Skip to content
Text size 100%
தமிழ் · Surah 101

Al-Qari'ah — Tamil Translation

The Calamity · 11 verses · Tamil Translation - Omar Sharif - Abridged Version.

Al-Qari'ah · Tamil Translation - Omar Sharif - Abridged VersionVerse 1 of 11
Jump to verse
Search translation

Search the locally cached translation.

Verses of Al-Qari'ah

1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ٱلْقَارِعَةُ

திடுக்கத்தில் ஆழ்த்தக் கூடியது.

2

مَا ٱلْقَارِعَةُ

திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது என்ன?

3

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ

(நபியே!) இன்னும் திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

4

يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ

(அந்)நாளில் மக்கள் பரப்பப்பட்ட ஈசல்களைப் போன்று ஆகுவார்கள்.

5

وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ

இன்னும் அந்நாளில் மலைகள் சாயம் ஏற்றப்பட்ட முடியைப்போன்று ஆகும்.

6

فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ

ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் கனத்தனவோ,

7

فَهُوَ فِى عِيشَةٍۢ رَّاضِيَةٍۢ

அவர் திருப்தியான (சொர்க்க) வாழ்க்கையில் இருப்பார்.

8

وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ

ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் இலேசாகி விட்டனவோ,

9

فَأُمُّهُۥ هَاوِيَةٌۭ

அவருடைய தங்குமிடம் ஹாவியா எனும் நரகம்தான்.

10

وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ

(நபியே!) அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

11

نَارٌ حَامِيَةٌۢ

(அது) கடுமையாக எரியும் நெருப் பாகும்.

Al-Qari'ah in other Tamil translations

Source: QuranEnc.com · Version 1.0.2. Translation text is shown without rewriting.
Quran recitationReady
Open audio