Skip to content
Text size 100%
தமிழ் · Surah 75

Al-Qiyamah — Tamil Translation

Resurrection · 40 verses · Tamil Translation - Omar Sharif - Abridged Version.

Al-Qiyamah · Tamil Translation - Omar Sharif - Abridged VersionVerse 1 of 40
Jump to verse
Search translation

Search the locally cached translation.

Verses of Al-Qiyamah

1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَٰمَةِ

மறுமை நாளின் மீது சத்தியம் செய்கிறேன்!

2

وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِ

இன்னும், பழிக்கிற ஆன்மாவின் மீது சத்தியம் செய்கிறேன்!

3

أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُۥ

மனிதன் எண்ணுகிறானா, அவனுடைய எலும்புகளை - (அவை உக்கிப்போன பின்னர்) - அறவே நாம் ஒன்று சேர்க்க மாட்டோம் (-அது நமக்கு முடியாது) என்று?

4

بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّىَ بَنَانَهُۥ

ஏன் முடியாது! அவனுடைய விரல்களை (அவை பிரிந்தில்லாமல், ஒட்டகத்தின் குளம்பைப் போல் ஒன்றோடு ஒன்று சேர்ந்த நிலையில்) சமமாக ஆக்கிவிடுவதற்கு நாம் ஆற்றலுடையவர்களாக இருக்கிறோம்.

5

بَلْ يُرِيدُ ٱلْإِنسَٰنُ لِيَفْجُرَ أَمَامَهُۥ

மாறாக, மனிதன் தனது வருங்காலத்திலும் பாவம் செய்வதற்கே நாடுகிறான்.

6

يَسْـَٔلُ أَيَّانَ يَوْمُ ٱلْقِيَٰمَةِ

மறுமை நாள் எப்போது வரும் என்று கேட்கிறான்.

7

فَإِذَا بَرِقَ ٱلْبَصَرُ

ஆக, பார்வை (திடுக்கிட்டு) திகைத்துவிட்டால்,

8

وَخَسَفَ ٱلْقَمَرُ

இன்னும், சந்திரன் ஒளி இழந்து விட்டால்,

9

وَجُمِعَ ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ

இன்னும், சூரியனும் சந்திரனும் (ஒளி இல்லாமல்) ஒன்று சேர்க்கப்ப(ட்டு பூமியில் எறியப்ப)ட்டால்,

10

يَقُولُ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍ أَيْنَ ٱلْمَفَرُّ

அந்நாளில் மனிதன் கூறுவான்: “தப்பிக்குமிடம் எங்கே?”

11

كَلَّا لَا وَزَرَ

அவ்வாறல்ல! தப்பித்து ஓட அறவே முடியாது (-பாவிகளுக்கு அடைக்கலம் கொடுக்க பாதுகாப்பான இடம் ஏதும் இருக்காது).

12

إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّ

அந்நாளில் உமது இறைவன் பக்கம்தான் இறுதியாக நிலையான தங்குமிடம் இருக்கிறது.

13

يُنَبَّؤُا۟ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ

மனிதன் அந்நாளில், தான் முந்தி செய்ததையும் பிந்தி செய்ததையும் (பழைய, புதிய செயல்கள் அனைத்தையும்) அறிவிக்கப்படுவான்.

14

بَلِ ٱلْإِنسَٰنُ عَلَىٰ نَفْسِهِۦ بَصِيرَةٌۭ

மாறாக, மனிதன் அவனுக்கே சாட்சியாக இருப்பான். (அவன் செய்த செயல்களுக்கு அவனது உறுப்புகளே அவனுக்கு எதிராக சாட்சி கூறும்.)

15

وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُۥ

அவன் தனது வருத்தங்களை (சாக்கு போக்குகளை எல்லாம்) கூறினாலும் (அவனிடமிருந்து அவை ஏற்கப்படாது).

16

لَا تُحَرِّكْ بِهِۦ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِۦٓ

(நபியே!) இதை நீர் அவசரமாக (மனனம்) செய்வதற்காக இ(தை ஓதுவ)தற்கு உமது நாவை அசைக்காதீர்.

17

إِنَّ عَلَيْنَا جَمْعَهُۥ وَقُرْءَانَهُۥ

நிச்சயமாக அதை (உமது உள்ளத்தில்) ஒன்று சேர்ப்பதும் (பிறகு) அதை (நீர்) ஓதும்படி செய்வதும் நம்மீது கடமையாகும்.

18

فَإِذَا قَرَأْنَٰهُ فَٱتَّبِعْ قُرْءَانَهُۥ

ஆக, இதை நாம் ஓதினால் அது ஓதப்படுவதை நீர் பின்தொடர்வீராக! (-செவிதாழ்த்தி கேட்ப்பீராக!)

19

ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُۥ

பிறகு, நிச்சயமாக அதை விவரிப்பது நம்மீது கடமையாகும்.

20

كَلَّا بَلْ تُحِبُّونَ ٱلْعَاجِلَةَ

அவ்வாறல்ல, (-மறுமையில் நீங்கள் எழுப்பப்பட மாட்டீர்கள், உங்கள் செயல்களுக்கு உங்களுக்கு கேள்வி கணக்கு இல்லை என்று நீங்கள் கூறுவது போல் அல்ல உண்மை நிலவரம்.) மாறாக, நீங்கள் (அவசரமான) உலக வாழ்க்கையை நேசிக்கிறீர்கள்.

21

وَتَذَرُونَ ٱلْءَاخِرَةَ

மறுமையை விட்டு விடுகிறீர்கள்.

22

وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاضِرَةٌ

அந்நாளில் சில முகங்கள் செழிப்பாக (பிரகாசமாக) இருக்கும்.

23

إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌۭ

தமது இறைவனை பார்த்துக் கொண்டிருக்கும்.

24

وَوُجُوهٌۭ يَوْمَئِذٍۭ بَاسِرَةٌۭ

இன்னும், அந்நாளில் சில முகங்கள் கருத்து காய்ந்துபோய் இருக்கும்.

25

تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌۭ

அதற்கு கடுமையான ஒரு பிரச்சனை நிகழப்போகிறது என்று அறிந்துகொள்ளும்.

26

كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِىَ

அவ்வாறல்ல! (-தங்களின் இணைவைத்தலுக்காகவும் பாவங்களுக்காகவும் தாங்கள் தண்டிக்கப்பட மாட்டோம் என்று இணைவைப்பவர்கள் எண்ணுவது போல் அல்ல. பாவியின்) உயிர் (பிரிகின்ற நேரத்தில் அது) தொண்டைக் குழியை அடைந்தால்,

27

وَقِيلَ مَنْ ۜ رَاقٍۢ

ஓதிப்பார்ப்பவர் யாரும் இருக்கின்றாரா என்று கேட்கப்பட்டால்,

28

وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُ

நிச்சயமாக இது (உலகை விட்டு நாம் பிரியப் போகின்ற) பிரிவுதான் என்பதை அவன் அறிந்துகொண்டால்,

29

وَٱلْتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ

(மறுமையின்) கெண்டைக் காலுடன் (உலகத்தின்) கெண்டைக் கால் பின்னிக்கொண்டால், (உலகத்தின் கடுமையான இறுதி நிலையும் மறுமையின் பயங்கரமான முதல் நிலையும் மனிதனுக்குள் அப்போது ஒன்று சேரும்.)

30

إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمَسَاقُ

அந்நாளில், உமது இறைவனிடமே (உயிர்கள்) ஓட்டிக்கொண்டு வரப்படுகின்ற இடம் இருக்கிறது. (அப்போது அந்தப் பாவி தனது தண்டனையை அறிந்து கொள்வான்.)

31

فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ

அவன் (இறை வேதத்தை) உண்மைப்படுத்தவில்லை. தொழவும் இல்லை.

32

وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ

எனினும், அவன் பொய்ப்பித்தான்; விலகிச் சென்றான்.

33

ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهْلِهِۦ يَتَمَطَّىٰٓ

பிறகு, தனது குடும்பத்தாரிடம் கர்வம் கொண்டவனாக (திரும்பி) சென்றான்.

34

أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ

உனக்குக் கேடுதான், இன்னும் (உனக்கு) கேடுதான்.

35

ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰٓ

பிறகும், உனக்குக் கேடுதான், இன்னும் (உனக்கு) கேடுதான்.

36

أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَن يُتْرَكَ سُدًى

மனிதன் தான் சும்மா விட்டுவிடப்படுவான் என்று எண்ணுகின்றானா?

37

أَلَمْ يَكُ نُطْفَةًۭ مِّن مَّنِىٍّۢ يُمْنَىٰ

அவன் (கருவறையில்) செலுத்தப்படுகின்ற இந்திரியத்தின் ஒரு துளி விந்தாக இருக்கவில்லையா?

38

ثُمَّ كَانَ عَلَقَةًۭ فَخَلَقَ فَسَوَّىٰ

பிறகு, (அந்த மனிதன்) கருவாக (இரத்தக்கட்டியாக) இருந்தான். அவன்(தான்) (அவனைப்) படைத்தான், இன்னும் செம்மையாக ஆக்கினான்.

39

فَجَعَلَ مِنْهُ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ

அதிலிருந்து ஆண், பெண் ஜோடிகளை அவன்தான் ஆக்கினான்.

40

أَلَيْسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْۦِىَ ٱلْمَوْتَىٰ

இ(த்தகைய)வன் இறந்தவர்களை உயிர்ப்பிப்பதற்கு ஆற்றல் உள்ளவனாக இல்லையா?

Al-Qiyamah in other Tamil translations

Source: QuranEnc.com · Version 1.0.2. Translation text is shown without rewriting.
Quran recitationReady
Open audio