கு கடுமையானவரோ அவரை நாம் கழட்டி (தனியாக) எடுப்போம்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

பிறகு ஒவ்வொரு கூட்டத்திலும் ரஹ்மானுக்கு பாவம் செய்வதில் கடுமையானவரை நாம் கழட்டி எடுப்போம்.

ثُمَّ لَنَحْنُ أَعْلَمُ بِٱلَّذِينَ هُمْ أَوْلَىٰ بِهَا صِلِيًّۭا ﴿70﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

70. பின்னர், நரகத்தில் எரிவதற்கு தகுதி உடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிந்து கொள்வோம்.

Tamil Translation - Omar Sharif

பிறகு, அதில் கடுமையாக தண்டனையை அனுபவிப்பதற்கு மிகவும் தகுதியானவர்களை நாம் மிக அறிந்தவர்கள் ஆவோம்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

பிறகு அதில் கடுமையாக வேதனை அனுபவிப்பதற்கு மிகவும் தகுதியானவர்களை நாம் மிக அறிந்தவர்கள்.

وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا ۚ كَانَ عَلَىٰ رَبِّكَ حَتْمًۭا مَّقْضِيًّۭا ﴿71﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

71. அதைக் கடக்காது உங்களில் எவருமே தப்பிவிட முடியாது. இது உமது இறைவனிடம் முடிவு செய்யப்பட்ட மாற்ற முடியாத தீர்மானமாகும்.

Tamil Translation - Omar Sharif

உங்களில் எல்லோரும் அதன் மீது கடந்து சென்றே ஆக வேண்டும். அது உமது இறைவனிடம் முடிவு செய்யப்பட்ட உறுதியான காரியமாக இருக்கிறது.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

உங்களில் (ஒவ்வொருவரும்) அதில் நுழையக்கூடியவராகவே தவிர வேறில்லை. (அது) உமது இறைவன் மீது முடிவு செய்யப்பட்ட தீர்ப்பாக இருக்கிறது.

ثُمَّ نُنَجِّى ٱلَّذِينَ ٱتَّقَوا۟ وَّنَذَرُ ٱلظَّٰلِمِينَ فِيهَا جِثِيًّۭا ﴿72﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

72. ஆனால், இறையச்சத்துடன் வாழ்ந்தவர்களை நாம் பாதுகாத்துக் கொள்வோம். அநியாயக்காரர்களை (அவர்கள்) முழந்தாளிட்டவர்களாக (இருக்கும் நிலைமையில்) அதில் தள்ளிவிடுவோம்.

Tamil Translation - Omar Sharif

பிறகு, எவர்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்தார்களோ அவர்களை நாம் (நரகத்தில் விழுந்துவிடாமல்) பாதுகாப்போம். இன்னும், அநியாயக்காரர்களை முழங்காலிட்டவர்களாக அதில் (தள்ளி) விட்டுவிடுவோம்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

பிறகு, இறையச்சமுடையவர்களை நாம் (அதிலிருந்து) பாதுகாப்போம். அநியாயக்காரர்களை அதில் முழந்தாளிட்டவர்களாக விட்டுவிடுவோம்.

وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَٰتُنَا بَيِّنَٰتٍۢ قَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِلَّذِينَ ءَامَنُوٓا۟ أَىُّ ٱلْفَرِيقَيْنِ خَيْرٌۭ مَّقَامًۭا وَأَحْسَنُ نَدِيًّۭا ﴿73﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

73. நிராகரிப்பவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘நம் இரு வகுப்பாரில் எவர்களுடைய வீடு (தற்சமயம்) மேலானதாகவும் அழகான தோற்றத்துடனும் இருக்கிறது?'' என்று கேட்கின்றனர்.

Tamil Translation - Omar Sharif

அவர்களுக்கு முன் நமது தெளிவான வசனங்கள் ஓதப்பட்டால் நிராகரித்தவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி, “(நம்) இரு பிரிவுகளில் தங்குமிடத்தால் யார் சிறந்தவர், இன்னும், சபையால் யார் மிக அழகானவர்?” என்று (கேலியாக) கூறுகிறார்கள்:

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர்கள் மீது நமது தெளிவான வசனங்கள் ஓதப்பட்டால் நிராகரித்தவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு கூறுகின்றனர்: “இரு பிரிவினரில் யார் தங்குமிடத்தால் சிறந்தவர், சபையால் மிக அழகானவர்?”

وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّن قَرْنٍ هُمْ أَحْسَنُ أَثَٰثًۭا وَرِءْيًۭا ﴿74﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

74. இவர்களை விட அழகான தோற்றத்தையும், தட்டு முட்டு சாமான்களையும் கொண்ட எத்தனையோ கூட்டத்தாரை இவர்களுக்கு முன் நாம் அழித்திருக்கிறோம்.

Tamil Translation - Omar Sharif

இன்னும், இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம். அவர்கள் (இவர்களை விட வீட்டு பயன்பாட்டுப்) பொருட்களாலும் (செல்வத்தாலும் உடல்) தோற்றத்தாலும் மிக அழகானவர்கள்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்தோம். அவர்கள் (இவர்களைவிட வீட்டு உபயோகப்) பொருட்களாலும் தோற்றத்தாலும் மிக அழகானவர்கள்.

قُلْ مَن كَانَ فِى ٱلضَّلَٰلَةِ فَلْيَمْدُدْ لَهُ ٱلرَّحْمَٰنُ مَدًّا ۚ حَتَّىٰٓ إِذَا رَأَوْا۟ مَا يُوعَدُونَ إِمَّا ٱلْعَذَابَ وَإِمَّا ٱلسَّاعَةَ فَسَيَعْلَمُونَ مَنْ هُوَ شَرٌّۭ مَّكَانًۭا وَأَضْعَفُ جُندًۭا ﴿75﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

75. (நபியே!) கூறுவீராக: எவன் வழிகேட்டில் இருக்கிறானோ அவனுக்கு ஏற்பட்ட தண்டனையை அவன் கண்ணால் காணும் வரை ரஹ்மான் அவனுக்கு (இம்மையில்) தவணையளிக்கிறான். (அதை அவன் கண்டதன் பின்னரோ) அவனுக்கு வேதனை கிடைக்கும். அல்லது அவனுடைய காலம் முடிந்துவிடும். பின்னர், எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலவீனமானது என்பதைத் திட்டமாக அவர்கள் (மறுமையில்) அறிந்து கொள்வார்கள்.

Tamil Translation - Omar Sharif

(நபியே!) கூறுவீராக: (நம் இரு பிரிவினரில்) யார் வழிகேட்டில் இருக்கிறாரோ அவருக்கு ரஹ்மான் (அதை) நீட்டிவிடட்டும். இறுதியாக, அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை - ஒன்று தண்டனையை; அல்லது, மறுமை நாளை- அவர்கள் (கண்கூடாக) பார்த்தால் யார் தங்குமிடத்தால் மிகக் கெட்டவர், படையால் மிகப் பலவீனமானவர் என்பதை அறிவார்கள்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

கூறுவீராக! (நம் இரு பிரிவினரில்) யார் வழிகேட்டில் இருக்கின்றாரோ அவருக்கு ரஹ்மான் (அதை) நீட்டிவிடட்டும். இறுதியாக அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை -ஒன்று வேதனையை அல்லது மறுமையை- அவர்கள் பார்த்தால் யார் தங்குமிடத்தால் மிகக் கெட்டவர், படையால் மிகப் பலவீனமானவர் என்பதை அறிவார்கள்.

وَيَزِيدُ ٱللَّهُ ٱلَّذِينَ ٱهْتَدَوْا۟ هُدًۭى ۗ وَٱلْبَٰقِيَٰتُ ٱلصَّٰلِحَٰتُ خَيْرٌ عِندَ رَبِّكَ ثَوَابًۭا وَخَيْرٌۭ مَّرَدًّا ﴿76﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

76. நேர்வழி பெற்றவர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் நேர்வழியை அதிகரித்து வழங்குகிறான். நிலையாக இருக்கக்கூடிய நற்செயல்கள்தான் உமது இறைவனிடத்தில் நற்கூலியை அடைவதற்கு சிறந்ததாகவும், நல்ல முடிவை தருவதற்கு சிறந்ததாகவும் இருக்கின்றன.

Tamil Translation - Omar Sharif

இன்னும், நேர்வழி நடப்போருக்கு நேர்வழியை அல்லாஹ் அதிகப்படுத்துவான். நிரந்தரமான நன்மைகள்தான் உமது இறைவனிடம் நற்கூலியால் மிகச் சிறந்ததும் முடிவால் மிகச் சிறந்ததும் ஆகும்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

நேர்வழி நடப்போருக்கு நேர்வழியை அல்லாஹ் அதிகப்படுத்துவான். உங்கள் இறைவனிடம் நிரந்தரமான நன்மைகள்தான் நற்கூலியால் மிகச் சிறந்ததும் முடிவால் மிகச் சிறந்ததும் ஆகும்.

أَفَرَءَيْتَ ٱلَّذِى كَفَرَ بِـَٔايَٰتِنَا وَقَالَ لَأُوتَيَنَّ مَالًۭا وَوَلَدًا ﴿77﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

77. (நபியே!) நம் வசனங்களை நிராகரித்தவனை நீர் பார்த்தீரா? ‘‘(மறுமையிலும்) நிச்சயமாக நான் ஏராளமான பொருள்களும் சந்ததிகளும் கொடுக்கப்படுவேன்'' என்று கூறுகிறான்.

Tamil Translation - Omar Sharif

எவன் நமது வசனங்களை நிராகரித்தானோ; இன்னும், “நிச்சயமாக நான் செல்வமும் சந்ததியும் கொடுக்கப்படுவேன்” என்று கூறினானோ அவனைப் பற்றி நீர் அறிவிப்பீராக!

Tamil Translation - Omar Sharif - Abridged Version

நமது வசனங்களை நிராகரித்தவனை நீர் பார்த்தீரா? அவன் கூறுகின்றான்: “நிச்சயமாக நான் செல்வமும் சந்ததியும் கொடுக்கப்படுவேன்.”

أَطَّلَعَ ٱلْغَيْبَ أَمِ ٱتَّخَذَ عِندَ ٱلرَّحْمَٰنِ عَهْدًۭا ﴿78﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

78. அவன் (மறுமையில் நடக்கக்கூடிய) மறைவான விஷயங்களை அறிந்து கொண்டானா? அல்லது ரஹ்மானிடத்தில் (இத்தகையதொரு) வாக்குறுதியைப் பெற்றிருக்கிறானா?

Tamil Translation - Omar Sharif

(இப்படி அவன் கூறுவதற்கு) அவன் மறைவானதை அறிந்திருக்கிறானா?; அல்லது, ரஹ்மானிடம் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தி இருக்கிறானா?

Tamil Translation - Omar Sharif - Abridged Version

மறைவானதை அறிந்து கொண்டானா அல்லது ரஹ்மானிடம் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டானா? (அதாவது ஈமான் கொண்டு நல்லமல் செய்து அல்லாஹ்வின் வாக்குறுதிக்கு தகுதியாகி விட்டானா?)

كَلَّا ۚ سَنَكْتُبُ مَا يَقُولُ وَنَمُدُّ لَهُۥ مِنَ ٱلْعَذَابِ مَدًّۭا ﴿79﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

79. (இவன் கூறுகிறபடி) அல்ல! இவன் (பொய்யாகக்) கூறுகின்றவற்றை நாம் எழுதிக் கொண்டே வருகிறோம். (அதற்குத் தக்கவாறு) அவனுடைய வேதனையையும் நாம் அதிகப்படுத்திவிடுவோம்.

Tamil Translation - Omar Sharif

அவ்வாறல்ல! அவன் கூறுவதை நாம் பதிவு செய்வோம். இன்னும், (மறுமையில்) அவனுக்கு தண்டனையை அதிகப்படுத்துவோம்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

ஒருக்காலும் அவ்வாறல்ல! அவன் கூறுவதை நாம் பதிவு செய்கிறோம். இன்னும் (மறுமையில்) அவனுக்கு வேதனையில் அதிகப்படுத்துவோம்.

وَنَرِثُهُۥ مَا يَقُولُ وَيَأْتِينَا فَرْدًۭا ﴿80﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

80. அவன் (தனக்குரியதென்று) கூறும் அனைத்துக்கும் நாமே வாரிசாகி விடுவோம். அவன் (இவற்றை விட்டுவிட்டு) நம்மிடம் தனியாகவே வருவான்.

Tamil Translation - Omar Sharif

இன்னும், அவன் கூறிய (அவனது செல்வம், சந்ததி ஆகியவற்றை விட்டு அவனை பிரித்துவிட்டு அ)வற்றுக்கு நாம் வாரிசாகி விடுவோம். இன்னும், அவன் நம்மிடம் (மறுமையில் தன்னந்) தனியாக வருவான்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவன் கூறிய (செல்வம், சந்ததி ஆகிய)வற்றுக்கு நாம் வாரிசாகி விடுவோம். அவன் நம்மிடம் தனியாக வருவான்.

وَٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ ءَالِهَةًۭ لِّيَكُونُوا۟ لَهُمْ عِزًّۭا ﴿81﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

81. (இணைவைத்து வணங்கும்) இவர்கள் தங்களுக்கு உதவியாக இருக்குமென்று அல்லாஹ் அல்லாதவற்றைத் தெய்வங்களாக எடுத்துக் கொள்கின்றனர்.

Tamil Translation - Omar Sharif

அவர்கள் அல்லாஹ்வை அன்றி பல தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டனர், அவை (அல்லாஹ்வின் தண்டனையை விட்டு தங்களை பாதுகாக்கக்கூடிய) வலிமையாக தங்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்காக.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர்கள் அல்லாஹ்வை அன்றி பல தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டனர், அவை தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பதற்காக.

كَلَّا ۚ سَيَكْفُرُونَ بِعِبَادَتِهِمْ وَيَكُونُونَ عَلَيْهِمْ ضِدًّا ﴿82﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

82. அவ்வாறல்ல; அத்தெய்வங்கள் இவர்கள் தங்களை வணங்கியதையும் நிராகரித்து, இவர்களுக்கு விரோதமாகவும் மாறிவிடும்.

Tamil Translation - Omar Sharif

அவ்வாறல்ல! அவை அவர்கள் தம்மை வணங்கியதை நிராகரித்து விடும். இன்னும் அவை அவர்களுக்கு எதிரானவையாக மாறிவிடும்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவ்வாறல்ல, அவை அவர்களின் வழிபாட்டை நிராகரித்து விடும். இன்னும் அவை அவர்களுக்கு எதிரானவையாக மாறிவிடும்.

أَلَمْ تَرَ أَنَّآ أَرْسَلْنَا ٱلشَّيَٰطِينَ عَلَى ٱلْكَٰفِرِينَ تَؤُزُّهُمْ أَزًّۭا ﴿83﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

83. (நபியே!) நிராகரிப்பவர்களை (பாவமான காரியங்களைச் செய்யும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே ஷைத்தான்களை நாம் (அவர்களிடம்) அனுப்பிவைக்கிறோம் என்பதை நீர் கவனிக்கவில்லையா?

Tamil Translation - Omar Sharif

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக நாம் ஷைத்தான்களை நிராகரிப்பவர்கள் மீது ஏவி விட்டுள்ளோம். அவை அவர்களை (பாவத்தின் பக்கம்) தூண்டுகின்றன.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக நாம் ஷைத்தான்களை நிராகரிப்பவர்கள் மீது ஏவி விட்டுள்ளோம். அவை அவர்களை (பாவத்தின் பக்கம்) பிடித்து அசைக்கின்றன (-இழுக்கின்றன, தூண்டுகின்றன).

فَلَا تَعْجَلْ عَلَيْهِمْ ۖ إِنَّمَا نَعُدُّ لَهُمْ عَدًّۭا ﴿84﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

84. ஆதலால், அவர்களுக்காக (வேதனை வரவேண்டுமென்று) நீர் அவசரப்படாதீர். அவர்களுக்கு (வேதனை வரக்கூடிய நாள்களை) நாம் எண்ணிக்கொண்டே இருக்கிறோம்.

Tamil Translation - Omar Sharif

ஆகவே, அவர்கள் மீது (தண்டனை உடனே இறங்க வேண்டுமென்று) அவசரப்படாதீர். நிச்சயமாக நாம் அவர்களுக்காக (அவர்களுடைய நாட்களையும் அவர்களுடைய செயல்களையும்) எண்ணுகிறோம்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

ஆகவே, அவர்கள் மீது அவசரப்படாதீர். நிச்சயமாக நாம் அவர்களுக்காக (அவர்களுடைய செயல்களையும் அவர்கள் விடும் மூச்சுகளையும்) எண்ணுகிறோம்.

يَوْمَ نَحْشُرُ ٱلْمُتَّقِينَ إِلَى ٱلرَّحْمَٰنِ وَفْدًۭا ﴿85﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

85. இறையச்சமுடையவர்களை ரஹ்மானிடம் (விருந்தாளிகளைப் போல) குழுக்களாக நாம் ஒன்று சேர்க்கும் நாளில்,

Tamil Translation - Omar Sharif

இறையச்சமுள்ளவர்களை ரஹ்மானின் பக்கம் குழுவாக நாம் ஒன்று திரட்டுகின்ற நாளில்,

Tamil Translation - Omar Sharif - Abridged Version

இறையச்சமுள்ளவர்களை ரஹ்மானின் பக்கம் குழுவாக நாம் ஒன்று திரட்டுகின்ற நாளில்...

وَنَسُوقُ ٱلْمُجْرِمِينَ إِلَىٰ جَهَنَّمَ وِرْدًۭا ﴿86﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

86. இன்னும் குற்றவாளிகளை தாகத்துடன் நரகத்தின் பக்கம் நாம் ஓட்டுகின்ற நாளில்,

Tamil Translation - Omar Sharif

இன்னும் குற்றவாளிகளை நரகத்தின் பக்கம் அவர்களோ தாகித்தவர்களாக இருக்கும் நிலையில் நாம் ஓட்டிக் கொண்டு வருகின்ற நாளில்,

Tamil Translation - Omar Sharif - Abridged Version

இன்னும் (பாவிகளை) குற்றவாளிகளை நரகத்தின் பக்கம் தாகித்தவர்களாக நாம் ஓட்டிக் கொண்டு வருகின்ற நாளில்...

لَّا يَمْلِكُونَ ٱلشَّفَٰعَةَ إِلَّا مَنِ ٱتَّخَذَ عِندَ ٱلرَّحْمَٰنِ عَهْدًۭا ﴿87﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

87. ரஹ்மானிடம் அனுமதி பெற்றவர்களைத் தவிர எவரும் (எவருக்கும்) சிபாரிசு பேச உரிமை பெறமாட்டார்.

Tamil Translation - Omar Sharif

அவர்கள் (யாருக்கும்) சிபாரிசு செய்ய(வோ யாரிடமிருந்து சிபாரிசு பெறவோ) உரிமை பெறமாட்டார்கள். (எனினும்) ரஹ்மானிடம் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திய (நம்பிக்கையாளர்களான நல்ல)வர்களைத் தவிர.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர்கள் சிபாரிசுக்கு உரிமை பெறமாட்டார்கள். (எனினும்) ரஹ்மானிடம் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியவரைத் தவிர.

وَقَالُوا۟ ٱتَّخَذَ ٱلرَّحْمَٰنُ وَلَدًۭا ﴿88﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

88. ரஹ்மான் சந்ததி எடுத்துக் கொண்டதாக அ(ந்த கிறிஸ்தவர்கள், இன்னும் இணைவைப்ப)வர்கள் கூறுகின்றனர்.

Tamil Translation - Omar Sharif

இன்னும், “ரஹ்மான் (தனக்கொரு) குழந்தையை எடுத்துக் கொண்டான்” என்று அவர்கள் கூறுகிறார்கள்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: “ரஹ்மான் குழந்தையை எடுத்துக் கொண்டான்.”

لَّقَدْ جِئْتُمْ شَيْـًٔا إِدًّۭا ﴿89﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

89. (நபியே! அவர்களை நோக்கி கூறுவீராக:) நிச்சயமாக நீங்கள் பெரியதோர் அபாண்டத்தைக் கூறுகிறீர்கள்.

Tamil Translation - Omar Sharif

(இவ்வாறு சொல்வதின் மூலம்) திட்டமாக (மகா மோசமான) பெரிய (பாவமான) ஒரு காரியத்தை செய்து விட்டீர்கள்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

திட்டமாக (மகா பாதகமான) பெரிய ஒரு காரியத்தை சொல்லி விட்டீர்கள்.

تَكَادُ ٱلسَّمَٰوَٰتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنشَقُّ ٱلْأَرْضُ وَتَخِرُّ ٱلْجِبَالُ هَدًّا ﴿90﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

90. வானங்கள் கிழிந்து போகவும், பூமி பிளந்து விடவும், மலைகள் இடிந்து சரிந்து விடவும் நெருங்கி விட்டன.

Tamil Translation - Omar Sharif

இ(ந்)த (சொல்லி)னால் வானங்கள் துண்டு துண்டாகி விடுவதற்கும்; பூமி பிளந்து விடுவதற்கும்; மலைகள் (ஒன்றன் மீது ஒன்று) சரிந்து விழுந்து (நொறுங்கி) விடுவதற்கும் நெருங்கி விட்டன,

Tamil Translation - Omar Sharif - Abridged Version

இதனால் (இந்த சொல்லால்) வானங்கள் துண்டு துண்டாகி விடுவதற்கும் பூமி பிளந்து விடுவதற்கும் மலைகள் (ஒன்றன் மீது ஒன்று) விழுந்து விடுவதற்கும் நெருங்கி விட்டன.

أَن دَعَوْا۟ لِلرَّحْمَٰنِ وَلَدًۭا ﴿91﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

91. ரஹ்மானுக்குச் சந்ததி உண்டென்று அவர்கள் கூறுவதன் காரணத்தால்.

Tamil Translation - Omar Sharif

அவர்கள் ரஹ்மானுக்கு குழந்தை இருக்கிறது என்று அழைத்ததால்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர்கள் ரஹ்மானுக்கு குழந்தையை ஏற்படுத்தியதால் (இவை இப்படி ஆகிவிட நெருங்கிவிட்டன.)

وَمَا يَنۢبَغِى لِلرَّحْمَٰنِ أَن يَتَّخِذَ وَلَدًا ﴿92﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

92. சந்ததி எடுத்துக் கொள்வது ரஹ்மானுக்குத் தகுமானதல்ல.

Tamil Translation - Omar Sharif

ஆனால், (தனக்கொரு) குழந்தையை ஏற்படுத்திக் கொள்வது ரஹ்மானுக்கு தகுதியானது அல்ல.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

(தனக்கு) குழந்தையை ஏற்படுத்திக் கொள்வது ரஹ்மானுக்கு தகுந்ததல்ல.

إِن كُلُّ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ إِلَّآ ءَاتِى ٱلرَّحْمَٰنِ عَبْدًۭا ﴿93﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

93. ஏனென்றால், நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் ரஹ்மானிடம் அடிமையாகவே வருகிறது.

Tamil Translation - Omar Sharif

வானங்கள்; இன்னும், பூமியில் உள்ள ஒவ்வொருவரும் ரஹ்மானிடம் (பணிந்த) அடிமையாக வருவாரே தவிர (குழந்தையாகவோ அவனுக்கு நிகரானவராகவோ) இல்லை.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

வானங்களில் இன்னும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் ரஹ்மானிடம் (பணிந்த) அடிமையாக வருவாரே தவிர (குழந்தையாக) இல்லை.

لَّقَدْ أَحْصَىٰهُمْ وَعَدَّهُمْ عَدًّۭا ﴿94﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

94. அவை அனைத்தையும் அவன் சூழ்ந்து அறிந்து கணக்கிட்டும் வைத்திருக்கிறான்.

Tamil Translation - Omar Sharif

திட்டவட்டமாக அவன் அவர்களை (தீர்க்கமாக) கணக்கிட்டு விட்டான்; இன்னும், அவர்களை (துல்லியமாக) எண்ணி வைத்திருக்கிறான்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

திட்டமாக அவன் அவர்களை (தீர்க்கமாக) கணக்கிட்டு, அவர்களை எண்ணி வைத்திருக்கிறான்.

وَكُلُّهُمْ ءَاتِيهِ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فَرْدًا ﴿95﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

95. அவை ஒவ்வொன்றும் மறுமை நாளில் (எவருடைய உதவியுமில்லாமல்) அவனிடம் தனித்தனியாகவே வரும்.

Tamil Translation - Omar Sharif

இன்னும், அவர்கள் ஒவ்வொருவரும் மறுமை நாளில் அவனிடம் தனியாகவே வருவார்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

அவர்கள் ஒவ்வொருவரும் மறுமை நாளில் அவனிடம் தனியாகவே வருவார்.

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ سَيَجْعَلُ لَهُمُ ٱلرَّحْمَٰنُ وُدًّۭا ﴿96﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

96. நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறவர்களை (அனைவரும்) நேசிக்கும்படி ரஹ்மான் செய்வான்.

Tamil Translation - Omar Sharif

நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தார்களோ அவர்களுக்கு ரஹ்மான் (மக்களின் உள்ளங்களில்) அன்பை ஏற்படுத்துவான்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்கள் அவர்களுக்கு ரஹ்மான் (மக்களின் உள்ளங்களில்) அன்பை ஏற்படுத்துவான்.

فَإِنَّمَا يَسَّرْنَٰهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ ٱلْمُتَّقِينَ وَتُنذِرَ بِهِۦ قَوْمًۭا لُّدًّۭا ﴿97﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

97. (நபியே!) உமது மொழியில் நாம் இதை (இறக்கி) எளிதாக்கி வைத்ததெல்லாம், இதன்மூலம் இறையச்சமுடையவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவதற்கும், (வீண்) விதண்டாவாதம் செய்யும் மக்களுக்கு இதன் மூலம் நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவுமே ஆகும்.

Tamil Translation - Omar Sharif

ஆக, இ(ந்த வேதத்)தை உமது நாவில் நாம் இலகுவாக்கியதெல்லாம் இறையச்சமுள்ளவர்களுக்கு நீர் இதன் மூலம் நற்செய்தி கூறுவதற்காகவும்; விதண்டாவாதம் செய்கின்ற மக்களை இதன் மூலம் நீர் எச்சரிப்பதற்காகவும்தான்.

Tamil Translation - Omar Sharif - Abridged Version

இதை (இந்தக் குர்ஆனை) உமது நாவில் நாம் இலகுவாக்கியதெல்லாம் இறையச்சமுள்ளவர்களுக்கு நீர் இதன் மூலம் நற்செய்தி கூறுவதற்காகவும் தர்க்கிக்கின்ற மக்களை இதன் மூலம் நீர் எச்சரிப்பதற்காகவும்தான்.

وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّن قَرْنٍ هَلْ تُحِسُّ مِنْهُم مِّنْ أَحَدٍ أَوْ تَسْمَعُ لَهُمْ رِكْزًۢا ﴿98﴾

Tamil Translation - Abdulhamid Baqawi

98. இதற்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்திருக்கிறோம். அவர்களில் ஒருவரையேனும் நீர் காண்கிறீரா? அல்லது அவர்களுடைய சிறிய சப்தத்தையேனும் நீர் கேட்கிறீரா?

Tamil Translation - Omar Sharif

இன்னும், இவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்தோம். அவர்களில் யாரையும் நீர் (இப்போது) பார்க்கிறீரா? அல்லது, அவர்களுடைய சிறிய சப்தத்தை நீர் கேட்கிறீரா?

Tamil Translation - Omar Sharif - Abridged Version

இவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்தோம். அவர்களில் யாரையும் நீர் பார்க்கிறீரா? அல்லது அவர்களுடைய சப்தத்தை நீர் கேட்கிறீரா?

Quran recitationReady
Open audio